சாய்லட்சுமி பலிஜப்பள்ளி
சாய்லட்சுமி பலிஜெபள்ளி (Sailakshmi Balijepally) இந்தியாவைச் சேர்ந்த குழந்தைகள் மருத்துவரும், தொண்டு நிறுவனரும் ஆவார். இவருக்கு 2015 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசுத் தலைவர் நாரி சக்தி விருது வழங்கினார்.
சாய்லட்சுமி பலிஜப்பள்ளி | |
---|---|
தேசியம் | இந்தியா |
கல்வி | புனித பிரான்ஸிஸ் மகளிர் கல்லூரி, காந்தி மருத்துவக் கல்லூரி |
பணி | சமூக செயல்பாட்டாளர் |
அறியப்படுவது | ஏகம் அறக்கட்டளையின் நிறுவனர், 2015இல் நாரி சக்தி விருது பெற்றவர் |
வாழ்க்கை
தொகுபலிஜெபள்ளி சிக்கந்தராபாத்ட்ஜில் வளர்க்கப்பட்டார். அங்கு இவர் 12 ஆண்டுகள் பெண்கள் கீஸ் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். இவரது பெற்றோர் இருவரும் மருத்துவர்கள் என்பதால் இவரும் மருத்துவத்தையே படிக்க வேண்டும் என விரும்பினர். இவரது மூத்த சகோதரி இவருக்கு முன்மாதிரியாக இருந்தார். மேலும் அவர் இருதயநோய் நிபுணராக இருந்தார். காந்தி மருத்துவக் கல்லூரியில் நுழைவதற்கு முன்பு இவர் புனித பிரான்சிஸ் மகளிர் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் பயின்றார். பின்னர் இவர் ஐந்து ஆண்டுகள் மருத்துவம் பயின்று ஒரு மருத்துவராகவும் பின்னர், ஒரு அறுவை சிகிச்சை நிபுணராகவும் தகுதி பெற்றார். [1]
தொண்டுப் பணி
தொகு2001 சனவரி 20 அன்று ஏற்பட்ட குஜராத் நிலநடுக்கம் 20,000 பேரைக் கொன்றது. மேலும் பலரைக் காயப்படுத்தியது. மேலும், 400,000க்கும் மேற்பட்டவர்களை வீடற்றவர்களாக்கியது. அந்த சமயத்தில் இவருக்குத் தேர்வுகள் இருந்த போதும் தன்னார்வத் தொண்டு செய்ய முன்வந்தார். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, பீகார் வெள்ளம் மில்லியன் கணக்கான மக்களை வீடற்றவர்களாக ஆக்கியபோது, மீண்டும் இவர் அப்பகுதி மக்களுக்காகப் பணிபுரியச் சென்றார். [2]
ஏகம் அறக்கட்டளை
தொகுஇவர் தனது மருத்துவ வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில் 60 அனாதை இல்லங்களை ஆதரிப்பதென முடிவு செய்தார். மேலும் அவர் ஒவ்வொருவரையும் ஒரு சக குழந்தை மருத்துவரிடம் இணைத்தார். இவருடைய சகாக்கள் அவர்களுக்கு உதவ ஆர்வமாக இருந்தனர். ஆனால் காலப்போக்கில் இந்த அமைப்பு உண்மையில் செயல்படவில்லை. அனாதைகளுக்கான கவனிப்பை வழங்குவதில் ஏற்படும் சிக்கல் குறித்து கவனம் செலுத்துவதற்கான இவரது முயற்சியாக 2009 ஆம் ஆண்டில் ஏகம் அறக்கட்டளையை நிறுவினார். [2]
விருது
தொகு2015 ஆம் ஆண்டில் சர்வதேச மகளிர் தினத்தன்று இவரது தலைமை மற்றும் சாதனைக்காக நாரி சக்தி விருது [3] இந்த விருது அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜியால் வழங்கப்பட்டது . [4] இவருடன் சேர்ந்து எட்டு பெண்களுக்கு இதேபோல் நாரி சக்தி விருது வழங்கப்பட்டது.
சிறப்பு பிரசாரம்
தொகுகாஞ்சிபுரத்தில் உள்ள தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் 2018 ஆம் ஆண்டில் இவரது ஏகம் அறக்கட்டளை ராயல் என்ஃபீல்ட் வாகனத்துடன் ஒரு பிரசரத்திற்குச் ஏற்பாடு செய்தது. பிரசாரத்திற்கு வந்தவர்கள் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்து வந்தனர். [5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Chandrasekaran, N. (April 2014). Incredible Champions (in ஆங்கிலம்). PartridgeIndia. pp. 153–160. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4828-2213-7.
- ↑ 2.0 2.1 Chandrasekaran, N. (April 2014). Incredible Champions (in ஆங்கிலம்). PartridgeIndia. pp. 153–160. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4828-2213-7.Chandrasekaran, N. (April 2014). Incredible Champions. PartridgeIndia. pp. 153–160. ISBN 978-1-4828-2213-7.
- ↑ DelhiMarch 9, IndiaToday in New; March 9, 2015UPDATED; Ist, 2015 14:43. "Stree Shakti Puraskar and Nari Shakti Puraskar presented to 6 and 8 Indian women respectively". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-22.
{{cite web}}
:|first3=
has numeric name (help)CS1 maint: numeric names: authors list (link) - ↑ "Nari Shakti Puraskar awardees full list". Best Current Affairs. 9 March 2017. பார்க்கப்பட்ட நாள் 2020-04-18.
- ↑ "Royal Enfield Partners with NGO EKAM Foundation". Hrdots. 2019-05-15. பார்க்கப்பட்ட நாள் 2020-04-22.