சின்னபூவே மெல்லபேசு (திரைப்படம்)
சின்னபூவே மெல்ல பேசு என்பது 1987 ஆவது ஆண்டில் ராபேர்ட் மற்றும் ராஜசேகர் ஆகியோர் இணைந்து இயக்கி வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எசு. கே. இராசகோபால் தயாரித்த இத்திரைப்படத்தில் பிரபு, ராம்கி, நர்மதா, சுதா சந்திரன், சபிதா ஆனந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். எசு. ஏ. ராஜ்குமார் இசையமைத்த இத்திரைப்படம் 1987 ஏப்ரல் 17 அன்று வெளியானது. வணிக ரீதியாக வெற்றி பெற்ற இத்திரைப்படத்தில்தான் . எசு. ஏ. ராஜ்குமார், ராம்கி, நர்மதா ஆகியோர் தமிழில் அறிமுகமாயினர்.[1][2][3]
சின்னபூவே மெல்லபேசு | |
---|---|
இயக்கம் | இராபர்ட் இராச சேகர் |
தயாரிப்பு | எசு. கே. இராசகோபால் |
கதை | இராபர்ட் இராச சேகர் |
இசை | எசு. ஏ. ராஜ்குமார் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | இராபர்ட் ராஜசேகர் |
படத்தொகுப்பு | ஆர். டி. அண்ணாதுரை |
கலையகம் | எசுகே பிலிம்சு கம்பைன்சு |
வெளியீடு | ஏப்ரல் 17, 1987 |
ஓட்டம் | 150 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள் தொகு
- பிரபு - டேவிட்
- ராம்கி - ராசா
- நர்மதா - ரேகா
- சுதா சந்திரன் - சாந்தி
- சபிதா ஆனந்த் - எசுதர்
- சுபா
- செந்தாமரை - மைக்கேல்
- சின்னி ஜெயந்த் - ஆரோக்கியம்
- குமரிமுத்து - ஆரோக்கியத்தின் தந்தை
- சுவாமிநாதன் - பூபதி
- அண்ணாத்துரை கண்ணதாசன்
பாடல்கள் தொகு
சின்னபூவே மெல்லபேசு | |
---|---|
இசை
| |
வெளியீடு | 14 சனவரி 1987 |
ஒலிப்பதிவு | 1986 |
இசைப் பாணி | திரையிசைப் பாடல்கள் |
நீளம் | 33:17 |
இசைத் தயாரிப்பாளர் | எசு. ஏ. ராஜ்குமார் |
இத்திரைப்படத்திற்கு எசு. ஏ. ராஜ்குமார் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற 9 பாடல்களையும் அவரே எழுதியிருந்தார்.[4][5][6]
எண் | பாடல் | பாடகர்(கள்) | காலம் |
---|---|---|---|
1 | 'சின்னப் பூவே' | ஜெயச்சந்திரன் | 4:40 |
2 | 'காலேஜில் டெஸ்ட்' | மலேசியா வாசுதேவன் | 4:14 |
3 | 'என்னடா காதல்' | மலேசியா வாசுதேவன் | 4:36 |
4 | 'கண்ணே வா' | தினேசு | 2:48 |
5 | 'கண்ணீர் சிந்தும்' | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:52 |
6 | 'பூங்காற்றில் ஆடும்' | மலேசியா வாசுதேவன் | 4:43 |
7 | 'சங்கீத வானில்' | எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் | 4:45 |
8 | 'வாங்கடி வாங்கடி' | மலேசியா வாசுதேவன், எஸ். பி. சைலஜா | 4:05 |
9 | 'ஏ புள்ள கருப்பாயி' | எசு. ஏ. ராஜ்குமார் | 3:34 |
மேற்கோள்கள் தொகு
- ↑ "Filmography of Chinna poove mellapesu". cinesouth.com. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=chinna%20poove%20mellapesu. பார்த்த நாள்: 2012-10-21.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Sonia Agarwal debuts in Khushboo's telly soap". rediff.com. http://www.rediff.com/movies/2008/dec/15sonia-agarwal-in-khushboos-tv-serial.htm. பார்த்த நாள்: 2012-10-21.
- ↑ "Behindwoods : Ramki – Tamil hero, Telugu villian". behindwoods.com. 2005-03-24. http://www.behindwoods.com/News/24-3-05/ramki_villian.htm. பார்த்த நாள்: 2012-10-21.
- ↑ "Chinna Poove Mellapesu Songs". raaga.com. http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=t0000385. பார்த்த நாள்: 2012-10-21.
- ↑ "Chinna Poove Mella Pesu - S.A Rajkumar". thiraipaadal.com. http://www.thiraipaadal.com/album.php?ALBID=ALBSAR00002. பார்த்த நாள்: 2012-10-21.
- ↑ "Chinna Poove Mellapesu". hummaa.com. http://www.hummaa.com/music/album/chinna-poove-mellapesu/20179. பார்த்த நாள்: 2012-10-21.