சின் பெங், (Chin Peng அல்லது Ong Boon Hua; சீனம்: 陈平; 1924 - 16 செப்டம்பர் 2013) என்பவர் மலேசியாவில் ஓர் அரசியல்வாதி; மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளராகப் பொறுப்பு வகித்தவர்.

சின் பெங்
Chin Peng
பொதுச்செயலாளர்
மலாயா கம்யூனிஸ்டு கட்சி
பதவியில்
6 மார்ச் 1947 – 2 டிசம்பர் 1989
முன்னையவர்லாய் தெக்
பின்னவர்இல்லை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
ஓங் பூன் ஹுவா
Ong Boon Hua

(1924-10-21)21 அக்டோபர் 1924
சித்தியவான், பேராக், மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள், பிரித்தானிய மலாயா
இறப்பு16 செப்டம்பர் 2013(2013-09-16) (அகவை 88)
பாங்காக், தாய்லாந்து
தேசியம்மலேசியர்
அரசியல் கட்சி மலாயா கம்யூனிஸ்டு கட்சி (1940–1989)
துணைவர்(கள்)
லீ கூன் வா
(தி. 1942; இற. 2008)
பிள்ளைகள்ஓங் பூ கோக் (மகன்)
1 மகள்
பெற்றோர்s
  • ஓங் சிங் பியாவ் (தந்தை)
  • குவான் கெங் பி (தாய்)
வேலைஅரசியல்வாதி, இயக்கத் தலைவர்
கையெழுத்து

இவர் பேராக், சித்தியவான் நகரில் பிறந்தவர். இவருடைய முழுப்பெயர் ஓங் பூன் ஹுவா. (சீனம்:王文華). மலாயாவில் ஜப்பானியர்கள் ஆட்சி செய்த போது அவர்களுக்கு எதிராகவும், பிரித்தானியர்களுக்கு ஆதரவாகவும் செயல்பட்டவர்.[1]

இவருடைய சேவைகளைப் பாராட்டி இவருக்கு பிரித்தானிய அரசாங்கம், பிரித்தானிய உயர் விருதான (Order of the British Empire) எனும் விருதை வழங்கிச் சிறப்பு செய்தது. இருப்பினும், அவர் பின்னாட்களில் பிரித்தானியர்களுக்கு எதிராகவே மலாயா நாட்டைக் கைப்பற்ற முனைந்தார். பின்னர், இவர் மலாயா கம்யூனிஸ்டு கட்சியை உருவாக்கி அதன் தலைவர் ஆனார்.[2]

பொது

தொகு

பிரித்தானிய மலாயா காலனித்துவ ஆட்சிக்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்டவர். மலாயா அவசரகாலத்தின் (Malayan Emergency 1948–1960) போது பல கொரில்லா செயல்பாடுகளில் ஈடுபட்டு, பொதுமக்களுக்கு பல இன்னலகளைக் கொடுத்தவர் என அறியப் படுகிறார்.

1989-ஆம் ஆண்டு மலேசியா – தாய்லாந்து இரு நாடுகளுக்கிடையே செய்யப்பட்ட அட் யாய் ஒப்பந்தத்தின் படி, கம்யூனிஸ்டு உறுப்பினர்கள் பலர் மலேசியாவிற்குத் திரும்பினர். ஆனால் சின் பெங்கை மட்டும் மலேசியாவிற்குள் நுழைய மலேசிய அரசாங்கம் தடை விதித்தது. அதனால் அவர் தன்னுடைய வாழ்நாளில் பல வருடங்களைத் தாய்லாந்திலேயே கழித்தார்.

இவர் 2013 செப்டம்பர் 16-ஆம் திகதி தாய்லாந்து தலைநகரமான பாங்காக் நகரிகில் காலமானார். பாங்கோக் போஸ்ட் நாளிதழின் செய்திகள் படி, அன்றைய தினம் அதிகாலை மணி 6.20 மணியளவில் சின் பெங் வயது மூப்பு காரணமாகக் காலமானதாக அறிவிக்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 88.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. van der Vat, Dan (22 September 2013). "Chin Peng obituary". The Guardian.
  2. "Dead or Alive", Time (magazine), (12 May 1952)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்_பெங்&oldid=3947432" இலிருந்து மீள்விக்கப்பட்டது