மறுமொழிக் கொள்கை
வணக்கம். என் பேச்சுப் பக்கத்தில் எனக்கு சேதி சொன்னால், இங்கே பதிலளிப்பேன். அது போல உங்கள் பேச்சுப்பக்கத்தில் நான் ஏதேனும் கேட்டிருந்தால், அங்கேயே பதிலளிக்கலாம். உங்கள் பேச்சுப் பக்கம் குறித்த விடயம் காலாவதியாகும் வரைக்கும் என் கவனிப்புப் பட்டியலில் இருக்கும். குறிப்பு: தமிழில் தட்டச்சு செய்ய முடியாத சூழ்நிலை இருந்தால் தவிர, தமிழ் தெரிந்தவர்கள் தமிழில் மட்டும் உரையாடுங்கள். தமிங்கிலம், எழுத்துப்பெயர்ப்பு ஆகியவற்றைத் தவிருங்கள். இவற்றுக்கு பதிலளிக்காமல் விடலாம்.

Note for non-Tamil users: Feel free to communicate in English and you may contact me at en.wiki or commons.

தொகுப்பு

தொகுப்புகள்


1|2|3|4|5|6|7|8|9|10|11|12|13|14


WikiConference India 2023: Program submissions and Scholarships form are now open

Dear Wikimedian,

We are really glad to inform you that WikiConference India 2023 has been successfully funded and it will take place from 3 to 5 March 2023. The theme of the conference will be Strengthening the Bonds.

We also have exciting updates about the Program and Scholarships.

The applications for scholarships and program submissions are already open! You can find the form for scholarship here and for program you can go here.

For more information and regular updates please visit the Conference Meta page. If you have something in mind you can write on talk page.

‘‘‘Note’’’: Scholarship form and the Program submissions will be open from 11 November 2022, 00:00 IST and the last date to submit is 27 November 2022, 23:59 IST.

Regards

MediaWiki message delivery (பேச்சு) 11:25, 16 நவம்பர் 2022 (UTC)Reply

(on behalf of the WCI Organizing Committee)

WikiConference India 2023: Help us organize!

Dear Wikimedian,

You may already know that the third iteration of WikiConference India is happening in March 2023. We have recently opened scholarship applications and session submissions for the program. As it is a huge conference, we will definitely need help with organizing. As you have been significantly involved in contributing to Wikimedia projects related to Indic languages, we wanted to reach out to you and see if you are interested in helping us. We have different teams that might interest you, such as communications, scholarships, programs, event management etc.

If you are interested, please fill in this form. Let us know if you have any questions on the event talk page. Thank you MediaWiki message delivery (பேச்சு) 15:21, 18 நவம்பர் 2022 (UTC)Reply

(on behalf of the WCI Organizing Committee)

WikiConference India 2023: Open Community Call and Extension of program and scholarship submissions deadline

Dear Wikimedian,

Thank you for supporting Wiki Conference India 2023. We are humbled by the number of applications we have received and hope to learn more about the work that you all have been doing to take the movement forward. In order to offer flexibility, we have recently extended our deadline for the Program and Scholarships submission- you can find all the details on our Meta Page.

COT is working hard to ensure we bring together a conference that is truly meaningful and impactful for our movement and one that brings us all together. With an intent to be inclusive and transparent in our process, we are committed to organizing community sessions at regular intervals for sharing updates and to offer an opportunity to the community for engagement and review. Following the same, we are hosting the first Open Community Call on the 3rd of December, 2022. We wish to use this space to discuss the progress and answer any questions, concerns or clarifications, about the conference and the Program/Scholarships.

Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call

Furthermore, we are pleased to share the email id of the conference contact@wikiconferenceindia.org which is where you could share any thoughts, inputs, suggestions, or questions and someone from the COT will reach out to you. Alternatively, leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (பேச்சு) 16:21, 2 திசம்பர் 2022 (UTC)Reply

On Behalf of, WCI 2023 Core organizing team.

WikiConference India 2023: Open Community Call and Extension of program and scholarship submissions deadline

Dear Wikimedian,

Thank you for supporting Wiki Conference India 2023. We are humbled by the number of applications we have received and hope to learn more about the work that you all have been doing to take the movement forward. In order to offer flexibility, we have recently extended our deadline for the Program and Scholarships submission- you can find all the details on our Meta Page.

COT is working hard to ensure we bring together a conference that is truly meaningful and impactful for our movement and one that brings us all together. With an intent to be inclusive and transparent in our process, we are committed to organizing community sessions at regular intervals for sharing updates and to offer an opportunity to the community for engagement and review. Following the same, we are hosting the first Open Community Call on the 3rd of December, 2022. We wish to use this space to discuss the progress and answer any questions, concerns or clarifications, about the conference and the Program/Scholarships.

Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call

Furthermore, we are pleased to share the email id of the conference contact@wikiconferenceindia.org which is where you could share any thoughts, inputs, suggestions, or questions and someone from the COT will reach out to you. Alternatively, leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (பேச்சு) 16:21, 2 திசம்பர் 2022 (UTC)Reply

On Behalf of, WCI 2023 Core organizing team.

WikiConference India 2023:WCI2023 Open Community call on 18 December 2022

Dear Wikimedian,

As you may know, we are hosting regular calls with the communities for WikiConference India 2023. This message is for the second Open Community Call which is scheduled on the 18th of December, 2022 (Today) from 7:00 to 8:00 pm to answer any questions, concerns, or clarifications, take inputs from the communities, and give a few updates related to the conference from our end. Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call.

Furthermore, we are pleased to share the telegram group created for the community members who are interested to be a part of WikiConference India 2023 and share any thoughts, inputs, suggestions, or questions. Link to join the telegram group: https://t.me/+X9RLByiOxpAyNDZl. Alternatively, you can also leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (பேச்சு) 08:11, 18 திசம்பர் 2022 (UTC)Reply

On Behalf of, WCI 2023 Organizing team

உதவி

வணக்கம். இங்கு இருப்பது போன்று சில பக்கங்களில் 2 அல்லது 3 முறை வார்ப்புரு இருக்கிறது. இதனை சரிசெய்து உதவுங்கள். —-மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:12, 25 திசம்பர் 2022 (UTC)Reply

பயனர் ஒருவர் இந்தப் பக்கத்தை இப்போது திருத்தியிருக்கிறார். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:49, 26 திசம்பர் 2022 (UTC)Reply

Hey sir please remove my website from spam list John7418 (பேச்சு) 15:10, 17 சனவரி 2023 (UTC)Reply

I will not posting my link again in Wikipedia. I'm asking you to removing it from spam list because i feel that I'm losing confidence John7418 (பேச்சு) 15:13, 17 சனவரி 2023 (UTC)Reply

குறித்த இணைப்பு விக்கிப்பீடியாவிற்குத் தேவையில்லை. மேலும், இவ்வாறான இணைப்புகள் வேறு பயனராலும் இணைக்கப்படலாம். ஆகவே, இதுபோன்ற வேண்டுகோள்களை தவிருங்கள் நன்றி. AntanO (பேச்சு) 03:20, 18 சனவரி 2023 (UTC)Reply

இனி விக்கிப்பீடியாவில் என்னுடைய இணையதளத்தை இணைத்தால் தாராளமாக ப்ளாக் செய்யுங்கள். ஒரு வேதாகம இணையதளம் ஸ்பாம் பட்டியலில் இருப்பது வேதனையளிக்கிறது. தயவு செய்து இந்த ஒருதடவையும் பட்டியலில் இருந்து விடுவியுகள். இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். நன்றி John7418 (பேச்சு) 04:33, 18 சனவரி 2023 (UTC)Reply

Sir please observe my request John7418 (பேச்சு) 14:52, 20 சனவரி 2023 (UTC)Reply

நீக்கப்பட்டுள்ளது --AntanO (பேச்சு) 07:38, 21 சனவரி 2023 (UTC)Reply

Thank you very much sir. You are a kindness person. God bless you John7418 (பேச்சு) 17:57, 21 சனவரி 2023 (UTC)Reply

ஐயா, நான் இணையத்திலும் ஆன்லைன் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும் உலாவினேன். இந்தப் பக்கத்தில் உள்ள உள்ளடக்கத்தை ஆதரிக்கும் ஆதாரங்கள் எதுவும் இல்லை. தலையூர் காளி பக்கம் நீக்கப்பட வேண்டும். Udhayanidhi7530 (பேச்சு) 13:56, 1 பெப்ரவரி 2023 (UTC)

கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் கருத்திடுங்கள். அத்துடன் கட்டுரையில் நீக்கல் வார்ப்புருவை இணைத்துவிடுங்கள். AntanO (பேச்சு) 06:47, 3 பெப்ரவரி 2023 (UTC)

செம்மைப்படுத்துதலில் பங்கேற்க அழைப்பு

வணக்கம், விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தும் விதமாக துப்புரவுப் பணிகள் நடப்பதை தாங்கள் அறிவீர்கள். அதன் ஒரு முயற்சியாக 2017ஆம் ஆண்டில் தமிழக ஆசிரியர்களால் தொடங்கப்பட்ட கட்டுரைகளை தற்போது செம்மைப்படுத்தி வருகிறோம். அதில் தாங்களும் பங்குபெற்று விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தவும், நினைவுப் பரிசினைப் பெறுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.திட்டப்பக்கம் :செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு நன்றி-- ஒருங்கிணைப்பாளர்கள் Selvasivagurunathan m,Sridhar G

பாஷ்கிரி ஏரிகள்

On the talk page, you deleted my question. Did I break something?ZUFAr (பேச்சு) 19:38, 1 மே 2023 (UTC)Reply

Question in wrong place. AntanO (பேச்சு) 08:36, 2 மே 2023 (UTC)Reply
Where can we ask this question and who can answer us?ZUFAr (பேச்சு) 14:26, 2 மே 2023 (UTC)Reply
Ask here at விக்கிப்பீடியா:தமிழ்த் தூதரகம் (Tamil Embassy) and anyone can answer. AntanO (பேச்சு) 03:41, 3 மே 2023 (UTC)Reply


தமிழ்ப் புத்தாண்டுக் குழப்பம் கட்டுரை நீக்கல்

குறிப்பிடத்தக்கமை என்ற காரணம் இந்தக் கட்டுரை நீக்கலுக்குப் பொருந்தாது என்ற எனது கருத்தைத் தெரிவித்திருந்தேன். அதற்கு எந்த பதிலும் கூறாமல் கட்டுரையை நீக்கி விட்டீர்கள். இது விக்கிப்பீடியாவின் கொள்கைகளின்படி சரியானதா? Ndmoorthy30 (பேச்சு) 04:28, 6 மே 2023 (UTC)Reply

உங்கள் பதில் உங்கள் சார்பான நியாயப்படுத்தலே தவிர, விக்கிப்பீடியாவில் வழிகாட்டலின்படி அல்ல. நிற்க, கட்டுரை நீக்கப்பட்டதற்கான காரணத்தில் சொந்த ஆய்வுக்கட்டுரை என்ற காரணமும் உள்ளடங்கும். காண்க: விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று AntanO (பேச்சு) 04:35, 6 மே 2023 (UTC)Reply
இக்கட்டுரை முழுமையாகத் திருத்தப்பட்ட பின்பு 'சொந்த ஆய்வுக் கட்டுரை போல் இல்லை. தயவு செய்து திருத்தப்பட்ட கட்டுரையைப் பரிசீலிக்கவும். Ndmoorthy30 (பேச்சு) 06:36, 6 மே 2023 (UTC)Reply
சில சொற்களை மாற்றுவதாலோ, விக்கியாக்கம் செய்வதாலோ ஒரு கட்டுரை கலைக்களஞ்சியத்திற்குரிய கட்டுரையாக முடியாது. நீங்கள் வலைத்தளங்களில் எழுதுவதுபோல் இங்கு எழுதமுடியாது. தயவுசெய்து விக்கிப்பீடியாவின் கொள்கைகளைப்புரிந்து கொள்ளுங்கள். நன்றி. AntanO (பேச்சு) 06:40, 6 மே 2023 (UTC)Reply
சொந்த ஆய்வுக்கருத்துகள் இருந்தால் கட்டுரையை முழுதும் நீக்காமல் அந்தப் பகுதிகளை மட்டும் நீக்கியோ மேம்படுத்தியோ கொள்ளலாம் என்று விக்கிப்பீடியா கூறுகிறது அல்லவா! Ndmoorthy30 (பேச்சு) 08:55, 6 மே 2023 (UTC)Reply
வணக்கம், நானும் நீக்கல் கோரிக்கை வைத்தவன் என்பதால் இங்கு பதில் கூறுகிறேன்.குழப்பங்கள் குறித்து விக்கியில் எழுத வேண்டாம் என்பதால் நீக்கல் கோரிக்கை வைத்தேன். இப்படியே போனால் அரசியல் குழப்பம், ஆன்மீக குழப்பம் என்றெல்லாம் கட்டுரைகள் வரலாம். ஏற்கனவே கூறியது தான் தமிழ்ப் புத்தாண்டு எனும் கட்டுரை உள்ளது . தேவை எனில் ஆதாரத்தோடு உப தலைப்பாக எழுதலாம். நன்றி ஸ்ரீதர். ஞா (✉) 09:11, 6 மே 2023 (UTC)Reply

காரணம் அறிந்து கொள்ள விரும்புகிறேன்

கூத்தாண்டவர் திருவிழா என்ற பக்கத்தில் படங்களை இணைத்திருந்தேன், தாங்கள் நீக்கியமைக்கான காரணம் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.பயனர் :D Neethidoss 10:33, 20 மே 2023

en:Wikipedia:Image dos and don'ts --AntanO (பேச்சு) 14:59, 28 சூன் 2023 (UTC)Reply

காரணம் அறிந்து கொள்ள விரும்புகிறேன்

அப்துல் நாசர் மதானி என்ற பக்கத்திற்கு காலக்கெடு உள்ள நீக்கப்பட வேண்டியது என்ற தொடுப்பினை கொடுத்ததற்கான காரணம் என்ன? ராம்குமார் கல்யாணி 🌿 07:12, 6 மே 2023 (UTC)

3 வரிக்குட்பட்ட கட்டுரைகள் நீக்கப்படுவது இங்குள்ள நடைமுறை. உங்கள் பேச்சுப்பக்கத்தில் செய்தியுள்ளது.--AntanO (பேச்சு) 07:21, 6 மே 2023 (UTC)Reply
புரிதல் உண்டாயிற்று. தகவலுக்கு மிக்க நன்றி ராம்குமார் கல்யாணி 🌿 07:11, 10 மே 2023 (UTC)

பொதுவிலுள்ள படிவங்கள் குறித்தான் விளக்கம்

வணக்கம் AntanO. நான் ஆங்கிலக் கட்டுரையிலிருந்தே படிமங்களை பதிவேற்றம் செய்கிறேன். அவ்வாறு பதிப்புரிமை இல்லாத படிமங்கள் ஏதேனும் குறிப்பாக சுட்டிக்காட்டினால் நானே நீக்கிவிடுகிறேன். நன்றி--Balu1967 (பேச்சு) 11:12, 9 மே 2023 (UTC)Reply

பிராக்ஸிமா சென்டாரி

வணக்கம் AntanO,

சில மணி நேரங்கள் முன்னர் "பிராக்ஸிமா சென்டாரி" என்னும் தலைப்பில் முன்னுரை 3 பத்திகளில் பங்களித்திருந்தேன். இது எனது முதல் பங்களிப்பாகும். வேறொரு கட்டுரை இருப்பதாக சொல்லி, புதிய தகவல் ஏதுமில்லை என்றும், ஒருவர் மட்டுமே பங்களித்தார் என்றும் காரணமிட்டு இதை நீக்கிவிட்டீர்கள் போல. அக்கட்டுரையில் ஒற்றை வாக்கியம் உள்ளது. இன்று உருவாக்கிய கட்டுரையில் ஓற்றை பங்களிப்பாளர் இருப்பது இயல்பு தானே. விண்மீனின் பெயர் வேறுவிதமாக எழுதப்பட்டிருந்ததால் நான் தேடும் போது ஒற்றை வாக்கியம் உள்ள அக்கட்டுரை என் தேடலில் தெரியவில்லை.

உங்கள் முடிவை சற்று விளக்கினால் நன்றாக இருக்கும். நன்றி ஐயா

வினோத்பாலு (பேச்சு) 04:42, 15 மே 2023 (UTC)Reply

ஏற்கெனவே ஒரு கட்டுரை இருக்க இன்னுமொரு கட்டுரை உருவாக்கக்கூடாது. கட்டுரை இயல்பாக, தானியங்கி இல்லாது, உசாத்துணையுடன் எழுதப்பட்டிருக்க வேண்டும். AntanO (பேச்சு) 04:45, 15 மே 2023 (UTC)Reply

பிழையான தானியங்கி திருத்தம்

உங்களது அண்மைய தானியங்கித் திருத்தங்களைக் கண்டேன். குறிப்பாக காமிரா->ஒளிப்படக்கருவி திருத்தங்கள் பெரும்பாலும் பிழையாக உள்ளன. சில உதாரணங்கள் 1, 2, 3, 4, 5 தனிப்பெயர்கள், இலக்கணப் பிழைகள், கருத்துப் பிழையோடு திருத்தப்பட்டுள்ளது. இத்தகைய பிழைகளைத் தவிர்த்து, தானியக்கத்தை இயக்கலாம். நீச்சல்காரன் (பேச்சு) 04:08, 18 மே 2023 (UTC)Reply

  விருப்பம் --AntanO (பேச்சு) 16:06, 19 மே 2023 (UTC)Reply
@AntanO: இந்தத் தானியங்கி மாற்றத்தைக் கவனியுங்கள். அனைத்துப் பகுப்புகளும் நீக்கப்பட்டால் புதிய பகுப்பு சேர்க்கப்பட வேண்டும். அல்லது வார்ப்புரு சேர்க்கப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 00:12, 21 மே 2023 (UTC)Reply
1, 2 மாற்றங்களையும் கவனியுங்கள். நிறையக் கட்டுரைகளில் தவறுகள் இடம்பெற்றுள்ளன.--Kanags \உரையாடுக 00:15, 21 மே 2023 (UTC)Reply
சுட்டிக்காட்டியதற்கு நன்றி. திருத்திவிட்டேன். தானியங்கி குளறுபாட்டை கவனத்திற்கொள்கிறேன். AntanO (பேச்சு) 10:41, 22 மே 2023 (UTC)Reply

தங்கள் கவனத்திற்கு

இம்மாற்றத்தை காண்க சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:08, 21 மே 2023 (UTC)Reply

சுட்டிக்காட்டியதற்கு நன்றி. தானியங்கி குளறுபாட்டை கவனத்திற்கொள்கிறேன். AntanO (பேச்சு) 10:41, 22 மே 2023 (UTC)Reply
why did you deleted my article under the heading of Murappanadu ?
I need your explanation because of I had
expanded this article with a great hardship.
Your action of deleting this article has reduced my efforts by which I have planned to write more articles to be added to ta.wikipedia .org. 2409:4072:6C82:D5F8:0:0:4E0B:220D 07:49, 24 மே 2023 (UTC)Reply

உதவி

வணக்கம், அண்மையில் பலர் தங்களது பயனர் பக்கங்களில் விக்கிப்பீடியாவிற்கு தொடர்பில்லாத தகவல்களைச் எழுதி வருகின்றனர். பலரும் ஒரு குறிப்பிட்ட வகையில் தகவல்களை சேர்க்கின்றனர். அவர்கள் கைப்பாவைக் கணக்குகளா என எவ்வாறு சோதனை செய்வது? உதாரணம்: பயனர்:Yoga pritha, பயனர்:Yoga Preetha ஸ்ரீதர். ஞா (✉) 04:29, 24 மே 2023 (UTC)Reply

வணக்கம், Checkuser சென்று அறிக்கையிடுங்கள். எ.கா: 1. reason என்பதில் தெளிவாக காரணத்தைக் குறிப்பிடுங்கள். நீங்கள் கொடுக்கும் காரணம் தெளிவாக இல்லாவிட்டால் மறுத்துவிடுவார்கள் அல்லது மேலதிக விளக்கம் கேட்பார்கள். AntanO (பேச்சு) 04:35, 24 மே 2023 (UTC)Reply
இருவரும் ஒருவரே என பதில் வந்துள்ளது. அதில் ஒரு பயனர் கணக்கை தடை செய்யலாமா? ஸ்ரீதர். ஞா (✉) 03:37, 26 மே 2023 (UTC)Reply
ஆம் ~AntanO4task (பேச்சு) 04:53, 26 மே 2023 (UTC)Reply
நன்றி -- ஸ்ரீதர். ஞா (✉) 08:51, 26 மே 2023 (UTC)Reply

"ஆயர்" என்பதை தொகுக்கின்ற போது, தொடர்ந்து நீக்கப்படுவதன் நோக்கம் என்ன ? தொல்காப்பியம் ஆதாரமாக காட்டப்பட்ட பின்னரும் நீக்கப்படுகிறது எனில் ஏதோ உள்நோக்கம் உள்ளதாகவே நினைக்கின்றேன். தனக்கு தெரிந்த ஆதரத்தின் அடிப்படையில் நிராகரிக்க வேண்டும். மொட்டையாக வந்து நீக்குவது தவறு.

Omsenthamizh (பேச்சு) 13:10, 24 மே 2023 (UTC)Reply

பக்கவழி நெறிப்படுத்தல் கட்டுரைப்பக்கம் அல்ல. AntanO (பேச்சு) 03:30, 25 மே 2023 (UTC)Reply

பதக்கம்

  செம்மைப்படுத்துநர் பதக்கம்
வணக்கம் AntanO, செம்மைப்படுத்துதலின் இரண்டாம் காலாண்டில் கலந்துகொண்டு கட்டுரைகளை செம்மைப்படுத்தியதனை மனமாரப் பாராட்டி இந்தப் பதக்கத்தினை தங்களுக்கு வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி. -- ஒருங்கிணைப்பாளர்கள். மா. செல்வசிவகுருநாதன், ஞா. ஸ்ரீதர்

ஸ்ரீதர். ஞா (✉) 15:42, 2 சூலை 2023 (UTC)Reply

செம்மைப்படுத்துதல் பணி: சிறப்புக் காலாண்டுத் திட்டம் நிறைவுற்றது!

வணக்கம்.

அண்மையில் நிறைவுற்ற சிறப்புக் காலாண்டுத் திட்டத்தில் பங்குகொண்டு கட்டுரைகளை செம்மைப்படுத்தித் தந்தமைக்கு நன்றிகள்!

திட்டமிட்டிருந்த இலக்காகிய 1,092 எனும் எண்ணிக்கையைத் தாண்டி, மொத்தமாக 1,409 கட்டுரைகள் செம்மைப்படுத்தப்பட்டுள்ளன.

  • சிறப்புக் காலாண்டுத் திட்டம் நிறைவுபெற்றிருந்தாலும், மீதமுள்ள கட்டுரைகளை ஆர்வமுடையோர் தொடர்ந்து செம்மைப்படுத்தலாம். பயனர்களின் பங்களிப்பு விவரங்கள் தொடர்ந்து ஆவணப்படுத்தப்படும். அவ்வகையில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அந்நாளின் இறுதியில் தரவுகள் இங்கு இற்றை செய்யப்படும்.

-- ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீதர். ஞா, மா. செல்வசிவகுருநாதன்


விக்கி மாரத்தான் 2023 நிகழ்விற்கான கருத்து கேட்பு

வணக்கம்!

செப்டம்பர் 30 அன்று தமிழ் விக்கிப்பீடியாவின் 20ஆவது பிறந்தநாள் அமைகிறது. 20 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடும் எளியவகை பங்களிப்பாக விக்கி மாரத்தான் நிகழ்வினை நடத்தலாம் எனும் பரிந்துரை உள்ளது.

இந்த நிகழ்வினை நடத்துவதற்காக திட்டப் பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் பேச்சுப் பக்கத்தில் தங்களின் கருத்துகளை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வாய்ப்பு கிடைக்கும் ஆண்டுகளில் விக்கிமாரத்தான் நிகழ்வினை நாம் நடத்திவருகிறோம். இந்தாண்டின் சிறப்பு கருதி, இந்த நிகழ்வினை புதுமையான முறையில் நடத்திட தங்களின் கருத்துகள் உதவும்; நன்றி!

- ஒருங்கிணைப்புக் குழு

படம் நீக்கிய காரணம் அறிய

நான் விக்கிப்பீடியாவில் ரனகள்ளி படத்தை மலைகள்ளி என்னும் கட்டுரையில் இட்டுள்ளேன் அதை நீக்கீய காரணம் என்ன? புதிய படங்கள் சரியாக இட கருத்து இருந்தால் தெரிவிக்கவும் Advcravikumar (பேச்சு) 19:20, 23 சூலை 2023 (UTC)Reply

அங்கு ஏற்கெனவே ஒரு படிமம் உள்ளது. மேலும், ஆங்கில குறிப்பு தேவையற்றதும், மருத்து குறிப்பு ஆதாரமற்றதும் பொருத்தமற்றதுமாகும். AntanO (பேச்சு) 19:37, 23 சூலை 2023 (UTC)Reply

Translation request

Hello.

Can you translate and upload the article en:Baku State University in Tamil Wikipedia?

Yours sincerely, Multituberculata (பேச்சு) 08:35, 25 சூலை 2023 (UTC)Reply

உதவி

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவின் 20ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், சில நிகழ்வுகளை நடத்தத் திட்டமிள்ளோம்:- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இருபதாண்டுகள்.

திட்டப் பக்கங்களிலும், நிகழ்வுகளிலும் பயன்படுத்தும் வகையில் ஒரு பொதுவான இலச்சினை தேவைப்படுகிறது. இதற்கு உங்களின் உதவியை வேண்டுகிறோம்.

தேவைகள் / பரிந்துரைகள்:

  1. பன்மொழியைக் காட்டும் பந்தைச் சுற்றி, ஒரு வண்ணநாடா (ribbon) இட்டு, தமிழ் விக்கிப்பீடியா இருபதாண்டுகள் எனும் வாக்கியம். ஆனால், சொற்றொடர் சற்று நீளமாக இருக்கிறது; எழுத இயலுமா எனத் தெரியவில்லை.
  2. பந்தில் காணப்படும் துண்டுகள் ஒன்றில், எனும் எழுத்து இருந்தால் சிறப்பு. ஆனால், இயலுமா என்பது தெரியவில்லை.
  3. பொதுவான இலச்சினையை இட்டு, விக்கி மாரத்தான் 2023 நிகழ்விற்குரிய இலச்சினையையும் உருவாக்க வேண்டும். எடுத்துக்காட்டு: File:Ta-Wiki-Marathon-2022.png

மேலேக் குறிப்பிடப்பட்டவை, ஒருங்கிணைப்புக் குழுவினருக்குத் தோன்றியவை. நமது தேவைக்கேற்ப, உங்களின் படைப்புத் திறனைப் பயன்படுத்தி எவ்வகையான இலச்சினையைத் தந்தாலும் மகிழ்ச்சி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:43, 17 செப்டம்பர் 2023 (UTC)

இப்போதுதான் பார்க்கிறேன். தற்போதும் தேவையுள்ளதா? AntanO (பேச்சு) 15:37, 24 செப்டம்பர் 2023 (UTC)

இலச்சினை ஒன்றை இரு நிகழ்வுகளில் பயன்படுத்தியிருக்கிறோம். எனவே இன்னொன்று தேவையில்லை. File:Ta-Wiki-Marathon-2022.png என்பதை 2023இற்கு பயன்படுத்தும் வகையில் மாற்றித் தந்து உதவுங்கள். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:36, 28 செப்டம்பர் 2023 (UTC)

வார்ப்புரு தேவை

en:Template:Cite OEIS - இந்த வார்ப்புருவைத் தமிழில் உருவாக்கித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். --Booradleyp1 (பேச்சு) 04:26, 5 நவம்பர் 2023 (UTC)Reply

 Y ஆயிற்று AntanO (பேச்சு) 04:34, 5 நவம்பர் 2023 (UTC)Reply
மிக்க நன்றி. --Booradleyp1 (பேச்சு) 04:47, 5 நவம்பர் 2023 (UTC)Reply

நீக்கப்பட்ட கோப்புகள்

வணக்கம். உதவிப் பக்கங்களை துப்புரவு செய்து, மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். கோப்புகள்: படிமம்:User account howto.ogg, படிமம்:User page howto.ogg, படிமம்:User page edit howto.ogg ஆகியவற்றை நீங்கள் அண்மையில் நீக்கியிருப்பதைக் கண்டேன். இதனை நீக்கியதற்கான காரணத்தை தெரிந்துகொள்ள விரும்புகிறேன். மிகவும் பழைய கோப்பு என்பதால் நீக்கப்பட்டதா அல்லது வேறு காரணங்கள் உள்ளனவா? உதவிக்கான துண்டுப்படங்களை புதிதாக உருவாக்கித் தருவதற்கு பயனர் ஒருவர் ஆர்வமாக உள்ளார். உங்களின் பதில், திட்டமிடலுக்கு உதவும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:48, 8 திசம்பர் 2023 (UTC)Reply

வணக்கம். அப்படிமங்கள் எங்கும் இணைக்கப்பட்டிருக்கவில்லை. மேலும், அவை பழைய இடைமுகப்புக்கு ஏற்புடையன. தற்போதைய நிலையில் அவை பயனற்றவை. இவ்வாறான நிகழ்படங்கள் உதவியாக இருக்கும். பொதுவிலும் சில உள்ளன. அவற்றைக் கவனித்து உருவானக்கினால் நன்று. AntanO (பேச்சு) 07:59, 8 திசம்பர் 2023 (UTC)Reply
commons:Category:Tamil Wikipedia video tutorials --AntanO (பேச்சு) 08:02, 8 திசம்பர் 2023 (UTC)Reply
மிக்க நன்றி. ஏற்கனவே இருப்பனவற்றைக் கண்டறிந்து, அவற்றை சரிபார்த்து, தேவைப்படும் நிகழ்படங்களை மட்டும் உருவாக்க முயற்சி செய்கிறோம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:27, 8 திசம்பர் 2023 (UTC)Reply

நீக்கியதற்கான காரணத்தைத் தெரிந்துகொண்டேன். ஆனால், நீக்கப்பட்ட படிமங்கள் இந்தப் பக்கத்தில் இணைக்கப்பட்டிருந்தன. பரவாயில்லை; பக்கத்தில் மேம்படுத்தும் பணி நடந்துவருவதால், சரியான படிமங்களை தேடிப் பார்த்து/ உருவாக்கி இணைத்துக்கொள்கிறேன். உங்களின் துப்புரவுப் பணிக்கு நன்றி. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:27, 8 திசம்பர் 2023 (UTC)Reply

சிறப்பு:UnusedFiles இங்கு இருந்தது. சிலவேளை இற்றையாகவில்லை என நினைக்கிறேன. தேவையென்றால் மீட்டெடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் 2006 முகப்புத் தோற்றத்திற்கேற்றது. AntanO (பேச்சு) 08:37, 8 திசம்பர் 2023 (UTC)Reply

'2006 முகப்புத் தோற்றத்திற்கான நிகழ்படங்கள் என்பதால், பயனற்றவை' எனும் உங்களின் கருத்து சரியானது. இன்றைய முகப்புத் தோற்றம்/ இடைமுகத்திற்குரிய நிகழ்படங்களை தேடிப் பார்த்து/ உருவாக்கி இணைத்துக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:19, 8 திசம்பர் 2023 (UTC)Reply

ஐயம்

வணக்கம். முகாரி கட்டுரையின் வெளியிணைப்புகள் பகுதியில் YouTube தளத்திற்கு இணைப்புத் தந்துள்ளேன் (2017 ஆம் ஆண்டில்). இவ்வாறு செய்தல் 'காப்புரிமைக்கு எதிரானது' அல்லது 'விக்கிப்பீடியாவின் கொள்கை விதிகளை மீறுதல்' ஆகிய பிரச்சினைகளுக்கு உட்பட்டதா? இணைப்புத் தரலாம் எனில் மற்ற இராகங்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும்போது செய்யலாம் என எண்ணியுள்ளேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:15, 15 திசம்பர் 2023 (UTC)Reply

வணக்கம். YouTube தளத்திற்கு இணைப்புக் கொடுத்தல் பதிப்புரிமை மீறலாக அமைய வாய்ப்புள்ளது. ஆ.வி. வெளி இணைப்பு வழிகாட்டல்: Linking to a page that illegally distributes someone else's work casts a bad light on Wikipedia and its editors. This is particularly relevant when linking to sites such as Scribd, WikiLeaks, or YouTube, where due care should be taken to avoid linking to material that violates copyright.
en:Wikipedia:Video links - There is no blanket ban on linking to user-submitted video sites through external links or when citing sources. However, such links must abide by various policies and guidelines. Links should be carefully and individually evaluated for inclusion.
இன்னொருவருடைய பதிப்புரிமை உள்ளடக்கத்தை வேறொருவர் பதிவேற்றிய இணைப்புகள் (பதிப்புரிமை), சொந்த அல்லது நலமுரண் இணைப்புகளைத் தவிர்க்கலாம். மேலும், பொதுவான வெளி இணைப்பு விதிகளையும் இங்கு பின்பற்றலாம். அரிதான காணொளிகளை இணைப்பதை நன்நோக்கு அடிப்படையில் அணுகலாம். AntanO (பேச்சு) 06:08, 16 திசம்பர் 2023 (UTC)Reply

உங்களின் விளக்கமான உதவிக் குறிப்புகளுக்கு நன்றி. பதிப்புரிமை மீறல் ஏற்பட்டுவிடாமல் கவனமாக இருப்பதோடு, நன்நோக்கு அடிப்படையிலும் அணுகுவேன். இது குறித்து வேறு ஏதாவது ஐயம் ஏற்பட்டால், கேட்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:47, 25 திசம்பர் 2023 (UTC)Reply

விஷ்ணு

விஷ்ணு என்ற பக்கத்திற்கு நான் கொடுத்த தகல்வல்களை மீளமைப்பதன் கரணம் என்ன ? Sudarshanazhwan (பேச்சு) 15:32, 26 சனவரி 2024 (UTC)Reply

பக்க வரலாற்றில் காரணம் உள்ளது. AntanO (பேச்சு) 17:17, 26 சனவரி 2024 (UTC)Reply

பயிலரங்கு 2024

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவில் புதிய பயனர்களின் பங்களிப்பினைப் பெறுவதற்காக பயிலரங்கு 2024 (திருநெல்வேலி) திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் பயிலரங்கத்தின் முக்கியக் கூறுகள்:

  1. அறிவியல், கலை ஆகிய துறைகளில் பணியாற்றும் கல்லூரி ஆசிரியர்கள் 50 பேருக்கு, தொடர்ச்சியாக இரு நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
  2. நாள் 1 - அறிமுகமும், அடிப்படைப் பயிற்சியும் (தளத்தில் உலவுதல், தொகுத்தல்). ஏற்கனவே இருக்கும் கட்டுரைகளை மேம்படுத்தும் பணிக்கு முக்கியத்துவம் தரப்பட்டு, விரிவாகக் கற்றுத் தரப்படும்.
  3. நாள் 2 - கட்டுரைகளில் முன்னேற்றப் பணிகளை புதிய பயனர்கள் செய்வர். பயிற்சி தருபவர்கள் உடனிருந்து உதவுவர்.
  4. 1000 கட்டுரைத் தலைப்புகள் அடங்கிய பட்டியலானது புதிய பயனர்களிடத்து தரப்படும். அவர்களுக்கு விருப்பமான கட்டுரையை அவர்கள் தேர்ந்தெடுத்து, மேம்பாட்டுப் பணிகளைச் செய்வர்.
  5. பயிலரங்கத்தின் முடிவில் மொத்தமாக 250 கட்டுரைகள் மேம்படுத்தப்பட்டிருக்கும் (ஒரு பயனர், 5 கட்டுரைகளை மேம்படுத்துவார்).
  6. புதிய கட்டுரையை வரைவு எனும் தலைப்பின்கீழ் உருவாக்குவதற்கு வழிகாட்டல் தரப்படும். நேரமிருப்பின், ஒவ்வொருவரும் ஒரு கட்டுரை மட்டும் எழுதுமாறு கேட்டுக்கொள்ளப்படுவர்.

உங்களிடம் கோரப்படும் உதவி:

பயிற்சி பெறும் புதிய பயனர்களுக்கு தரவேண்டிய பட்டியலை உருவாக்குவதற்கு உங்களின் உதவியை வேண்டுகிறேன். விக்கிப்பீடியா:பயிலரங்கு 2024 (திருநெல்வேலி)/கட்டுரைத் தலைப்புகள் எனும் பக்கத்தில் துறைவாரியான தனித்தனி பட்டியல்கள் இணைப்புகளில் தரப்பட்டுள்ளன. படிமம் அல்லது அதன் கீழுள்ள சொல்லின் மீது சொடுக்கினால், பட்டியல் திறக்கும். மேம்பாடு தேவைப்படுவதாக நீங்கள் கருதும் கட்டுரைகளின் தலைப்பை நீங்கள் வரிசையாக இடலாம்.

சில குறிப்புகள்:

  1. திறன்பேசி, முதுகெலும்பி ஆகிய கட்டுரைகளில் ஒரு மேற்கோள்கூட இல்லை. இது போன்ற கட்டுரைகளை பட்டியலில் சேர்க்கலாம்.
  2. விலங்கு எனும் கட்டுரை கூகுள் தமிழாக்கம் வழியாக உருவாக்கப்பட்டு அப்படியே இருக்கிறது. இது போன்ற கட்டுரைகளை பட்டியலில் சேர்க்கலாம்.
  3. ஆறு எனும் கட்டுரையில் மேற்கோள்கள் பெயரளவில் உள்ளன. இது போன்ற கட்டுரைகளை பட்டியலில் சேர்க்கலாம்.
  4. மிகுந்த நுட்பமான கட்டுரைகளை மேம்படுத்துவது புதியவர்களுக்கு கடினமாக இருக்கக்கூடும். எனவே அவற்றைத் தவிர்க்கலாம்.
  5. மேம்படுத்துதலை எளிதாக செய்யக்கூடிய, தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்தோடு இருக்கவேண்டிய, முக்கியத் தகவல்களைக் கொண்டிருக்க வேண்டிய கட்டுரைகளின் தலைப்பை பட்டியலில் சேர்க்கலாம்.

பட்டியல்கள் குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருப்பின், விக்கிப்பீடியா பேச்சு:பயிலரங்கு 2024 (திருநெல்வேலி)/கட்டுரைத் தலைப்புகள் எனும் பக்கத்தில் உரையாடுங்கள்.

மிக்க நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:18, 7 பெப்பிரவரி 2024 (UTC)Reply

கருத்துக்களை தெரிவிப்பேன். AntanO (பேச்சு) 02:17, 10 பெப்பிரவரி 2024 (UTC)Reply

பேச்சு:துன்பேர்சியா

துன்பேர்சியா என்ற கட்டுரையில் சான்று வார்ப்புருகளை இணைப்பதில் வழு வந்தபடியால், சான்றுகளை வெளியிணைப்பாக தந்துள்ளேன். தொடர்ந்து அவ்வழிமுறையை பின்பற்றலாமா? அல்லது வேறு ஏதேனும் வழிமுறை உள்ளதா என்பதை பேச்சு:துன்பேர்சியா என்ற பக்கத்தில் அறியத்தாருங்கள். அதனைப் பிறருக்கும் காட்டி பின்பற்றுமாறு எடுத்துக்கூறு ஏதுவாகும். உழவன் (உரை) 08:33, 8 பெப்பிரவரி 2024 (UTC)Reply

கருத்துக்களை தெரிவிப்பேன். AntanO (பேச்சு) 02:17, 10 பெப்பிரவரி 2024 (UTC)Reply
அனுபவமுள்ள உங்களின் மேலதிக எண்ணங்களையும், வழிகாட்டுதலையும் அறிய விரும்புகிறேன். உழவன் (உரை) 00:36, 5 ஏப்பிரல் 2024 (UTC)Reply

உதவி

வணக்கம். விக்கிப்பீடியா:பயிலரங்கு 2024 (திருநெல்வேலி)/நிகழ்வு பக்கத்தில், கிடைமட்டமாக இருக்கும் 3 பட்டைகளை (நிகழ்ச்சி நிரல், பயிற்சி பெறுவோர், கட்டுரைத் தலைப்புகள்) ஒன்றின் கீழ் ஒன்று என நெட்டுக்குத்தாக வரும்படியாக வடிவமைப்பை மாற்ற உங்களின் உதவியை வேண்டுகிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:33, 19 பெப்பிரவரி 2024 (UTC)Reply

இப்போதுள்ளது சரியாகவுள்ளதா எனப்பாருங்கள் ~AntanO4task (பேச்சு) 13:51, 19 பெப்பிரவரி 2024 (UTC)Reply
பட்டைகளுக்கிடையே சிறிது இடைவெளி இருந்தால் நன்று. பட்டைகளின் உயரம் சீராக இருந்தால் இன்னமும் நன்று. இப்போது வேறுபாடு இருக்கிறது. -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:55, 19 பெப்பிரவரி 2024 (UTC)Reply
நெட்டுக்குத்துத் திசையில் (vertical direction) பட்டைகளுக்கு இடையேயான இடைவெளியை விரும்பியபடி அதிகரிக்க செய்ய முடியுமெனில் நன்று. இயலாது எனில் அப்படியே விட்டுவிடலாம். -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:07, 19 பெப்பிரவரி 2024 (UTC)Reply
{|style="width: 100%; color: #E0218A; font-size: 15px; font-weight: bold; text-align: center; margin-bottom: 10px;" என்பதிலுள்ள margin-bottom: 10px இல் வேண்டிய அளவிற்கு மாற்றலாம் ~AntanO4task (பேச்சு) 14:46, 19 பெப்பிரவரி 2024 (UTC)Reply
தங்களின் உதவிக்கு மிக்க நன்றி! -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:40, 19 பெப்பிரவரி 2024 (UTC)Reply

Infobox officeholder

நீங்கள் அண்மையில் மேற்படி வார்ப்புருவில் செய்த மாற்றமோ தெரியவில்லை, ஏராளமான கட்டுரைகளில் தகவல்சட்டங்கள் மொழிபெயர்ப்பின்றி வருகின்றது. எ+கா: மகிந்த ராசபக்ச, இராஜீவ் குமார்.--Kanags \உரையாடுக 09:57, 21 பெப்பிரவரி 2024 (UTC)Reply

கவனித்துத் திருத்தி விடுகிறேன். AntanO (பேச்சு) 10:23, 21 பெப்பிரவரி 2024 (UTC)Reply
இப்போது சரியாகவுள்ளதா எனப்பாருங்கள். ஏதும் சிக்கல் இருந்தால் தெரிவியுங்கள். AntanO (பேச்சு) 11:40, 21 பெப்பிரவரி 2024 (UTC)Reply

இந்தக் கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் உரையாடலொன்று சென்று கொண்டிருக்கிறது. பொறுமையாக வரலாற்றைப் பார்த்தபோது, இந்த மாற்றத்தைக் கண்டேன். இக்கட்டுரை இப்போது 95% ஆங்கில உள்ளடக்கத்துடன் இருப்பதால், என்ன செய்யலாம் என்பதனை பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இப்போதைக்கு பழைய நிலைக்கு கொண்டு செல்லலாமா? அல்லது தகவலுழவன் மேம்படுத்துவதாக இருந்தால் மேம்படுத்தட்டுமா? - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:38, 13 மார்ச்சு 2024 (UTC)Reply

அக்கட்டுரை கலைக்களஞ்சியத்திற்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. தேவையான கட்டுரையாகவும் இருந்ததால், நீக்காமல் மேம்படுத்தலாம் என் நினைத்தேன். ஆனால் பெரும்பகுதி ஆங்கிலத்தில் இருப்பதால் நீக்கிவிடலாம். AntanO (பேச்சு) 13:26, 13 மார்ச்சு 2024 (UTC)Reply

உதவி

வணக்கம். கியூ கட்டுரையில் தகவல் பெட்டி முழுமையாகத் தெரியவில்லை. சரிசெய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 04:41, 18 மார்ச்சு 2024 (UTC)Reply

@Booradleyp1:  Y ஆயிற்று.--Kanags \உரையாடுக 04:56, 18 மார்ச்சு 2024 (UTC)Reply
மிக்க நன்றி Kanags--Booradleyp1 (பேச்சு) 05:31, 18 மார்ச்சு 2024 (UTC)Reply

ஆடூஉத்திணைப்பெயர்

தொல்காப்பியம் மற்றும் தொல்காப்பியம் சொல்லும் சொல் கொண்டு மற்றும் அது சார்ந்து பதிவு செய்யும் நேர்மையான பதிவுகளை தாங்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றீர்? தொல்காப்பியம் உணர்ந்து அறிந்து தெரிந்து எழுதும் புரிதல் இல்லாமல் ஏன் பதிவுகள் உம்மால்  நீக்கப்படுகிறது?

அதிலும் குறிப்பாக, செந்தமிழ் இயற்கை சிவணிய, நிலம் பொழுது எனும் முதல் இரண்டின் இயல்பில்,


திணைப்பெயர்

திணைநிலைப்பெயர்

ஆடூஉத்திணைப்பெயர்


என்ற உயர்திணை மாந்தர் மக்கமார் பற்றிய அடிப்படை பெயர் சார்ந்து எழுதிய உடனே நீக்கம், தடை, அது இது என்று மொட்டையன் குட்டையில் விழுந்தான் என்பது போல நீர் ஏன் செய்து கொண்டு உள்ளீர் ?

பின்பு,

நீர் தான் தேவையற்ற தொகுத்தல் போர் என்று அக்கப்போர் செய்து கொண்டு உள்ளீர்

சிலர் செய்யும் தவறுக்காக, யார் பொதுவாக எழுதினாலும் கூட உடனே நீக்கம், தடை, ... முறையான விளக்கம் கூட இல்லை.

உங்கள் பற்றி ஏதாவது சொல் சொன்ன உடனே உங்களுக்கு தன்மானம் பொத்து கொண்டு வருகிறது அல்லவா?


இறுதியாக,


தொல்காப்பியம் முழுமையாக கற்று,


எழுத்து

மொழி

கிளவி

சொல்

பொருள்

திணை

என்ன என்று முழுமையாக உணர்ந்து, அறிந்து, தெரிந்து செயல் புரிதல் வேண்டும்.

1000 1000 1000 பதிவுகள் நீரும் உமது Botம் Wikiல எழுதியமைக்கு நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்

யான் எழுதிய எழுத்து/பதிவு தவறு எனில், நீர் எழுது, காட்டு எது ஏற்புடையது என்று? யான் செய்தது தவறு எனில் உம்மிடம் இருந்து கற்றுகொள்கிறேன்


குறிப்பு : AntanO அல்லது யாராக இருந்தாலும் நீக்கம், தடை, எனில் புதிய பதிவாளர்க்கு விளக்கம் கொடுக்க வேண்டும். இல்லையே உள் நெஞ்சில் வஞ்சம் வைத்து கொண்டு செயல்படுவோர் என நினைக்க தான் தோன்றுகிறது.


இப்படிக்கு யான்,

செந்தமிழ் இயற்கை சிவணிய,

நிலம் பொழுது எனும் முதல் இரண்டின் இயல்பில்,

ஒரு குடி வேட்டுவர் ஆணுக்கும், அதற்கு நிகரான வேறு ஒரு குடி வேட்டுவர் பெண்ணுக்கும் கருவாகி பிறந்து,

வேட்டுவர் ஆடூஉத்திணைப்பெயர் மரபு வழி உரிப்பொருள்

உணர்ந்து, அறிந்து, தெரிந்து, காப்புக்கட்டு புரிந்து,

வேட்டு வினையாடவே வாழும் வேட்டுவர்


106.198.46.4 21:01, 19 மார்ச்சு 2024 (UTC)Reply

தொல்காப்பியம் தெரிந்த உமக்கு இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும் என்ற தமிழ் அறிவிப்பு விளங்காவிட்டது வியப்பு. நிற்க, பயனர் கணக்கொன்றின் வழியாகப் பங்களித்தால் உரையாடலைத் தொடர இலகுவாயிருக்கும். மேலும், தேவையற்ற பேச்சு தேவையில்லை. இதனை விக்கி ஊக்கப்படுத்துவதில்லை. AntanO (பேச்சு) 14:33, 20 மார்ச்சு 2024 (UTC)Reply

ஐயம்

வித்தானியா, அபுதிலோன்,அல்தியா,அக்மெல்லா உள்ளிட்ட கட்டுரைகள் ஒரே வடிவத்தில் உள்ளது. இது குறித்தான உரையாடல் . இந்தக் கட்டுரைகளில் எல்லாம் இனங்கள் எனும் துணைத் தலைப்பின்கீழ் ஆங்கிலத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளது. இது சரிதானா? -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 04:53, 20 மார்ச்சு 2024 (UTC)Reply

தாவரவியல் கட்டுரைகள் பல அவசர அவசரமாக ஏன் உருவாக்கப்படுகின்றன என்று எனக்கு விளங்கவில்லை. சில இடஙகளில் கருத்துத் தெரிவித்துள்ளேன். எ.கா: இங்கு பாருங்கள், செபுவான விக்கி போன்று த.வி செயற்படுகிறது. பொதுவாக தாவரவியல் பெயர்களை தமிழாக்கம் செய்வதில்லை. அவ்வாறு செய்யும்போது தமிழ்நாட்டு, இலங்கை சொல்லாக்கம் கவணிக்கப்பட வேண்டும். பல பெயர்கள் தமிழில் இருக்க இங்கு இவர்கள் தாவரவியல் பெயர்களில் கட்டுரை உருவாக்குகிறார்கள். யாருக்காக? எ.கா: இங்கு பாருங்கள் வெடிக்காய்ச் செடியை உரூலியா டுயூபரோசா என உருவாக்கியுள்ளார்கள்!? AntanO (பேச்சு) 14:49, 20 மார்ச்சு 2024 (UTC)Reply
//பொதுவாக தாவரவியல் பெயர்களை தமிழாக்கம் செய்வதில்லை//
தெளிவிற்காகக் கேட்கிறேன். ஒலிப்புப் பெயர்ப்பில் மாற்றக் கூடாதா? ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 17:45, 20 மார்ச்சு 2024 (UTC)Reply
தாவரவியல் பெயர் இலத்தின் எழுத்தில் (சாய்வெழுத்தில்) எழுதுவதுதான் முறை. ஆனால் தற்போது பாடசாலைகளில் இலகுபடுத்தலுக்காக தமிழிலும் எழுதுகின்றனர். ஆனால் அதற்கான சரியான வரையறை இல்லை. எ.கா: Solanum என்பது சோலனம், சொலனம், சோளனம் என எதுவாகவும் இருக்கலாம். இங்கு தாவரவியற் பெயரின் அடிப்படையே இல்லாமல் போகிறது. AntanO (பேச்சு) 17:57, 20 மார்ச்சு 2024 (UTC)Reply
ஆம், தமிழ்நாட்டிலும் இதே பயன்பாடு தான். பொதுவான வரையறை இல்லாத போது பயன்பாட்டில் உள்ள முறைகளையாவது (சோலனம், சொலனம், சோளனம்..) பின்பற்றலாம் என்பது என் கருத்து.
குறைந்தபட்சம் விக்கிப்பீடியாவிலாவது ஒரு பொதுவான முறையினைப் பின்பற்றுவது நல்லது. நன்றி -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 18:08, 20 மார்ச்சு 2024 (UTC)Reply
  விருப்பம் AntanO (பேச்சு) 18:09, 20 மார்ச்சு 2024 (UTC)Reply

உதவி

வணக்கம். இந்தப் பகுதியிலுள்ள இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுடன் ஒரு ஒப்பீடு எனும் அட்டவணையில் 'கட்டுரை ஆழம்' தானாகவே இற்றையாக வேண்டும். இதனைச் செய்ய இயலுமா? இப்போதைக்கு மனித உள்ளீடு முறையில் தரவுகளை இட்டுள்ளேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:42, 26 மார்ச்சு 2024 (UTC)Reply

தற்போதுள்ளது சரியாகவுள்ளதா எனப்பாருங்கள் AntanO (பேச்சு) 18:32, 26 மார்ச்சு 2024 (UTC)Reply
சரியாக இருக்கிறது. உதவிக்கு மிக்க நன்றி. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:15, 27 மார்ச்சு 2024 (UTC)Reply
கட்டுரை ஆழம் தொடர்பான இன்னொரு ஐயம், விக்கிப்பீடியா:நல்ல கட்டுரைகள் என்பது கட்டுரை ஆழத்திற்குத் தொடர்புடையதா? அதாவது நல்ல கட்டுரைகளாக மேம்படுத்துவதன் மூலம் அவை கட்டுரை ஆழத்திற்கு உதவி புரியுமா?-- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 05:55, 30 மார்ச்சு 2024 (UTC)Reply
@Sridhar G 'கட்டுரை ஆழம்' முழுக்க முழுக்க புள்ளியியல் சார்ந்தது. இந்தக் கணக்கீடு, கட்டுரை உள்ளடக்கத்தின் தரத்தைக் (academic quality) குறிப்பது அன்று; கூட்டு முயற்சியின் தரத்தைக் (collaborative quality) குறிக்கிறது. meta:Wikipedia article depth எனும் பக்கத்திலுள்ள முதல் இரண்டு பத்திகள் இதனை விளக்குகிறது. இதனுடன், மகிழ்ச்சியும் அச்சமும் எனும் உரையாடலிலுள்ள ஒப்பீடும் உங்களுக்கு உதவக்கூடும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:17, 30 மார்ச்சு 2024 (UTC)Reply
தங்களது விளக்கத்திற்கு நன்றி -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 07:29, 30 மார்ச்சு 2024 (UTC)Reply

@Sridhar G and Selvasivagurunathan m:ஆழம் பற்றி எளிய கணக்கீட்டு முறையுடன் உரையாடலாம் என எண்ணியுள்ளேன். ஆழம் கூட்டுவது மிகவும் கடினமான பணி. தற்போது பங்களிப்பவர்களின் மனநிலைதான் பெரிய சவால். --AntanO (பேச்சு) 09:14, 30 மார்ச்சு 2024 (UTC)Reply

// எளிய கணக்கீட்டு முறையுடன்// நல்லது. இதுவரை இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என நினைக்கிறேன். நல்ல தொடக்கமாக அமையட்டும். நன்றி -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 09:23, 30 மார்ச்சு 2024 (UTC)Reply
  விருப்பம். முதற்கட்டமாக, 100 எனும் அளவினை அடைய முயற்சி செய்வது பலன் தரும் என நம்புகிறேன். இதன் மூலம் நாம் கற்றுக்கொள்ள வழி பிறக்கும். அதன் பிறகு, தொடர்ச்சியாக முன்னேறிச் செல்ல இயலும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:44, 30 மார்ச்சு 2024 (UTC)Reply

தகவல்

வணக்கம். ஃ என்ற எழுத்தால் தொடங்கும் கட்டுரைத் தலைப்புகள் எனும் பகுப்பு உங்களுக்கு உதவக்கூடும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:11, 7 ஏப்பிரல் 2024 (UTC)Reply

நன்றி, https://quarry.wmcloud.org/query/81825 இங்கிருந்து அணைத்தையும் பெற முயன்றேன்.  இற்றைப்படுத்த முயன்றபோது வரிசையிக்கு சென்றுவிட்டதால் தகவல் பெறுதலில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. AntanO (பேச்சு) 14:16, 7 ஏப்பிரல் 2024 (UTC)Reply

ஐயம்

வணக்கம், பகுப்பு:திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள் அல்லது பகுப்பு:அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள் ஆகிய பகுப்புகள் இருக்கும் ஒரு கட்டுரையில் பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள் எனும் பகுப்பும் இருப்பது சரிதானா? உதாரணமாக: அ . ராஜன், அ. அருணாசலம்-- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 18:33, 11 ஏப்பிரல் 2024 (UTC)Reply

வணக்கம், தமிழக அரசியல்வாதிகள் பகுப்பில் உள்ள 1243 கட்டுரைகளும் பொருத்தமான துணைப்பகுப்பினுள் இருப்பதுதான் ஏற்றது. தமிழக அரசியல்வாதிகள் தாய் பகுப்பினுள் அக்கட்டுரைகளை சேர்க்கத் தேவையில்லை. AntanO (பேச்சு) 18:45, 11 ஏப்பிரல் 2024 (UTC)Reply
நன்றி -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 18:47, 11 ஏப்பிரல் 2024 (UTC)Reply

சிறப்புக் கட்டுரை

யூக்ளிடு-ஆய்லர் தேற்றம் கட்டுரை ஆங்கில விக்கியில் சிறப்புக் கட்டுரையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆவி கட்டுரையின் உள்ளடக்கம் முழுவதையும் தமிழ்க் கட்டுரையில் சேர்த்திருக்கிறேன். சிவப்பு இணைப்புகள் ஏதும் உள்ளடக்கத்தில் இல்லை. இக்கட்டுரை "சிறந்த" என்பதற்கான விதிகளை நிறைவு செய்கிறதா என்று தெரியவில்லை. சிறந்த நிலையைப் பெற மேற்கொண்டு தேவைப்படும் மேம்பாடுகள் என்னென்ன என்பதைத் தெரிவிக்க முடியுமா? என்னால் முடிந்தவரை மேம்படுத்த முயற்சிக்கிறேன். வரலாறு என்ற துணைத்தலைப்பிலுள்ள கணிதவியலாளர்கள் பெயர்களின் தமிழாக்கத்தையும் கணினி தொடர்பான 'benchmark' 'proof assistants' என்ற சொற்களின் தமிழாக்கத்தையும் சரிபார்க்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 08:00, 9 மே 2024 (UTC)Reply

தாமதமான பதிலுக்கு வருத்தங்கள். அக்கட்டுரை ஆ.வியில் நல்ல கட்டுரையாகவுள்ளது. த.வியில் விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள் தரப்படுத்தல் செய்வது விடுபட்டுள்ளது. ஆனால், விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள் என்பதற்கு இது ஏற்றது. ஆனால், கட்டாயம் ஒரு படமும் தேவை. ஒரு படத்தை இணைத்தால் முதற்பக்கக் கட்டுரையாக இடம் பெறச்செய்யலாம். கணிதம் தொடர்பான முதற்பக்கக் கட்டுரை காட்சிப்படுத்தி பல வருடங்களாகிவிட்டது. AntanO (பேச்சு) 14:43, 16 மே 2024 (UTC)Reply
நன்றி. நான் தவறுதலாக சிறப்புக் கட்டுரையெனப் புரிந்துகொண்டுவிட்டேன். நல்ல கட்டுரையாகக் கருதப்படுவதற்கான மேம்பாடுகள் இக்கட்டுரைக்குத் தேவைப்பட்டால் சுட்டுங்கள்; முயற்சி செய்கிறேன். முதற்பக்கக் கட்டுரையாகக் காட்சிப்படுத்துவதற்கு, கட்டுரைக்குப் பொருத்தமான படிமம் இருந்தால் இணைக்கிறேன். --Booradleyp1 (பேச்சு) 03:37, 17 மே 2024 (UTC)Reply
கட்டுரையில் ஒரு படம் இணைத்திருக்கிறேன். இதற்கு மேல் தலைப்பு குறித்த பொருத்தமான படிமங்கள் மொதுவகத்தில் கிட்டவில்லை. கணிதவியலாளர் இருவர் படம்தான் உள்ளது. ஆனால் அவை தேற்றத்தின் பெயருக்கான படங்களாக மட்டுமே இருக்கமுடியும், தேற்றத்தின் கருத்துக்களை விளக்கும் படமாக இருக்காது. அவற்றைஇணைத்தால், படங்கள் தேவை என்பதற்காக வலிந்து இணைக்கப்படவையாக இருக்குமென நான் நினைக்கிறேன். உங்கள் கருத்தையும் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 05:57, 17 மே 2024 (UTC)Reply
வணக்கம், இந்தப் பக்கம் தங்களுக்கு உதவலாம். --நன்றி ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 03:52, 17 மே 2024 (UTC)Reply
விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/பரிந்துரைகள் - இங்கு (பயனர் பரிந்துரைகள் > சரிபார்க்கப்பட வேண்டியவை) பரிந்துரை செய்துள்ளேன். நீங்களும் அங்கு இணைக்கலாம். அங்குள்ள முதற்பக்கக் கட்டுரைத் தகுதிகள் என்பவற்றை கட்டுரை பூர்த்தி செய்தால் போதும். AntanO (பேச்சு) 09:25, 17 மே 2024 (UTC)Reply
நன்றி ஸ்ரீதர்.--Booradleyp1 (பேச்சு) 05:57, 17 மே 2024 (UTC)Reply

நல்ல கட்டுரை- அழைப்பு

 

வணக்கம், நல்ல கட்டுரைகள் என்பது விக்கிப்பீடியாவில் குறிப்பிட்ட அளவுகோல்களைக் கொண்டிருக்கும் கட்டுரைகள் முன்மொழிவுகள் மூலம் தரமுயர்த்தப்படும் நிலையினைக் குறிக்கிறது. இதன்மூலம், புதிய பயனர்களுக்கும், பயிற்சிப் பட்டறைகளின் போதும், குறிப்பிட்ட துறை சார்ந்த கட்டுரைகள் எவ்வாறு இருக்க வேண்டும் எனும் புரிதலை ஏற்படுத்த அவர்களுக்குக் காண்பிக்க உதவும். தற்போது விக்கிப்பீடியாவில் உள்ள 1,70,365 கட்டுரைகளில் சரியான கட்டுரைகளை நீங்களும் இங்கு முன்மொழியலாம். கட்டுரைகளை மதிப்பாய்வு செய்ய உங்களால் இயலும் எனில் இங்கு உங்களது பெயர்களைப் பதிவு செய்யுங்கள். நன்றி -- MediaWiki message delivery (பேச்சு) 03:40, 18 மே 2024 (UTC)Reply

வார்ப்புரு - உதவி

வணக்கம், Template:User WP என்பதனை தமிழில் உருவாக்கித் தர இயலுமா? நான் முயற்சித்துப் பார்த்தேன் இயலவில்லை -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 15:24, 21 மே 2024 (UTC)Reply

வணக்கம், {{User WP|பள்ளிகள்}} என உள்ளீடு செய்யுங்கள். இங்கு தேவையான விக்கித்திட்ட (தமிழ்) பெயர்களை உள்ளீடு செய்யுங்கள். AntanO (பேச்சு) 07:21, 23 மே 2024 (UTC)Reply
வணக்கம், நான் இன்று சோதனைக்காக வார்ப்புரு:GAReview என்பதனை இறக்குமதி செய்தேன். இது சரிதானா? இதில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தால் அறியத்தாருங்கள். தேவையான மற்ற வாருப்புருவினை இறக்குமதி செய்ய உதவியாக இருக்கும். -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 13:36, 27 மே 2024 (UTC)Reply
ஆம். அனைத்து வார்ப்புருக்களையும் சேர் என்பதை தவிர்த்து விடுங்கள். இப்பக்கத்தின் அனைத்து வரலாற்றுப் பதிப்புகளையும் நகலெடு என்பதைத் சேர்த்தால் தொகுத்தல் வரலாறுகள் அப்படியே இருக்கும். இது கட்டுரை ஆழத்தை அதிகரிக்க உதவும். இறக்குமதி செய்தவற்றை மறக்காமல் விக்கித்தரவில் இணைத்துவிடுங்கள். (இவை அணைத்தையும் செய்துள்ளீர்கள்) AntanO (பேச்சு) 04:32, 2 சூன் 2024 (UTC)Reply
நன்றி -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 02:31, 3 சூன் 2024 (UTC)Reply

வணக்கம். ஆய்லரின் மாறிலி - இக்கட்டுரையில் சிவப்பிணைப்பாகவுள்ள 'கணித மாறிலி' வார்ப்புருவை உருவாக்கித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 05:41, 31 மே 2024 (UTC)Reply

 Y ஆயிற்று AntanO (பேச்சு) 04:32, 2 சூன் 2024 (UTC)Reply
மிக்க நன்றி.--Booradleyp1 (பேச்சு) 07:54, 3 சூன் 2024 (UTC)Reply

கருத்தினைப் பதிவுசெய்ய வேண்டுகோள்

வணக்கம். இந்த நிகழ்வை நடத்துவதற்காக, நிதிக் கோரிக்கைக்கான விண்ணப்பத்தை விக்கிமீடியா அறக்கட்டளையிடம் தந்தோம். இந்த விண்ணப்பம் தற்போது மேல்-விக்கியில் பதிப்பிடப்பட்டுள்ளது. மேல்-விக்கிப் பக்கத்தின் இறுதியில் இருக்கும் Endorsements and Feedback எனும் பகுதியில் உள்ள Endorse விசைப்பட்டையைச் சொடுக்கி, உங்களின் ஆதரவு (அல்லது) எதிர்ப்பைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். விசைப்பட்டையைச் சொடுக்கும்போது, உதவிக் குறிப்புகள் கிடைக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:19, 4 சூன் 2024 (UTC)Reply

உதவி

வணக்கம் Eastern Theatre of Eelam War IV என்ற கட்டுரையை மொழிபெயர்த்துவருகிறேன் இதற்கு தமிழில் நான்காம் ஈழப்போரில் கிழக்கு மோதல்கள் என தலைப்பிடலாம் என எண்ணுகிறேன். இது சரியாக இருக்குமா? அல்லது பொருத்தமான வேறு தலைப்பு இருந்தால் பரிந்துரையுங்கள் நன்றி.--கு. அருளரசன் (பேச்சு) 13:04, 19 சூன் 2024 (UTC)Reply

வணக்கம், ஈழப்போரில் கிழக்குப் போர்முனை என்பது நன்றாகவிருக்கும். AntanO (பேச்சு) 13:12, 19 சூன் 2024 (UTC)Reply
நான்காம் என்ற சொற்றொடரை சேர்க்காமல் ஈழப்போரில் கிழக்குப் போர்முனை என்று மட்டும் இடலாமா அல்லது நான்காம் என்ற சொற்றொடரை சேர்க்கவேண்டுமா என்று கூறினால் நல்லது.--கு. அருளரசன் (பேச்சு) 13:20, 19 சூன் 2024 (UTC)Reply
ஈழப்போரில் கிழக்குப் போர்முனை என்பது சரியானது. ஈழப்போரில் கிழக்குச் சமர் என்பதும் ஈழப்போரில் கிழக்குச் சண்டை என்பதும் ஏற்புடையன. AntanO (பேச்சு) 13:23, 19 சூன் 2024 (UTC)Reply
ஈழப்போரில் கிழக்குப் போர்முனை என்பதையே பயன்படுத்திக் கொள்கிறேன் நன்றி--கு. அருளரசன் (பேச்சு) 13:25, 19 சூன் 2024 (UTC)Reply
நல்லது. முடியுமானவரை சிங்களச்சொற்களுக்காக தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்துங்கள். எ.கா: Thoppigala = குடும்பிமலை. ஆ.வி கட்டுரையில் ஆ.வி கட்டுரையில் (Eastern Theatre of Eelam War IV) ஒரு படிமத்தை பதிவேற்றியுள்ளளேன். பொருத்தமான படிமங்கள் இருந்தால் பதிவேற்றுகிறேன். AntanO (பேச்சு) 13:31, 19 சூன் 2024 (UTC)Reply

பகுப்பு நீக்கம்

உங்கள் தானியங்கி அண்மையில் "தமிழக அரசியல்வாதிகள்" என்ற பகுப்பை பல கட்டுரைகளில் இருந்து நீக்கி வருகிறது. எ+கா: [1] இதற்குக் காரணம் என்ன? பகுப்புகளை நீக்கினால், தகுந்த ஒரு பகுப்பை இணைக்க வேண்டும் அல்லவா? இது தானியங்கியின் தவறா அல்லது வேறு தகுந்த காரணம் உண்டா?--Kanags \உரையாடுக 09:31, 3 சூலை 2024 (UTC)Reply

பதில் அளிக்க மறந்து, தாமதமாகிவிட்டதற்கு வருந்துகிறேன். வேண்டாத தாய்ப்பகுப்புகளை நீக்குவதுதான் நோக்கம். ஆனால் தாயப்பகுப்பு மட்டும் உள்ள கட்டுரைகளைக் கவனிக்கத்தவறி விட்டேன். அடுத்த முறை கவனத்தில் கொள்கிறேன்.--AntanO (பேச்சு) 12:53, 13 சூலை 2024 (UTC)Reply

தகவல்

வணக்கம். தொடர்-தொகுப்பு நிகழ்வு ஒன்றினை இன்று நடத்தினோம். விக்கிப்பீடியாவின் தரத்தை பாதிக்கக்கூடிய தொகுப்புகள் சில நடந்துள்ளதை அறிந்துகொண்டேன். சிரமத்திற்கு வருந்துகிறேன். இன்றும் நாளையும் நேரம் செலவிட்டு அனைத்தையும் சரிபார்க்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:41, 13 சூலை 2024 (UTC)Reply

பரவாயில்லை. பின்பு இவ்வாறான தொகுப்புகள் தொடர்பில் கலந்துரையாடி வழி காணலாம். AntanO (பேச்சு) 12:47, 13 சூலை 2024 (UTC)Reply

உதவி

வணக்கம். நீங்கள் குறிப்பிடும் 'நோட்டத் தொகுப்பு' எனும் சொல்லாடலின் பொருள் எனக்குத் தெரியவில்லை. இன்னொரு பயனரும் தனக்குப் புரியவில்லை என என்னிடம் தெரிவித்தார். தமிழகத்துத் தமிழர்களிடையே இந்தச் சொற்களை நான் கேட்டதில்லை. விளக்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:52, 14 சூலை 2024 (UTC)Reply

வணக்கம். மின்னல் கருவியூடாக {{Uw-test1}} என்ற வார்ப்பு செயற்படுகிறது. இதன் பொருள் 'சோதனைத் தொகுப்பு' (test edit) என்பதாகும். வார்ப்புருவில் மாற்றலாமா? AntanO (பேச்சு) 07:56, 14 சூலை 2024 (UTC)Reply
இப்போது புரிந்துகொண்டேன். மாற்றலாம் என்று கருதுகிறேன். அனைவருக்கும் புரியத்தக்கதாக இருக்கும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:18, 14 சூலை 2024 (UTC)Reply

உதவி

வார்ப்புரு:Olympic schedule legend என்பதில் வரும் பிழையை நீக்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:22, 27 சூலை 2024 (UTC)Reply

வார்ப்புரு:Olympic schedule legend/styles.css எனும் பக்கத்தை உருவாக்கியதன் வாயிலாக இப்பிழையை Kanags களைந்துள்ளார். எனவே, மேற்கொண்டு எதுவும் செய்யவேண்டியது இல்லை. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:33, 28 சூலை 2024 (UTC)Reply

எதற்காக எனது பதிவுகள் நீக்கப்பட்டது

நான் பதிவிட்டு இருந்த நாடார்கள் சங்க கால வரலாறு என்னும் பக்கம் எதற்காக நீக்கப்பட்டது A.R.KALIRAM NADAR (பேச்சு) 17:06, 8 ஆகத்து 2024 (UTC)Reply

சொந்த ஆய்வு, நம்பகமான உசாத்துணையற்ற கட்டுரைகள் கலைக்களஞ்சியக் கட்டுரைகள் ஆகா. மேலதிக தகவல் உங்கள் பேச்சுப்பக்கத்தில் உள்ளன. AntanO (பேச்சு) 06:40, 9 ஆகத்து 2024 (UTC)Reply
நான் ஒன்றும் வரலாற்று அடிப்படை தகவல் இல்லாமல் பதிவிடவில்லை கால வாரியாக கல்வெட்டு பெயர்கள் மற்றும் இலக்கிய தகவலை மட்டுமே கொண்டு கட்டுரை பதிவிட்டேன் A.R.KALIRAM NADAR (பேச்சு) 14:19, 14 ஆகத்து 2024 (UTC)Reply
கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்க கட்டுரைகளே ஏற்றுக்கொள்ளப்படும். உங்கள் பேச்சுப்பக்கத்தில் உள்ள சுட்டிகளுக்கூடாக மேலதிக தகவலைக் காணலாம். நன்றி. AntanO (பேச்சு) 16:38, 14 ஆகத்து 2024 (UTC)Reply
கலைக்களஞ்சியத்தில் எவ்வகையான கட்டுரைகள் ஏற்றுக் கொள்வீர்கள். A.R.KALIRAM NADAR (பேச்சு) 16:47, 14 ஆகத்து 2024 (UTC)Reply
உங்கள் பேச்சுப்பக்கத்தில் உள்ள சுட்டிகளுக்கூடாக மேலதிக தகவலைக் காணலாம். AntanO (பேச்சு) 16:49, 14 ஆகத்து 2024 (UTC)Reply

Follow up on GFDL and license etc

Hi! I wrote some time ago at பயனர்_பேச்சு:AntanO/தொகுப்பு_14#GFDL_and_files_without_a_license about GFDL and files without a license. How have cleaning up been going?

I noticed there are 285 files in பகுப்பு:Wikipedia license migration candidates. I can fix them with my bot. I just need a bot flag or an okay to edit without. If I need a flag perhaps you can tell me where to ask for a flag? MGA73 (பேச்சு) 19:41, 27 ஆகத்து 2024 (UTC)Reply

Translation request

Hello, AntanO.

Can you translate and upload the article about the prominent Turkish economist en:Dani Rodrik in Tamil Wikipedia?

Yours sincerely, Oirattas (பேச்சு) 04:40, 5 செப்டெம்பர் 2024 (UTC)Reply

Disinformation in your wiki

Hi,

Apologies for not being familiar with your language. For the past few days, I have been reviewing articles related to Hindu-Muslim communal relations across various wikis to help make this platform safe for everyone.

I recently came across the சின்மோய் கிருஷ்ண தாஸ் article and noticed (using Google Translate) that it states: "Lawyer Saiful Islam, who argued for him in court, was murdered by anti-social elements on November 28, 2024, inside the court premises."

This statement appears to be intentional disinformation. It is not supported by the cited source, nor is it present in the English Wikipedia article from which this article is translated. The actual story is that the individual mentioned is not connected to the said case. Instead, some protestors (followers of Chinmoy Krishna) attacked and killed the person during a clash. Several reliable sources, including NDTV, have fact-checked and clarified this matter.

This kind of misinformation undermines Wikipedia's reliability. Can you please help rephrase or correct this information to ensure accuracy?

Thank you. Yahya (பேச்சு) 15:29, 1 திசம்பர் 2024 (UTC)Reply

Hi, I am sorry for delayed response. I will look and do the necessary. AntanO (பேச்சு) 12:26, 5 திசம்பர் 2024 (UTC)Reply

ஐயம்

வணக்கம்,

  • தி ஸ்பைடர் அண்ட் தி பிளை எனும் கட்டுரையில் ஆங்கில விக்கியில் உள்ள உரை என்பதனை தமிழ் விக்கியில் இடம் பெறச் செய்ய வேண்டும் எனில் அதனைத் தமிழாக்கம் செய்ய வேண்டுமா? அல்லது ஆங்கிலத்தில் இருப்பதை வெட்டி ஒட்டலாமா? (வெட்டி ஒட்டினால் தமிழ்க் கட்டுரையில் ஆங்கில வார்த்தையாக இருக்குமே எனும் ஐயத்தால் கேட்கிறேன்)
  • வார்ப்புரு:Infobox poem என்பதில் உள்ள by என்பதற்கு இயற்றியவர்/எழுதியவர்/உருவாக்கியவர் ஆகியனவற்றில் எது பொருத்தமாக இருக்கும்.

ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 15:32, 12 திசம்பர் 2024 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:AntanO&oldid=4163014" இலிருந்து மீள்விக்கப்பட்டது