சிரத்தா சசிதர்
சிரத்தா சசிதர் (Shraddha Shashidhar)(பிறப்பு 3 செப்டம்பர் 1996) ஓர் இந்திய அழகிப் போட்டி வெற்றியாளர் ஆவார். இவர் 2017 மிஸ் திவா உலக அழகிப் போட்டியில் [1] மகுடம் சூடினார். மேலும், மிஸ் உலக அழகிப் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். [2]
சிரத்தா சசிதர் | |
---|---|
பிறப்பு | 3 செப்டம்பர் 1996 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
கல்வி | மக்கள் ஊடகவியலில் இளநிலைப் பட்டம் |
படித்த கல்வி நிறுவனங்கள் | சோபியா மகளிர் கல்லூரி, மும்பை இராணுவப் பொதுப் பள்ளி, தேவ்லாலி, நாசிக் புனித சேவியர் பள்ளி, பட்டிண்டா |
அழகுப் போட்டி வாகையாளர் | |
பட்டம் | 2017 மிஸ் திவா உலக அழகிப் போட்டி |
தலைமுடி வண்ணம் | கருப்பு |
விழிமணி வண்ணம் | கருப்பு |
முக்கிய போட்டி(கள்) |
|
இவர் நைக், யமஹா, பாசினோ போன்ற பொருட்களுக்கு வடிவழகியாக இருக்கிறார். மிஸ் உலக அழகிப் போட்டி இந்தியா 2017இல் இவர் கானா, தாய்லாந்து, [[பிலிப்பீன்சு[[ போன்ற நாடுகளில் துணி, சுற்றுலா, அசையாச் சொத்து வணிகம் போன்ற நிகழ்வுகளை ஊக்குவிப்பதற்காக இந்திய பிரதிநிதியாக சர்வதேச அளவில் பயணம் செய்தார்.
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுசிரத்தா இந்தியாவின் சென்னையில் பிறந்தார். நாசிக் , தியோலாலி, இராணுவப் பொதுப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர், மும்பை சோபியா மகளிர் கல்லூரியில் சேர்ந்து மக்கள் ஊடகத்தில் பட்டம் பெற்றார். [3]
அழகிப் போட்டிகள்
தொகுமிஸ் திவா - 2017
தொகுசிரத்தா யமஹா பாசினோ மிஸ் திவா உலக அழகிப் போட்டியி 2017 -ல் யமஹா பாசினோ மிஸ் திவா அழகிப்போட்டி 2016இன் வெற்றியாளரான, ரோஷ்மிதா ஹரிமூர்த்தியால் முடிசூட்டப்பட்டார் . [4] [5]
மிஸ் யுனிவர்ஸ் 2017
தொகு26 நவம்பர் 2017 அன்று அமெரிக்காவின் நெவாடாவின் லாஸ் வேகஸில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் 2017இல் இவர் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார் [6]
குறிப்புகள்
தொகு- ↑ "Viral". India News, Breaking News, Entertainment News | India.com.
- ↑ "Shraddha Shashidhar To Represent India At Miss Universe". News18.
- ↑ "Shraddha Shashidhar to represent India at Miss Universe". dhinkachikatadka.com. Archived from the original on 2017-10-18. பார்க்கப்பட்ட நாள் 2021-10-07.
- ↑ "IN PHOTOS: Iris Mittenaere basks in 'magical' beauty of India". GMA News Online.
- ↑ "Chennai-based Miss Diva 2017 Shraddha Shashidhar to represent India at Miss Universe pageant". 12 October 2017.
- ↑ "Miss Universe 2017: India’s Shraddha Shashidhar went unplaced". இந்தியன் எக்சுபிரசு. 27 November 2017 இம் மூலத்தில் இருந்து 28 November 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20171128213024/http://indianexpress.com/article/lifestyle/fashion/miss-universe-2017-indias-shraddha-shashidhar-failed-to-make-it-to-top-16-4956402/. பார்த்த நாள்: 8 December 2017.