சாமி போட்ட முடிச்சு
ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
சாமி போட்ட முடிச்சு (Sami Potta Mudichu) 1991 ஆம் ஆண்டு ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் நாடகத் திரைப்படமாகும். இப்படத்தில் முரளி மற்றும் சிந்து முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.[3]
சாமி போட்ட முடிச்சு Sami Potta Mudichu | |
---|---|
இயக்கம் | ஆர். சுந்தர்ராஜன் |
தயாரிப்பு | டி. சிவா |
கதை | ஆர். சுந்தர்ராஜன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | முரளி சிந்து |
ஒளிப்பதிவு | இராஜராஜன் |
படத்தொகுப்பு | ஜி. ஜெயச்சந்திரன் |
கலையகம் | டி. சிவாவின் அம்மா கிரியேசன்ஸ் |
விநியோகம் | அம்மா கிரியேசன்ஸ் |
வெளியீடு | 11 சனவரி 1991[1][2] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச் சுருக்கம்
தொகுகதிர்வேலன் ( முரளி ) வாழ்க்கையின் குறிக்கோள், தன் தாத்தாவைக் கொன்ற மாமாவைப் பழிவாங்குவதுதான். இருப்பினும், அவரது மாமன் மகள் நீலவேணியை ( சிந்து ) சந்தித்தப் பிறகு அவர் மனம் மாறுகிறார்.
நடிகர்கள்
தொகு- முரளி - கதிர்வேலன்
- சிந்து - நீலவேணி
- ஆர். சுந்தர்ராஜன்
- எம். என். நம்பியார்
- டிஸ்கோ சாந்தி
- தளபதி தினேஷ்
- பாண்டு
- வினு சக்ரவர்த்தி
- வெண்ணிற ஆடை மூர்த்தி
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை வாலியும் கங்கை அமரனும் எழுதியிருந்தனர்.[4][5]
வ. எண் | பாடல் | பாடகர்கள் | வரிகள் |
---|---|---|---|
1. | "பொன்னெடுத்து வாரேன். " | மனோ, கே. எஸ். சித்ரா | கங்கை அமரன் |
2. | "கோடையிடி சத்தம்" | மனோ, எஸ். ஜானகி | |
3. | "நீலவேணி அம்மா நீலவேணி" | மலேசியா வாசுதேவன், கே. எஸ். சித்ரா, சாய்பாபா குழுவினர் | |
4. | "மாதுளங்கனியே நல்ல மலர்வன" | இளையராஜா, எஸ். ஜானகி | |
5. | "மங்கலத்து குங்குமப்பொட்டு" | கே. எஸ். சித்ரா | வாலி |
வரவேற்பு
தொகுதிரைப்படம் மோசமான விமரிசனங்களைப் பெற்றது. இளையராஜாவின் இசையில் அமைந்த பாடல்கள் வரவேற்பைப் பெற்றது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "டோடோவின் ரஃப் நோட்டு — Tamil Kavithai – தமிழ் கவிதைகள் – நூற்று கணக்கில்!". டோடோவின் ரஃப் நோட்டு. Archived from the original on 5 October 2021. பார்க்கப்பட்ட நாள் 8 October 2021.
- ↑ "சாமி போட்ட முடிச்சு" [Sami knot]. vellitthirai.com. Archived from the original on 3 April 2019. பார்க்கப்பட்ட நாள் 3 April 2019.
- ↑ "Saami Potta Mudhichhu (1991) - IMDb" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-27.
- ↑ "Ilaiyaraaja – Sami Potta Mudichu (1991, Vinyl)". Discogs. Archived from the original on 3 April 2019. பார்க்கப்பட்ட நாள் 3 April 2019.
- ↑ "Vinyl ("LP" record) covers speak about IR (Pictures & Details) – Thamizh – Page 17". ilayaraja.forumms.net (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-17.