சாயா சோமேஸ்வரர் கோயில்

அருள்மிகு சாயா சோமேஸ்வரர் திருக்கோயில் Sri Chaya Someswara Swamy Temple,Nalgonda
புவியியல் ஆள்கூற்று:17°04′39″N 79°17′43″E / 17.07750°N 79.29528°E / 17.07750; 79.29528ஆள்கூறுகள்: 17°04′39″N 79°17′43″E / 17.07750°N 79.29528°E / 17.07750; 79.29528
பெயர்
பெயர்:அருள்மிகு சாயா சோமேஸ்வரர் திருக்கோயில் Sri Chaya Someswara Swamy Temple,Nalgonda
அமைவிடம்
ஊர்:பனகல் நல்கொண்டா
மாவட்டம்:ஹைதராபாத்
மாநிலம்:தெலுங்கானா
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:சோமேஸ்வரர்
தாயார்:காமாட்சி அம்மன்
சாயா சோமேஸ்வரர் கோயில் தெலுங்கானா மாநிலத்தில் அமைந்துள்ள மிகப் பழைமை வாய்ந்த சிவன் கோயில் ஆகும்.

அமைவிடம்தொகு

 தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் பனகல் என்னும் ஊரில் சாயா சோமேஸ்வரர் கோயில் அமைதியான சூழலில் அமைந்துள்ளது.

ஆலய வரலாறுதொகு

   10ம் நூற்றாண்டில் கன்டூர் சோழர்களால் கட்டப்பட்ட இந்த கோவிலில் ஃ வடிவில் மூன்று கருவறைகள் உள்ளது.

ஆலய அதிசியங்கள்தொகு

லிங்க கருவறை 1தொகு

  இங்குள்ள லிங்கத்திற்கு பின்புறம் ஒரு தூணின் நிழல் விழுகிறது. நிழலில் என்ன அதிசயம் என்றால், காலைமுதல் மாலை வரை அந்த நிழல் நகர்வதே கிடையாது. அதோடு இரவு நேரத்தில் கூட அந்த நிழல் மறைவதே கிடையாது. பொதுவாக சூரியன் நகர நகர நிழலும் நகர்ந்துகொண்டே போகும் அது தான் உலக நியதி. அனால் இங்கு சூரியன் உதித்ததில் இருந்து மறையும் வரை அந்த நிழல் நகராமல் ஒரே இடத்தில உள்ளது. இந்த கருவறைக்கு முன்பு நான்கு தூண்கள் உள்ளன. அனால் கருவறையில் விழும் நிழல் எந்த தூணிற்கானது என்று கண்டறியவே முடியவில்லை. எந்த தூணிற்கு பக்கத்தில் நாம் நின்று பார்த்தாலும் தூணின் நிழல் மட்டுமே கருவறையில் விழுகிறதே தவிர நமது நிழல் விழுவதில்லை.

பிரம்மா கருவறைதொகு

  இந்த கருவறைக்கு எதிரில் ஒருவர் நின்றால் அவர் தன்னுடைய நான்கு நிழல்களை பார்க்க முடியும். எப்படி ஒரு உருவத்திற்கு நான்கு நிழல்கள் விழுகிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது.

லிங்க கருவறை 2தொகு

   இந்த கருவறைக்கு எதிரில் ஒருவர் நின்றால் அவரது நிழல் எப்பொழுதும் அவருக்கு எதிர் திசையிலே விழும். நிழல் எப்படி எப்போதும் எதிர் திசையிலே விழுகிறது என்பது கணிக்கமுடியாத ஒன்றாகவே உள்ளது.
    சாயா என்றால் நிழல் என்று பொருள் அதனால் தான் இந்த கோயிலிற்கு சாயா சோமேஸ்வரர் என்று பெயர்வந்துள்ளது. நிழலை வைத்து பல மர்மங்களோடு இந்த கோவிலை கட்டியுள்ளதால், இந்த கோயிலின் கடவுள் நிழல்களின் தெய்வம் என்றே அழைக்கப்படுகிறார்.
    ரங்கா மண்டபம் என்ற அர்த்த மண்டபம் ஒன்று எதிரில் உள்ளது. அதில் நான்கு அழகிய சிற்ப செதுக்கல்களுடன் நான்கு தூண்கள் உள்ளன; அதில் இருபுறமிருந்து வரும் சூரிய ஒளிக்கற்றைகள் பட்டு ஊடறுத்து செல்லும்போது மேற்கில் அமைந்துள்ள கருவறை லிங்கத்தின் மேல் ஒரு அசையாத நிழல் தூணாக விழுகிறது. இது சிவாலய கட்டுமானத்தில் மிக அதிசயிக்க தக்க அளவில் உள்ளது.

மேற்கோள்கள்தொகு

கோயில் பற்றி ஆங்கிலத்தில்

கோயில் அமைவிடம்

https://www.youtube.com/watch?v=bcQieKqwL0A

https://www.youtube.com/watch?v=8tYZaIa0WRA