திருவாரூர் தியாகராஜர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 84:
| Prathyaksham =
| important_festivals=
| architecture = [[திராவிடக்_கட்டிடக்கலைதிராவிடக் கட்டிடக்கலை|திராவிட கட்டிடக்கலை ]]
| number_of_temples =
| number_of_monuments=
வரிசை 93:
}}
 
'''திருவாரூர் தியாகராஜர் கோயில்''', [[தமிழ்நாடு|தமிழகத்தில்]] [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர் மாவட்டத்]] தலைநகரான [[திருவாரூர்|திருவாரூரில்]] அமைந்துள்ளது. இக்கோயில் மிகப் பழமையானதும், பிரம்மாண்டமானதும் ஆன பெரிய கோயில் ஆகும். இக்கோயில் பெரிய கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. இக்கோயில் [[நாயன்மார்]]களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் உள்ளது.ஆசியாவிலேயே மிகப் பெரிய தேரான [[ஆழித்தேர்]] திருவாரூர் கோவில் தேராகும். தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 87ஆவது [[சிவன்|சிவத்தலமாகும்]]. திருவாரூர் [[சப்தவிடங்க_ஸ்தலங்கள்சப்தவிடங்க ஸ்தலங்கள்|சப்தவிடங்க ஸ்தலங்களில்]] தலைமை இடமாகும்.
 
'''திருவாரூர் தியாகராஜர் கோயில்''', [[தமிழ்நாடு|தமிழகத்தில்]] [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர் மாவட்டத்]] தலைநகரான [[திருவாரூர்|திருவாரூரில்]] அமைந்துள்ளது. இக்கோயில் மிகப் பழமையானதும், பிரம்மாண்டமானதும் ஆன பெரிய கோயில் ஆகும். இக்கோயில் பெரிய கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. இக்கோயில் [[நாயன்மார்]]களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் உள்ளது.ஆசியாவிலேயே மிகப் பெரிய தேரான [[ஆழித்தேர்]] திருவாரூர் கோவில் தேராகும். தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 87ஆவது [[சிவன்|சிவத்தலமாகும்]]. திருவாரூர் [[சப்தவிடங்க_ஸ்தலங்கள்|சப்தவிடங்க ஸ்தலங்களில்]] தலைமை இடமாகும்.
 
==தல வரலாறு==
 
*திருப்பாற்கடலில் திருமால் இத்தல இறைவர் தியாகராசரைத் தமது மார்பில் வைத்துப் பூசித்தார். திருமாலின் மூச்சினால் அவர் மார்பின் ஏற்ற இறக்கங்களில் இறைவர் நடமாடினார். பின் இம்மூர்த்தத்தை இந்திரன் வரமாகப் பெற்று பூசித்தார்; அதன்பின் முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு இந்திரனால் வழங்கப்பெற்றது. (இத்துடன் வழங்கப்பட்ட மேலும் ஆறு தியாகராச மூர்த்தங்கள் நிறுவப்பட்ட தலங்களுடனே இவை சப்த(ஏழு) விடங்கத் தலங்கள் எனப்படும்.
 
*இத்தலத்தில் சாயரட்சை வழிபாட்டின்போது தேவேந்திரனே வந்து பெருமானைப் பூசிப்பதாக ஐதீகம்.
 
*கமலை என்னும் பராசத்தி தவம் செய்த பதி.
 
*எல்லாச் சிவாலயங்களின் சாந்நித்யமும் சாயரக்ஷை எனப்படும் திருவந்திக்காப்பு நேரத்தில் இத்தலத்தில் விளங்குவதாக ஐதீகம்.
 
வரி 125 ⟶ 121:
இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் தியாகராஜர் முதலில் [[திருமால்|திருமாலால்]] திருப்பாற்கடலில் வழிபடப்பெற்றவர். பிறகு அவரால் [[இந்திரன்|இந்திரனுக்கும்]], பிறகு இந்திரனால் முசுகுந்த சக்கரவர்த்திக்கும் அளிக்கப்பெற்று, அந்த முசுகுந்த சக்கரவர்த்தியால் இவ்வூரில் பிரதிட்டை செய்யப்பெற்றவர்.
 
உமையோடும் முருகனோடும் இணைந்து காட்சி தரும் சிவனுக்கு சோமஸ்கந்தர் எனப் பெயர். அவரே இங்கு எழுந்தருளி இருக்கும் '''தியாகராசர்''' ஆவார். அவரோடு இணைந்து காட்சிதரும் உமைக்கு '''கொண்டி''' எனப் பெயர். <ref name ="sivam"> சிவம் சுகி; [[ஒரு தலம், ஒரு பாடல், ஒரு நயம் (நூல்)|ஒரு தலம், ஒரு பாடல், ஒரு நயம்]], வானதி பதிப்பகம் சென்னை, பக். 143 </ref> தியாகராஜரின் பாதங்கள் ஆண்டுக்கு இரண்டு தினங்களில் தவிர, மற்ற நாட்களில் மலர்களால் மூடப்பட்டு இருக்கும். [[பங்குனி உத்திரம்]] திருவிழா நடைபெறும் சமயம் இடது பாதத்தையும், திருவாதிரை திருவிழா சமயம் வலது பாதத்தையும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.
 
சமயக்குரவர்களாலும் இதர நாயன்மார்களாலும் பாடற்பெற்ற தலம். அரநெறி [[நமிநந்தியடிகள் நாயனார்]] தண்ணீரால் திருவிளக்கேற்றி வைத்து வழிபட்ட திருக்கோயிலாகும். [[சுந்தரமூர்த்தி நாயனார்]] பொருட்டுப் [[பரவை நாச்சியார்|பரவை நாச்சியாரிடம்]] சிவபெருமான் இருமுறை நள்ளிரவில் தூது நடந்து சென்ற திருவீதியை உடையது. இச்செய்தியை "அடியேற்கு எளிவந்த தூதனை" என்னும் அவரது தேவாரப் பகுதி உறுதிப்படுத்தும். [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்தில்]] ஒருகண் பெற்ற அவர் ``மீளா அடிமை`` என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி மற்றொரு கண்பார்வையும் பெற்றது, இத்தலத்தில்தான்.
 
*இத்தலம் "பிறக்க முத்தி திருவாரூர்" என்று புகழப்படும் சிறப்பினது.
 
*தண்டியடிகள், கழற்சிங்கர், செருத்துணையார், விறன் மிண்டர், நமிநந்தியடிகள் முதலிய நாயன்மார்களின் திருத்தொண்டுகள் பரிமளித்த பதி இதுவே. கமலை ஞானப்பிரகாசரும் இங்கிருந்தவரே.
 
*இத்தலத்தின் தேர், திருவிழா, திருக்கோவில், திருக்குளம் ஆகியன மிகப் பெருமை வாய்ந்தது. திருவாரூர்த் தேர் அழகு.
 
*ஏழு கோபுரங்களைக் கொண்டது இத்திருக்கோயில். கீழ்க்கோபுரம் 118 அடி உயரம் கொண்டது; இத்தலம் வீதிப் பிராகாரங்களையும் சேர்த்து ஐந்து பிராகாரங்களைக் கொண்டுள்ளது.
 
*கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி (கோயில் ஐந்துவேலி, குளம் ஐந்துவேலி, ஓடை ஐந்துவேலி என்பது இங்கு வழங்கப்படும் பழமொழி) என்று போற்றப்படும் மிகப் பெரிய சிவாலயமும், கமலாலயம் என்ற தீர்த்தமும் உடையத் தலம்.
 
*இத்தலம் மொத்தம் நான்குத் தீர்த்தங்களைக் கொண்டது; 1. கமலாலயம் - இது 5-வேலிப் பரப்புடையது; தேவதீர்த்தம் எனப்படுகிறது. 2. சங்கு தீர்த்தம் - இது ஆயிரங்கால் மண்டபத்தின் அருகிலுள்ளது; அமுததீர்த்தம் என்றும் பெயர். 3. கயா தீர்த்தம் - இது ஊருக்கு அப்பால் கேக்கரை என்று வழங்கும் இடத்தில் உள்ளது. 4. வாணி தீர்த்தம் - (சரஸ்வதி தீர்த்தம்) மேற்குப் பெரிய பிரகாரத்தில் சித்திரசபை மண்டபத்திற்கு எதிரில் உள்ளது.
 
*மேற்கண்ட தீர்த்தங்கள் தவிர "செங்கழுநீர்ஓடை" எனப்படும் நீரோடை கோயிலுக்கு அப்பால் 1-கி.மீ. தொலைவில் உள்ளது.
 
*தியாகேசர் எழுந்தருளும் ஏழு விடங்கத் தலங்களுள் ஒன்று (வீதி விடங்கர்); சப்த விடங்கத் தலங்களுள் இது "மூலாதார"த் தலம்.
 
*பஞ்ச பூத தலங்களுள் பிருதிவித் தலம்.
 
**தியாகராஜர் பெருஞ்சிறப்புடன் அஜபா நடன மூர்த்தியாகத் திகழும் பெரும்பதி.
 
வரி 152 ⟶ 139:
 
*தியாகேசப் பெருமான் இராஜாதி ராஜர் ஆதலின், அவர் தனியாக வீதிகளில் எழுந்தருள்வதில்லை; அவருடன் 1. அருளிப்பாடியார், 2. உரிமையில் தொழுவார், 3. உருத்திரப் பல்கணத்தார், 4. விரிசடை மாவிரதிகள், 5. அந்தணர்கள், 6. சைவர்கள், 7. பாசுபதர்கள், 8. கபாலியர்கள் ஆகிய எட்டு கணங்கள் சூழ வருமாம்.
 
 
 
அருமணித்தடம் பூண்முலை அரம்பையரொ டருளிப்பாடியர்
வரி 161 ⟶ 146:
4 - 20 - 3
*"இம்மணிமுத்தாற்றில் இப்பொன்னை இட்டு, ஆரூர் கமலாலயத் திருக்குளத்தில் எடுத்துக் கொள்" என்று முதுகுன்றத்தீசரால் சுந்தரரைப் பணிக்கப்பட்டு, அதன்படி கமலாலயத் திருக்குளத்தில் பொன் எடுக்கப்பட்டத் தலம்.
 
*சுந்தரர் வேண்டிக் கேட்டுக் கொண்டதன் பேரில், அவருக்காக இத்தல தியாகேசப் பெருமானார் நள்ளிரவில் பரவை நாச்சியாரிடம் தூது செல்ல இவ்வூர்த் தெருக்களில் நடந்து சென்ற பெருமையுடையத் திருத்தலம்.
 
*பரவை நாச்சியார் வாழ்ந்த பதி.
 
*சுந்தரர் இழந்த இரண்டாவது கண்ணை பெற்ற பதி.
 
*சுந்தரர், "திருத்தொண்டத் தொகை"யைப் பாடுவதற்கு, அடியார்களின் பெருமைகளை விளக்கிய பெருமை இப்பதிக்கேயுரியது.
 
*இது முசுகுந்த சோழன், மனு நீதிச் சோழன் ஆகியோர் ஆட்சி (வாழ்ந்த) செய்த சீர்மையுடைய பதி.
 
*தண்டியடிகள் அவதரித்த மற்றும் முத்தியடைந்தத் திருத்தலம். இத்திருக்கோயில் வளாக மூன்றாவது சுற்றில் மூலாதார கணபதிக்கு அருகில் தண்டியடிகள் நாயனாரின் திருவுருவச் சிலை உள்ளது.
 
*அறுபத்து மூவருள் நமிநந்தி அடிகள், செருத்துணை நாயனார், கழற்சிங்கர், விறன்மிண்டர் ஆகியோரின் முக்தித் தலம்.
 
*சுந்தரமூர்த்தி நாயனாரின் தாயாரான இசைஞானியார் அவதரித்தத் (கமலாபுரம்) தலம்; இஃது திருவாரூரிலிருந்து மன்னார்குடி பாதையில் 7-கி.மீ. தொலைவில் உள்ளது. இத்தலத்தில் சிவன் கோயில் ஏதுமில்லை (2005). திருவாரூர் தெற்குக் கோபுரத்திற்கு வெளியே, பரவையார் வாழ்ந்த கிழக்கு நோக்கிய மாளிகை வளாகத்தில் இசைஞானியாருக்குத் திருவுருவச் சிலை உள்ளது.
 
*திருவாரூர் - கோயில், குளம், வீதி, தேர்த்திருவிழா ஆகியவற்றைப் பற்றிய தேவாரத் திருப்பாடல்களைக் கொண்டத் திருத்தலம்.
 
*திருவாரூர்க் கோயில் - தியாகராஜர் திருக்கோயில், திருமூலட்டானம், பூங்கோயில் என்றெல்லாம் சிறப்பிக்கப்படுகிறது.
 
*கிழக்குக் கோபுர வாயிலின் கோயிலுள் நுழைந்தால் வீதிவிடங்க விநாயகருக்குப் பின்னால் "பிரமநந்தி" எழுந்தருளியுள்ளார்; மழைவேண்டின் இப்பெருமானுக்கு நீர் கட்டுவதும், பால் கறக்க அடம்பிடிக்கும் பசுக்கள் நன்றாகப் பால் கறக்க, இப்பிரமநந்திக்கு அறுகுச் சாத்தி அதை பசுக்களுக்குக் கொடுக்கப்படும் வழக்கமும், நம்பிக்கையும் மக்களிடையே காணப்படுகின்றது.
 
*சோழர்கள், பாண்டியர்கள், விசயநகர வேந்தர்கள் ஆகியோரின் கல்வெட்டுகள் மொத்தம் 65 உள்ளன.
 
வரி 191 ⟶ 164:
== கோயில் வரலாறு ==
இக்கோயில் இடைக்காலச் சோழர்கள் காலத்தில் கற்கோயிலாக கட்டப்பெற்றதாகும். அதற்கு முன்பு மகேந்திரப் பல்லவன் காலத்தில் செங்கல் கோயிலாக இருந்திருக்க வேண்டும். சோழப் பேரரசர் [[கண்டராதித்தர்|கண்டராதித்த சோழரது]] மனைவியாராகிய [[செம்பியன் மாதேவி]]யாரால் கட்டப்பெற்ற கற்றளியை உடையது. சோழர்கள் மட்டுமல்லாமல், பல்லவர்கள், பாண்டியர்கள், விஜயநகர், தஞ்சை நாயக்கர் மற்றும் மராத்திய மன்னர்களும் தத்தம் ஆட்சியில் இக்கோயிலுக்கு ஆதரவளித்துள்ளார்கள்.
 
 
== வழிபாடு ==
வரி 203 ⟶ 175:
* மாலை 6 மணி - சாயரட்சை பூஜை
* இரவு 7.30 மணி - மரகத லிங்க அபிஷேகம்
* இரவு 8.30 மணி - அர்த்தசாம பூஜை
 
== அன்னை கமலாம்மாள் சந்நிதி ==
வரி 215 ⟶ 187:
மயிலாடுதுறை - திருவாரூர், தஞ்சாவூர் - நாகப்பட்டிணம் இரயில்பாதையில் உள்ள நிலையம். தஞ்சாவூர், கும்பகோணம், மன்னார்குடி, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய இடங்களிருந்து பஸ் வசதி உள்ளது.
 
== திருத்தலப் பாடல்கள்==
 
*இத்தலம் பற்றிய [[தேவாரம்|தேவாரப்]] பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்:
 
[[அப்பர் |திருநாவுக்கரசர்]] பாடிய பதிகம் மொத்தம் 21 சில
 
<blockquote>
வரி 239 ⟶ 211:
</blockquote>
 
[[சம்பந்தர் |திருஞானசம்பந்தர்]] பாடிய பதிகம் மொத்தம்-5
 
<blockquote>
வரி 259 ⟶ 231:
</blockquote>
 
[[சுந்தரர்|சுந்தரர்]] பாடிய பதிகம் மொத்தம்-8
 
<blockquote>
வரி 280 ⟶ 252:
 
==குடமுழுக்கு==
இக்கோயிலில் நவம்பர் 8, 2015 அன்று குடமுழுக்கு நடைபெற்றது. <ref> [http://www.dinamani.com/tamilnadu/2015/11/08/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B/article3119741.ece திருவாரூரில் தியாகராஜர் கோயில் கும்பாபிஷேகம், தினமணி, நவம்பர் 8, 2015] </ref>
 
== அடிக்குறிப்பு ==
வரி 308 ⟶ 280:
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்]]
[[பகுப்பு:பஞ்ச தாண்டவ தலங்கள்]]
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்சிவன் கோயில்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/திருவாரூர்_தியாகராஜர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது