சின்னத் தகைவிலான்

பறவை சிற்றினம்
சின்னத் தகைவிலான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கிருண்டினிடே
பேரினம்:
பெட்ரோகெலிடான்
இனம்:
பெ. புளுவிகோலா
இருசொற் பெயரீடு
பெட்ரோகெலிடான் புளுவிகோலா
பிளைத், 1855

சின்னத் தகைவிலான், வரித்தொண்டை தகைவிலான், மலைமுடி தகைவிலான் (Streak-throated Swallow) என்பது குருவிச் சிற்றினம் ஆகும். இது தெற்காசியாவை பூர்வீகமாகக் கொண்டது. இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் மாலத் தீவுகளில் காணப்படும் ஒரு சிற்றினம் ஆகும். இங்கு இவை இனப்பெருக்கம் செய்து, ஆண்டு முழுவதும் வசிப்பவைகளாகவும் குளிர்காலத்தில் ஆப்கானித்தான், இந்தியா, நேபாளம் மற்றும் பாக்கித்தான் நாடுகளுக்கு வலசை போகும் பறவைகளாக உள்ளது. மாலத்தீவுகள், இலங்கை மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் அலைந்து திரிபவராக நிகழ்கிறது.[1]

வகைப்பாட்டியல்

தொகு

1855ஆம் ஆண்டில் இங்கிலாந்து விலங்கியல் வல்லுனர் எட்வர்ட் பிளைத் என்பவரால் வரித்தொண்டை தகைவிலான் முதன்முதலில் கண்டறியப்பட்டது. இது தற்போது பெட்ரோசெலிடான் பேரினத்தில் வைக்கப்பட்டுள்ளது, 1850ஆம் ஆண்டில் செருமனிட்ய பறவையியல் வல்லுனர் ஜீன் கபானிசு என்பவரால் அடையாளம் காணப்பட்டது. கிருண்டோ புளூவிகோலா என்ற பெயருக்கு இணையான பெயர் உள்ளது. இது கிருண்டினிடே குடும்பத்தைச் சேர்ந்தது. இதற்கு 1815-ல் பிரெஞ்சு பாலிமத் கான்ஸ்டன்டைன் சாமுவேல் ரபினெசுக் என்பவரால் பெயரிடப்பட்டது.[2]

விளக்கம்

தொகு
 
ஜான் கோல்ட்டினால் வரையப்பட்ட கூடுகள் பற்றிய விளக்கம்

இதனுடைய உடல் நீளம் 11 செ.மீ. வரை காணப்படும். கரு நீல நிறமான உடலும் செம்பழுப்பான தலையும் பிடரியும் கொண்ட இதன் உடலின் கீழ்ப்பகுதி மங்கிய வெண்மை நிறத்திலிருக்கும். தலையின் பக்கங்கள் மோவாய், தொண்டை, மார்பு ஆகியவற்றில் கருப்புக் கீற்றுகள் காணப்படும். குளிர்காலத்தில் காலை நேரத்தில் தந்தி மின்சாரக் கம்பிகளில் கூட்டமாக நெருக்கமாக உட்கார்ந்திருக்கும் திடீரென ஓர் ஆணைக்குக் கீழ்படிவது போல எல்லாமாக எழுந்து சிறு குழுக்களாகப் பிரிந்து இரை தேடப் புறப்படும். இதன் பறக்கும் வேகமும் மிதக்கும் ஆற்றலும் தகைவிலானது போல மிகுந்த வேகமும் மிதக்கும் ஆற்றலும் தகைவிலானது போல மிகுந்த வேகமும் திறனும் கொண்டதாக இராது. பறக்கும் போது டிர்ர் டிர்ர் எனக் குரல் கொடுக்கும்.[3][4][5]

பரவல்

தொகு

வரித்தொண்டை தகைவிலான் தெற்காசியாவின் பெரும்பகுதியில் ஆண்டு முழுவதும் காணப்படுகிறது. இது பாக்கித்தானின் சமவெளியிலிருந்து கிழக்கே இமயமலையின் அடிவாரத்தில் சிக்கிம் வரை காணப்படுகிறது. இந்தியத் தீபகற்பத்தின் வழியாகத் தெற்கே இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் கோடியக்கரை வரை காணப்படுகிறது. இவை பெருங்கூட்டமாக சாகுபடி செய்யப்பட்ட வயல்களிலும், குளங்கள், ஏரிகள், கால்வாய்கள் மற்றும் ஆறுகளுக்கு அருகிலுள்ள திறந்தவெளிப் பகுதிகளிலும் காணப்படுகிறது.[4][5]

உணவு

தொகு

இதனுடைய இரையில், சிறிய பூச்சிகள் மற்றும் பிற சிறிய இறக்கைகள் கொண்ட பூச்சிகள் அடங்கும். இவை பறந்து வானில் இவற்றைப் பிடிக்கப்படுகின்றன.

கூடுகள்

தொகு

ஆண்டு முழுவதும் இவை கூடு கட்டும். திசம்பர் முதல் ஏப்ரல் வரை மற்றும் சூலை முதல் அக்டோபர் வரையிலான காலமாகும். இவை சேற்றினைப் பயன்படுத்தி பெரிய கூட்டமைப்பிலான கூடுகளை உருவாக்குகின்றன. பல பானைகள் போன்ற கூடுகள் ஒன்றாக இணைக்கப்படுகின்றன. ஒவ்வொரு கூடும் ஒரு குறுகிய குழல் போன்ற நுழைவாயில் வழியாக வெளியேத்திறக்கின்றன.[4]

வரித்-தொண்டை தகைவிலான் குருவிகள் கூட்டமாக குறிப்பிட்ட இடங்களில் கூடுவதாகத் தெரிகிறது. இது உணவு ஆதாரங்களின் அருகாமையால் காணப்படலாம். இந்தியாவின் ராஜஸ்தானில் உள்ள ஒரு கல்லூரியில், வரித்-தொண்டை தகைவிலான் கூட்டம் தரையிலிருந்து சுமார் 9 மீ (30 அடி) உயரத்தில் கூரையின் கீழ் கூடமைத்திருந்தது. அக்டோபர் 2010-ல் இக்கட்டிடத்தை புதுப்பிக்கும் போது கூடுகள் அழிக்கப்பட்டன. இதன் பின்னர் 4 நாட்களுக்குள், மீண்டும் கூடுகளை உருவாக்கத் இவைத் தொடங்கின. 4 மாதங்களுக்குள் கூட்டமைப்பினை புதுப்பித்து முடித்துவிட்டன. ஒவ்வொரு ஆண்டும், கட்டிடத்தை சுத்தம் செய்யும் போது இவற்றின் கூடுகளை அழித்த போதிலும், மந்தை அதே இடத்திற்கு திரும்பி வந்து கூடு கட்டும் பணியினைத் தொடர்கின்றன.[6]

இனப்பெருக்கம்

தொகு

தமிழ் நாட்டில் இனப்பெருக்கம் செய்வதான விவரங்கள் இன்னமும் தொகுக்கப்படவில்லை.

படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 BirdLife International (2016). "Petrochelidon fluvicola". செம்பட்டியல் (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2016: e.T22712458A94334424. http://dx.doi.org/10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22712458A94334424.en. பார்த்த நாள்: 1 May 2017. 
  2. "Petrochelidon fluvicola (Blyth, 1855)". ITIS - Integrated Taxonomic Information System. பார்க்கப்பட்ட நாள் 5 Aug 2022.
  3. தமிழ்நாட்டுப் பறவைகள. முனைவர் க.ரத்னம். மெய்யப்பன் பதிப்பகம். பக்கம் 106
  4. 4.0 4.1 4.2 Ali, S. (2002). The Book of Indian Birds (in English) (13th ed.). New Delhi: பம்பாய் இயற்கை வரலாற்று சங்கம் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். pp. 44, 209. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0195665236.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  5. 5.0 5.1 Grimmett, R.; Inskipp, C.; Inskipp, T. (2011). Birds of the Indian Subcontinent (in English). London: Christopher Helm. pp. 302–303. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788193315095.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  6. Ranga, M.M.; Koli, V.K.; Bhatnagar, C. (2011). "Resettlement and nesting of Streak-throated swallow Hirundo fluvicola Blyth, 1855". J. Bom. Nat. Hist. Soc. (பம்பாய் இயற்கை வரலாற்று சங்கம்) 108 (3): 230–244. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்னத்_தகைவிலான்&oldid=3794917" இலிருந்து மீள்விக்கப்பட்டது