பாய்க்கப்பல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"தற்காலத்தில் '''பாய்க்கப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

07:03, 13 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

தற்காலத்தில் பாய்க்கப்பல் என்பது எந்தவொரு பெரிய காற்றின் ஆற்றலால் செலுத்தப்படும் கப்பலையும் குறிக்கும். மரபுவழியாக, சதுரவடிவான பாய்கள் பொருத்தப்பட்ட மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாய்மரங்களைக் கொண்ட கப்பல்களே பாய்க்கப்பல்கள் எனப்பட்டன. பாய்க்கப்பல்கள் அவற்றின் அமைப்புக்களைப் பொறுத்து வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றன. இசுக்கூனர், பார்க், பிரிக், பார்க்கென்டைன், பிரிகன்டைன், சுலூப் என்பன இவற்றுள் அடங்கும்.

இயல்புகள்

பாய்க்கப்பல்கள் பல்வேறுபட்ட வகைகளாக உள்ளன. ஆனால், அவை அனைத்துக்கும் பொதுவான சில இயல்புகள் உள்ளன. ஒவ்வொரு பாய்க்கப்பலுக்கும், கப்பலின் வெளிச்சுவர் (Hull), பாயமைப்பு (rigging) என்பவற்றுடன் கப்பலைச் செலுத்துவதற்கான ஆற்றலைப் பெறுவதற்காகக் காற்றைப் பயன்படுத்தும் வகையில், பாய்களை இணைப்பதற்கான ஒன்றுக்குக் குறையாத பாய்மரம் என்பன இருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாய்க்கப்பல்&oldid=1963102" இலிருந்து மீள்விக்கப்பட்டது