நாசிர்-உத்-தௌலா

பொதுவாக நசீர்-உத்-தௌலா (Nasir-ud-Daulah) என அழைக்கப்படும் மிர் பர்குண்டா அலிகான் (பிறப்பு: 1794 ஏப்ரல் 25 - இறப்பு: 1857 மே 16) என்பவர் பிரித்தானிய இந்தியாவின் சுதேச மாநிலமான ஐதராபாத்தைச் சேர்ந்த நிசாமாவார், 1829 மே 24 முதல் 1857 இல் இறக்கும் வரை நிசாமாக இருந்தார்.

பர்குண்டா அலிகான்
நாசிர்-உத்-தௌலா
நாசிர்-உத்-தௌலா
பிறப்புமிர் பர்குண்டா அலிகான்
(1794-04-25)25 ஏப்ரல் 1794
பீதர்
இறப்பு16 மே 1857(1857-05-16) (அகவை 63)
பட்டம்ஐதராபாத் நிசாம்
முன்னிருந்தவர்சிக்கந்தர் ஜா
பின்வந்தவர்அப்சல்-உத்-தௌலா
சமயம்இசுலாம்
வாழ்க்கைத்
துணை
தில்வாருன்னிசா பேகம்

நிசாம் சிகந்தர் ஜா மற்றும் பாசிலத்துன்னிசா பேகம் ஆகியோருக்கு பர்குண்டா அலிகான் என்ற பெயரில் பிறந்த நசீர்-உத்-தௌலா 1829 இல் அரியணையில் ஏறினார். இவர் பொருளாதாரா ரீதியாக பலவீனமான இராச்சியத்தை பெற்றார். இவரது வேண்டுகோளின் பேரில், வில்லியம் பெண்டிங்கு பிரபு ஐரோப்பிய ஆட்சித் துறைகளின் அனைத்து கண்காணிப்பாளர்களையும் திரும்பப் பெற்றுக்கொண்டார். மேலும், நிசாமின் விவகாரங்களில் தலையிடாத கொள்கையை பின்பற்றினார். நிசாம் 1846 இல் ஐதராபாத் மருத்துவப் பள்ளியை நிறுவினார். இவர் அரேபியர்கள், ரோகில்லாக்கள் மற்றும் ஆங்கிலேயர்களுக்கும் பெரும் கடன்பட்டிருந்தார். மேலும் 1853 ஆம் ஆண்டில் இந்தியத் தலைமை ஆளுநர் டல்ஹெளசியின் ஆட்சியில் ஆங்கிலேயர்களுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இவரது பிரதேசத்தின் ஒரு பகுதியை ஆங்கிலேயருக்குக் கொடுத்ததற்கு ஈடாக அவரது கடன்கள் அனைத்தையும் அடைக்க ஆங்கிலேயர்கள் ஒப்புக்கொண்டனர்.

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

நசீர்-உத்-தௌலா பர்குண்டா அலிகான் என்ற பெயரில் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பீதர் என்ற இடத்தில் நிசாம் சிக்கந்தர் ஜாவின் மூத்த மகனாகப் பிறந்தார். நசீர்-உத்-தௌலாவின் தாயார் பாசிலத்துன்னிசா பேகம் என்பவராவார். [1] [2][3] பிரித்தானிய இந்தியாவின் மிகப்பெரிய சுதேச மாநிலமான ஐதராபாத்தின் முன்னாள் ஆட்சியாளராக நிசாம்கள் இருந்தனர்.[4]

ஆட்சி

தொகு

நசீர்-உத்-தௌலாவின் தந்தை நிசாம் சிக்கந்தர் ஜா 1829 மே 21 அன்று இறந்தார். [1] மே 24 அன்று இவர் ஐதராபாத்தின் சிம்மாசனத்தில் ஏறினார். [1] உதவி வருவாய் மந்திரி மகாராஜா சாந்து இலாலின் முறைகேடுகள் காரணமாக இவர் பொருளாதாரா ரீதியாக சிக்கலான ஒரு மாநிலத்தை பெற்றார்.[5]

அரியணை ஏறியதும், மகாராஜா சாந்து இலாலின் ஆலோசனையின் பேரில், நசீர்-உத்-தௌலா, இந்திய இந்தியத் தலைமை ஆளுநர் வில்லியம் பெண்டிங்க் பிரபு, ஐதராபாத்தின் அரசப்பிரதிநிதியான சர் சார்லசு மெட்காப் என்பவரிடம் அரசுதுறைகளில் தலையிடுவதை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார். ஆளுநரால் ஆட்சித் துறைகளின் ஐரோப்பிய கண்காணிப்பாளர்கள் நீக்கப்பட்டனர். [6] இவரது ஆட்சி முழுவதும், பென்டின்க் அரசின் விவகாரங்களில் தலையிடாத கொள்கையைப் பின்பற்றினார். [1]

மாநிலத்தின் நிதி சிக்கல்கள் காரணமாக, நசீர்-உத்-தௌலா தனது இராணுவத்தை நடத்துவதில் சிரமப்பட்டார். அரசு ஆங்கிலேயர்களுக்கு மேலும் மேலும் கடன்பட்டுக் கொண்டிருந்தது. [7] இவர் தனது இராச்சியத்தின் சில பகுதிகளை அரேபியர்களுக்கும் ரோகிலாக்களுக்கும் அடமானம் வைத்தார். சிறிய சாகிர்தார்களும் (நிலப்பிரபுத்துவ நில உரிமையாளர்கள்) தங்கள் தோட்டங்களை அடமானம் வைத்தனர். இதன் விளைவாக, இந்த பணக்காரர்கள் பீடு மற்றும் உஸ்மானாபாத் மாவட்டங்களின் விரிவான பகுதிகள் உட்பட இராச்சியத்தின் குறிப்பிடத்தக்க பகுதிகளை கட்டுப்படுத்தினர். இது ஜமீன்தார்கள் (பிரபுக்கள்) மற்றும் பெரிய சாகிர்தார்களை மேலும் திமிர் பிடிக்க வைத்தது. ஹிங்கோலி மாவட்டத்தில், ஒரு கிளர்ச்சியை ஒடுக்க துருப்புக்களை அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. [8]

சமகால பதிவுகளின்படி, நசீர்-உத்-தௌலாவின் ஆட்சியில் நெடுஞ்சாலை கொள்ளை, கொலைகள் மற்றும் நில அபகரிப்பு ஆகியவை அதிகரித்தன. மேலும் லஞ்சம் மற்றும் ஊழல் பொதுவானதாகிவிட்டது. ஜமீன்தார்கள் தொழிலாளர்களை சுரண்டினர். [8] பிரித்தானிய அதிகாரிகள் திரும்பப் பெற்றதால் இந்த நடவடிக்கைகள் நிகழ்ந்தன என்று நிசாமின் மந்திரி பதுல்லா கான் கூறினார். [9]

1835 ஆம் ஆண்டில், கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குநர்கள் மன்றம் கிளர்ச்சி செய்து ஐதராபாத் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும், இந்தத் தவறை தங்களால் புறக்கணிக்க முடியாது என்றும் பிரித்தன் அரசாங்கத்திற்கு கடிதம் எழுதியது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, வருவாய் அதிகாரிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும், எந்தவொரு அடக்குமுறையையும் அடக்குவதற்கும், நீதியை நிர்வகிப்பதற்கும் சில அரசு ஊழியர்களை மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரகசிய ஊழியர்களாக நசீர்-உத்-தௌலா நியமித்தார். எவ்வாறாயினும், ஊழியர்கள் குறைந்த தரத்தில் படிப்பறிவற்ற மன்சப்தார்களாக இருந்ததால் (இராணுவ அதிகாரிகள்), இந்த முறை தோல்வியடைந்தது. இந்த ஊழியர்கள் பதிலாக தாலுக்தார்களின் முகவர்களாக மாறினர், அவர்கள் தனி நபர்களிடமிருந்து பணம் பறிப்பது போன்ற தவறாக நடக்க ஆரம்பித்தனர். [10] [11] நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இயக்குநர்கள் நீதிமன்றம் இதே போன்ற ஒரு கடிதத்தை மீண்டும் எழுத வேண்டியதாயிற்று. [12]

நசீர்-உத்-தௌலாவின் தம்பி, இளவரசர் முபரேசு-உத்-தௌலா இந்தியாவில் வகாபி இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார். அவர் நாட்டில் பிரித்தன் இருப்பை வெறுத்தார். அவர்களையும் நிசாமையும் தூக்கி எறிய விரும்பினார். அவர் கர்நூலின் நவாப் இரசூல் கானுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். சில முகவர்களின் உதவியுடன், ஐதராபாத்தின் அரசப்பிரதிநிதி ஜேம்ஸ் எசுடூவர்ட் ப்ரேசர் அவர்களின் திட்டங்களைத் தடுத்தார். பின்னர் முபரேசு-உத்-தௌலா நசீர்-உத்-தௌலாவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டார். 1839 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி, முபரேசு-உத்-தௌலாவின் அரண்மனை மீது தாக்குதல் நடத்த நசீர்-உத்-தௌலா உத்தரவிட்டார். இதனால் முபரேசு-உத்-தௌலா கைது செய்யப்பட்டு கொல்கொண்டா கோட்டையில் சிறை வைக்கப்பட்டார். முபரேஸ் அவர் 1854 இல் இறக்கும் வரை அங்கேயே இருந்தார். [13] [14]

பிரதமர் சிராஜ்-உல்-முல்க் (1853 இல் அவர் இறக்கும் வரை) மற்றும் அடுத்த பிரதமர் சலார் ஜங் I ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், நசீர்-உத்-தௌலா ஒரு நவீன வருவாய் நிர்வாக முறையை நிறுவினார்.[5] இராச்சியம் 16 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. ஒவ்வொன்றும் அதன் நீதித்துறை மற்றும் ஆட்சி நிர்வாகத்திற்கு பொறுப்பான ஒரு தாலுக்தாரால் நிர்வகிக்கப்பட்டது. 1846 ஆம் ஆண்டில், நசீர்-உத்-தௌலா ஐதராபாத் மருத்துவப் பள்ளியை நிறுவி ஆண்களையும் பெண்களையும் மருத்துவத் துறையில் சேர்ப்பதில் அவர் ஆர்வம் காட்டினார். இது இப்போது உஸ்மானியா மருத்துவக் கல்லூரி என்று அழைக்கப்படுகிறது.[15]

டிசம்பர் 31, 1850 வாக்கில், நசீர்-உத்-தௌலாவின் பிரித்தானியர்களுக்கான கடன்கள் 7 மில்லியன் டாலர்களை எட்டின. 1852 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், அவர் தனது சொந்த அதிகாரிகளுக்கு பணம் செலுத்துவது கூட கடினமாயிற்று. [1] 1853 ஆம் ஆண்டில் இந்தியத் தலைமை ஆளுநர் டல்ஹெளசியின் ஆட்சியில் ஆங்கிலேயர்களுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தத்தின்படி, பேரர் மாகாணத்தை நிசாம் ஆங்கிலேயர்கள் பெற்றுக்கொண்டு அதற்கீடாக இவரது கடன்களை அடைக்க ஆங்கிலேயர்கள் ஒப்புக்கொண்டனர். [1] [16] பதிலுக்கு, ஆங்கிலேயர்கள் நிசாமின் அதிகாரிகளுக்கு பணம் கொடுத்தனர். [1]

இறப்பு

தொகு
 
நசீர்-உத்-தௌலா அடக்கம் செய்யப்பட்டுள்ள ஐதராபாத் மக்கா மஸ்ஜித்

1857 மே 16 அன்று, நசீர்-உத்-தௌலா இறந்தார். அவர் மக்கா மஸ்ஜித் மசூதியில் அடக்கம் செய்யப்பட்டார்.[17] அவருக்குப் பிறகு அவரது மகன் அப்சல்-உத்- தௌலா ஐதராபாத்தின் ஐந்தாவது நிசாமானார். [18]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

நசீர்-உத்-தௌலாவுக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். அவரது முதல் மனைவி தில்வாருன்னிசா பேகம், அவரது அரசசபையில் உள்ள அதிகாரியின் மகளாவார். அவரது இரண்டாவது மனைவி அவரது அரண்மனையில் பணிபுரிந்த ஒரு அதிகாரியின் மகளாவார். இவருக்கு ஒவ்வொரு மனைவியிடமிருந்தும் ஒரு மகன்கள் பிறந்தனர். [1]

மேலும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 Briggs 2007.
  2. Prema Kasturi; Chitra Madhavan (2007). South India heritage: An introduction. East West Books. p. 163. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788188661640. Mir Farkhunda Ali Khan (1829-1857) Mir Farkhanda Ali Khan Nusir-ud-Daulu was born in Bidar on 25th April 1794. He was the eldest son of Sikander Jah and after his father's death he succeeded him on 23rd May 1829. During the reign of his father, a number of British officers were employed in several civil services. He continued in the footsteps of his father.
  3. Chandraiah (1998). Hyderabad, 400 Glorious Years. K. Chandraiah Memorial Trust. p. 233. The Nizam permits Chandini Begum entitled Fazilat-unnisa Begum, the mother of Mubarizuddaula to visit the Golkonda Fort
  4. Prabash K. Dutta (3 December 2018). "Beyond Yogi-Owaisi debate: The story of Nizam and Hyderabad". இந்தியா டுடே. பார்க்கப்பட்ட நாள் 31 July 2019.
  5. 5.0 5.1 "A brief history of the Nizams of Hyderabad". Outlook. 5 August 2017. பார்க்கப்பட்ட நாள் 2 April 2019.
  6. Briggs 2007, ப. 96, 105, 307.
  7. Kate 1987, ப. 35.
  8. 8.0 8.1 Kate 1987, ப. 36.
  9. Kate 1987, ப. 37.
  10. Briggs 2007, ப. 106.
  11. Briggs 2007, ப. 107.
  12. Briggs 2007, ப. 108.
  13. Mallampalli 2017.
  14. Seshan, KSS (10 June 2017). "Mubarez-ud-Daulah's era: Of passion, rebellion and conspiracy". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 2 April 2019.
  15. Jovita Aranha (4 March 2019). "This Forgotten Hyderabad Woman Was The World's First Female Anaesthesiologist!". The Better India. பார்க்கப்பட்ட நாள் 2 April 2019.
  16. "Pesticide poisoning continues to claim farmers' lives in Maharashtra". 9 December 2017. பார்க்கப்பட்ட நாள் 28 July 2019.
  17. "Mecca Masjid, Hyderabad". British Library. பார்க்கப்பட்ட நாள் 19 April 2019.
  18. Kate 1987.

மேலும் படிக்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாசிர்-உத்-தௌலா&oldid=3741992" இலிருந்து மீள்விக்கப்பட்டது