சித்திரதுர்க்கா மாவட்டம்
சித்திரதுர்க்கா மாவட்டம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 27 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்று.[2] இதன் தலைமையகம் சித்திரதுர்க்கா நகரத்தில் உள்ளது. வேதவதி, துங்கபத்திரை ஆகிய நதிகள் இம்மாவட்டத்தில் பாய்கின்றன.
சித்திரதுர்க்கா மாவட்டம்
ಚಿತ್ರದುರ್ಗ ಜಿಲ್ಲೆ | |
---|---|
மாவட்டம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கர்நாடகம் |
பகுதி | பெங்களூர் |
தலைநகரம் | சித்ரதுர்கா |
வருவாய் வட்டம் | சித்திரதுர்க்கா, ஹிரியூர், ஹொசதுர்கா, மொளகால்மூரு, சள்ளகேரே, ஹொளல்கெரே |
பரப்பளவு | |
• மொத்தம் | 8,440 km2 (3,260 sq mi) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 16,59,456 |
• அடர்த்தி | 200/km2 (510/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 |
தொலைபேசிக் குறியீடு | + 91 (8194) |
வாகனப் பதிவு | KA-16 |
பால் விகிதம் | 974 ஆண்கள்/பெண் |
கல்வியறிவு | 64.5% |
இணையதளம் | https://chitradurga.nic.in/en/ |
அமைவிடம்
தொகுஇம்மாவட்டம்தென்கிழக்கிலும், தெற்கிலும் தும்கூர் மாவட்டத்தையும், தென்மேற்கில் சிக்மகளூர் மாவட்டத்தையும், மேற்கில் தாவண்கரே மாவட்டத்தையும், வடக்கில் பெல்லாரி மாவட்டத்தையும், கிழக்கில் ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்தையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம்
தொகுஇம்மாவட்டம் 6 வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது.
- சித்திரதுர்க்கா
- ஹிரியூர்
- ஹொசதுர்கா
- மொளகால்கேரே
- சள்ளகேரே
- ஹொளல்கெரே
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 1,659,456 ஆகும். அதில் 840,843 ஆண்கள் மற்றும் 818,613 r பெண்கள் உள்ளனர்.பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 974 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 73.71 % ஆகும். இம்மாவட்ட மக்களில் இந்து சமயத்தினர் 91.63 %, இசுலாமியர் 7.76 %, சமணர்கள் 0.23 %, கிறித்தவர்கள் 0.19 % மற்றும் பிறர் 0.20% ஆக உள்ளனர்.[3]
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "District at a Glance". Chitradurga district website. பார்க்கப்பட்ட நாள் 3 January 2011.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-17.
- ↑ Chitradurga District - Population 2011
வெளியிணைப்புக்கள்
தொகு- சித்திரதுர்கா மாவட்டத்தின் வரைபடம்
- கர்நாடகா ஆன்லைன் இணைய தளத்தில் சித்திரதுர்க்கா மாவட்டப் பக்கம் பரணிடப்பட்டது 2008-12-08 at the வந்தவழி இயந்திரம்
- மாவட்ட இணையதளம் பரணிடப்பட்டது 2019-03-15 at the வந்தவழி இயந்திரம்
- நகராட்சி தளம் பரணிடப்பட்டது 2006-02-18 at the வந்தவழி இயந்திரம்