அசெட்டைல் அசெட்டோன்

அசெட்டைல் அசெட்டோன் (Acetylacetone) என்பது இரண்டு அமைப்புச் சமநிலை மாற்றிய வடிவங்களில் காணப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும். பெரும்பாலான பயன்பாடுகளில் இவை இரண்டும் விரைவாக தங்களுக்குள் இடைமாற்றம் அடைந்து ஒரே சேர்மமாக இணைந்து விடுவதாகக் கருதப்படுகிறது[2]. முன்னதாக இச்சேர்மம் இரு கீட்டோன் வடிவமாகக் கருதப்பட்டு 2,4,பென்டேன்டையோன் என்று பெயரிடப்பட்டாலும் ஈனால் வடிவம் இச்சேர்மத்திற்குரிய போதுமான வடிவமாக உருவாவதாகக் கருதப்படுகிறது. மேலும் பல கரைப்பான்களுக்கு இதுவே சாதகமான வடிவமாகவும் உள்ளது. நிறமற்ற அல்லது ஓரளவு மஞ்சள் நிறமுள்ள எளிதில் பாயும் [3] நீர்மமான இச்சேர்மம் பொது ஈரணு ஈணியான அசெட்டைல் அசெட்டோனேட்டு தயாரிப்பதற்கான ஒரு முன்னோடியாக விளங்குகிறது. தொகுப்பு முறையில் பல்வளைய சேர்மங்கள் தயாரிப்பதறகான கட்டுறுப்புகளாகவும் இவை செயல்படுகின்றன.

அசெட்டைல் அசெட்டோன்
Skeletal structures of both tautomers
Ball-and-stick model of the enol tautomer
Ball-and-stick model of the enol tautomer
Ball-and-stick model of the keto tautomer
Ball-and-stick model of the keto tautomer
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பென்டேன்-2,4-டையோன்
வேறு பெயர்கள்
Hacac
இனங்காட்டிகள்
123-54-6 Y
ChEBI CHEBI:14750 Y
ChEMBL ChEMBL191625 Y
ChemSpider 29001 Y
InChI
  • InChI=1S/C5H8O2/c1-4(6)3-5(2)7/h3H2,1-2H3 Y
    Key: YRKCREAYFQTBPV-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C5H8O2/c1-4(6)3-5(2)7/h3H2,1-2H3
    Key: YRKCREAYFQTBPV-UHFFFAOYAO
யேமல் -3D படிமங்கள் Image
Image
KEGG C15499 Y
SMILES
  • O=C(C)CC(=O)C
  • CC(=O)CC(=O)C
UNII 46R950BP4J Y
பண்புகள்
C5H8O2
வாய்ப்பாட்டு எடை 100.12 g·mol−1
அடர்த்தி 0.975 கி/மி.லி[1]
உருகுநிலை −23 °C (−9 °F; 250 K)
கொதிநிலை 140 °C (284 °F; 413 K)
16 கி/100 மி.லி
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு Harmful (Xn)
R-சொற்றொடர்கள் R10, R22
S-சொற்றொடர்கள் (S2), S21, S23, S24/25
தீப்பற்றும் வெப்பநிலை 34 °C (93 °F; 307 K)
Autoignition
temperature
340 °C (644 °F; 613 K)
வெடிபொருள் வரம்புகள் 2.4–11.6%
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

பண்புகள் தொகு

அமைப்புச் சமநிலை மாற்றியம் தொகு

 

அசெட்டைல் அசெட்டோன் கரைசலில் கீட்டோ மற்றும் ஈனால் வடிவங்கள் அமைப்புச் சமநிலைகளாக ஒருங்கே காணப்படுகின்றன. ஈனால் வடிவமானது C2v சீரொழுங்கில் காணப்படுகிறது. இரண்டு ஆக்சிசன் அணுக்கள் ஐதரசன் அணுக்களுடன் சமமாக பகிர்ந்து கொள்கின்றன என்பது இதன் பொருளாகும்[4]. வாயு நிலையில் கீட்டோ-ஈனால் சமநிலை மாறிலி 11.7, ஈனால் வடிவத்திற்கு சாதகமாக இருக்கிறது. அணுக்கரு காந்த ஒத்ததிர்வு நிறமாலையியல், அகச்சிவப்பு நிறமாலையியல் மற்றும் பலமுறைகளிலும் இரண்டு அமைப்புச் சமநிலைகளும் வேறுபடுத்திக் காட்டப்படுகின்றன[5][6].

முனைவில்லா கரைப்பான்களில் சமநிலை மாறிலி மாற்றமடையாமல் உயர்ந்தே காணப்படுகிறது. முனைவுள்ள ஐதரசன் பிணைப்பு கரைப்பானான தண்ணீரில் கீட்டோ வடிவம் சாதகமாக உள்ளது. கார்பாக்சிலிக் அமிலத்தினுடைய வைனைல் ஒப்புமை வரிசையாக ஈனால் வடிவம் இருக்கிறது[7].

கரைப்பான் Kketo-enol
வாயு நிலை 11.7
வளைய எக்சேன் 42
தொலுயீன் 10
நான்கு ஐதரோ பிய்ரேன் 7.2
இருமெத்தில் சல்பாக்சைடு 2
தண்ணீர் 0.23

அமிலக் - காரப் பண்புகள் தொகு

கரைப்பான் வெசெ pKa[8]
40% எத்தனால்/தண்ணீர் 30 9.8
70% ஈராக்சேன்/தண்ணீர் 28 12.5
80% இருமெத்தில் சல்பாக்சைடு/தண்ணீர் 25 10.16
இருமெத்தில் சல்பாக்சைடு 25 13.41

அசெட்டைல் அசெட்டோன் ஒர் வலிமை குறைந்த அமிலமாகும்.

C5H8O2   C5H7O2 + H+

நீர்க் கரைசலில் 25° செல்சியசு வெப்பநிலையில் இச்சமநிலையின் மதிப்பு pKa மதிப்புகள் 8.99±0.04 (I = 0), 8.83±0.02 (I = 0.1 M NaClO4 மற்றும் 9.00±0.03 (I=1.0 M NaClO4) என்று (I = கரைசலில் அயனிகளின் அடர்த்தியின் அளவான அயனிவலிவு ) ஐயுபிஏசி பரிந்துரைக்கிறது[9]. கலப்புக் கரைப்பான்களின் மதிப்புகளும் அறியப்பட்டுள்ளன. மிகவலிமையான காரங்களான கரிம இலித்தியம் சேர்மங்கள் அசெட்டைல் அசெட்டோனை இருமுறை புரோட்டான் நீக்கம் செய்கின்றன. இந்நீக்கத்தால் விளையும் இருலித்தோ சேர்மங்களின் முதலாவது கார்பன் (C1) ஆல்கைலேற்றப்படுகிறது.

தயாரிப்பு தொகு

தொழிற்சாலைகளில் சமபுரொபனைல் அசெட்டேட்டின் வெப்ப மறுசீராக்கல் வினைவழியாக அசெட்டைல் அசெட்டோன் தயாரிக்கப்படுகிறது[10]

CH2(CH3)COC(O)Me → MeC(O)CH2C(O)Me.

ஆய்வகங்களில் அசெட்டோன் மற்றும் அசெட்டிக் நீரிலி உடன் வினையூக்கியான BF3 சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலமும் தயாரிக்கலாம்:[11]

(CH3CO)2O + CH3C(O)CH3 → CH3C(O)CH2C(O)CH3

எதில் அசெட்டேட்டுடன் அசெட்டோன் குறுக்க வினைபுரிவதைத் தொடர்ந்து அமிலமாக்கல் வினையின் மூலமாகவும் இதைத் தயாரிக்கலாம்:[11]

NaOEt + EtO2CCH3 + CH3C(O)CH3 → NaCH3C(O)CHC(O)CH3 + 2 EtOH
NaCH3C(O)CHC(O)CH3 + HCl → CH3C(O)CH2C(O)CH3 + NaCl.

இத்தொகுப்பு வினையின் எளிமை காரணமாக பல அசெட்டைல் அசெட்டோனேட்டுச் வரிசைச் சேர்மங்கள் அறியப்படுகின்றன. C6H5C(O)CH2C(O)C6H5 மற்றும்(CH3)3CC(O)CH2C(O)CC(CH3)3.என்பன சில உதாரணங்களாகும். அறுபுளோரோஅசெட்டைல் அசெட்டோனேட்டும் பல்வேறு ஆவியாகும் உலோக அணைவுச் சேர்மங்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. http://www.sigmaaldrich.com/catalog/product/sigald/p7754?lang=en&region=GB
  2. Co(tfa)3 & Co(acac)3 handout. Brian O'Brien, Gustavus Adolphus College.
  3. தமிழ்ப் பல்கலைக் கழகம், அறிவியல் களஞ்சியம் தொகுதி 1 பக்கம் 162
  4. W. Caminati, J.-U. Grabow (2006). "The C2v Structure of Enolic Acetylacetone". Journal of the American Chemical Society 128 (3): 854–857. doi:10.1021/ja055333g. பப்மெட்:16417375. 
  5. Kimberly A. Manbeck, Nicholas C. Boaz, Nathaniel C. Bair, Allix M. S. Sanders, and Anderson L. Marsh (2011). "Substituent Effects on Keto-Enol Equilibria Using NMR Spectroscopy". Journal of Chemical Education 88 (10): 1444–1445. doi:10.1021/ed1010932. https://archive.org/details/sim_journal-of-chemical-education_2011-10_88_10/page/1444. .
  6. Z. Yoshida, H. Ogoshi, T. Tokumitsu (1970). "Intramolecular hydrogen bond in enol form of 3-substituted-2,4-pentanedione". Tetrahedron 26: 5691-5697. doi:10.1016/0040-4020(70)80005-9. https://archive.org/details/sim_tetrahedron_1970_26_1/page/5691. 
  7. Solvents and Solvent Effects in Organic Chemistry, Christian Reichardt Wiley-VCH; 3 edition 2003 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-527-30618-8
  8. IUPAC SC-Database பரணிடப்பட்டது 2017-06-19 at the வந்தவழி இயந்திரம் A comprehensive database of published data on equilibrium constants of metal complexes and ligands
  9. Stary, J.; Liljenzin, J.O. (1982). "Critical evaluation of equilibrium constants involving acetylacetone and its metal chelates". Pure and Applied Chemistry 54 (12): 2557–2592. doi:10.1351/pac198254122557. http://www.iupac.org/publications/pac/pdf/1982/pdf/5412x2557.pdf. 
  10. Hardo Siegel, Manfred Eggersdorfer “Ketones” in Ullmann’s Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, 2002, Wienheim. எஆசு:10.1002/14356007.a15_077
  11. 11.0 11.1 C. E. Denoon, Jr.. "Acetylacetone". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv3p0016. ; Collective Volume, vol. 3, p. 16

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசெட்டைல்_அசெட்டோன்&oldid=3531963" இலிருந்து மீள்விக்கப்பட்டது