ராணாகாட்
இராணாகாட் (Ranaghat) மேற்கு வங்காள அமைச்சரவை 1 ஆகஸ்டு 2022 அன்று புதிதாக அறிவித்த 7 மாவட்டங்களில் ஒன்றான ராணாகாட் மாவட்டத்தின்[2][3] நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். முன்னர் இந்நகரம் நாதியா மாவட்டத்தில் இருந்தது. அடர்ந்த மக்கள் தொகை கொண்ட இந்நகரம் கைத்தறி நெசவுத் தொழில் மற்றும் பூச்சந்தைகள் கொண்டது.
ராணாகாட் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 23°11′N 88°35′E / 23.18°N 88.58°E | |
நாடு | India |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
மாவட்டம் | ராணாகாட் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | ராணாகாட் நகராட்சி |
• MP | ஜெகன்நாத் சர்க்கார், பஜக |
பரப்பளவு | |
• நகரம் | 7.72 km2 (2.98 sq mi) |
• மாநகரம் | 30 km2 (10 sq mi) |
ஏற்றம் | 8 m (26 ft) |
மக்கள்தொகை (2011) | |
• நகரம் | 75,365 |
• அடர்த்தி | 9,800/km2 (25,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | வங்காளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 741201 |
தொலைபேசி குறியீடு | 91-3473-2xxxxx |
வாகனப் பதிவு | WB-52 |
மக்களவைத் தொகுதி | ராணாகாட் மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | ராணாகாட் வடமேற்கு சட்டமன்றத் தொகுதி |
இணையதளம் | www |
Cities and towns in Ranaghat subdivision of Nadia district M: municipal town/ city/notified area, CT: census town, R: rural/ urban centre. Owing to space constraints in the small map, the actual locations in a larger map may vary slightly |
அமைவிடம்
தொகுசூர்ணி ஆற்றின் கரையில் அமைந்த இராணாகாட் நகரம், கொல்கத்தாவிற்கு வடக்கே 74 கிலோ மீட்டர் தொலைவிலும் மற்றும் நாதியா மாவட்டத் நிர்வாகத் தலைமையிடமான கிருஷ்ணாநகருக்கு தெற்கே 26 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
தொகுமக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 19 வார்டுகள் கொண்ட இராணாகாட் நகராட்சியின் மொத்த மக்கள் தொகை 75,365 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 37,948 மற்றும் பெண்கள் 37,417 உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 950 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 6.66% ஆகும். இதன் சராசரி எழுத்தறிவு 93.19% ஆகும். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 97.15%, இசுலாமியர்கள் 2.42%, பௌத்தர்கள் 0.02%, கிறித்துவர்கள் 0.18% மற்றும் பிறர் 0.21% ஆக உள்ளனர்.[4]
கல்வி நிலையங்கள்
தொகு- ராணாகாட் கல்லூரி
- இராணாகாட் அரசு பாலிடெக்னிக்
போக்குவரத்து
தொகுராணாகாட் சந்திப்பு தொடருந்து நிலையம்
தொகுராணாகாட் சந்திப்பு தொடருந்து நிலையத்திலிருந்து சியால்டா, லால்கோலா, கொல்கத்தா- டாக்கா போன்ற நகரங்களுடன் இருப்புப் பாதைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ranaghat City". பார்க்கப்பட்ட நாள் 25 November 2020.
- ↑ West Bengal to get seven new districts; total now 30
- ↑ West Bengal Gets 7 New Districts, Total Number Reaches 30
- ↑ Ranaghat Population Census 2011
- ↑ Train-routes பரணிடப்பட்டது 6 சூன் 2011 at the வந்தவழி இயந்திரம் Article on India9.com
வெளி இணைப்புகள்
தொகுவிக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Ranaghat