சிகர் மொராதாபாதி

இந்திய எழுத்தாளர்

அலி சிக்கந்தர் (Ali Sikandar) (6 ஏப்ரல் 1890 - 9 செப்டம்பர் 1960), தனது புனைப்பெயரான சிகர் மொரதாபாதி ( Jigar Moradabadi )என்றும் அறியப்படும் இவர் ஒரு இந்திய உருதுக் கவிஞரும் மற்றும் கசல் எழுத்தாளரும் ஆவார். இவர் 1958 இல் தனது “அதிசு-இ-குல்” கவிதைத் தொகுப்பிற்காக சாகித்ய அகாடமி விருதைப் பெற்றார். மேலும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட “கடிதங்களின் முனைவர்” என்ற கௌரவ விருது பெற்ற ( முகமது இக்பாலுக்குப் பிறகு) இரண்டாவது கவிஞரும் ஆவார்.

சிகர் மொராதாபாதி
பிறப்புஅலி சிக்கந்தர்
(1890-04-06)6 ஏப்ரல் 1890
மொராதாபாத், பிரித்தானிய இந்தியா (தற்போதைய உத்தரப் பிரதேசம், இந்தியா)
இறப்பு9 செப்டம்பர் 1960(1960-09-09) (அகவை 70)
கோண்டா, உத்தரப் பிரதேசம், இந்தியா
பணிகவிஞர்
அறியப்படுவதுபாரம்பரிய உருது பாடல்கள்
கசல் (இசை)
குறிப்பிடத்தக்க படைப்புகள்தெக்-இ-சிகர்
சோலா-இ-துர் (1937)
ஆதிசு-இ-குல் (1959)
திவான்-இ-சிகர்
விருதுகள்சாகித்திய அகாதமி விருது (1958)

சுயசரிதை

தொகு

இவர் மொராதாபாத்தில் அரபு, பாரசீகம் மற்றும் உருது மொழிகளில் கல்வியைப் பெற்றார். பின்னர், விற்பனையாளராக பணியாற்றத் தொடங்கினார்.[1] சிகர் இலக்னோவிற்கு அருகிலுள்ள கோண்டாவுக்குச் சென்று உருதுக் கவிஞர் அசுகர் கோண்ட்வியுடன் நட்பு கொண்டார்.

பாராட்டுக்கள்

தொகு

ஜிகர் மொரதாபாதி கசல் எழுத்தில் இந்தியத் திரையுலகில் ஒரு முக்கிய பாடலாசிரியரான [2] மச்ரூக் சுல்தான்புரிக்கு வழிகாட்டியாக இருந்தார்.

புகழ்பெற்ற உருது கவிஞரும் கல்வியாளருமான பைஸ் அகமத் பைஸ், இவரை தனது வழிகாட்டியாகக் கருதினார். [3] சப்ரி சகோதரர்கள், அசீசு மியான், முன்னி பேகம் & அத்தாவுல்லா கான் எசகெல்வி போன்ற பல சூபி பாடகர்களால் இவரது சூபி கவிதைகள் பாடப்பட்டது.

இறப்பு

தொகு

சிகர் மொராதாபாதி, 9 செப்டம்பர் 1960 அன்று கோண்டாவில் இறந்தார். [1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Amaresh Datta (1988). Encyclopaedia of Indian Literature. New Delhi: Sahitya Akademi. p. 1838. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-260-1194-0. பார்க்கப்பட்ட நாள் 10 December 2017.
  2. Service, Tribune News. "Pluralism in verse" (in en). Tribuneindia News Service. https://www.tribuneindia.com/news/features/pluralism-in-verse-31462. 
  3. . 2011-03-06. {{cite web}}: Missing or empty |title= (help); Missing or empty |url= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிகர்_மொராதாபாதி&oldid=4108534" இலிருந்து மீள்விக்கப்பட்டது