சிபே மக்கள்
சிபே அல்லது சைப் மக்கள் (Sibe people) என்பவர்கள் சீனாவில் வாழ்கின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் சீன மக்கள் குடியரசால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட 56 இனக்குழுக்களில் ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் பெரும்பாலும் துங்குசிக் மொழி பேசும் ஓர் கிழக்கு ஆசிய இனக்குழுவினர் ஆவர். இவர்களில் பெரும்பாலானோர் சிஞ்சியாங், சிலின் மற்றும் லியாவோனிங்கில் உள்ள சென்யாங்கில் வாழ்கின்றனர். மேலும் 2010 சீன மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் ஏறத்தாழ இரண்டு இலட்சம் சிபே மக்கள் இருப்பதாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.[2]
ᠰᡞᠪᡝ Sibo, Xibo | |
---|---|
"சிபோ இராணுவக் குடியேறிகள்", என்றி லான்சுடெல் 1882-இல் கப்கால் சிபே தன்னாட்சி கவுண்டிக்குப் பயணம் மேற்கொண்டபோது வரைந்த படம் | |
மொத்த மக்கள்தொகை | |
190,481 | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
சீனா (லியாவோனிங் · சிஞ்சியாங் · கெய்லோங்சியாங் · சிலின் மாகாணம் · உள் மங்கோலியா) | |
மொழி(கள்) | |
மாண்டரின், சிபே | |
சமயங்கள் | |
திபெத்திய பௌத்தம், சாமன்[1] | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
மஞ்சுக்கள், தாவுர், நனாய், ஓரொக், எவென்கு, சொலோன் |
பெயரிடல்
தொகுசிபே மக்கள் பல மாறுபட்ட பெயர்களால் அறியப்படுகின்றனர். இவர்களை குறிக்க சிபே, சிபோ மற்றும் சிபின்டசி ஆகிய சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.[3]
வரலாறு
தொகுஉருசிய அறிஞரான எலினா லெபடேவாவின் கூற்றுப்படி, சிபே மக்கள் பண்டைய சிவேயி மக்களின் ஓர் கிளையினராகத் தோன்றினர். இவர்கள் துங்குசிக் மொழி பேசினார் மற்றும் சிறிய நகரம் போன்ற குடியிருப்புகளில் வாழ்ந்தனர். இவர்களில் ஒரு பகுதியினர் நாடோடிகளாக, இப்போது சிலின் என்ற இடத்தில் உள்ள சோங்யுவான் மற்றும் கிகிஹார் பகுதிகளில் வாழ்ந்தனர்.[4]
கிபி 286 இல் புயோ ராச்சியத்தை சியான்பே மக்கள் கைப்பற்றிய பிறகு, தெற்கு சிவேயி மக்கள் விவசாயம் செய்யத் தொடங்கினார். சில வரலாற்றாசிரியர்கள் சியான்பே மக்கள் சிபே மக்களின் நேரடி முன்னோடிகளாக இருந்தனர் என்று கருதுகின்றனர். பமீலா கைல் க்ராஸ்லி, சியான்பே மக்கள் முந்தைய துருக்கிய அல்லது மங்கோலிய மொழியிலிருந்து துங்குசிக் மொழிக்கு மாற்றப்பட்டிருக்கலாம் என்று எழுதுகிறார். இருப்பினும், சியான்பே காலத்தில் சிபே என்ற பெயர் வரலாற்று பதிவுகளில் பயன்படுத்தப்படவில்லை.[5]
பண்பாடு
தொகுசிபே மக்களின் மதங்களில் ஷாமன் மற்றும் பௌத்தம் ஆகியவை அடங்கும். இந்த மக்கள் அணியும் வழக்கமான உடையில் ஆண்களுக்கான பொத்தான்கள் கொண்ட சட்டைகள் மற்றும் கால்சட்டைகள் மற்றும் பெண்களுக்கான நெருக்கமான, நீண்ட சரிகை கொண்ட பாவாடைகள் ஆகியவை அடங்கும். பெண்களுக்கு குறைந்த சமூக அந்தஸ்து இருந்தது மற்றும் சொத்துரிமை இல்லை. இப்போதெல்லாம் ஏறக்குறைய அனைத்து சிபேகளும் நவீன ஆடைகளை அணிகிறார்கள். பாரம்பரிய ஆடைகளை பெரும்பாலும் பண்டிகைகளின் போது அணிகிறார்கள். பாரம்பரியமாக, சிபே மக்கள் ஒரே குடும்பப் பெயரைப் பகிர்ந்து கொண்டவர்களைக் கொண்ட பல குலங்களாகப் (ஹலா) பிரிக்கப்பட்டது. நவீன காலம் வரை, சிபே மக்கள் குடியிருப்புகள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று வெவ்வேறு தலைமுறைகள் வரை கொண்டிருந்தன, ஏனெனில் தந்தை உயிருடன் இருக்கும்போது எந்த மகனும் வீட்டை விட்டு வெளியேறி குடும்ப குலத்தை உடைக்க முடியாது என்று நம்பப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Huang Beibei, ed. (2011-11-12). "The Xibe ethnic minority". People's Daily. பார்க்கப்பட்ட நாள் 2012-11-29.
- ↑ "1-6 Population by sex, ethnicity and region". www.stats.gov.cn. National Bureau of Statistics of China. 2010. Archived from the original on 2021-06-11. பார்க்கப்பட்ட நாள் 2021-06-11.
- ↑ Zikmundová, Veronika (2013). Spoken Sibe: Morphology of the Inflected Parts of Speech (1st ed.). Prague: Karolinum Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-80-24621036.
- ↑ Gorelova, Liliya. "Past and Present of a Manchu Tribe: The Sibe". In Atabaki, Touraj; O'Kane, John (eds.). Post-Soviet Central Asia. Tauris Academic Studies. pp. 325–327.
- ↑ Crossley, Pamela Kyle (2002), The Manchus, Volume 14 of Peoples of Asia (3 ed.), Wiley-Blackwell, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-631-23591-4