சிக்கந்தர் ஜா, மூன்றாம் ஆசப் ஜா
நவாப் மிர் அக்பர் அலி கான் சித்திகி பகதூர், சிக்கந்தர் ஜா, அசஃப் ஜா III (Nawab Mir Akbar Ali Khan Siddiqi Bahadur, Sikander Jah, Asaf Jah III) (11 நவம்பர் 1768 - 21 மே 1829), 1803 முதல் 1829 வரை ஐதராபாத் இராச்சியத்தை ஆட்சி செய்த 6வது நிசாம் ஆவார்.[1] இவர் சௌமகல்லா அரண்மனையில் இரண்டாம் ஆசப் ஜா மற்றும் தக்னியத் உன்-நிசா பேகத்தின் இரண்டாவது மகனாகப் பிறந்தார்.
சிக்கந்தர் ஜா, மிர் அக்பர் அலி கான் சித்திகி நிசாம் | |
---|---|
ஐதராபாத்தின் நிசாம் | |
ஐதராபாத் இராச்சியத்தின் 6வது நிசாம் | |
ஆட்சிக்காலம் | 6 ஆகஸ்ட் 1803— 21 மே 1829 |
முன்னையவர் | நிசாம் அலி கான் |
பின்னையவர் | நாசிர்-உத்-தௌலா |
பிறப்பு | 11 நவம்பர் 1768 சௌமகல்லா அரண்மனை (கிலாவத்), ஐதரபாத்து, ஐதராபாத் இராச்சியம் (தற்போதைய தெலங்காணா, இந்தியா) |
இறப்பு | 21 மே 1829 (வயது 61) ஐதராபாத்து, ஐதராபாத் இராச்சியம் (தற்போதைய தெலங்காணா, இந்தியா) |
புதைத்த இடம் | மக்கா பள்ளிவாசல், ஐதராபாத்து, மக்கா பள்ளிவாசல் இராச்சியம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய தெலங்காணா, இந்தியா) |
துணைவர் | ஜகான் பர்வார் பேகம் சாகிபா |
குழந்தைகளின் பெயர்கள் |
|
தந்தை | நிசாம் அலி கான் , இரண்டாம் ஆசப் ஜா |
தாய் | தக்னியத் உன்-நிசா பேகம் |
இராணுவ விரிவாக்கம்
தொகுஇவரது ஆட்சியின் போது, ஐதராபாத்து அருகே ஒரு பிரிட்டிசு இராணுவத் தளம் நிறுவப்பட்டது மற்றும் அந்த பகுதி இவரது பெயரால் சிக்கந்தராபாத் என்று பெயரிடப்பட்டது. இவரது மகன் சம்சமதௌலா (மிர் பசீருதீன் அலி கான்) இவரது சகோதரர் நசீர் உத் தௌலா மற்றும் மருமகன் அப்சல் உத் தௌலா ஆகியோருக்கு பாதுகாப்பு ஆலோசகராக இருந்தார். ஆனால், பிரித்தானியர்களை பராமரிப்பதற்காக இவர் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை. இவரது ஆட்சியில் மாநிலம் நிதிச் சிக்கலில் இருந்தது. [2] [3]
சீக்கியப் படைப்பிரிவு
தொகுஐதராபாத்து இராச்சியத்தின் தலைமை அமைச்சரான மகாராஜா சந்து லாலின் பரிந்துரையின் பேரில், 1200க்கும் மேற்பட்ட சீக்கிய வீரர்கள் நிசாமின் படையில் சேர்ந்தனர். அபிச்சல்நகர் நாந்தேடு என்ற பகுதியில் ஒரு குருத்துவாரா கட்ட 1830 ஆம் ஆண்டில், மகாராஜா இரஞ்சித் சிங் மேலும் 150 ஆட்களை அனுப்பினார். [4] [5]
கோயில் கட்டடம்
தொகுசிக்கந்தர் ஜா ஐதராபாத்தில் உள்ள அத்தாபூரில் இராம்பாக் கோயிலைக் கட்டி, ஐதராபாத்தில் உள்ள முஸ்லிம் ஆசப் ஜாஹி ஆட்சியாளர்களுக்கும் அவர்களின் இந்து குடிமக்களுக்கும் இடையே இருந்த வகுப்புவாத நல்லிணக்கத்தை நிரூபிக்கும் திறப்பு விழாவில் கலந்து கொண்டார். நிசாம் கோயில் பூசாரிக்கு கோவிலின் பராமரிப்புக்காக சாகிர் வழங்கினார். [6] [7]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "The University of Queensland Homepage".
- ↑ "Asaf Jahis". Ap state portal. Archived from the original on 15 ஜூன் 2020. பார்க்கப்பட்ட நாள் 19 September 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Asaf Jahis (1724-1948)". பார்க்கப்பட்ட நாள் 21 September 2019.
- ↑ "Dakkhani Sikhs - SikhiWiki, free Sikh encyclopedia".
- ↑ "Guru Nanak's centuries-old link with Nizam's Nirmal". https://www.thehindu.com/news/national/telangana/guru-nanaks-centuries-old-link-with-nizams-nirmal/article30427901.ece.
- ↑ Nanisetti, Serish (8 April 2017). "Nizam built this temple". The Hindu (thehindu). https://www.thehindu.com/society/history-and-culture/the-rambagh-temple-at-attapur-dates-that-back-to-the-19th-century/article17892917.ece/amp/.
- ↑ "Rambagh temple, a hidden gem in the Hyderabad". https://www.deccanchronicle.com/nation/current-affairs/051117/rambagh-temple-a-hidden-gem-in-the-hyderabad.html.