யொஹான்னெஸ் வெர்மீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17:
|influenced by=
}}
'''யொஹான்னெஸ் வெர்மீர்''' (''Johannes Vermeer'') அல்லது '''யான் வெர்மீர்''' (Jan Vermeer) (என்பவர் [[நெதர்லாந்து]] நாட்டு [[ஓவியக் கலை|ஓவியர்]] ஆவார். இவர் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் 1632 ஆண்டில் ஞானஸ்நானம் பெற்றார். 1675 டிசம்பர் 15 ஆம் தேதி இறந்தார். இவரது ஓவியங்களிற் பல நடுத்தர வகுப்பினரின் வீடுகளின் உள்ளகக் காட்சிகளாக அமைந்துள்ளன. நெதர்லாந்தின் ''[[டெல்வ்ட்]]'' என்னும் நகரிலேயே இவர் தனது முழு வாழ்க்கைக் காலத்தையும் கழித்தார். அக்காலத்தில் இவர் ஓரளவுக்கு வெற்றி பெற்ற ஓவியராகத் திகழ்ந்தார். எக்காலத்திலும் இவர் பண வசதி உள்ளவராக இருந்ததாகத் தெரியவில்லை. குறைந்த அளவு ஒவியங்களை இவர் வரைந்ததே இதற்குக் காரணமாக இருக்கலாம். இவர் இறக்கும் போது அவரது மனைவியையும், பதினொரு பிள்ளைகளையும் கடனாளிகளாக விட்டுவிட்டே இறந்தார். ஏறத்தாழ 200 ஆண்டுகள் அவர் முற்றாகவே மறக்கப்பட்டு இருந்த போது, 1866 ஆம் ஆண்டில், கலை விமர்சகரான [[தோரே பியூகர்]] (Thoré Bürger), 66 ஓவியங்களை அவருடையதாகக் குறிப்பிட்டு ஒரு [[கட்டுரை]]யை எழுதினார். இன்று அவற்றில் 34 ஓவியங்கள் மட்டுமே அவருடையவையாகக் கணிக்கப்படுகின்றன. அக்கட்டுரைக்குப் பின், அவரது புகழ் வேகமாக உயர்ந்தது. இன்று, நெதர்லாந்தின் பொற்காலத்தைச் சேர்ந்த மிகச் சிறந்த ஓவியராக வெர்மீர் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளார். குறிப்பாக, ஒளியை இவர் தனது ஓவியங்களில் கையாண்ட விதத்துக்காகப் பெரிதும் சிறப்பிக்கப்படுகின்றார்.
 
== வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/யொஹான்னெஸ்_வெர்மீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது