சார்லி சாப்ளின் 2
சார்லி சாப்ளின் 2 (Charlie Chaplin 2) 2019இல் தமிழில் வெளிவந்த நகைச்சுவைத் திரைப்படம். இதை சக்தி சிதம்பரம் இயக்கியுள்ளார்.[1] இப்படத்தில் பிரபுதேவா, நிக்கி கல்ரானி மற்றும் பிரபு ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர். 2002இல் வெளிவந்த சார்லி சாப்ளின் என்றப் படத்தின் தொடர்ச்சியாகும். படத்திற்கான இசையை அம்ரேஷ் கணேஷ் மேற்கொண்டார். இப்படத்தை டி. சிவா தனது அம்மா கிரியேஷனுக்காக தயாரித்திருந்தார்.[2] இப்படம் 2019 ஜனவரி 25 அன்று வெளியிடப்பட்டது.[3]
சார்லி சாப்ளின் 2 | |
---|---|
![]() சுவரிதழ் | |
இயக்கம் | சக்தி சிதம்பரம் |
தயாரிப்பு | டி. சிவா |
கதை | சக்தி சிதம்பரம் |
கதைசொல்லி | சிவா |
இசை | அம்ரேஷ் கணேஷ் |
நடிப்பு | பிரபுதேவா நிக்கி கல்ரானி |
ஒளிப்பதிவு | சௌந்தரராஜன் |
படத்தொகுப்பு | ஜி. சசிகுமார் |
கலையகம் | அம்மா கிரியேஷன்ஸ் |
வெளியீடு | 25 ஜனவரி 2019 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச் சுருக்கம் தொகு
திரு (பிரபு தேவா) ஒரு திருமண உறவை உருவாக்கும் மேட்ரிமோனி நிறுவனத்தை நடத்துகிறார். அதன் மூலம் 99 ஜோடிகளுக்கு தன் நண்பர்களான அரவிந்த் ஆகாஷ் மற்றும் சந்தனா ராஜுடன் இணைந்து திருமணம் செய்விக்கிறார். பிறகு, திருவின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்துவைக்க முயற்சிக்கின்றனர். அதே சமயத்தில் மருத்துவர் ராமகிருஷ்ணனின் (பிரபு) மகளான சாரா (நிக்கி கல்ரானி)-யை கண்டவுடன் காதலில் விழ, இது சாராவுக்கும் தெரிய வர அவரும் ஒப்புக்கொள்கிறார். இவர்களின் திருமணத்திற்கு ஏற்பாடும் நடக்கிறது. இப்போது கதை பின்னோக்கி நகர்கிறது. மருத்துவர் இராமகிருஷ்ணனின் (பிரபு) மகள் சாரா (நிக்கி கல்ராணி) மீது திருவுக்கு காதல் உண்டாகிறது. இவர்களின் பெற்றோர்கள் இருவரும் திருமணத்திற்கு ஒப்புக்கொள்கிறார்கள். அப்போது திருவின் நண்பன் துபாய் ராஜாவின் மூலம் அவள் மீது திருவிற்கு ஒரு சந்தேகம் வந்து விடுகிறது. அவளை திட்டி ஒரு காணொளி எடுத்து அவளுக்கு அனுப்புகிறான். திருவும் அவரது நண்பர்களும் செய்யும் ஒரு பெரிய தவறு திருமணம் நின்று விடும் கட்டத்தை அடைகிறது. பின்னர் உண்மை தெரிந்த திரு அந்த காணொளியை சாரா பார்ப்பதற்குள் தடுத்து நிறுத்த முயல்கிறான். அவ்வாறு செல்லும் வழியில், அவர்கள் ஒரு வனக் கடத்தல் கும்பலுடன் தொடர்பு கொண்டு தங்கள் காரை இழக்கிறார்கள், ஆனால் தடையைத் தாண்டி முன்னேறுகிறார்கள். ஆனால் அதனால்தான் அவர்கள் திருப்பதி என்பவரை நோக்கி விரைகிறார்கள். அது நடந்ததா?, கடைசியாக அவர் தடைகளைத் தாண்டி, தனது காதலியை மணந்தாரா? என்பது மீதமுள்ள கதையாகும்.
நடிகர்கள் தொகு
பிரபுதேவா - திரு
பிரபு - இராமகிருஷ்ணன்
நிக்கி கல்ரானி - சாரா
அதா சர்மா - "உளவியல்" சாரா[4]
விவேக் பிரசன்னா - துபாய் ராஜா
அரவிந்து ஆகாசு - ஆகாஷ்
சந்தனா ராஜ் - மஹி
டி. சிவா - சிதம்பரம்
செந்தில்குமார் - தங்கலட்சுமி
ரவி மரியா - புல்லட் புஷ்பராஜ்
லுத்புதீன் - "பலகுரல்" மணீஷ்
தேவ் கில் - கடத்தல்காரன்
சமீர் கோச்சார்[5] - கைபேசிக் கடைக்காரர்
கிரேன் மனோகர் - எம்.எல்.ஏ. பக்கோடா நாயுடு
சாம்ஸ் - Chaams]] - ஓரினச்சேர்க்கையாளர்
சிசர் மனோகர் - புல்லட் புஷ்பராஜின் உதவியாளர்
வேல்முருகன் - புல்லட் புஷ்பராஜின் உதவியாளர்
கோமல் சர்மா
அமித் பார்கவ்[6] சாராவின் சகோதரியின் கணவர்
அஸ்வின் ராஜா- விடுதிப் பணியாளர்
கோலிசோடா சீதா - சுமங்கலி
செந்தில் - சிறப்புத் தோற்றம்
ஒலிப்பதிவு தொகு
இப்படத்தின் ஒலிப்பதிவை அம்ரேஷ் கணேஷ் மேற்கொண்டுள்ளார். விஜய் டிவியின் 'சூப்பர் சிங்கர்' இறுதிப் போட்டியில் வென்ற செந்தில் மற்றும் ராஜலட்சுமி ஆகியோர் இப்படத்திற்காக தங்கள் சொந்தப் பாடலான "சின்ன மச்சன்" எனறப் பாடலைப் பாடினர்.[7] பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது[8] இந்த படத்தின் "இவள ரொம்ப" பாடலுக்காக பிரபு தேவா பாடலாசிரியராக அறிமுகமானார்.[9] சரிகம என்ற நிறுவனம் ஒலிப்பதிவை வெளியிட்டது.[10]
சார்லி சாப்ளின் 2 | ||||
---|---|---|---|---|
ஒலிப்பதிவு
| ||||
வெளியீடு | 2018 | |||
இசைப் பாணி | ஒலிப்பதிவு | |||
நீளம் | 17:08 | |||
மொழி | தமிழ் | |||
இசைத்தட்டு நிறுவனம் | சரிகம, இந்தியா | |||
இசைத் தயாரிப்பாளர் | அம்ரேஷ் கணேஷ் | |||
அம்ரேஷ் கணேஷ் காலவரிசை | ||||
|
சின்ன மச்சான் - செந்தில், ராஜலட்சுமி
இவள் ரொம்ப - அம்ரேஷ் கணேஷ்
மாமு மாமு - அம்ரேஷ் கணேஷ்
ஐ வான்ட் மேரி யு - கேபி. மகாதேவன், கே. தாஸ்குப்தா
வெளியீடு தொகு
சார்லி சாப்ளின் 2 படம் 2019 ஜனவரி 25 அன்று வெளியிடப்பட்டது.
சந்தைப்படுத்தல் தொகு
படத்தின் அதிகாரப்பூர்வ முன்னோட்டத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் 2019 ஜன்வரி 15 தைப்பொங்கல் அன்று வெளியிட்டார்.[11][12]
விமர்சனங்கள் தொகு
"பிலிம்பீட்.காம்" என்ற இணையதளத்தில் இவ்வாறு எழுதுகிறது "பழைய காலத்து கதையில், வாட்ஸ்அப், பேஸ்புக், இண்டர்நெட் போன்ற விஷயங்களை இணைத்து, அப்டேட்டட் வெர்ஷனாக தரமுயன்றிருக்கிறார் இயக்குனர் ஷக்தி சிதம்பரம். ஆனால் பெரும்பாலான காட்சிகள் பழைய பொட்டி கம்ப்யூட்டராக அலுப்பையே தருகின்றன. சார்லி சாப்ளின் முதல் பாகத்தை போலவே இதையும் முழுக்க முழுக்க காமெடி கலாட்டாவாக எடுக்க நினைத்திருக்கிறார் ஷக்தி சிதம்பரம். ஆனால் அந்த அளவுக்கு ரசிக்கக்கூடிய காமெடிக் காட்சிகள் படத்தில் இல்லை என்பதுதான் மிகப்பெரிய குறை. உடலமைப்பும், துறுதுறுப்பும் 17 வருடங்களுக்கு முந்தைய அதே பிரபுதேவாவை ஞாபகப்படுத்துகிறது. முகத்தில் மட்டுமே வயது தெரிகிறது. தன்னால் முயன்றவரை படத்தை தாங்கிப் பிடித்திருக்கிறார் மனிதர்" [13]
"சினிமா.தினமலர். காம்" என்ற இணையதளத்தில் இவ்வாறு எழுதுகிறது. 17 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ஒரு படத்தை அதே பாணியில் எடுத்திருப்பதை போன்ற உணர்வே இரண்டாம் பாகத்திலும் ஏற்படுகிறது. முதல் பாகத்தில் கதை என்பது இருந்தது. இரண்டாம் பாகத்தில் ஒரு வரிக் கதையைக் கொண்டு இயக்குநர் முழுப்படத்தையும் நகர்த்தியிருக்கிறார். [14]
மேற்கோள்கள் தொகு
- ↑ "Charlie Chaplin 2 (2019) | Charlie Chaplin 2 Tamil Movie | Charlie Chaplin 2 Review, Cast & Crew, Release Date, Photos, Videos". FilmiBeat. 10 December 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Prabhu Deva debuts as a lyricist with 'Charlie Chaplin 2'". Sify. 23 நவம்பர் 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 10 December 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Dinamalar (15 January 2019). "ஜன.,25ல் சார்லி சாப்ளின் 2 ரிலீஸ் | Charlie Chaplin 2 releasing 25 Jan". தினமலர் – சினிமா. 15 January 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Charlie Chaplin 2 Movie Characters Posters". moviegalleri.net. 24 January 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Samir Kochhar all set for his Tamil debut with Charlie Chaplin 2". mid-day. 28 September 2018. 15 January 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Amit Bhargav in Charlie Chaplin 2". The Times of India. 15 January 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Senthil and Rajalakshmi to sing their 'Chinna Machan' song for Charlie Chaplin 2". The Times of India. 15 January 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Charlie Chaplin 2 music director Amrish thrilled with adulation for Chinna Machan Sevatha Machan song". The New Indian Express. 15 January 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Prabhu Deva's one more talent brought to light in his next movie – Tamil Movie News". IndiaGlitz.com. 22 November 2018. 15 January 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Charlie Chaplin 2 by Various Artistes". Saregama. 15 January 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Khalilullah.S (15 January 2019). "`இவனுக்கு இவனே தான் வில்லன்' – வெளியானது சார்லி சாப்ளின் 2 டிரெய்லர்! | Charlie Chaplin 2 trailer released". vikatan. 15 January 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Charlie Chaplin 2 trailer: Prabhudheva, Nikki Galrani and Adah Sharma come together for another laugh riot – watch here". bollywoodlife.com. 15 January 2019. 15 January 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ https://tamil.filmibeat.com/reviews/charlie-chaplin-2-movie-review-058008.html Read more at: https://tamil.filmibeat.com/reviews/charlie-chaplin-2-movie-review-058008.html
- ↑ https://cinema.dinamalar.com/movie-review/2660/Charlie-Chaplin-2/