சிறப்புக் குழு (இந்தியா)

சிறப்புக் குழு படைகள் (Special Group) (SG) சிறப்புப் படைக் குழுக்களில் ஒன்றாகும். இச்சிறப்புக் குழு ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பின் கீழ் இயங்குகிறது.[3][Note 1] 1981-இல் துவக்கப்பட்ட இச்சிறப்புக் குழுவில் இந்திய இராணுவத்தின் அதிக திறமை வாய்ந்த படைவீரர்களையும், அதிகாரிகளையும் கொண்டது. இச்சிறப்புக் குழு இந்திய வான்படையின் தளங்களில் செயல்படும்.

சிறப்புக் குழு
SG-Badge.png
சிறப்புக் குழு படையின் சின்னம்
செயற் காலம் 1981 முதல்
பற்றிணைப்பு  இந்தியா
வகை சிறப்புப் படைகள்
பொறுப்பு சிறப்பு இராணுவ நடவடிக்கை
இரகசிய மனித நுண்ணறிவு
பணயக் கைதிகள் மீட்பு
பயங்கரவாத் எதிர்ப்பு நடவடிக்கைகள்
இரகசிய நடவடிக்கைகள் [1]
நேரடி இராணுவ நடவடிக்கைள்
இராணுவச் சோதனைகள்
பகுதி ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு
தலைமையிடம் சர்சாவா வான்படை தளம், உத்தரப் பிரதேசம்
சுருக்கப்பெயர் மேவரிக்ஸ் (Mavericks)[2]

அமைப்புதொகு

 
சிறப்புக் குழுவை கட்டுப்படுத்தும் அமைப்புகளின் வரைபடம்

ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பின் பாதுகாப்புப் பிரிவின் தலைமை இயக்குநரின் கீழ் சிறப்புக் குழு செயல்படும். [1][4] இச்சிறப்புக் குழு இந்தியப் பிரதமரின் கட்டளைகளை செயற்படுத்தும்.ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பின் பாதுகாப்புப் பிரிவின் செயலாளர் சிறப்புக் குழுவிற்கு பொறுப்பாவர்.[5]இதன் தலைமையகம் உத்தரப் பிரதேச மாநிலத்தின் சர்சாவா வான்படை தளத்தில் உள்ளது. இச்சிறப்பு குழு இந்திய இராணுவத்தின் முப்படைகளில் பணிபுரியும் மிகத்திறமை வாய்ந்த வீரர்களைக் கொண்டு நிறுவப்பட்டுள்ளது. சிறப்புக் குழு 3 முதல் 4 கம்பெனிப் படைகளைக் கொண்டது. இப்படைப் பிரிவினர் 24 மணி நேரமும் விழிப்புணர்வுடன் செயல்படுவர். சிறப்பு குழுவில் பணி முடித்த வீரர்கள் மற்றும் அதிகாரிகள் தங்கள் சொந்த படையணிகளில் சேர்ந்து கொள்ள வேண்டும். Muhdi==பொறுப்புகள்== சிறப்புக் குழுவின் பொறுப்புகளில் இரகசிய புலனாய்வு நடவடிக்கைகள் மற்றும் இரகசிய நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும். இக்குழுவிடம் இந்திய அரசு வெளிப்படையாக தொடர்பு கொள்ள விரும்பக்கூடாது. பிற சிறப்புப் படைகளுக்கான தந்திரோபாயங்கள் மற்றும் பயிற்சி நடைமுறைகளை வளர்ப்பதற்கும் சிறப்பு குழு படைகள் பொறுப்பேற்கிறது.

பயிற்சி மற்றும் உபகரணங்கள்தொகு

சிறப்புக் குழு படை, இந்தியாவின் மிகவும் திறமையான பயிற்சி பெற்ற சிறப்புப் படைகளில் மிகச்சிறந்ததாகக் கருதப்படுகிறது. சிறப்புக் குழு படைகள் இந்திய வான்படையின் அதிநவீன போர் விமானங்களைப் பயன்படுத்துகிறது.

இதனையும் காண்கதொகு

அடிக்குறிப்புகள்தொகு

  1. The Special Group is different from the Vikas battalions of the Special Frontier Force; the name "4 Vikas" was given to it to create confusion. The designation of "22 SF" was given to the SG when it was deployed in Jammu and Kashmir (for counter-insurgency operations) to conceal the real name of the unit; obituaries for SG personnel who died carried this name. The number 22 in this designation is in succession with the number 21 in Indian Army‘s 21 Para (SF).[3]

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 "Special Group: Warriors of stealth". Hindustan Times (in ஆங்கிலம்). 9 February 2014. 3 October 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2019-10-05 அன்று பார்க்கப்பட்டது.
  2. "With added emphasis on Special Forces, the army is set to change the face of war". FORCE (in ஆங்கிலம்). 2019-03-18. 2019-10-06 அன்று பார்க்கப்பட்டது.
  3. 3.0 3.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; India Today Vats என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  4. "RAW chief Rajinder Khanna to hold charge of DG Security". தி எகனாமிக் டைம்ஸ். 2015-03-21. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/raw-chief-rajinder-khanna-to-hold-charge-of-dg-security/articleshow/46640678.cms. 
  5. Unnithan, Sandeep (5 September 2020). "The Tibetan ghost warriors". India Today. See graphic (archived copy). 7 September 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 6 September 2020 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Special Group
என்பதின் ஊடகங்கள் உள்ளன.