பதுவை நகர அந்தோனியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Addbotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 5:
|death_date={{death date|1231|6|13}} (அகவை 36)
|feast_day=13 ஜூன்
|venerated_in=[[கத்தோலிக்கம்கத்தோலிக்க திருச்சபை]]
|image=Anthony_pereda.jpg
|imagesize=220px
வரிசை 37:
பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தபோதுதான் பெர்ணாண்டு என்ற பெயரை மாற்றி அந்தோனியார் மடத்தின் பெயரால் அந்தோனி என்ற புதுப் பெயர் எடுத்துக்கொண்டார். சிறிதுகாலம் ஆப்பிக்காவிலுள்ள இஸ்லாமியருக்குப் போதிக்கச் சென்றார். உடல்நிலை சரியில்லாததால் மீண்டும் இத்தாலிக்கே திரும்பினார். போர்லி என்னுமிடத்தில் அதிபரின் வேண்டுகோளுக்கிணங்கி அங்குள்ள பேராலயத்தில் மறையுரையாற்றினார். அன்றுமுதல் அந்தோனியார் புகழ் பெற்ற பிரசங்கியானார். அதன்பின் பதுவை நகரில் திருமறை சார்ந்த பணிசெய்து மறையுரையாற்றினார். அவரின் உரையை கேட்க ஆலயங்களில் இடம் கொள்ளவில்லை. கிறிஸ்தவ கோட்பாடுகளை விளக்கியும், அந்த நாட்களில் நிலவிய தப்பறைக் கொள்கைகளை எதிர்த்து ஆணித்தரமாகப் போதித்தார்.
 
தாம் வாழ்ந்த காலத்திலும் இறப்பிற்குப் பின்னும் கடவுள் அளித்த கொடையினால் அனேக புதுமைகள் செய்தார். இதனால் '''கோடி அற்புதர் புனித அந்தோனியார்''' என்ற சிறப்புப் பெயரைப் பெற்றார்.
 
அந்தோனியாரின் அதிசயப் பண்புகள் மற்றும் அவர் புரிந்த புதுமைகள் பற்றி பல நிகழ்வுகள் உள்ளன. ஒருமுறை இவர் ரீமினி என்னும் கடற்கரை நகரில் போதித்ததைக் கேட்க சிலர் மறுத்தபோது மீன்கள் நீரின் மேல் வந்து இவர் கூறியதைக் கேட்டுக்கொண்டிருந்தனவாம். இன்னொருமுறை யூதர் ஒருவர் இயேசு நற்கருணையில் இருப்பதை மறுத்தாராம். ஆனால் பட்டினி போடப்பட்ட அவரது கழுதை அதற்குமுன் போடப்பட்ட புல்லைத் தின்னாமல் அந்தோனியாரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நற்கருணையின் முன் மண்டியிட்டு ஆராதித்ததாம்.
 
மற்றுமொறு புதுமை, இவர் வாழ்ந்த காலத்தில் கடவுளுடைய கிருபையால் இவர் செய்த புதுமைகளால் ஈர்க்கப்பெற்று இவரை நாடிவருவோர் எண்ணிக்கை அதிகமானதால் துறவியர்கள் மடத்தில் அமைதிக்குக் குந்தகம் ஏற்பட்டதாம். இதன் பொருட்டு மடத்தின் தலைமை குரு இவர் எண்ணிலடங்கா புதுமைகள் செய்ய தடைவிதித்தார். நாள் ஒன்றுக்கு 13 புதுமைகள் மட்டுமே செய்ய கட்டளையிட்டார். ஒருநாள் இவர் அன்றைக்கு செய்யகூடிய 13 புதுமைகளையும் செய்து முடித்தபின் மாலையில் வெளியே உலாவச் சென்றார். அப்பொழுது உயரமான கட்டடத்திலிருந்து ஒருவர் தவறி விழுந்தவேளையில் "அந்தோனியாரே என்னை காப்பாற்றும்" என்று உதவிக்குரல் எழுப்ப இவர் அவரை வானத்திலேயே அந்தரத்தில் தொங்கவைத்ததாகவும் அருகில் இருந்த மடத்திற்கு சென்று தலைமை குருவிடம் 14வது பதுமை செய்ய அனுமதி பெற்று அவரை தரையில் பத்திரமாக இறக்கினாராம். மற்றொரு புதுமையில், ஒரே நேரத்தில் அந்தோனியார் இரு இடங்களில் போதித்ததாகவும் புதுமைகள் செய்ததாகவும் செய்தி உண்டு.
 
புனைவுகளை நீக்கிவிட்டு, வரலாற்று நிகழ்வுகளை மட்டுமே பார்த்தாலும் புனித அந்தோனியார் பல புதுமைகள் செய்தார் என்பது உண்மையே என்று அவரது அதிகாரப்பூர்வமான வரலாறு கூறுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/பதுவை_நகர_அந்தோனியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது