சினேகலதா தேசுமுக்கு

இந்திய குழந்தைகள் நல மருத்துவர்

சினேகலதா தேசுமுக்கு (Snehlata Deshmukh, 30 திசம்பர் 1938 – 29 சூலை 2024) என்பவர் இந்தியக் கல்வியாளர் ஆவார். இவர் மகாராட்டிர மாநிலம் மும்பை பல்கலைக்கழகத்தில் 1995-2000 ஆம் ஆண்டு காலத்தில் துணைவேந்தராகப் பணியாற்றினார். சியோன் மருத்துவமனையின் புலத் தலைவராகவும் இவர் இருந்தார். இந்தியாவில் ஒரு சிறந்த குழந்தை அறுவை சிகிச்சை நிபுணராகத் திகழ்ந்தார். மும்பையிலுள்ள அரசர் எட்வர்டு நினைவு மருத்துவமனையின் முன்னோடி மருத்துவரான இவர் பச்சிளங் குழந்தைகள் பிரிவின் முன்னோடி மருத்துவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.[1][2][3][4][5][6]

சினேகலதா தேசுமுக்கு
Snehlata Deshmukh
துணை வேந்தர் மும்பை பல்கலைக்கழகம்
பதவியில்
1995–2000
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1938-12-30)30 திசம்பர் 1938
அகமத்நகர், பம்பாய் மாகாணம், இந்தியா
இறப்பு29 சூலை 2024(2024-07-29) (அகவை 85)
தேசியம்இந்தியர்
வேலைமருத்துவர், கல்வியாளர்
அறியப்படுவதுகுழந்தைகள் நல நிபுணர்

மருத்துவர் சினேலதா தேசுமுக்கு மதிப்புமிக்க டாடா நினைவு மையத்தின் ஆளும் குழுவின் இணை உறுப்பினராகவும் இருந்துள்ளார். இது இந்திய அரசாங்கத்தின் அணுசக்தித் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் மானிய உதவி பெறும் ஒரு நிறுவனமாகும்.[7] சினேகலதா தனது 85 ஆவது அகவையில் 2024 சூலை 29 அன்று இறந்தார்.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. "City anchor: 3 generations of women carry forward legacy of medicine". Ananya Banerjee. The Indian Express. 8 March 2013. பார்க்கப்பட்ட நாள் 22 September 2019.
  2. "Dhanwantari Award given to Snehlata Deshmukh". Zee News. 30 October 2005. பார்க்கப்பட்ட நாள் 22 September 2019.
  3. "'Ardh gurukuls' should be encouraged: Former Mumbai varsity VC Snehalata Deshmukh". தி எகனாமிக் டைம்ஸ். 9 January 2015. பார்க்கப்பட்ட நாள் 22 September 2019.
  4. Aruṇa Ṭikekara (2006). The Cloister's Pale: A Biography of the University of Mumbai. Popular Prakashan. pp. 314–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7991-293-5. பார்க்கப்பட்ட நாள் 22 September 2019.
  5. Carachi Robert; Buyukunal Cenk; Young Daniel G (4 May 2009). A History Of Surgical Paediatrics. World Scientific. pp. 225–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-4474-02-3. பார்க்கப்பட்ட நாள் 22 September 2019.
  6. Rajan Welukar (2019). Gandhi@150. Jaico Publishing House. pp. 163–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-88423-65-6. பார்க்கப்பட்ட நாள் 22 September 2019.
  7. "The Governing Council - Tata Memorial Centre". Archived from the original on 2024-04-14. பார்க்கப்பட்ட நாள் 2023-08-03.
  8. University of Mumbai ex-VC Snehalata Deshmukh passes away at 86
"https://ta.wikipedia.org/w/index.php?title=சினேகலதா_தேசுமுக்கு&oldid=4109586" இலிருந்து மீள்விக்கப்பட்டது