சாமர்ராவின் பெரிய பள்ளிவாசல்

(சாமராவின் பெரிய மசூதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சமார்ராவின் பெரிய பள்ளிவாசல் மத்திய ஈராக்கிலுள்ள சாமரா என்னும் நகரில் அமைந்துள்ளது.[1] இந்நகரம் அப்பாசிட் வம்ச ஆட்சியின் போது தலைநகரமாக விளங்கியது. கி.பி 847 க்கும், 861 க்கும் இடையில் ஆட்சி புரிந்த அப்பாசிட் கலீபாவான அல் முத்தவாக்கில் என்பவரால் இம் பள்ளிவாசல் கட்டுவிக்கப்பட்டது.[2]

சமார்ராவின் பெரிய பள்ளிவாசல்
Samara spiralovity minaret rijen1973.jpg
சாமர்ராவின் பெரிய பள்ளிவாசல் மினார்
அமைவிடம்சாமர்ரா, ஈராக்
நிறுவப்பட்டது848

240 மீட்டர் நீளத்தையும், 160 மீட்டர் அகலத்தையும் கொண்ட இது அக்காலத்தில் உலகிலேயே பெரிய மசூதியாக விளங்கியது. இதன் மினார் அதிகம் வழக்கத்தில் இல்லாத வடிவ அமைப்பைக் கொண்டது. பெரிய கூம்பு வடிவ அமைப்புடன் விளங்கும் இதன் வெளிப்புறத்தைச் சுற்றி சுருள் வடிவிலான சாய்தள அமைப்பு உள்ளது. 52 மீட்டர் உயரமும், அடிப் பகுதியில் 32 மீட்டர் அகலத்தையும் கொண்ட இக் கோபுர அமைப்பு சுட்ட செங்கற்களால் ஆனது.

மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு