ஓமர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category கிரேக்கக் கடவுளர்
*விரிவாக்கம்*
வரிசை 1:
{{Homer infobox}}
[[படிமம்:William-Adolphe Bouguereau (1825-1905) - Homer and his Guide (1874).jpg|thumb|255px|ஹோமரும் வழிகாட்டியும், [[வில்லியம்-அடோல்ஃப் பூகுவேரா]]வினால் ஆக்கப்பட்டது. (1825–1905). இக் காட்சி, ஓமர் ''இடா'' மலையில், நாயுடனும், ஆடு மேய்க்கும் வழிகாட்டி குளோக்கசுடனும் இருப்பதைக் காட்டுகிறது.]]
'''ஓமர்''' என்பவர் பண்டைக் கிரேக்க [[இதிகாசம்|இதிகாசக்]] கவிஞர் ஆவார். [[இலியட்]], [[ஒடிஸ்சி]] ஆகிய இதிகாசங்களை எழுதியவர் இவரே என்று கருதப்படுகிறது. [[பண்டைக் கிரேக்கர்]]கள் ஓமர் உண்மையில் வாழ்ந்த ஒருவர் என நம்பினர். ஆனால் இன்றைய அறிஞர்கள் இது குறித்து ஐயப்பாடு கொண்டுள்ளனர். இவர் பற்றிய நம்பத் தகுந்த வரலாற்றுக் குறிப்புகள் எதுவும், செந்நெறிக் காலத்தில் இருந்து கிடைக்கவில்லை. இந்த இதிகாசக் [[கவிதை]]களும்கூட பல [[நூற்றாண்டு]]களாக வழக்கிலிருந்த கதை சொல்லும் மரபின் வளர்ச்சியுற்ற நிலையைச் சார்ந்தனவாகவே காணப்படுகின்றன. [[மார்ட்டின் வெஸ்ட்]] என்பவருடைய கூற்றுப்படி, ஓமர், உண்மையில் வாழ்ந்த ஒரு புலவர் அல்ல, ஒரு [[கற்பனை]] மனிதரே. தற்காலத்தில், இக் கவிதைகள், நெடுங்காலம் வழங்கி வந்த வாய்வழிப் பாடல்களின் அடிப்படையாக எழுந்தவை என ஒப்புக்கொள்ளப்படினும், இதன் இறுதி எழுத்து வடிவத்தை உருவாக்கியதில் தனிக் கவிஞர் ஒருவருக்கு இருந்திருக்கக்கூடிய பங்கு குறித்துச் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. [[ஜெப்ரி கெர்க்]] போன்ற அறிஞர்களின் கருத்துப்படி, இரண்டு இதிகாசங்களுமே, மரபுவழிக் கதைகளிலில் இருந்து எடுக்கப்பட்ட பெருமளவு விடயங்களைப் பயன்படுத்தித் தனிக் கவிஞர்களால் ஆக்கப்பட்டவையாகும். ஆனால் மார்ட்டின் வெஸ்ட் போன்றவர்கள் இவை, பல்வேறு புலவர்களால் ஆக்கப்பட்டவை என்கின்றனர். [[கிரகரி நாகி]] என்பவரும், இவை தனிப்பட்ட எவரினதும் படைப்பு அல்ல என்றும், பல நூற்றாண்டுகளாக மெதுவாக வளர்ச்சியுற்று இன்றைய வடிவத்தைப் பெற்றன என்றும், இவை பல தலைமுறைகளைச் சேர்ந்த புலவர்களின் கூட்டு முயற்சி என்றும் கூறுகிறார்.<ref>{{cite book|last1=Wilson|first1=Nigel|title=Encyclopedia of Ancient Greece|publisher=Routledge|isbn=9781136788000|url=https://books.google.com/books?id=8pXhAQAAQBAJ&pg=PA366|accessdate=22 November 2016|language=en}}</ref><ref>{{cite book|last1=Romilly|first1=Jacqueline de|title=A Short History of Greek Literature|publisher=University of Chicago Press|isbn=9780226143125|url=https://books.google.com/books?id=y_DTllltXBQC&pg=PA1|accessdate=22 November 2016|language=en}}</ref><ref name=bgr>{{cite book|last1=Graziosi|first1=Barbara|title=Inventing Homer: The Early Reception of Epic|publisher=Cambridge University Press|isbn=9780521809665|url=https://books.google.com/books?id=vCHsh9QWzLYC&pg=PA15|accessdate=22 November 2016|language=en}}</ref>
 
ஓமர் வாழ்ந்திருக்கக்கூடிய காலம்பற்றிப் பண்டைக் காலத்திலும் ஒருமித்த கருத்து நிலவியதில்லை. [[ஹோரோடோட்டஸ்]] என்பவர் ஓமர், தனக்கு 400 ஆண்டுகள் முன்பு வாழ்ந்ததாகக் கூறுகிறார். இதன்படி ஹோமரின் காலம் கிமு 850 என்று ஆகிறது. வேறு சில மூலங்கள் இவரது காலத்தை [[டிரோஜன் போர்|டிரோஜன் போருக்கு]] (Trojan War) அண்மித்ததாகக் காட்டுகின்றன. தற்கால அறிஞர்களைப் பொறுத்தவரை ஹோமரின் காலம், ஒரு தனிமனிதரின் வாழ்க்கைக்காலம் என்பது மட்டுமன்றி, அவர் எழுதியதாகக் கருதப்படும் இதிகாசங்களின் காலத்தையும் உள்ளடக்குகிறது. தற்கால அறிஞர்களுடைய கருத்துப்படி, இலியட், கிமு 9 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் அல்லது கிமு 8 ஆம் நூற்றாண்டு ஆகும். இது ஒடிஸ்சிக்குச் சில பத்தாண்டுகளால் முற்பட்டது எனவும் கருதப்படுகிறது. இதன்படி இலியட்டே மேலை நாட்டு [[இலக்கியம்|இலக்கியங்களில்]] மிகவும் பழையது ஆகும். எனினும், சில அறிஞர்கள் இதன் காலத்தை கிமு 7 ஆம், அல்லது கிமு ஆறாம் நூற்றாண்டு அளவுக்குக் கூடப் பின்னே கொண்டுவருகிறார்கள்.
 
ஆல்பிரெட் ஹெயுபெக் என்பவர், ஹோமரின் ஆக்கங்கள், கிரேக்கப் [[பண்பாடு]] முழுவதினதும் வளர்ச்சிக்கு வடிவம் கொடுத்ததோடு அதன்மீது செல்வாக்குச் செலுத்தியதையும் பல கிரேக்கர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்றும் அவரைத் தமது குருவாகக் கொண்டுள்ளார்கள் என்றும் கூறுகிறார்.
<!-- interwiki -->
 
== மேலும் பார்க்க ==
* [[அக்கீலியஸ்]]
* [[இதிகாசம்]]
* [[கிரேக்கத் தொன்மவியல்]]
* [[திராயன் போர்]]
* [[திராய்]]
== குறிப்புகள் ==
{{Reflist}}
 
== வெளியிணைப்புகள் ==
* {{Gutenberg author | id=Homer | name=Homer}}
* {{Internet Archive author}}
* {{Librivox author |id=765}}
* {{cite book | author1=Homer | author2=Murray, A.T. | title=The Iliad with an English Translation | location=London; New York | publisher=William Heinemann Ltd.; G.P. Putnam's Sons; Internet Archive | volume=I, Books I-XII | url=https://archive.org/details/iliadmurray01homeuoft | language=Ancient Greek, English}}
* [http://digital.library.northwestern.edu/homer/ The Chicago Homer]
* {{cite web | first=Stephen (reader) | last=Daitz | title=Homer, Iliad, Book I, lines 1-52 | url=http://www.rhapsodes.fll.vt.edu/iliad1.htm | publisher=Society for the Reading of Greek and Latin Literature (SORGLL)}}
* {{cite web|last=Heath |first=Malcolm |title=CLAS3152 Further Greek Literature II: Aristotle's Poetics: Notes on Homer's Iliad and Odyssey |publisher=Department of Classics, University of Leeds; Internet Archive |url=http://www.leeds.ac.uk/classics/resources/poetics/poet-hom.htm |date=May 4, 2001 |accessdate=2014-11-07 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20080908005656/http://www.leeds.ac.uk/classics/resources/poetics/poet-hom.htm |archivedate=September 8, 2008 }}
* {{cite web | first=Paola | last=Bassino | title=Homer: A Guide to Selected Sources | website=Living Poets: a new approach to ancient history | url=https://livingpoets.dur.ac.uk/w/Homer:_A_Guide_to_Selected_Sources | publisher=Durham University | year=2014 | accessdate=November 18, 2014}}
<!--spacing, please do not remove-->
[[பகுப்பு:கிரேக்க எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:கிரேக்கக் கடவுளர்]]
"https://ta.wikipedia.org/wiki/ஓமர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது