சாங்காய் புடோங் பன்னாட்டு வானூர்தி நிலையம்

சீனாவின் சாங்காயில் உள்ள பன்னாட்டு வானூர்தி நிலையம்

சாங்காய் புடோங் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Shanghai Pudong International Airport, (ஐஏடிஏ: PVGஐசிஏஓ: ZSPD), SSE: 600009) சாங்காயின் முதன்மை வானூர்தி நிலையம் ஆகும். ஆசியாவின் முதன்மையான வான்போக்குவரத்து மையங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. சாங்காயின் மற்றொரு பெரிய வானூர்தி நிலையமான ஹோஞ்சியோ, பெரும்பாலும் உள்நாட்டு போக்குவரத்திற்கே பயன்படுத்தப்படுகிறது. புடோங் வானூர்தி நிலையம் நகர மையத்திலிருந்து கிழக்கே ஏறத்தாழ 30 கிலோமீட்டர்கள் (19 mi) தொலைவில் கடற்கரைக்கு அண்மித்து 40 சதுர கிலோமீட்டர்கள் (15 sq mi) பரப்பளவில் கிழக்கு புதோங் புதுப்பகுதியில் அமைந்துள்ளது.

சாங்காய் புடோங்
பன்னாட்டு வானூர்தி நிலையம்

上海浦东国际机场
சாங்காய் வானூர்தி நிலைய ஆணையத்தின் சின்னம்
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைPublic
இயக்குனர்சாங்காய் வானூர்தி நிலைய ஆணையம்
சேவை புரிவதுசாங்காய்
அமைவிடம்புடோங் புதுப்பகுதி
மையம்
உயரம் AMSL4 m / 13 அடி
இணையத்தளம்புடோங் வானூர்தி நிலையம்
நிலப்படம்
PVG is located in Shanghai
PVG
PVG
சாங்காயில் வானூர்தி நிலையத்தின் அமைவிடம்
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
16/34 3,800 12,467 பைஞ்சுதை
17L/35R 4,200 13,780 பைஞ்சுதை
17R/35L 3,400 11,155 பைஞ்சுதை
TBD 3,900 12,795
TBD 3,400 11,155
புள்ளிவிவரங்கள் (2012)
பயணிகள்44,857,200
சரக்கு (டன்கள்)3,227,914

இந்த வானூர்தி நிலையம் சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் மற்றும் சாங்காய் ஏர்லைன்சு நிறுவனங்களின் முனையநடுவமாக செயல்படுகிறது. மேலும் ஏர் சீனாவிற்கு முக்கிய பன்னாட்டு முனையநடுவமாகவும் விளங்குகிறது. மேலும் தனியார் நிறுவனங்களான யுனெயோ ஏர்லைன்சு, இசுபிரிங் ஏர்லைன்சுக்கும் சரக்கு வான்போக்குவரத்து நிறுவனங்களான யுபிஎஸ் ஏர்லைன்சு, டிஎச்எல் வான்போக்குவரத்து நிறுவனங்களுக்கும் முனைய நடுவமாக உள்ளது[4][5].

புடோங் நிலையத்தில் இரண்டு முதன்மை பயணியர் முனையங்கள் உள்ளன; இவற்றின் இரு புறங்களிலுமாக ஒன்றுக்கொன்று இணையான மூன்று ஓடுபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2015இல் மூன்றாம் பயணியர் முனையம் ஒன்றும் துணை முனையமும் இரண்டு கூடுதல் ஓடுபாதைகளும் திட்டமிடப்பட்டுள்ளன. இவற்றைக் கட்டிய பிறகு இதனால் ஆண்டுக்கு 60 முதல் 80 மில்லியன் பயணிகளையும் ஆறு மில்லியன் டன் சரக்குகளையும் கையாளும் திறன் கிடைக்கும்.[6]

2010இல் 3,227,914 மெட்ரிக் டன் சரக்குகளின் போக்குவரத்தில் ஈடுபட்டு உலகின் மூன்றாவது மிகுந்த சரக்குக் போக்குவரத்துள்ள வானூர்தி நிலையமாக விளங்கியது. மேலும் 2010இல் 40,578,621 யணிகள் பயன்படுத்திய இந்த வானூர்தி நிலையம் சீனாவின் மூன்றாவது போக்குவரத்து மிகுந்த நிலையமாகவும் உலகளவில் 20வது நிலையமாகவும் விளங்கியது. 2011ஆம் ஆண்டுத் தரவுகளின்படி புடோங் வானூர்தி நிலையத்திலிருந்து 87 வான்போக்குவரத்து நிறுவனங்கள் 194 சேரிடங்களுக்கு சேவைகள் வழங்கியுள்ளன.[7]

புடோங் வானூர்தி நிலையம் சாங்காயின் விரைவுத் தொடருந்துப் பிணையத்துடன் இரண்டாம் எண் தொடருந்துப் பாதையாலும் சாங்காய் காந்தத்தூக்கல் தொடருந்தினாலும் இணைக்கப்பட்டுள்ளது.

முனையம் 1 - உட்காட்சி

சான்றுகோள்கள்

தொகு
  1. உலக ஏரோ தரவுத்தளத்தில் ZSPD குறித்த வானூர்திநிலையத் தரவுகள். தரவுகள் நடப்பு நிலவரம் அக்டோபர் 2006.மூலம்: DAFIF.
  2. Airport information for PVG at Great Circle Mapper. Source: DAFIF (effective October 2006).
  3. "Passenger Traffic 2010 FINAL". Archived from the original on 2012-02-11. பார்க்கப்பட்ட நாள் 2013-05-02. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  4. UPS Air Operations Facts
  5. Deutsche Post DHL targets Asian expansion
  6. Shanghai Airport reports profit growth, despite big investments in massive new facilities at Pudong – China Airlines, Airports and Aviation News பரணிடப்பட்டது 2009-02-15 at the வந்தவழி இயந்திரம். Chinaaviation.aero (2008-03-11). Retrieved on 2011-01-22.
  7. "民航局与上海市人民政府在沪签战略合作协议" (in Chinese). Carnoc. 6 April 2012.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)

வெளி இணைப்புகள்

தொகு