மு. இராகவையங்கார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up using AWB
வரிசை 1:
'''முத்துசுவாமி இராகவையங்கார்''' ([[1878]] [[சூலை 26]] – [[1960]] [[பிப்ரவரி 2]]) என்னும் '''மு. இராகவையங்கார்''' தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் புலமை பெற்றவர். இவர் தமிழ் ஆய்வாளர்; பதிப்பாசிரியர்; இதழாசிரியர்; சொற்பொழிவாளர்; கவிஞர்.
 
'''முத்துசுவாமி இராகவையங்கார்''' ([[1878]] [[சூலை 26]] – [[1960]] [[பிப்ரவரி 2]]) என்னும் '''மு. இராகவையங்கார்''' தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் புலமை பெற்றவர். இவர் தமிழ் ஆய்வாளர்; பதிப்பாசிரியர்; இதழாசிரியர்; சொற்பொழிவாளர்; கவிஞர்.
 
== பிறப்பு ==
[[இராமநாதபுரம்|இராமநாதபுரத்தில்]] சேதுபதி அவைப்புலவராக விளங்கிய முத்துசுவாமி ஐயங்காருக்கு மகனாக 1878 சூலை 26 ஆம் நாள் இராகவையங்கார் பிறந்தார். <ref name = "a"> பாலசுப்பிரமணியன் சி., சான்றோர் தமிழ், நறுமலர் பதிப்பகம் சென்னை, நா.பதி.1993, பக்.70 </ref> இவர் இளமையிலேயே தன் தந்தையை இழந்துவிட்டார். அதன் பின்னர் பாண்டித்துரை தேவர் இவரை வளர்த்து கல்வி புகட்டினார்.
 
== அவைக்களப் புலவர் ==
மு. இராகவையங்கார் இளம் வயதிலேயே தமிழ் இலக்கண, இலக்கியங்களில் தேர்ச்சி பெற்றார். இதனால் 1896 ஆம் ஆண்டில் தன்னுடைய பதினெட்டாம் வயதிலேயே பாண்டித்துரை தேவரின் அவைக்களப் புலவர் ஆனார். <ref name = "b"> பாலசுப்பிரமணியன் சி., சான்றோர் தமிழ், நறுமலர் பதிப்பகம் சென்னை, நா.பதி.1993, பக்.71 </ref>
 
== தமிழாசிரியர் ==
[[பாண்டித்துரைத் தேவர்|பாண்டித்துரைத் தேவரால்]] [[1901]] ஆம் ஆண்டில் [[மதுரைத் தமிழ்ச் சங்கம்]] தொடங்கப்பட்டது. இதன் ஓர் உறுப்பான [[செந்தமிழ்க் கல்லூரி, மதுரை|செந்தமிழ்க் கல்லூரியில்]] 1901 ஆம் ஆண்டில் மு. இராகவையங்கார் தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். <ref name = "b"> பாலசுப்பிரமணியன் சி., சான்றோர் தமிழ், நறுமலர் பதிப்பகம் சென்னை, நா.பதி.1993, பக்.71 </ref> அப்பணியை 1912 ஆம் ஆண்டு வரை ஆற்றினார்.
 
[[1944]] ஆம் ஆண்டில் [[சென்னை]] [[இலயோலாக் கல்லூரி, சென்னை|இலயோலாக் கல்லூரியில்]] கீழ்த்திசை மொழியியல் இளவர் (பி. ஓ. எல்.) பட்ட வகுப்புத் தொடங்கப்பட்ட பொழுது, மு. இராகவையங்கார் அத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார். <ref name = "b"> பாலசுப்பிரமணியன் சி., சான்றோர் தமிழ், நறுமலர் பதிப்பகம் சென்னை, நா.பதி.1993, பக்.71 </ref>
 
[[1945]] ஆம் ஆண்டில் திருவனந்தபுரம் பல்கலைக் கழகத்தில் [[ராம. அழகப்பச் செட்டியார்|இராம. அழகப்பச் செட்டியார்]] வழங்கிய நன்கொடையால் தமிழ் ஆராய்ச்சித் துறை தொடங்கப்பட்டது. மு. இராகவையங்கார் அத்துறையின் தலைவராக அவ்வாண்டிலேயே பொறுப்பேற்றார். <ref name = "b"> பாலசுப்பிரமணியன் சி., சான்றோர் தமிழ், நறுமலர் பதிப்பகம் சென்னை, நா.பதி.1993, பக்.71 </ref> [[1951]] ஆம் ஆண்டு வரை அப்பணியை ஆற்றினார்.
 
==இதழாசிரியர் ==
மதுரை தமிழ்ச் சங்கத்தின் மற்றோர் உறுப்பான செந்தமிழ் இதழில் 1901 ஆம் ஆண்டு முதல் 1904 ஆம் ஆண்டு வரை உதவியாசிரியராக இருந்தார். பின்னர் 1904 ஆம் ஆண்டில் ஆசிரியப் பொறுப்பை ஏற்றார். 1912 ஆம் ஆண்டு வரை அப்பணியை செவ்வனே ஆற்றினார். <ref name = "b"> பாலசுப்பிரமணியன் சி., சான்றோர் தமிழ், நறுமலர் பதிப்பகம் சென்னை, நா.பதி.1993, பக்.71 </ref> இவருக்கு முன்னர் 1901 – 03 ஆம் ஆண்டுகளில் மு. இராகவையங்காரின் மாமா மகன் [[ரா. இராகவையங்கார்|இரா. இராகவையங்கார்]] அவ்விதழுக்கு ஆசிரியராக இருந்தார். இவருக்கு பின்னர் 1912 ஆம் ஆண்டு முதல் [[1947]] ஆம் ஆண்டு வரை [[அ. நாராயண ஐயங்கார்]] அவ்விதழுக்கு ஆசிரியராக இருந்தார்.
 
பின்னாளில் தமிழர் நேசன், கலைமகள், ஸ்ரீவாணி விலாசினி, கலைக்கதிர், அமுதசுரபி ஆகிய இதழ்களின் ஆசிரியராகவும் பணியாற்றினார். <ref name = "c"> பாலசுப்பிரமணியன் சி., சான்றோர் தமிழ், நறுமலர் பதிப்பகம் சென்னை, நா.பதி.1993, பக்.80 </ref>
 
== தமிழ்ப் பேரகராதிக் குழுவின் தலைமை தமிழ்ப் பண்டிதர் ==
செந்தமிழ்க் கல்லூரி ஆசிரியப் பணியையும் செந்தமிழ் இதழின் ஆசிரியப் பணியையும் 1912ஆம் ஆண்டில் இறுதியில் துறந்த மு. இராகவையங்கார் [[1913]] ஆம் ஆண்டு முதல் [[1939]] ஆம் ஆண்டு வரை சென்னை பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பேரகராதிக் குழுவில் தலைமைத் தமிழ்ப் பண்டிதராகப் பணியா,ற்றினார். அப்பணியைப் பாராட்டி அப்பொழுதைய அரசாங்கம் இராவ் சாகிப் என்னும் விருதினை வழங்கியது. <ref name = "b"> பாலசுப்பிரமணியன் சி., சான்றோர் தமிழ், நறுமலர் பதிப்பகம் சென்னை, நா.பதி.1993, பக்.71 </ref>
 
== பதிப்பாசிரியர் ==
[[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலை பல்கலைக் கழகம்]] கம்பராமயாணத்தை உரையோடு பதிப்பிக்க விழைந்தது. எனவே [[1951]] ஆம் ஆண்டில் பதிப்பாசிரியர் குழுவை உருவாக்கியது. அக்குழுவில் மு. இராகவையங்கார் இடம்பெற்றார். [[கம்பராமாயணம்|கம்பராமாயணத்தின்]] சிலபகுதிகளை பாடபேத ஆராய்ச்சிக் குறிப்பும் விளக்கவுரையும் எழுதி பதிப்பித்தார். <ref name = "d"> பாலசுப்பிரமணியன் சி., சான்றோர் தமிழ், நறுமலர் பதிப்பகம் சென்னை, நா.பதி.1993, பக்.72 </ref> இந்நூல் தவிர பின்வரும் நூல்களையும் பதிப்பித்திருக்கிறார்.
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;"
|- bgcolor="#CCCCCF" align="center"
வரி 125 ⟶ 124:
* [http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_content&view=article&id=84&Itemid=184 ம. சா. அறிவுடைநம்பி எழுதிய இராவ்சாகேப் மு. இராகவையங்காரின் செந்தமிழ்ப்பணி]
 
[[பகுப்பு: 1878 பிறப்புகள்]]
[[பகுப்பு: 1960 இறப்புகள்]]
[[பகுப்பு: தமிழறிஞர்கள்]]
[[பகுப்பு: உரையாசிரியர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மு._இராகவையங்கார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது