சின்னத்திரை நடிகர் சங்கம்

சின்னத்திரை நடிகர் சங்கம் என்பது தமிழ்ச் சின்னத்திரை தொடர்களில் நடிக்கும் நடிகர்களுக்கான சங்கமாகும். விருகம்பாக்கத்தில் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இச்சங்கத்தில் சுமார் 2000 நபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். சங்க உறுப்பினர்களின் திரைத் தொழிலில் ஏற்படும் பிரச்சனைகளை ஆராய்ந்து சுமூகமாக தீர்த்தல்; ஊதியம் பெற்றுத் தருதல்; மற்றும் உறுப்பினர்களின் நலனுக்கான பணிகளில் ஈடுபடுகிறது. நிதி திரட்டும் பொருட்டு சின்னத்திரை நடிகர்கள் சார்பில் மலேசியாவில் 2019 செப்டம்பர் 28 இல் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.[1]

சின்னத்திரை நடிகர் சங்கம்
உருவாக்கம்2003; 22 ஆண்டுகளுக்கு முன்னர் (2003)
தலைமையகம்விருகம்பாக்கம், சென்னை
தலைமையகம்
  • இந்தியா

வரலாறு

தொகு

2003 நவம்பர் 2 ஆம் நாள் நடிகர் எஸ். என். வசந்த் முயற்சியால் சின்னத்திரை நடிகர் சங்கம் தொடங்கப்பட்டது. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை சங்கத் தேர்தல் நடத்தி நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். 2022 இல் நடைபெற்றத் தேர்தலில் ரவிவர்மா தலைமையில் உழைக்கும் கரங்கள் அணி, ஆதித்யா என். எஸ். செல்வம் தலைமையில் புது வசந்தம் அணியும், ஜி.சிவன் ஸ்ரீநிவாஸ் தலைமையிலான வசந்தம் அணியும் போட்டியிட்டனர்.[2] தலைவராக சிவன் ஸ்ரீநிவாசனும், பொதுச்செயலாளராக போஸ் வெங்கட்டும், பொருளாளராக சுப்ரமணியம் ஜெயந்த் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.[3]

முன்னாள் நிர்வாகிகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "மலேசியாவில் நட்சத்திர கலைவிழா". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2019/jun/13/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-3169991.html. பார்த்த நாள்: 22 November 2023. 
  2. "சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் 2022 – யார் யார் எந்தெந்த அணி தெரியுமா ? இவங்க எல்லாம் இருக்காங்களா ?". behindtalkies. https://tamil.behindtalkies.com/chinnathirai-nadigar-sangam-election-2022-candidates/. பார்த்த நாள்: 22 November 2023. 
  3. "சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் - சிவன் ஸ்ரீநிவாசன், போஸ் வெங்கட் வெற்றி!". கலைஞர் செய்திகள். https://www.kalaignarseithigal.com/tamilnadu/2022/07/10/small-screen-actors-association-election-result-announced. பார்த்த நாள்: 22 November 2023. 
  4. "சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் தலைவர் யார்? - உருவானது புதிய சர்ச்சை". இந்து தமிழ். https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/586871-tv-artist-association-1.html. பார்த்த நாள்: 22 November 2023.