சாம்லி (Shamli), வட இந்தியாவில் உள்ள உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் வடமேற்கு பகுதியில் அமைந்த சாம்லி மாவட்டத்தின் நிர்வாக்த் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இது தேசிய தலைநகர் வலயத்தில் அமைந்துள்ளது. இதனருகே உள்ள நகரங்கள் புது தில்லி, சகாரன்பூர், முசாபர்நகர் மற்றும் மீரட் ஆகும். இத புது தில்லிக்கு வடக்கே 107 கிலோ மீட்டர் தொலைவிலும்; சகாரன்பூர் மற்றும் மீரட்டிலிருந்து 65 கிமீ தொலைவிலும்; முசாபர்நகரிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

சாம்லி
நகரம்
அனுமான் தில்லா, சாம்லி
அனுமான் தில்லா, சாம்லி
சாம்லி is located in உத்தரப் பிரதேசம்
சாம்லி
சாம்லி
ஆள்கூறுகள்: 29°27′N 77°19′E / 29.45°N 77.32°E / 29.45; 77.32
நாடு இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம் சாம்லி
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்சாம்லி நகராட்சி
 • பரப்பளவு தரவரிசை11
ஏற்றம்
254 m (833 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,07,266
மொழிகள்
 • அலுவல் மொழிகள்இந்தி மொழி, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
247776
தொலைபேசி குறியீடு எண்1398
வாகனப் பதிவுUP -19
அருகமைந்த நகரங்கள்புது தில்லி, சகாரன்பூர், முசாபர்நகர், மீரட்
பாலின விகிதம்1000:928 /
எழுத்தறிவு90%
இணையதளம்www.shamli.nic.in

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி சாம்லி நகரத்தின் மக்கள் தொகை 107,266 ஆகும். அதில் ஆண்கள் 57,187 மற்றும் பெண்கள் 50,079 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 876 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 14,036 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 80.32% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 68.93%, இசுலாமியர் 28.21%, பௌத்தர்கள் , சமணர்கள் 2.01%, சீக்கியர்கள் 0.62%, கிறித்தவர்கள் 0.14% மற்றும் பிறர் 0.08% ஆகவுள்ளனர்.[1]

போக்குவரத்து

தொகு

சாம்லி நகரத்திற்கு புது தில்லிக்கும் இடையே முன்பதிவு இல்லா இரயில்கள் இயக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்லி&oldid=3527788" இலிருந்து மீள்விக்கப்பட்டது