சிபுத்து நீரிணை
சிபுத்து நீரிணை (ஆங்கிலம்: Sibutu Strait அல்லது Sibutu Passage; மலாய் மொழி: Selat Sibutu; பிலிப்பினோ மொழி: Kipot ng Sibutu) என்பது போர்னியோ தீவை சுலு தீவுக்கூட்டத்தில் (Sulu Archipelago) இருந்து பிரிக்கும் ஒரு நீரிணையாகும்.
சிபுத்து நீரிணை | |
---|---|
Sibutu Strait | |
பிலிப்பைன்ஸில் சிபுத்து நீரிணை அமைவிடம்; | |
அமைவிடம் | சுலு தீவுக்கூட்டம் (பிலிப்பைன்ஸ்) போர்னியோ |
ஆள்கூறுகள் | 4°49′55.92″N 119°41′35.88″E / 4.8322000°N 119.6933000°E |
வகை | நீரிணை |
அதிகபட்ச அகலம் | 29 km (18 mi) |
சராசரி ஆழம் | 100 மீ. |
இந்தச் சிபுத்து நீரிணை, சுலு கடலை, சுலவேசி கடலுடன் இணைக்கிறது. சுலவேசி கடல் பசிபிக் கடலுடன் இணைகிறது. சுலு கடல் (Sulu Sea) பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் உள்ள நீர்ப்பகுதி ஆகும். இதன் தென்மேற்கில் போர்னியோவும் வடகிழக்கில் விசயன் தீவுகளும் உள்ளன.
சிபுத்து தீவு
தொகுசிபுத்து நீரிணையின் கடற்கரைப் பகுதியில் சிபுத்து தீவு உள்ளது. இது மலேசியாவின் சபா கடற்கரையில் இருந்து கிழக்கே சுமார் 14 கிலோமீட்டர் (8.7 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.
சிபுத்து தீவு 109 சதுர கிலோமீட்டர் (42 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது. இயற்கைப் பாதுகாப்பிற்கான முக்கியத் தளமாக விளங்குகிறது.[1]
நூல்கள்
தொகு- Philippine Islands Sailing Directions, third edition of the bulletin prepared in the office of the U.S. Coast and Geodetic Survey at Manila by Harry L. Ford, nautical expert (Washington, DC: Bureau of Printing, 1906), p. 171
- Lambert Anthony B. Meñez, Cesar L. Villanoy and Laura T. David. "Movement of Water Across Passages Connecting Philippine Inland Sea Basins" (Marine Science Institute, University of the Philippines, November 6, 2006)
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Danielsen, Finn & Treadaway, Colin G., 2004: Priority conservation areas for butterflies (Lepidoptera: Rhopalocera) in the Philippine Islands. Animal Conservation, 7, 79-92.