சிசா சாகித்து

சிசா சாகித்து (Shiza Shahid) ஒரு பாக்கித்தான் சமூக தொழில்முனைவோராவார். சமூக ஆர்வலர், முதலீட்டாளர் மற்றும் கல்வியாளர் என்று பன்முகங்களுடன் இவர் இயங்கினார். இலாப நோக்கற்ற மலாலா நிதி அமைப்பின் இணை நிறுவனராகவும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் செயல்பட்டார். இந்த அமைப்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் கல்வியை ஊக்குவிக்கிறது. [1] 2013 ஆம் ஆண்டில், டைம்சு பத்திரிகை தேர்ந்தெடுத்த உலகை மாற்றும் 30 பெண்கள் பட்டியலில் இவரும் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இதேபோல வணிகப் பத்திரிகையான போர்ப்சு பத்திரிகை தேர்ந்தெடுத்த உலக சமூக தொழில் முனைவோர் பட்டியல் 30 பெண்கள் பட்டியலிலும் இவர் பெயர் சேர்த்துக் கொள்ளப்பட்டது. [2] அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசப்சாயின் வழிகாட்டியாகவும் இவர் நன்கு அறியப்பட்டவராக இருந்தார். [3] [4]

சிசா சாகித்து
Shiza Shahid
பிறப்புஇசுலாமாபாத்து, பாக்கித்தான்
தேசியம்பாக்கித்தானியர்
படித்த கல்வி நிறுவனங்கள்இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம்
பணிதொழில் முனைவு, முதலீட்டாளர், கல்வியாளர்
அமைப்பு(கள்)மலாலா நிதி
அறியப்படுவதுஇணை-நிறுவனர், முன்னாள் தலைமை நிர்வாகி, மலாலா நிதி

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

சிசா சாகித் பாக்கித்தானின் தலைநகரான இசுலாமாபாத்தில் பிறந்து வளர்ந்தார். இவர் தனது இளமைப் பருவத்தை தன்னார்வத் தொழிலாளியாகவும் ஆர்வலராகவும் கழித்தார். 14 வயதில் இவர் பல்வேறு குற்றங்களில் தண்டனை பெற்ற பெண்களால் ஆக்கிரமிக்கப்பட்ட சிறைகளில் வேலை செய்யத் தொடங்கினார். 2005 ஆம் ஆண்டில் காசுமீரில் ஏற்பட்ட கொடிய பூகம்பத்தைத் தொடர்ந்து ஒரு நிவாரண முகாமில் தன்னார்வலராகப் பணியாற்றினார். இவ்விபத்தில் , கிட்டத்தட்ட 85,000 பேர் கொல்லப்பட்டனர். [5]

இளம் வயதிலிருந்தும் சாகித்து பெண்களுக்கு உதவிய வரலாறு உண்டு. பாக்கித்தானில் வளரும் போது, சாகித்து பெண்கள் சிறையில் உதவிகள் புரிய தன்னார்வலாக முன்வந்தார். இரண்டு வருடங்கள் கழித்து, இவரது தோழி பூகம்பத்தில் இறந்த பிறகு 16 வயது நிரம்பிய இவர் நிவாரண முகாமில் வேலை செய்ய ஆரம்பித்தார். தன்னார்வலர்களில் உள்ளே வந்த ஒரே பெண்ணாக இருந்த இவர் சகோதரர்களின் எச்சரிக்கைகளைக் கேட்டு தங்கள் கூடாரங்களை விட்டு வெளியேறாத இளம் பெண்களைச் சந்தித்தார்.

தொழில் தொகு

18 வயதில், சாகித்து இசுடான்போர்டு பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பெற உதவித்தொகை பெற்று 2011 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். பெண்களின் கல்விக்கு எதிரான தலிபான்களின் தடை பற்றி கேள்விப்பட்ட இவர் 2009 ஆம் ஆன்ட்டு பாக்கித்தான் திரும்பினார். [6] 2011 ஆம் ஆண்டு தனது உயர் படிப்பை முடித்த பிறகு, துபாயில் உள்ள மெக்கின்சி & நிறுவன அலுவலகத்தில் நிபுணர் ஆய்வாளராக ஒரு தொழிலைத் தொடர்ந்தார். 2017 ஆம் ஆண்டில் தொடக்க நிறுவனங்களுக்கு நிதியளிப்பதில் கவனம் செலுத்தும் நவ் வெஞ்சர்சு என்ற நிறுவனத்தை இணையாக நின்று -நிறுவினார். [7]

சாகித்து பல்வேறு நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் மகளிர் அதிகாரமளித்தல் மற்றும் குழந்தை கல்வியின் முக்கியத்துவம் குறித்து விரிவுரைகள் மற்றும் உரைகளை வழங்கியுள்ளார். [8] [9]

மலாலாவுடன் ஒத்துழைப்பு தொகு

இசுடான்போர்டு பல்கலைக்கழகத்தில் தனது உயர் படிப்பைத் தொடரும்போது, பாக்கித்தானில் பெண்கள் மற்றும் குழந்தை கல்வியை மேம்படுத்துவதில் லட்சியமும் ஆர்வமும் கொண்ட இளம் மலாலா யூசுப்சாயின் இணைய கானொளியைப் பார்த்து பின்னர் இவர் மலாலாவின் தந்தை சியாவுதீனை அணுகி மலாலாவின் கனவுகளை நனவாக்க உதவினார். [4]

தாலிபான் உறுப்பினர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட மலாலா யூசுப்சாயை பார்க்க சாகித்து பர்மிங்காமிற்கு பறந்தார். மலாலாவின் குடும்பத்தினருக்கும் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு உதவி செய்தார். [10] பாக்கித்தான் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளான நைசீரியா, கென்யா மற்றும் சியரா லியோன் நாட்டுப் பெண்களிடையே பாதுகாப்பான மற்றும் உயர்தர கல்விக்கான அணுகலை உருவாக்கும் நோக்கத்துடன் சாகித்தும் மலாலாவும் மலாலா நிதியை 2013 ஆம் ஆண்டு நிறுவினர்.[11] [1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Canal, Emily. "How Shiza Shahid And The Malala Fund Are Championing For Girls' Rights". Forbes (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 14 November 2019.
  2. Schweitzer, Callie. "30 Under 30: Meet Shiza Shahid, Malala's Right-Hand Woman" (in en-US). http://ideas.time.com/2013/12/06/30-under-30-shiza-shahid-and-the-malala-fund/. 
  3. "Shiza Shahid". www.caa.com. பார்க்கப்பட்ட நாள் 14 November 2019.
  4. 4.0 4.1 Shahid, Shiza (25 April 2014). "A 16-Year-Old Convinced Me to Change Careers". ELLE (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 14 November 2019.
  5. Clifford, Catherine (21 January 2014). "You Know Malala. Now, Meet Shiza". Entrepreneur (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 14 November 2019.
  6. Richardson, Nakia (13 March 2019). "Women's education activist Shiza Shahid visits campus". The Daily Aztec. பார்க்கப்பட்ட நாள் 14 November 2019.
  7. "After Malala: Shiza Shahid's plan to change the world for good". South China Morning Post (in ஆங்கிலம்). 30 September 2016. பார்க்கப்பட்ட நாள் 14 November 2019.
  8. Chen, Desiree (17 September 2019). "Entrepreneur to discuss creating social change at Elmhurst College". Daily Herald (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 14 November 2019.
  9. "Shiza Shahid at The University of Redlands". inlandempire.us. பார்க்கப்பட்ட நாள் 14 November 2019.
  10. Jones, Stacy (30 October 2013). "Meet Shiza Shahid, The Woman Powering The Malala Fund". Fast Company (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 14 November 2019.
  11. "Malala Fund co-founder Shiza Shahid, AngelList partner to back "mission-driven" startups". TechCrunch (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 14 November 2019.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிசா_சாகித்து&oldid=3279948" இலிருந்து மீள்விக்கப்பட்டது