சிந்தாமன் கணேஷ் கோயில், உஜ்ஜைனி

சிந்தாமன் கணேஷ் கோயில் (Chintaman Ganesh Temple) என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜயினியில் உள்ள விநாயகப் பெருமானின் மிகப்பெரிய கோவிலாகும். ஃபதேஹாபாத் ரயில் பாதையில் க்ஷிப்ரா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இந்த கோயில், உஜ்ஜயினி நகரத்திற்கு தென்மேற்கே சுமார் 7 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயில் தற்போது நகரின் சந்தையின் நடுவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலை சுயம்பு மூர்த்தியாக (தன்னை வெளிப்படுத்துவதாக) கருதப்படுகிறது. உள்ளூரில் இந்த விநாயகர் சிந்தாமன் என்றும் அழைக்கப்படுகிறார். இவரது துணைவிகளாக ரித்தி மற்றும் சித்தி ஆகியோர் இங்கு உள்ளனர். மேலும், எல்லா கவலைகளையும் போக்குபவர் சிந்தாமன் கணேஷ் என்று அறியப்படுகிறார். [1] [2]

மத முக்கியத்துவம் தொகு

இந்து மத நம்பிக்கைகளின்படி கோயில் தெய்வமான விநாயகர், அனைத்து நிகழ்விற்கும், முழு முதல் சாட்சியாக, ஆரம்பத்தின் இறைவனாகக் கருதப்படுகிறார். பாரம்பரிய காலத்தில், சிந்தாஹரன் - அதாவது எல்லா கவலைகளையும் பதட்டங்களையும் நீக்குபவர் என்று அழைக்கப்படுகிறார், இறைவனின் சன்னதியில் தங்கள் கவலைகள் அனைத்தையும் போக்குவதற்காக, இங்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்து புராணங்களின்படி பிரபஞ்சத்தின் பாதுகாவலராகக் கருதப்படும் விஷ்ணுவுக்குப் பயன்படுத்தப்படும் மற்றொரு பெயர் சிந்தாமணி ஆகும். துக்கத்தை நிர்வகிப்பவர் விக்னேஷ்வரா என்று அழைக்கப்படுகிறார். இந்து சமயங்களில், பக்தர்களின் பாதையில் தடைகளை அகற்றுவதற்காக, விநாயகர் எப்போதும் முதலில் வணங்கப்படுகிறார்.

வரலாறு தொகு

இக்கோயில் 11 மற்றும் 12 ஆம் நூற்றாண்டுகளில் மாளவத்தை பரமராசர்கள் ஆட்சி செய்த காலத்தைச் சேர்ந்தது என்று கருதப்படுகிறது. மூலக் கோயில் ராமாயண காலத்தைச் சேர்ந்தது என்றும், சீதையால் இந்தக் கோயில் நிறுவப்பட்டது என்றும் நம்பப்படுகிறது. [3]

கட்டிடக்கலை தொகு

இங்கு காணப்படும் பொதுக்கூடம் மற்றும் சன்னதியில் உள்ள நுணுக்கமாக செதுக்கப்பட்ட வெள்ளை நிற கல் தூண்கள் கோயிலின் பழமையான புனிதத்தை வரையறுக்கின்றன. [4]

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Ancient monuments in Ujjain#Chintaman ganesh temple
  2. Karkar, S.C. (2009). The Top Ten Temple Towns of India. Kolkota: Mark Age Publication. பக். 124. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-87952-12-1. 
  3. "गणेश मंदिर: इस मंदिर की दीवार पर उल्टा स्वास्तिक बनाने से होती है हर मन्नत पूरी" (in hindi). பார்க்கப்பட்ட நாள் 2021-11-22.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)"गणेश मंदिर: इस मंदिर की दीवार पर उल्टा स्वास्तिक बनाने से होती है हर मन्नत पूरी". Patrika News (in Hindi). Retrieved 22 November 2021.
  4. culturalindia

வெளி இணைப்புகள் தொகு