சிர்க்கோனியம் அசிட்டைலசிட்டோனேட்டு

வேதிச் சேர்மம்

சிர்க்கோனியம் அசிட்டைலசிட்டோனேட்டு (Zirconium acetylacetonate) என்பது Zr(C5H7O2)4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும். ஒருங்கிணைவுச் சேர்மமான இது சிர்கோனியத்தின் பொதுவான அசிட்டைலசிட்டோனேட்டு ஆகும். வெள்ளை நிறத்தில் திண்மப் பொருளாக காணப்படுகிறது. முனைவற்ற கரிம கரைப்பான்களில் அதிக கரைதிறனை வெளிப்படுத்துகிறது, ஆனால் எளிய ஐதரோகார்பன்களில் கரைவதில்லை. [1]

சிர்க்கோனியம் அசிட்டைலசிட்டோனேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
டெட்ராகிசு(அசிட்டைலசிட்டோனேட்டோ)சிர்க்கோனியம், சிர்க்கோனியம் டெட்ரா அசிட்டைலசிட்டோனேட்டு, சிர்க்கோனியம் டெட்ராகிசு(அசிட்டைலசிட்டோனேட்டு), சிர்க்கோனியம்(IV) 2,4-பெண்டேன்டையோனேட்டு
இனங்காட்டிகள்
17501-44-9
ChemSpider 4576440
EC number 241-510-5
InChI
  • InChI=1S/4C5H8O2.Zr/c4*1-4(6)3-5(2)7;/h4*3,6H,1-2H3;/b4*4-3-;
    Key: YOBOXHGSEJBUPB-MTOQALJVSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11134693
  • CC(=CC(=O)C)O.CC(=CC(=O)C)O.CC(=CC(=O)C)O.CC(=CC(=O)C)O.[Zr]
UNII 15NW5BA32K
பண்புகள்
C20H28O8Zr
வாய்ப்பாட்டு எடை 487.66 g·mol−1
தோற்றம் வெண் திண்மம்
அடர்த்தி 1.419 கி/செ.மீ3
உருகுநிலை 194–195 °C (381–383 °F; 467–468 K)
140 °செல்சியசு-வெற்றிடம்
பென்சீன்-இல் கரைதிறன் 200 கி/லி
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H302, H312, H315, H319, H332, H335
P261, P264, P270, P271, P280, P301+312, P302+352, P304+312, P304+340, P305+351+338, P312, P321, P322, P330
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

சிர்க்கோனியம் ஆக்சிகுளோரைடுடன் அசிட்டைலசிட்டோனைச் சேர்த்து சூடாக்கி வினைபுரியச் செய்து சிர்க்கோனியம் அசிட்டைலசிட்டோனேட்டு ஒருங்கிணைவுச் சேர்மம் தயாரிக்கப்படுகிறது.:[1]

ZrOCl2 + 4 Hacac → Zr(acac)4 + 2 HCl + H2O

2.19 Å நீளம் கொண்ட எட்டு ஏறக்குறைய சமமான Zr-O பிணைப்புகளுடன் சதுர எதிர்பட்டக வடிவவியலைக் கொண்டுள்ளது. மூலக்கூறு சமச்சீர் D2 ஆகும் அதாவது நாற்தொகுதி மையச்சமசீரில் அமைந்திருக்கும்.[2] புரோட்டான் அணுக்கருக் காந்தஒத்திசைவு அலைமாலையியல் மூலம் ஒரு மெத்தில் குறிப்பலையை கவனிப்பதன் மூலம், உயர் ஒருங்கிணைப்பு எண் சேர்மங்கள் முப்பரிமான வேதியியல் அல்லாத இறுக்கத்தை அறியலாம்.[3]

தொடர்புடைய 1,1,1-முப்புளோரோ அசிட்டைலசிட்டோனேட்டு சிர்க்கோனியம் அசிட்டைலசிட்டோனேட்டைக் காட்டிலும் எளிதில் ஆவியாகும்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Young, R. C.; Arch, Arnold (1946). "Zirconium Acetylacetonate [Tetrakis(2,4-pentanediono)zirconium]". Inorganic Syntheses. Vol. 2. pp. 121–148. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470132333.ch35. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-13233-3. {{cite book}}: |journal= ignored (help)
  2. Clegg, William (1987). "Redetermination of the structure of tetrakis(acetylacetonato)zirconium(IV)". Acta Crystallographica Section C 43 (4): 789–91. doi:10.1107/S0108270187094083. 
  3. 3.0 3.1 Morris, Melvin L.; Moshier, Ross W.; Sievers, Robert E. (1967). "Tetrakis(1,1,1-trifluoro-2,4-pentanedionato)zirconium(and Hafnium)". Tetrakis(1,1,1-trifluoro-2,4-pentanedionato)zirconium (and Hafnium). Inorganic Syntheses. Vol. 9. pp. 50–52. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470132401.ch15. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-13168-8.