சாரா அல் அமிரி

சாரா பிந்த் யூசெப் அல் அமிரி (Sarah bint Yousef Al Amiri ) (பிறப்பு 1987) ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்தில் மேம்பட்ட அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகவும், ஐக்கிய அரபு அமீரக விண்வெளி நிறுவனம் மற்றும் ஐக்கிய அரபு அமீரக விஞ்ஞானிகள் கழகத்தின் தலைவரும், அமீரகத்தின் செவ்வாய் கிரகத் திட்டத்தின் துணை திட்ட மேலாளரும் ஆவார்.[1]

சாரா அல் அமிரி
2019இல் அமிரி
மேம்பட்ட அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
19 அக்டோபர் 2017
பிரதமர்முகமதி பின் ரஷீத்
முன்னையவர்பதவி உருவாக்கப்பட்டது
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1987 (அகவை 36–37)
ஐக்கிய அரபு அமீரகம்,
பிள்ளைகள்காலித்
இரீம்
முன்னாள் கல்லூரிஅமெரிக்கப் பலகலைகழகம், சார்ஜா

ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்

தொகு

அல் அமிரி 1987இல் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிறந்தார்.[2] இவர் சார்ஜாவில் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலைப் பயின்று இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை பெற்றார்.[3][4] இவர் எப்போதும் விண்வெளி பொறியியலில் ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு விண்வெளி திட்டம் இல்லாத நேரத்தில் வளர்ந்தார்.[5]

ஆராய்ச்சியும் தொழிலும்

தொகு

இவர், தனது தொழில் வாழ்க்கையை அமீரக மேம்பட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் தொடங்கினார். அங்கு இவர் துபாய்சாட் -1 மற்றும் துபாய்சாட் -2 ஆகிய செயற்கைக்கோள் திட்டங்களில் பணிபுரிந்தார்.[6] துபாய் உலக வர்த்தக மையத்தில் ஒரு உயர்ந்த பணியை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர் இவர் ஐக்கிய அரபு அமீரக காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் சேர்ந்தார். 2016ஆம் ஆண்டில் இவர் அமீரக அறிவியல் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.[5]

செவ்வாய் கிரகத் திட்டம்

தொகு

இன்று இவர் அமீரகத்தின் செவ்வாய் திட்டத்துக்கான அறிவியல் முன்னணியாக் இருக்கிறார்.[5][7] கொலராடோ பல்கலைக்கழகம், போல்டர் , பெர்க்லியின் கலிபோர்னியா பல்கலைக்கழகம்), அரிசோனா மாநில பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் கூட்டுசேர்ந்து இந்த பணி நடைபெறுகிறது. அமீரகத்தின் செவ்வாய் கிரகத் திட்டம் பற்றி டெட் மாநாட்டில் பேசினார்.[8][9] நவம்பர் 2017இல், லூசியானாவில் செவ்வாய் திட்டம் பற்றி பேசியபோது சர்வதேச டெட் நிகழ்வில் பேசிய முதல் அமீரகர் என்ற பெருமையை இவர் பெற்றார். ஐக்கிய அரபு அமீரகத்தின் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2020 சூலை மாதம் தொடங்கப்பட்ட இந்த பணி 2021இல் செவ்வாய் கிரகத்தை அடைய திட்டமிடப்பட்டுள்ளது. இவர் 2016 உலக பொருளாதார மன்றத்தில் அழைக்கப்பட்ட பேச்சாளராக இருந்தார்.[10]

அக்டோபர் 2017இல் ஐக்கிய அரபு அமீரக அமைச்சரவையில் மேம்பட்ட அறிவியல் துறை அமைச்சராக இவர் நியமிக்கப்பட்டார்.[11][12] உலகளாவிய அறிவியல் ஒத்துழைப்பை அதிகரிக்கும் முயற்சியாக, இவர் நவம்பர் 2017 இல் அமெரிக்க அறிவியல் நிறுவனங்களுக்கு சுற்றுப்பயணம் செய்தார். 23 நவம்பர் 2020 அன்று அறிவிக்கப்பட்ட பிபிசியின் 100 பெண்கள் (பிபிசி) பட்டியலில் இவர் இருந்தார். பிப்ரவரி 2021 இல், தி டைம்ஸ் பத்திரிக்கையின் 2021ன் அடுத்த 100 செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலிலும் இவர் பெயர் பெற்றார் .

மேற்கோள்கள்

தொகு
  1. August 2020, Meghan Bartels 18. "UAE's Hope Mars orbiter nails first big maneuver in deep space". Space.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-27.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  2. "من هي الوزيرة سارة الأميري لمحات من حياة مهندسة"الأمل"". Thaqfny. பார்க்கப்பட்ட நாள் 2020-08-03.
  3. "Members Of The Cabinet". uaecabinet.ae (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-06-27.
  4. "View Content". www.ausalumni.ae (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-06-27.
  5. 5.0 5.1 5.2 "The 29-year-old woman who's lead scientist for the UAE's Mars mission". World Economic Forum. பார்க்கப்பட்ட நாள் 2018-06-27.
  6. "Sarah Al Amiri | The First UAE Synchrotron User Meeting". www.aesua.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-06-27.
  7. "Arabian Aerospace - Living in the city...on Mars". www.arabianaerospace.aero. பார்க்கப்பட்ட நாள் 2018-06-27.
  8. "TEDxDubai". TEDxDubai (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-06-27.
  9. TEDx Talks (2017-01-23), A Mars Mission of HOPE | Sarah Amiri | TEDxDubaiSalon, பார்க்கப்பட்ட நாள் 2018-06-27
  10. "Authors". World Economic Forum. பார்க்கப்பட்ட நாள் 2018-06-27.
  11. "Members Of The Cabinet". uaecabinet.ae (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-06-27."Members Of The Cabinet". uaecabinet.ae. Retrieved 2018-06-27.
  12. Sarah Amiri of UAE Mars Mission appointed Science Minister by Mohammad Bin Rashid. http://www.ummid.com/news/2017/October/20.10.2017/sarah-amiri-appointed-minister-of-science-in-uae.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரா_அல்_அமிரி&oldid=3926809" இலிருந்து மீள்விக்கப்பட்டது