இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தின் வடக்கிலும், இமாச்சலப் பிரதேசத்தின் வடகிழக்கிலும் காணப்படும் ஆட்டினம் சிகு ஆடு (Chigu goat) ஆகும். இந்த ஆட்டினம் இறைச்சி மற்றும் காசுமீர் கம்பளி உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது. ஆட்டின் மேல் தோல் பொதுவாக வெள்ளை, சாம்பல் சிவப்புடன் நிறக் கலவையுடன் காணப்படும். ஆண், பெண் இரு ஆடுகளுக்கும் முறுக்கப்பட்ட கொம்புகள் உள்ளன. ஆண் ஆடுகளின் உடல் எடை சுமார் 40 கிலோ வரையிலும், பெண் ஆடுகளின் உடல் எடை சுமார் 25 கிலோ வரை இருக்கும். இவை கடல்மட்டத்திலிருந்து சுமார் 3500 முதல் 5000 மீ வரை உயரமுள்ள மலைத்தொடர்களில் வாழ்கின்றன. இந்தப் பகுதி பெரும்பாலும் குளிருடன் வறண்டு காணப்படும்.

மேலும் காண்க தொகு

  • காஷ்மீர் ஆடு

ஆதாரங்கள் தொகு

  • "Chigu Goat". Archived from the original on 22 December 2008.
  • Goats by breed - Chigu
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிகு_ஆடு&oldid=3133150" இலிருந்து மீள்விக்கப்பட்டது