எஸ். என். வசந்த்

எஸ். என். வசந்த் (ஆங்கில மொழி: S. N. Vasanth) (1957- மே 14, 2009) என்பவர் தமிழ்த் திரைப்பட நடிகர், தொலைக்காட்சித் தொடர் நடிகர் மற்றும் முன்னாள் சின்னதிரை நடிகர் சங்கத் தலைவராவார்.[1] 2009 மே மாதம் மாரடைப்பால் சென்னையில் காலமானார்.

திரைத்துறை தொகு

அடையாறு திரைப்படக் கல்லூரியில் பயின்றார். 1983 ஆம் ஆண்டு மெல்லப் பேசுங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமனார். புலன் விசாரணை, மூன்றாவது கண், புதல்வன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.[2] பொதிகை தொலைக்காட்சியிலும், சில தனியார் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். தொலைக்காட்சித் தொடர் நடிகர்களின் மேம்பாட்டிற்காக 2003 நவம்பர் 2 ஆம் நாள் சின்னதிரை நடிகர் சங்கத்தைத் தொடங்கினார்.[3]

திரைப்படங்கள் தொகு

இவர் நடித்துள்ள திரைப்படங்கள்.

மேற்கோள்கள் தொகு

  1. "டிவி நடிகர் சங்கத் தலைவர் எஸ்.என்.வசந்த் மரணம்". https://tamil.filmibeat.com. https://tamil.filmibeat.com/news/15-tv-artistes-union-president-vasanth-dies.html. பார்த்த நாள்: 22 November 2023. 
  2. "S. N. Vasanth Biography". moviefone.com. பார்க்கப்பட்ட நாள் 22 November 2023.
  3. "About Us". www.chinnathirainadigarsangam.com. பார்க்கப்பட்ட நாள் 22 November 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._என்._வசந்த்&oldid=3847813" இலிருந்து மீள்விக்கப்பட்டது