சாக்‌ஷி தன்வர்

இந்திய நடிகை

சாக்‌ஷி தன்வர் (Sakshi Tanwar) 1973 ஜனவர் 12 அன்று பிறந்த[2] ஒரு நடிகர், தொலைக்காட்சி நிகழ்ச்சி வழங்குநர் ஆவார். இவர் "கஹானி கர் கர் கி" மற்றும் "பேட் அச்சே லக்தே ஹெயின்" போன்ற (2016), தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் நடித்ததன் மூலம் அறியப்படுகிறார். அவர் ஆமீர் கானுடன் தங்கல் என்றத் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

சாக்‌ஷி தன்வர்
2018இல் தன்வர்
பிறப்பு12 சனவரி 1973 (1973-01-12) (அகவை 51)
அல்வார், ராஜஸ்தான், இந்தியா[1]
இருப்பிடம்மும்பை, மகாராட்டிரம், இந்தியா[2]
தேசியம்இந்தியன்
பணிநடிகர், தொலைக்காட்சி நிகழ்ச்சி வழங்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1996 முதல் தற்போது வரை
பிள்ளைகள்தித்யா தன்வர்

இளமை வாழ்க்கை தொகு

இந்தியாவிலுள்ள ராஜஸ்தான் மாநிலம் அல்வாரைச் சேர்ந்த நடுத்தர குடும்பத்தில் தன்வர் 1793 ஜனவரி 12 அன்று பிறந்துள்ளார். இவரது தந்தை ராஜேன்ந்திர சிங் தன்வர் ஓய்வு பெற்ற சிபிஐ அலுவலர் ஆவார். புது தில்லியில் உள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரியில் பட்டம் பெறுவதற்கு முன்னர், பல கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பயின்றுள்ளார். பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் , அவர் ஒரு ஐந்து நட்சத்திர விடுதிகளில் விற்பனையாளராகப் பணியாற்றினார்.[3] கல்லூரியில், அவர் நாடகத் துறையின் செயலாளர் மற்றும் தலைவர் ஆவார்.[2] பட்டப்படிப்புக்குப் பிறகு, நிர்வாக சேவைகள் மற்றும் வெகுஜன தகவல்தொடர்புகளுக்கான நுழைவு தேர்வுகளுக்குத் தயாராக இருந்தபோது, அவர் 1998 ஆம் ஆண்டில் தேசிய ஒளிபரப்பாளரான தூர்தர்ஷனின் திரைப்பட பாடல்களை அடிப்படையாகக் கொண்ட "ஆல்பெலா சூர் மேலா" என்ற ஒரு நிகழ்ச்சிக்கான குரல் சோதனையில் தேர்ந்தடுக்கப் பட்டார். பின்னர் , அவர் நிகழ்ச்சி வழங்குபவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தொழில் தொகு

 
2012இல் பிக் ஸ்டார் என்டர்டெய்ன்மெண்ட் விருதுகள் நிகழ்வில் சாக்‌ஷி

1998இல் "ஆல்பெலா சூர் மேலா" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அறிமுகமான பிறகு, "கஹானி கர் கர் கி" என்ற தொலைகாட்சித் தொடரில் பார்வதி அகர்வாலின் பாத்திரத்தில் நடித்ததற்காக தன்வர் புகழ் பெற்றார்.[4] 2011 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் ராஜ் கபூர் மற்றும் ப்ரியா கபூர் உடன் "படே அச்சே லாகே ஹெயின்" என்ற படத்தில் நடித்தார்.[5]

டிசம்பர் 2012 ல், அவர் "கோன் பனேகா குரோர்பதி" என்ற நிகழ்ச்சியில் தோற்றமளித்தார்.[6] 2016இல் சமூக முரண்பாடுகளுக்கு எதிராக உலக தரம் வாய்ந்த மல்யுத்த வீரர்களாக்க தனது மகள்களைப் பயிற்றுவிக்கும் முன்னாள் மல்யுத்த வீரர் மகாவீர் சிங் போகாட் (ஆமிர் கான் நடிக்க, தன்வர் அவரது மனைவி தயா கவுர் என்ற வேடத்தில் நடித்துள்ளார்,[7] சாக்‌ஷி தன்வர் "டையோகர் கி தாலி"யின் நிகழ்ச்சியில் வருகிறார். இது 2018 பிப்ரவரி 26 ஆம் தேதி அன்று "எபிக்" சேனலில் ஒளிபரப்பப்பட்டது .[8]

சொந்த வாழ்க்கை தொகு

2018இல், சாக்‌ஷி தித்யா தன்வர் என்ற ஒன்பது மாதக் குழந்தையை தத்து எடுத்துக் கொண்டுள்ளார்.[9]

மரியாதைகள் தொகு

2013இல் அவர் இந்தியா டுடே தொலைக்காட்சியின் மிகவும் பிரபலமான திரைக்கதை ஜோடி விருது பெற்றார்.[10] ஏப்ரல் 2013இல் , ஆர்மேக்ஸ் மீடியா நடத்திய ஒரு கணக்கெடுப்பில், தன்வர் சிறந்த 5 நம்பகமான பிரபலங்களில் ஒருவராக இடம் பெற்றார்.[4]

குறிப்புகள் தொகு

  1. "SAKSHI TANWAR: WHY WOULD I LEAVE TV AFTER GIVING 16 YEARS TO IT". Indo-Asian News Service. Mumbai Mirror. 20 மார்ச்சு 2017. Archived from the original on 26 மே 2017. பார்க்கப்பட்ட நாள் 26 மே 2017.
  2. 2.0 2.1 2.2 "Sakshi Tanwar". FilmiBeat. Archived from the original on 2014-04-20. பார்க்கப்பட்ட நாள் 2019-03-05.
  3. Kaushik, Divya (21 March 2017). "Sakshi Tanwar: Worked in a Delhi five-star, bought a sari with first salary". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 26 May 2017.
  4. 4.0 4.1 "'Chhote acche lagte hain...'". dna. 3 April 2013.
  5. "Ekta's next on Sony with Sakshi & Ram titled Bade Achhe Lagte Hain". Archived from the original on 2014-08-09. பார்க்கப்பட்ட நாள் 2019-03-05.
  6. "KBC 6: Ram Kapoor, Sakshi Tanwar on hot seat again!". IBNLive. Archived from the original on 2012-12-21. பார்க்கப்பட்ட நாள் 2019-03-05. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  7. "This is Why Aamir wanted Sakshi Tanwar to play his onscreen wife in Dangal". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 14 December 2016. பார்க்கப்பட்ட நாள் 26 May 2017.
  8. "Sakshi Tanwar to come back with new season of Tyohaar Ki Thaali". India TV. 19 February 2018. பார்க்கப்பட்ட நாள் 17 February 2018.
  9. "Sakshi Tanwar adopts baby girl Dityaa, calls it greatest moment of her life. See pic". ஹிந்துஸ்தான் டைம்ஸ். October 20, 2018.
  10. "Ram & Sakshi are TV's most favorite couple".

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாக்‌ஷி_தன்வர்&oldid=3586873" இலிருந்து மீள்விக்கப்பட்டது