சாதிகாச்சா

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஒரு ஊர்

சாதிகாச்சா (Satigachha) என்பது இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள நதியா மாவட்டத்தில் அமைந்துள்ள ராணாகாட் உட்கோட்டத்தில் உள்ள ராணாகாட் காவல்நிலையத்திற்கு உட்பட்ட ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும்[1].

சாதிகாச்சா
Satigachha
সতীগাছা
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்நதியா
அரசு
 • வகைகணக்கெடுப்பில் உள்ள ஊர்
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்8,400
மொழிகள்
 • அலுவல்பூர்வம்வங்காளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)

புவியியல் அமைப்பு

தொகு

பாகிரதி என்றழைக்கப்படும் ஊக்லி ஆற்றின் கிழக்கில் நதியா மாவட்டம் பெரும்பாலும் வண்டல் சம்வெளிகளால் ஆனது. இவ்வண்டல் சமவெளிகளின் குறுக்கே யாலங்கி, சுர்னி மற்றும் இச்சமதி துணையாறுகள் பாய்கின்றன. இந்நதிகளால் வண்டலைப்பெறும் இப்பகுதியில் வெள்ளம் ஒரு தொடர்ச்சியான வளமாக இருக்கிறது [2]. 23.10° வடக்கு 88.51° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் சாதிகாச்சா நகரம் பரவியுள்ளது.

மக்கள் தொகையியல்

தொகு

இந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி [3] சாதிகாச்சா நகரத்தின் மொத்த மக்கள் தொகை 8,400 ஆகும் இம்மக்கள் தொகையில் 51% பேர் ஆண்கள் மற்றும் 49% பேர் பெண்கள் ஆவர். இம்மக்கள் தொகையில் கல்வியறிவு சதவீதம் 65% ஆகும். இது நாட்டின் தேசிய கல்வியறிவு சதவீதமான 59.5% என்பதைவிட அதிகமாகும். மக்கள் தொகையில் ஆண்களில் 69 சதவீதத்தினர் கல்வியறிவு பெற்றவர்களாகவும் பெண்களில் 60 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்களாகவும் உள்ளனர். ஆறுவயதிற்குக் குறைவான சிறுவர்கள் 11% அளவில் உள்ளனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "District Wise List of Statutory Towns". Census of India 2001, Urban Frame. Directorate of Census Operations, West Bengal. Archived from the original on 2007-09-27. பார்க்கப்பட்ட நாள் 2007-10-06.
  2. Gangopadhyay, Basudev, Paschimbanga Parichay, 2001, (வங்காள மொழியில்), p. 70, Sishu Sahitya Sansad
  3. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாதிகாச்சா&oldid=3575225" இலிருந்து மீள்விக்கப்பட்டது