பயனர் பேச்சு:AntanO/தொகுப்பு 4

Active discussions

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்தொகுஉதவிதொகு

என்னுடைய தலைவர்களின் வாழ்வில் இருந்து தலைமைபண்பு என்னும் பக்கம் நீக்க பட்டதற்கான காரணம் அறியலாமா?

உங்கள் பேச்சுப்பக்கத்தில் குறிப்பு இடப்பட்டுள்ளது. --AntonTalk 13:07, 29 ஏப்ரல் 2014 (UTC)

உதவிதொகு

டெய்சி எஸ்டெலா கோரி டெலோ கட்டுரையில் தகவற்பெட்டி இணைத்தேன். ஆனால் அது முழுமையாகத் தெரியவில்லை. என்ன சிக்கல் என்று சற்றுப் பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 05:39, 7 பெப்ரவரி 2014 (UTC)

வார்ப்புருவை மேம்படுத்தியுள்ளேன்.--Anton·٠•●♥Talk♥●•٠· 06:06, 7 பெப்ரவரி 2014 (UTC)

*தொகு

konguvettuvagounderperavai.blogspot என்ற பக்கம் என்னுடையதே.இவைகள் அனைத்தும் உன்மையே அதன் பொருட்டே அவற்றை நான் விக்கிபீடியாவில் இனைத்துள்ளேன்.எனவே அவற்றை பதிய எனக்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி

உங்கள் பேச்சுப்பக்கத்தில் பதிப்புரிமை தொடர்பான வார்ப்புரு இணைத்துள்ளேன். அங்குள்ள சுட்டிகள் மூலம் பதிப்புரிமை என்றால் என்ன? அனுமதி வழங்குதல் எவ்வாறு எனவும் அறிந்து கொள்ளுங்கள். மேலும், உங்கள் வலைப்பூவிலுள்ள கருத்துக்கள் தொடர்பான நம்பகத்தன்மையும் கேள்விக்குட்டுத்தப்படலாம். உங்கள் பேச்சுப்பக்கத்தில் கலைக்களஞ்சியக் கட்டுரை தொடர்பான வார்ப்புருவும் இணைத்துள்ளேன். அதிலுள்ள சுட்டிகளைக் கொண்டு கலைக்களஞ்சியம் என்பது என்ன என்பதனையும் அறிந்து அதற்கேற்பவும், விக்கிப்பீடீயா ஒரு வலைப்பூ அல்ல என்பதை கருத்திற்கொண்டும் கட்டுரையினை மேம்படுத்துங்கள். உங்கள் பேச்சுப்பக்கத்தில் உள்ள பதிப்புரிமை, கலைக்களஞ்சியக் கட்டுரை வார்ப்புருக்களில் உள்ள பகுதிகள் விளங்காதுவிட்டால் யாரிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். --AntonTalk 13:08, 13 பெப்ரவரி 2014 (UTC)

உதவிதொகு

வைக்கம் விஜயலட்சுமி கட்டுரையில் தகவற்பெட்டி முழுவதும் தோன்றவில்லை. சரிசெய்ய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 04:33, 14 பெப்ரவரி 2014 (UTC)

 Y ஆயிற்று தற்போதைக்கு தகவற்பெட்டியின் பழைய பெறுமானங்களுக்கேற்ப மாற்றியுள்ளேன். ஆயினும் "Infobox musical artist" வார்ப்புரு புதிய பெறுமானங்களுக்கேற்ப மேம்படுத்தப்பட வேண்டும். பிறகு கவனிக்கிறேன். --AntonTalk 04:56, 14 பெப்ரவரி 2014 (UTC)

முதற்பக்கம்தொகு

வணக்கம் அன்டன் அவர்களே ! விக்கிப்பீடியா முதற்பக்கத்தில் ஸ்ரீஹீரன் திசம்பர் மாத கட்டுரை போட்டி வெற்றியாளர் என்று உள்ளது. ஆனால் ஸ்ரீஹீரன் திசெம்பர் மாதக் கட்டுரைப் போட்டியில் பங்கு கொள்ளவே இல்லை. --  khjtd; பேச்சு 03:53, 16 பெப்ரவரி 2014 (UTC)

சுட்டியதற்கு நன்றி. திருத்திவிடுகிறேன்.--AntonTalk 03:59, 16 பெப்ரவரி 2014 (UTC)

மழைதொகு

மழை எனப்படும் கட்டுரையில் அமில மழை, ஆலங்கட்டி மழை போன்ற கட்டுரைகளில் இருந்து வெட்டி ஒட்டி உள்ளது. அக்கட்டுரையில் வெட்டி ஒட்டியதை அழித்துவிட்டு எழுதலாமா? --  khjtd; பேச்சு 04:11, 16 பெப்ரவரி 2014 (UTC)

ஆம், எழுதுங்கள். --AntonTalk 04:15, 16 பெப்ரவரி 2014 (UTC)
நன்றி அன்ரன் அவர்களே --  khjtd; பேச்சு 04:21, 16 பெப்ரவரி 2014 (UTC)

முதற்பக்க தொடர் கட்டுரைப் போட்டியாளர் அறிவிப்புதொகு

முதற்பக்க தொடர் கட்டுரைப் போட்டியாளர் அறிவிப்பில் நான் விரிவாக்கிய கட்டுரைகளை பிழையாக இட்டுள்ளீர்கள் என நினைக்கின்றேன். ஆகவே சற்று சரிபார்த்து செய்யுங்களேன்.....--aho;- பேச்சு 17:20, 16 பெப்ரவரி 2014 (UTC)

[[file:Shriheeran.jpg|150px|]], இவ்வாறு ஒரு படிமம் உள்ளது என நினைக்கின்றேன். இதை மாற்றி விடவும்.

குறிப்பிட்டதற்கு நன்றி. குறிப்பிட்ட பெயரில் படிமம் இல்லையே. வேறு இருந்தால் குறிப்பிடுங்கள், மாற்றிவிடுகிறேன்.--AntonTalk 18:32, 16 பெப்ரவரி 2014 (UTC)

இப்படத்தை இடவும்--aho;- பேச்சு 12:33, 17 பெப்ரவரி 2014 (UTC)

கட்டுரை...தொகு

வணக்கம் திரு.ஆண்டனோ அவர்களே, நாங்கள் இந்த விக்கிபிடியா கலைக்களஞ்சியத்துக்கு புதியவர்கள்.அதனால் சில தவறுகள் உருவாகின. அது மட்டும் இன்றி நாங்கள் கொடுத்த தகவல்கள் முற்றிலும் உண்மை. அதற்கான ஆதாரங்களும் தரப்பட்டன. அவை போதுமானவை என்று என்னினோம். இப்போது புரிந்துகொன்டோம் இன்னும் நிறைய ஆதாரங்கள் தரவேண்டும் என்பதை.எங்களுக்கு கிடைத்த ஆதாரங்களையே பிற பிளாக்குகளில் பத்ந்துள்ளோம். இனி இதுபோன்று நிகழாதவாறு பார்த்துக்கொள்கிறோம். தாங்கள் தயவுகூர்ந்து தடையை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அது மட்டும் இன்றி நீங்களும் சற்று தெளிவான கருத்துக்களை வழங்கினால் மிக உதவியாக இருக்கும். நன்றி!

பின்னர் கட்டுரையில் பேச்சுப்பக்கத்தில் என் கருத்தை இடுகிறேன். --AntonTalk 12:39, 22 பெப்ரவரி 2014 (UTC)

திரு ஆண்டன் அவர்களே ஏன் எங்கள் மீது தங்களுக்கு இவ்வளவு காழ்ப்புணர்சி ?

கலைக்களஞ்சியம் என்றால் என்ன என்பதை விளங்கிக் கொண்டு பங்களியுங்கள். வேறு பெயர்களில் பங்களிப்பது, ஐ.பி முகவரியில் பங்களிப்பது, கருத்துக்களை விளங்கிக் கொள்ளாமல் ஒருதலைப்பட்சமாக கட்டுரைகளைத் தொகுப்பது என விக்கி மரபுக்கு புறம்பாக பங்களிக்க முடியாது. இது எல்லோருக்கும் பொதுவானது. இதனை தடுப்பது காழ்ப்புணர்சி என்றால் இதற்கு மேல் விளக்க முடியாது. நேரமிருந்தால் உங்கள் மனற்றொட்டியில் கட்டுரையினை சீராக உருவாக்குங்கள், நான் அதை கட்டுரைக்கு நகர்த்துகிறேன். --AntonTalk 13:19, 23 பெப்ரவரி 2014 (UTC)

திரு ஆண்டன் அவர்களே தங்களின் அறிவுறுத்தலின்படி நான் எனது மணல்தொட்டியில் எனது கட்டுரையை வடிவமைத்துள்ளேன். நீங்கள் அதை பார்த்துவிட்டு எனது கட்டுரையை முழுமையடைய செய்யுங்கள்.இவற்றிக்கான ஆதாரங்களையும் கொடுத்துள்ளேன். நன்றி!

உதவிதொகு

இலங்கை மௌரிய மன்னர்கள்

  • Kittisena -கீத்திசேனன்
  • Dathappabhuti-தட்டா பூபதி
  • Kittisri Meghavanna- குட்டகீர்த்தி மேகன்
  • Jettha Tissa - செக்தா திச்சன்
  • Kassapa- கச்சியபன்
  • Unhanagara Hathadatha - இரண்டாம் அத்தபாதன்
  • இவ்வாறு கட்டுரைகளில் மன்னர்களின் பெயர்கள் தமிழில் தரப்பட்டுள்ளன. இவை சரியானவை இல்லை எனத் தோன்றுகிறது.

இந்த மன்னர்களின் பெயர்களின் சரியான தமிழ்ப் பெயர்களைத் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

  • 608 இல் ஆண்ட அரசன் சங்க திச்சன் என்றுதான் [lakdiva.org/codrington/sovereigns.html] இந்த இணைப்பில் தரப்பட்டுள்ளது. ஆனால் தவி மற்றும் ஆவி இரண்டிலும் இரண்டாம் சங்க திச்சன் என்று உள்ளது. எது சரியானது என்று எப்படி அறிவது?--Booradleyp1 (பேச்சு) 15:17, 2 மார்ச் 2014 (UTC)

மின்னஞ்சல்தொகு

தங்களுக்கு மின்னஞ்சல் இடப்பட்டுள்ளது. கவனிக்கவும்.....---♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:33, 16 மார்ச் 2014 (UTC)

இன்று உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்படும். --AntonTalk 03:07, 25 மார்ச் 2014 (UTC)

முதற்பக்க கட்டுரைதொகு

யுவான் மரபு முதற்பக்கத்திற்குரிய கட்டுரை. ஒரு கட்டுரையை பரிந்துரைத்திருந்தேன் இப்போது அப்பக்கம் எது என்பது மறந்துவிட்டது :( --குறும்பன் (பேச்சு) 00:12, 21 மார்ச் 2014 (UTC)

குறும்பன், தாமதத்திற்கு வருந்துகிறேன். பரிந்துரைகள் பக்கத்திலும் அதன் வரலாற்றுப் பக்கத்திலும் குறித்த கட்டுரை இடம்பெற பெறவில்லை. இங்கு பரிந்துரைத்துவிடுங்கள். --AntonTalk 03:06, 25 மார்ச் 2014 (UTC)

சாட்ஸ்வொர்த் ஹவுஸ்தொகு

விக்கி பொதுவகத்தில் இருந்து என்னால் சேர்க்கப்பட்ட படிமத்தை என்ன காரணத்துக்காக நீக்கினீர்கள். உரிய காரணத்தைத் தெரிவிக்கவும். - Uksharma3 (பேச்சு) 07:04, 3 ஏப்ரல் 2014 (UTC)

நீக்கப்படவில்லை. பொதுவில் உள்ளது. --AntonTalk 07:05, 3 ஏப்ரல் 2014 (UTC)

கட்டுரையிலிருந்து நீக்கியமைக்கு என்ன காரணம்? - Uksharma3 (பேச்சு) 07:07, 3 ஏப்ரல் 2014 (UTC)

சிறப்பாக படம் இருந்ததால், இரைச்சலுள்ள படத்திற்குப் பதிலாக சிறப்பான படத்தைப் பயன்படுத்தியுள்ளேன். இப்படிமம் விக்கிமீடியா நியமங்களுக்கு ஏற்ப அமையததால் பொதுவில் நீக்கப்பட கேட்டுள்ளேன். --AntonTalk 07:33, 3 ஏப்ரல் 2014 (UTC)

குளிர்காலத் தோற்றம் உங்களுக்கு இரைச்சலாகத் தெரிகிறது. Olympus Digital Camera வால் துல்லியமாக எடுக்கப்பட்ட படம் இது. இந்த மாளிகையினதும் ஓக் மரத்தினதும் குளிர்காலத் தோற்றத்தைக் காட்டும் வேறு படங்கள் பொதுவில் கிடையாது. ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் மாளிகையும் மரமும் எவ்வாறு தோற்றமளித்தன என்ற பதிவை இப்படிமங்கள் கொண்டுள்ளன. படத்தில் எனது உருவம் இருப்பது தற்செயலானதே. தமிழ் விக்கியில் இந்தப் படங்களைப் பிரசுரித்துத் தான் நான் பிரபலமடைய வேண்டும் என்ற நிலை எனக்கில்லை. மேலும் தமிழ் விக்கி கட்டுரைகளை எத்தனை பேர் பார்க்கிறார்கள்? படிக்கிறார்கள்? அதைவிட அதிகம் பேர் எனது Blog க்கிற்கு வருகிறார்கள்.

படிமங்களை நீக்கும்படி பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக எனக்கு Commons இலிருந்து அறிவித்தல் வந்தது. மேலே சொன்ன காரணங்களையே அங்கும் சொல்லியுள்ளேன். நீக்கினால் நீக்கிவிட்டுப் போகட்டும். எனக்கொன்றும் நஷ்டம் கிடையாது.

இனிமேல் நான் தமிழ் விக்கி பக்கமே வரப்போவதில்லை. நன்றி. வணக்கம். -Uksharma3 (பேச்சு) 08:32, 3 ஏப்ரல் 2014 (UTC)

முடிந்தால் விக்கி நியமங்களுக்கேற்ப உரையாடுங்கள், தேவையற்ற உரையாடல் வேண்டாம். தமிழ் விக்கியோ, பொதுவோ, ஆங்கில விக்கியோ விதிகளை மீறி செயற்பட முடியாது. இம்மூன்று இடங்களிலும் எனக்குள்ள பயனர் தகுதிக்கும் பங்களிப்புக்குக்கு ஏற்ப எனது பங்களிப்புக்கள் மாற்றமின்றித் தொடரும். உங்கள் படிமம் தொடர்பானது: "Not in scope and Commons is not your personal free web host" --AntonTalk 08:43, 3 ஏப்ரல் 2014 (UTC)

பார்க்கதொகு

தங்களுக்கு ஆலமரத்தடியில் ஒரு செய்தி உள்ளது.--யாழ்ஸ்ரீ (பேச்சு) 11:02, 5 ஏப்ரல் 2014 (UTC)

தற்போது நீங்கள் இந்நேரத்தில் விக்கியில் பங்களித்துக் கொண்டிருப்பதை அண்மைய மற்றங்களில் கவனித்தேன், தயவு செய்து ஆலமரத்தடியில் பதில் தெரிவிக்கவும் ஐயா!--யாழ்ஸ்ரீ (பேச்சு) 08:08, 7 ஏப்ரல் 2014 (UTC)

தற்போது நீங்கள் இந்நேரத்தில் விக்கியில் பங்களித்துக் கொண்டிருப்பதை அண்மைய மற்றங்களில் கவனித்தேன், தயவு செய்து ஆலமரத்தடியில் பதில் தெரிவிக்கவும் ஐயா! ஏன் தாமதம் காரணம் கூறினால் நல்லது, வேலைப்பளுவா? இருக்கவே இருக்காது, சிறுபிள்ளைகளின் கேள்விகளைத் தட்டிக்கழிக்க வேண்டாம் அது நல்லதல்ல--யாழ்ஸ்ரீ (பேச்சு) 12:19, 21 ஏப்ரல் 2014 (UTC)

ஏற்கெனவே அங்கு சிலர் உரையாடியதால் பதில் தேவையில்லை என நினைத்துவிட்டேன். பதிலளிக்காமைக்கு வருந்துகிறேன். "ஐயா" போன்ற சொற்கள் வேண்டாமே. இன்றிரவு உங்களுக்கு பதில் அனுப்பப்படும். --AntonTalk 12:35, 21 ஏப்ரல் 2014 (UTC)

தாயம் கட்டுரைக்குறித்துதொகு

AntanO அவர்களே, தாயம் கட்டுரையில் நான் செய்த மாற்றங்கள் ஏன் நீக்கப்பட்டன?. --ச.பிரபாகரன் (பேச்சு) 23:53, 6 ஏப்ரல் 2014 (UTC)

அக்கட்டுரையில் உள்ள "விதி முறைகள்" என்ற பகுதி வலைத்தளங்களில் இருந்து பிரதி செய்யப்பட்டள்ளது. தற்போது மீளமைத்துள்ளேன். அப்பகுதியை பதிப்புரை மீறலற்று திருத்தி விடுங்கள். --AntonTalk 02:15, 7 ஏப்ரல் 2014 (UTC)

உங்கள் கவனத்திற்குதொகு

தேசிய கடன் கடிகாரம் (ஐக்கிய அமெரிக்கா), பயனர் பேச்சு:Mirani Ratnarajah இவை இரண்டையும் பார்த்து ஆவன செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 17:00, 7 ஏப்ரல் 2014 (UTC)   விருப்பம்--AntonTalk 04:37, 8 ஏப்ரல் 2014 (UTC)

மலேசியப் படிமங்கள்தொகு

வணக்கம் அன்ரன். மலேசியா தொடர்பான படங்களை பதிவேற்றியவர் முத்துக்கிருஷ்ணன். அவரோடு தொடர்பு கொண்டு காப்புரிமை தொடர்பான விளக்கங்களைப் பெறக் கூடியதாக இருந்ததா?

வரலாற்று நபர்களை சித்தரிக்க ஒரு படத்தை நியாப் பயன்பாட்டுக்கின் கீழ் விட்டுவிடவும். நன்றி. --Natkeeran (பேச்சு) 16:13, 8 ஏப்ரல் 2014 (UTC)

வணக்கம் நக்கீரன். முழுப்படங்களும் வலைப்பக்கங்களில் இருந்தே பிரதி செய்யப்பட்டுள்ளன. சிலவற்றுக்கு உரலி கொடுத்துள்ளேன். ஆம் வரலாற்று நபர்களை சித்தரிக்க பொருத்தமான படத்தை பதிவேற்றிவிடுகிறேன். --AntonTalk 16:16, 8 ஏப்ரல் 2014 (UTC)

தேவை/உதவிதொகு

ஆங்கில சொற்களை தமிழ் மொழிமாற்றும் கருவிகள்/வலைத்தளம். (Dawn of the Planet of the Apes) டவ்ன் ஓப் த ப்ளனேட் ஓப் த அபேஸ் - இதை திருத்தவும்? நன்றி. --Thilakshan (பேச்சு) 18:32, 10 ஏப்ரல் 2014 (UTC)

டோன் ஒப் த பிளனட் ஒப் தி ஏப்ஸ் என்றிருக்கலாம். மொழிமாற்றல் பற்றிய உதவிக்கு பின்னர் உங்கள் பேச்சுப் பக்கத்தில் கருத்திடுகிறேன். --AntonTalk 16:37, 10 ஏப்ரல் 2014 (UTC)


வணக்கம் அன்டன் ஆர். ஜே. உத்ரா கட்டுரைக்கான மேற்கோள்கள் அனைத்தையும் ஆர். ஜே. உத்ரா எனக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்துள்ளார் அந்த மின்னஞ்சலில் தகவல்களை மேற்கோளாக பயன் படுத்த முடியுமா --✍☪mohamed ijazz☪® (பேச்சு) 07:09, 21 ஏப்ரல் 2014 (UTC)

வணக்கம் இஜாஸ், மின்னஞ்சல் மேற்கோளாக பயன்படுத்த முடியாது. மின்னஞ்சல் தகவல் குறிப்பிடத்தக்கதா, அந்நபர் "குறிப்பிடத்தக்கவரா" என்பது ஏற்றுக் கொள்ளப்படலும் முக்கியம். நீங்கள் இதுவரை இணைத்துள்ள வெளியிணைப்புக்கள் நம்பகமான மூலங்கள் அல்ல. -- AntonTalk 08:16, 21 ஏப்ரல் 2014 (UTC)
த.வி.யில் இவ்வாறான கட்டுரைகள் ஏற்கனவே இருந்தாலும் வளர்ச்சியில் இவற்றில் பல நீக்கப்படலாம். மேலும், உங்களை அவர் தன்னைப் பற்றி கட்டுரை எழுதத் தூண்டுகிறார் என்ற கருத்தையும் உருவாக்குகிறது. இவற்றையும் பாருங்கள்: en:Wikipedia:Biographies of living persons, விக்கிப்பீடியா:வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு --AntonTalk 08:25, 21 ஏப்ரல் 2014 (UTC)
அன்டன் என்னுடைய skype id ijazijaz405 முடிந்தால் ஸ்கைப் 10 நிமிஷம் பேசுங்க உங்ககிட்ட முக்கியமான சில சந்தேகங்கள் கேக்கணும் --✍☪mohamed ijazz☪® (பேச்சு) 08:31, 21 ஏப்ரல் 2014 (UTC)
தற்போதைக்கு முடியாது. 30-45 நிமிடங்களின் பின் என்றால் ஆட்சேபனை இல்லையா? --AntonTalk 08:33, 21 ஏப்ரல் 2014 (UTC)
சரி அன்டன் அந்த கட்டுரை நிக்க முன் பேசுங்க --✍☪mohamed ijazz☪® (பேச்சு) 08:40, 21 ஏப்ரல் 2014 (UTC)
குறித்த கட்டுரை பற்றி நீங்கள் கொடுத்துள்ள நியாயப்படுத்தல் ஏற்றுக் கொள்ள முடியாது. அதனால் நான் பேச விரும்பவில்லை. விக்கிக்கிப்பீடியா பற்றி பேசுவதென்றால் குறிப்பிடுங்கள்.--AntonTalk 11:13, 21 ஏப்ரல் 2014 (UTC)
நான் விக்கிக்கிப்பீடியா பற்றி சந்தேகங்கள் கேக்க மட்டும் தான் அழைத்தேன் ஆட்சேபனை இல்லைனா --✍☪mohamed ijazz☪® (பேச்சு) 11:47, 21 ஏப்ரல் 2014 (UTC)
இஜாஸ், இன்று முடியாது போகலம். முகப்புத்தகத்தில் இணைத்துள்ளேன். நேரம் கிடைத்ததும் அங்கிருந்து செய்தி அனுப்புகிறேன். --AntonTalk 12:10, 21 ஏப்ரல் 2014 (UTC)

இலங்கைப் பகுப்புகள்தொகு

நீங்கள் இலங்கை வரலாறு, இலங்கைத் தமிழர் போன்ற தாய்ப்பகுப்புகளை சில கட்டுரைகளில் இருந்து நீக்கி வருகிறீர்கள். அது தவறல்ல என்றாலும், இத்தாய்ப்பகுப்புகளின் உப பகுப்புகள் ஏதாவதொன்றுக்குள் இக்கட்டுரைகள் இருக்கின்றனவா என்பதைக் கவனித்து நீக்குங்கள். இல்லையேல் உபபகுப்பு ஒன்றை உருவாக்குங்கள். உதாரணமாக சாரதாம்பாள் கட்டுரை இலங்கைத் தமிழர் பகுப்பின் எந்தவொரு உபபகுப்பினுள்ளும் இருப்பதாகத் தெரியவில்லை.--Kanags \உரையாடுக 08:06, 1 மே 2014 (UTC)

சாரதாம்பாள் போன்ற சில கட்டுரைகள் இலங்கைத் தமிழர் உப பகுப்பில் இடப்பட வேண்டும். "இனப்பிரச்சனையில் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்" என்ற பகுப்பினை உருவாக்கலாம் எனக் கருதுகிறேன். --AntonTalk 11:11, 1 மே 2014 (UTC)

கட்டுரைப் போட்டி மார்ச்தொகு

மார்ச் மாதக் கட்டுரைப் போட்டி முடிவுகள் இங்கும், பயனர்களின் பேச்சுப் பக்கங்களிலும் அறிவிக்கப் படாமல் உள்ளது. முதற் பக்கத்திலும் பெப்ரவரி மாத முடிவுகளே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மே மாதமும் ஆரம்பித்து விட்டதால் ஆவன செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:53, 1 மே 2014 (UTC)

நன்றி. கவனிக்கிறேன். --AntonTalk 11:55, 1 மே 2014 (UTC)

வழிமாற்றுகள்தொகு

அன்ரன், நீங்கள் "இலங்கைத் தமிழ்பேசும் மக்கள்" என்ற வழிமாற்றை நீக்கியிருக்கிறீர்கள். இதனால் பல நூற்றுக்கணக்கான கட்டுரைகளில் சிவப்பு இணைப்புகள் தோன்றியுள்ளன. ஒன்றில் வழிமாற்றை வைத்திருக்க வேண்டும், அல்லது சிவப்பு இணைப்புகளைத் திருத்த வேண்டும்.--Kanags \உரையாடுக 12:09, 1 மே 2014 (UTC)  Y ஆயிற்று--AntonTalk 12:24, 1 மே 2014 (UTC)

முதற்பக்கம் இற்றைப்படுத்தல்தொகு

இங்கு அடுத்த முதற்பக்கக் கட்டுரைகளை உருவாக்கியுள்ளேன். நான் நிர்வாகியில்லை ஆதலால் வார்ப்புரு:Mainpage v2 இல் இற்றைப் படுத்தி உதவவும். நற்கீரன் அவர்களிடமும் கேட்டுள்ளேன்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 07:27, 4 மே 2014 (UTC)

இணைப்புத் தொடர்பாகதொகு

ஏன் நீக்கம் - வணக்கம் பண்பலை 105.9தொகு

வணக்கம் பண்பலை 105.9 என்ற கட்டுரை ஏன் நீக்கப்பட்டது? மூன்று வரிகள் உள்ளன. முன்னேற்றுவதற்கானவே நீக்கள் வார்ப்புரு இடப்பட்டதாக ரவி கூறினார். இதனை நீங்கள் நீக்கி உள்ளீர்கள். தவறு. --Natkeeran (பேச்சு) 17:18, 9 மே 2014 (UTC)

இரண்டு மாதங்களாக முன்னேற்றப்படவில்லை. முறையான கட்டுரையாகவுமில்லை. யாருக்கும் அதனை முன்னேற்ற விருப்பமில்லை அல்லது முன்னேற்ற முடியாது எனும்போது நீக்கப்படத்தானே வேண்டும். நீங்கள் என் பேச்சுப்பகக்த்தில் கேள்வியெழுப்பும் நேரத்தில் அக்கட்டுரையில் முறையாக வார்ப்புரு இட்டு, உசாத்துணையுடன் மேம்படுத்தியிருக்கலாமே? யாராவது முன்னேற்ற வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்களா? ஒரு முறையாக துப்புரவாக்கம் நடந்து கொண்டிருக்கும்போது நீக்கப்பட்டதை மீட்டுவிடலாம் என்பதால் அவ்வாறு செயற்படுவது தவறு. துப்புரவாக்க பணியில் விரும்பமில்லாவிட்டால் நிருவாகிகள் என்ற நிலையையே த.வி.யில் இருந்து நீக்கிவிட்டு செயற்படுவது உசிதம். --AntonTalk 01:57, 10 மே 2014 (UTC)
நற்கீரன், வணக்கம் பண்பலை கட்டுரையில் உள்ள நீக்கல் வார்ப்புருவுக்கும் நான் மேற்கொண்டு வரும் குறுங்கட்டுரை விரிவாக்க முயற்சிக்கும் தொடர்பில்லை. விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்.--இரவி (பேச்சு) 18:35, 11 மே 2014 (UTC)

ஏன் வழிமாற்றம்தொகு

வணக்கம் நீங்கள் நான் எழுதிய தி கான்ஜுரிங் என்ற கட்டுரையை த கான்ஜுரிங் என்ற தலைப்புக்கு வழிமாற்றி உள்ளீர்கள். ஆனால் தி கான்ஜுரிங் என்ற திரைப்படத்தின் சுவரொட்டியில் தி கான்ஜுரிங் என்றே பெயரிலே உள்ளது ? இதில் எது சரியானது? --பயனர்:Thilakshan பேச்சு 19:32, 9 மே 2014 (UTC)

அன்ரன், தமிழகத்தில் the என ஆரம்பிக்கும் சொற்கள் அனைத்தையும் தி எனக் குறிப்பிடும் பொதுவான வழக்கமே உள்ளது என நினைக்கிறேன். அதனையே இங்கும் நாம் பின்பற்றலாம்.--Kanags \உரையாடுக 00:36, 10 மே 2014 (UTC)
ஓ, அப்படியா? தமிழகத்தைச் சேர்ந்தோரிடம் கேட்டுப்பார்க்கலாம். திலக்சன், The Conjuring என்பதில் உள்ள The என்றே உச்சரிக்கப்படும் "தி" என்றல்ல. சுவரொட்டியில் உள்ளது என்பதனால் அது சரியானது என்று பொருளல்ல. தமிழகத்தில் the என ஆரம்பிக்கும் சொற்கள் அனைத்தையும் தி எனக் குறிப்பிடும் பொதுவான வழக்கமாக இருக்கலாம் என்பதால் அதை உறுதி செய்வோம். நீங்கள் தமிழக வழக்கில்படியா ஒலிபெயர்ப்புச் செய்கிறீர்கள்? --AntonTalk 01:36, 10 மே 2014 (UTC)
நான் “தி” பயன்படுத்துகிறேன். ஆனால் “த” பயன்படுத்துவோரும் உளர். பெருவழக்கு என்னவென்று தெரியவில்லை. --சோடாபாட்டில்உரையாடுக 01:57, 10 மே 2014 (UTC)
உச்சரிப்பில் வேறுபடுகிறார்கள். ஆனால் எழுதும்போது பெரும்பாலும் “தி” என்றே தமிழகத்தில் பயன்படுத்துகிறார்கள்! தி இந்து என்று தனது தமிழ் பதிப்பிற்கு The Hindu நாளிதழ் பெயர் வைத்திருப்பதனை ஒரு காட்டாகக் கருதலாம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:03, 10 மே 2014 (UTC)
நன்றி பாலா, செல்வசிவகுருநாதன், “தி” தமிழக வழக்கு என்பதால் அதைப் பயன்படுத்தலாம். திலக்சன், கட்டுரையின் உள்ளே தேவைக்கேற்ப “தி”, “த” தலைப்புகளை இணைத்துவிடுங்கள். இலங்கை வழக்கில் “தி”, “த” முக்கியத்துவம் உள்ளது. The Hindu என்பதை த இந்து என்றே உச்சரித்துப் பழகிவிட்டோம். --AntonTalk 02:22, 10 மே 2014 (UTC)
அன்ரன், இங்குள்ளபடி பொதுவானப் பயன்பாடு "தி" எனவும் ஆங்கில மெய்யெழுத்துக்கள் (consonant) முன்னால் "த" எனவும் உயிரெழுத்துக்கள் முன்னால் "தி" எனவும் உச்சரிக்கப்படுவதாகவும் தெரிகிறது.--மணியன் (பேச்சு) 03:35, 10 மே 2014 (UTC)
இந்த இணையப்பக்கம் ஒருவேளை உதவக்கூடும். நன்றி. --ஆர்.பாலா (பேச்சு) 17:42, 26 மே 2014 (UTC)

ஒரு வேண்டுகோள்தொகு

வணக்கம் AntanO! தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பல கட்டுரைகளில், உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை சேர்க்கப்படவில்லை. இவ்வாறு உள்ள கட்டுரைகளை தரக்கட்டுப்பாட்டின் காரணமாக தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து நீக்கப்படலாம். உங்களால் முடிந்தவரை இவற்றை சேர்க்க முயற்சிக்கவும். இதைப் பற்றிய தகவல்களைப் பெற சான்று சேர்க்கும் திட்டத்தை பார்க்கவும். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள்!

--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:27, 17 மே 2014 (UTC)

துடுப்பாட்டக்காரர்கள் பற்றிய குறிப்பிடத்தக்கமை வரையறைதொகு

வணக்கம் அன்டன். விக்கிப்பீடியா துப்புரவுப் பணிகளில் ஆர்வம் உடையவர் என்ற முறையில், துடுப்பாட்டக்காரர்களின் குறிப்பிடத்தக்கமை வரையறை தொடர்பாக உங்கள் கருத்து தேவைப்படுகிறது. பார்க்க: விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை வாக்கெடுப்பு. பின்னணி உரையாடலுக்கு, பகுப்பு பேச்சு:துடுப்பாட்டக்காரர்கள் பார்க்கவும். நன்றி.--இரவி (பேச்சு) 13:28, 17 மே 2014 (UTC)


ஆதாம்தொகு

தகவலுக்கு நன்றி. இனி கவனித்து கொள்கிறேன்.மேலும் அந்த கட்டுரையில் சிறிய திருத்தங்கள் செய்துள்ளேன். இப்லீஸ் மலக்கு அல்ல, ஜின் இனத்தை சார்ந்தவன். இஸ்லாமிய கொள்கைப்படி மலக்குகள் ஒளியால் படைக்கப்பட்டவர்கள் Wafiqsha (பேச்சு) 13:29, 18 மே 2014 (UTC)

Wafiqsha, ஆதம் எருசலம் என்ற இடத்திலும், ஹவ்வா இந்தியாவிலுள்ள ஓர் இடத்திலும் விடப்பட்டார்கள் என்றுள்ளதை சரி செய்ய இயலுமா? --AntonTalk 14:37, 18 மே 2014 (UTC)

இந்தியாவில் ஒரு பகுதி என்பது இலங்கை என்றும் கூறுகிறார்கள். ஆதாரங்களை தேடுகிறேன். Wafiqsha (பேச்சு) 11:04, 21 மே 2014 (UTC)

நிகழ்த்து கலைதொகு

வணக்கம் அண்டன். நிகழ்த்து கலை கட்டுரையில் மேற்கோள்கள் இணைத்தும் அவை உடைந்த இணைப்புகளாகத் தோற்றமளிக்கின்றன. சரி செய்து உதவுங்கள். நன்றி! -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:55, 28 மே 2014 (UTC)

 Y ஆயிற்று வணக்கம், நன்றான விரிவாக்கியுள்ளீர்கள். மு.ப.த்திற்கு உகந்தது. --AntonTalk 04:38, 29 மே 2014 (UTC)

நன்றி அண்டன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 09:22, 1 சூன் 2014 (UTC)

கட்டுரைப் போட்டி - ஏப்ரல்தொகு

விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முடிவுகள்/ஏப்ரல், 2014 முடிவுகள் அறிவிப்பதற்கு ஸ்ரீகீரன் 5 கட்டுரைகளையும் ஸ்ரீகர்சன் 3 கட்டுரைகளையும் மட்டும் கொண்டுள்ளனர். மற்றவை உரைப்பகுதியில் வார்ப்புரு, மேற்கோள் போன்றவை வெட்டி ஒட்டல் இருந்ததால் நீக்கப்பட்டவை எனத் தனிப்பகுதி உண்டாக்கி அதில் சேர்த்து விட்டேன். 8 கட்டுரைகளில் மட்டுமே முடிவுகள் உள்ளதால் அவை சரியானதாக இருந்தால் முடிவை அறிவித்து விடலாம். எனக்கு இப்போது தான் கொஞ்சம் நேரம் கிடைத்தது. நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:49, 2 சூன் 2014 (UTC)

படிமங்கள் நீக்கம்தொகு

அன்ரன், படிமங்களை நீக்கும் போது அவை ஏதேனும் பக்கங்களில் இணைக்கப்பட்டுள்ளனவா என்பதைப் பாருங்கள். இணைக்கப்பட்டால், அப்படிமத்துக்கு இணையான பொதுப் படிமம் ஒன்றை இணையுங்கள், அப்படி ஏதும் இல்லாவிடின், இணைப்பை நீக்குங்கள். இல்லாவிட்டால் வேறு ஒரு நாளில், அறுந்த கோப்பு உள்ள கட்டுரை என்ற பகுப்பில் இருந்து இவ்விணைப்புகள் நீக்கப்படும் ஆபத்து உள்ளன. இந்த மாற்றத்தைக் கவனியுங்கள்--Kanags \உரையாடுக 10:00, 13 சூன் 2014 (UTC)

நன்றி. பின்பு அறுந்த கோப்புக்களை சரி செய்யலாம் என நினைத்தேன். ஆயினும், இனி உடனுக்குடன் செய்துவிடுகிறேன். --AntonTalk 11:20, 13 சூன் 2014 (UTC)
ஆனாலும் ஆறப் போட்டால், பின்னர் படிமங்கள் பொதுவில் உள்ளனவா இல்லையா என்பது கண்டுபிடிக்க முடியாமல் போய்விடும். நேற்றும் அறுபட்ட கோப்புள்ள கட்டுரைகளில் இருந்து வேறு ஒருவர் அவற்றை நீக்கி விட்டார். பொதுவில் படங்கள் உள்ளனவா என்பதை ஆராய்ந்தாரோ தெரியாது. பொதுவில் படிமங்கள் உள்ள கட்டுரைகளுக்கு இங்குள்ள படிமத்தை நீக்கி விட்டு பொதுப் படிமத்தை உடனடியாகவே இடுவதே நல்லது. ஒரே பெயராக இருந்தால் தானாகவே கட்டுரைகளில் இணைந்து விடும்.--Kanags \உரையாடுக 11:49, 13 சூன் 2014 (UTC)

இணைப்புகள் தொகுதொகு

வணக்கம்:) அண்டன் எனது விக்கிப்பீடியாவிலிருந்து மற்றொன்று விக்கிப்பீடியாக்கு இணைப்புகள் தொகுக்க (Edit Links) முடியவில்லை ஏன்? Thilakshan \உரையாடுக. 12:45, 13 சூன் 2014 (UTC)

வணக்கம் திலக்சன், எந்தக்கட்டுரை என்று குறிப்பிட முடியுமா? --AntonTalk 11:52, 14 சூன் 2014 (UTC)
உதாரணம் : 49-ஓ (திரைப்படம்), ஜஸ்டின் கஸ்டன்(Justin Gaston) போன்ற கட்டுரைகள். Thilakshan \உரையாடுக. 23:15, 13 சூன் 2014 (UTC).
திலக்சன், தீர்வுக்குப் பார்க்க: விக்கிப்பீடியா:ஒத்தாசைப்_பக்கம்#விக்கித்_தரவில்_இணைக்க_முடியவில்லை. உதவி தேவைப்படின் கேளுங்கள்.--Kanags \உரையாடுக 22:19, 14 சூன் 2014 (UTC)
திலக்சன், என்னால் இணைக்ககூடியதாகவிருந்தது. தற்போது சரியாக்கப்பட்டதோ தெரியாது. இங்கு குறிப்பிட்டதுபோல் தலைப்பை நகல் செய்து ஒட்டும்போது, இறுதி எழுத்தை நீக்கும்போது காட்டப்படும் பட்டியலில் இருந்து தலைப்பை தெரிவு செய்யுங்கள். --AntonTalk 01:57, 15 சூன் 2014 (UTC)

நன்றி :) 16:28, 16 சூன் 2014 (UTC)

நீக்கங்கள்தொகு

வணக்கம் அன்ரன்! நீங்கள் செய்யும் 'நீக்கங்கள்' சில அவசியமற்றவை என்றே தோன்றுகின்றது. எடுத்துக் காட்டுகள் கீழே:
1.பூச்சி: இந்தக் கட்டுரையில் பூச்சி வகைகள் என்று ஒரு துணைத்தலைப்பில் சில பூச்சியினங்கள் இணைக்கப்பட்டிருந்தது. (அதனை இணைத்தது நான் அல்ல என்பதையும் இங்கே குறிப்பிடுகின்றேன்). ஆனால் அது அங்கே இருப்பதில் எந்தப் பிழையும் இல்லை. நீங்கள் அதனை முழுமையற்ற பட்டியல் எனக்குறிப்பிட்டு பேச்சுப் பக்கத்திற்கு நகர்த்தியிருந்தீர்கள். புதிதாக ஒரு இனத்தை அறிந்தவர்கள் அங்கே அதனை இணைத்து கட்டுரையை விரிவாக்கலாம். எனவே அது கட்டுரைப் பக்கத்திலேயே இருப்பது நல்லதுதான். ஏனென்றால் கட்டுரையைப் பார்க்கும் எல்லோரும் பேச்சுப் பக்கத்திற்குப் போய்ப் பார்க்க மாட்டார்கள். இருந்தாலும், வீணான முரண்பாடுகளைத் தவிர்ப்பதற்காக, நான் அதனை பேச்சுப் பக்கத்திலேயே இருக்க விட்டுவிட்டு, கீழ்வருமாறு கட்டுரையில் ஒரு வரியைச் சேர்த்திருந்தேன்.

பூச்சிகளின் முழுமையற்ற பட்டியல் பேச்சுப் பக்கத்தில் உள்ளது.

இந்த சொற்றொடர் அங்கே இருப்பதில் என்ன பிரச்சனை என்று எனக்குப் புரியவில்லை. மீண்டும் அதனை 'பூரணமற்றது' என்ற குறிப்புடன் அங்கிருந்து நீக்கியிருக்கின்றீர்கள். முழுமையற்றது என்றுதானே ஏற்கனவே அங்கே குறிப்பிட்டுள்ளோமே. பின்னர் எதற்காக அது நீக்கப்பட வேண்டும் என்பது புரியவில்லை. மேலும் பூச்சிகளின் முழுமையான பட்டியலை எவரும் உருவாக்க முடியாது. நாம் அறிந்த பூச்சிகளின் பெயர்ப் பட்டியல் கட்டுரையில் இருப்பதிலும் எந்தத் தவறும் இல்லை. பின்னர் எதற்காக அதனை அங்கிருந்து நீக்க வேண்டும். கட்டுரையிலேயே இருந்தால், அது விரிவுபடுத்தப்படுவதற்கான வாய்ப்பும் உண்டு. நான் கட்டுரையில் மீண்டும் மாற்றம் செய்யப் போகின்றேன். தயவு செய்து நீக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கின்றேன். மேலும் ஆரம்பத்தில் நீண்ட பட்டியலாக இருந்ததை, பயனர்:தகவலுழவன் சரியாக ஒழுங்குபடுத்தியுமிருக்கின்றார்.
2.விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/பரிந்துரைகள்:இங்கிருக்கும் 'பயனர் பரிந்துரைகள்' துணைத்தலைப்பின் கீழ் இருந்தும் ஒரு பகுதி சொற்றொடர்களை அகற்றி இருக்கின்றீர்கள். 'நிறைவு' என்ற குறிப்புடன் சில வரிகள் நீக்கப்பட்டுள்ளது. அது என்ன என்று புரியவில்லை. அந்தச் சொற்றொடர்களை வேறு ஏதாவது பக்கத்திற்கு இடம்மாற்றியுள்ளீர்களா? அல்லது எவ்வகையில் அங்குள்ள பரிந்துரையோ, அல்லது உரையாடலோ நிறைவுக்கு வந்துள்ளது? பின்னர் 'பொருத்தமற்றது' என்ற குறிப்புடன் சில வரிகள் நீக்கப்பட்டுள்ளன. அதன் அர்த்தம் என்ன என்று அறிய விரும்புகின்றேன். பயனர் ஒருவரால் பரிந்துரைக்கப்பட்டு, உரையாடப்பட்டதை இந்தக் குறிப்புடன் நீக்குவது பொருத்தம்தானா? அந்தப் பரிந்துரைகளையோ, அல்லது உரையாடல்களையோ வேறு பக்கத்திற்கு நகர்த்தியிருந்தால் அறியத் தாருங்கள்.
நன்றி.--கலை (பேச்சு) 07:41, 17 சூன் 2014 (UTC)

"வணக்கம், நான் செய்யும் 'நீக்கங்கள்' சில அவசியமற்றவை என்பதற்கு இரு எடுத்துக்காட்டுகளே தந்துள்ளீர்கள். இதனை முழுமையாகக் குறிப்பிட்டால், திருத்திக் கொள்ளலாம். அல்லது "குற்றச்சாட்டே" இங்கு மிஞ்சியிருக்கும். ஏனைய அவசியமற்ற 'நீக்கங்கள்' எவை?

  1. 1.4 முதல் 1.8 மில்லியன் பூச்சியனங்கள் இருக்க 45 முழுமையற்றதுதானே? ஆ.வி.யில் கூட புச்சிக்கு பட்டியல் உள்ளதோ அறியேன்? அது பேச்சுப்பக்கத்தில் இருப்பதுதான் பொருத்தமானது. அதனை பேச்சுப்பக்கத்தில் இருப்பதாக குறிப்பிடுவது பொருத்தமற்றது. வேண்மாயின் இதனையும் பார்க்க என வரிசைப்படுத்தலாம். மேலும் இக்கட்டுரை மு.ப.தில் உள்ளது. அதிற் பல சிவப்பு இணைப்புக்களுடன் உள்ளன. இது மு.ப.ற்கு ஏற்புடையதல்ல. தற்போது "நாமறிந்த பூச்சிகள் சில" என்ற தலைப்பில் உள்ளது. இந்த "நாமறிந்த" என்பது யாவர்? மழுப்பலான சொற்கள் விக்கிக்கு ஏற்றதல்ல என்பதை அறிவீர்கள்.
  2. தனித்தமிழ் இயக்கம், பூச்சி ஆகிய கட்டுரைகள் மு.ப.ததில் இடம்பெற்றதால் அவற்றை நீக்கினேன். இதுதானே நடைமுறை. இவ்வாறுதானே இதுவரை பலரும் செய்யதுள்ளனர். வேறு என்ன செய்வது? "அகத்திய நூற்பட்டியல்" பட்டியலாக இருப்பதால் மு.ப. தகுதியில்லை என்பதால் நீக்கினேன். "மேம்பாடு தேவைப்படும் பயனர் பரிந்துரைகள் 2014" என்பதில் இட இது கட்டுரையும் அல்ல. இவ்வாறு பொருத்தமற்றதை நீக்கும்போது என்ன செய்ய வேண்டும் என்ற நடைமுறை இல்லை. எனவே இது தொடர்பில் நடைமுறை உருவாக்கினால் என்னைப் போன்ற துப்புரவு செயற்பாட்டில் இருப்பவர்களுக்கு உதவும்.

--AntonTalk 08:06, 19 சூன் 2014 (UTC)

வணக்கம் அன்ரன்!
//இதனை முழுமையாகக் குறிப்பிட்டால், திருத்திக் கொள்ளலாம். அல்லது "குற்றச்சாட்டே" இங்கு மிஞ்சியிருக்கும். ஏனைய அவசியமற்ற 'நீக்கங்கள்' எவை? //
அங்கங்கே சிலசமயம் நீக்கங்களைப் பார்க்கும்போது இவ்வாறு எனக்குத் தோன்றியதுண்டு. ஆனால் அவற்றைக் குறிப்பெடுத்து வைத்துக் கொள்ளவில்லை. அப்போதைக்குத் தோன்றிய இரண்டை மட்டும் குறிப்பிட்டேன். குற்றம் கண்டு பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதனைச் சொல்லவில்லை. அவ்வாறு உங்களுக்குத் தோன்றியிருந்தால் பொறுத்துக் கொள்ளுங்கள். ஏன் இவ்வாறு நடக்கின்றது என்ற புரியாமையாலேயே கேட்டேன். நீங்கள் உங்கள் பணியைத் தொடரலாம்.
//1.4 முதல் 1.8 மில்லியன் பூச்சியனங்கள் இருக்க 45 முழுமையற்றதுதானே?//
அதனால்தான் நானும் சொன்னேன். முழுமையான பட்டியல் ஒன்றைத் தர முடியாது என்று நன்றாகத் தெரிந்தும், 'இது முழுமையற்ற பட்டியல்' என்பதனால் நீக்குகின்றோம் என்றால், முழுமையான பட்டியலைத் தர முடிந்தும், அது இல்லாமையால் நீக்குகின்றோம் என்று அர்த்தப்படலாம். அதேவேளை முழுமையற்ற பட்டியல் இருப்பதில் தவறெதுவும் இல்லை என்றே எனக்குத் தோன்றுகின்றது. கட்டுரைகளை ஆக்கும்போது எப்போதுமே முழுமையான கட்டுரைகளை ஆக்குவதில்லை என்பதனாலும், மேலும் விரிவாக்கம் செய்யப்படலாம் என்பதனாலும், பட்டியலை, பூச்சி கட்டுரைக்கு உள்ளேயோ, அல்லது Kanags கூறியதுபோல, ஒரு தனிப் பக்கமாக உருவாக்கிவிட்டு, அதற்கு பூச்சி கட்டுரைக்குள் இணைப்புக் கொடுப்பதுபோலவோ ஆக்கலாம் என்று நினைக்கின்றேன். இது எனது கருத்து மட்டுமே.
//அது பேச்சுப்பக்கத்தில் இருப்பதுதான் பொருத்தமானது. அதனை பேச்சுப்பக்கத்தில் இருப்பதாக குறிப்பிடுவது பொருத்தமற்றது.//
இது எனக்குப் புரியவில்லை. இருந்தாலும் இது தொடர்பில் மேலும் உரையாடலை வளர்க்க விருப்பமில்லை. எனவே நீங்கள் உங்கள் விருப்பப்படி செய்யலாம்.
//"நாமறிந்த" என்பது யாவர்? மழுப்பலான சொற்கள் விக்கிக்கு ஏற்றதல்ல என்பதை அறிவீர்கள்.//
"நாமறிந்த" என்பது மழுப்பலான சொல் என்பதை இதுவரை அறிந்திருக்கவில்லை. வேறு எப்படி அதனைச் சொன்னால் சரியாகும் என்பதைப் புரியாமையாலும், அந்தச் சொல் பொருத்தமற்றது என்றுபட்டால், அதனை வேறு யாரும் சரியாக்குவார்கள்தானே என்று எண்ணியதாலும் அதனை அப்படியே விட்டேன். ஆனால், அந்தப் பட்டியல் ஏதோ ஒருவகையில் கட்டுரையைப் பார்க்க வருபவர்களுக்கு உதவுவதுடன், குறிப்பிட்ட பட்டியலும் விரிவாக்கம் செய்யப்படக்கூடும் என்றே எண்ணுகின்றேன்.
//ஆ.வி.யில் கூட புச்சிக்கு பட்டியல் உள்ளதோ அறியேன்?//.
ஆ.வி. யில் இருந்தால்தான் த.வி. யிலும் இருக்க வேண்டும் என்று நான் நினைப்பதில்லை என்பதனால், இந்தப் பட்டியல் ஆ.வி. யில் உள்ளதா என்பதை நான் தேடவில்லை.
நீங்கள் தற்போது அங்கே அந்தப் பட்டியல் இருப்பதே சரியல்ல என்று வாதிட்டால், உங்கள் விருப்பப்படி செய்யுங்கள். ஏனெனில், இதற்குமேல் இந்த விடயத்தில் விவாதத்தை வளர்க்க விரும்பவில்லை.
//தனித்தமிழ் இயக்கம், பூச்சி ஆகிய கட்டுரைகள் மு.ப.ததில் இடம்பெற்றதால் அவற்றை நீக்கினேன். இதுதானே நடைமுறை. இவ்வாறுதானே இதுவரை பலரும் செய்யதுள்ளனர். வேறு என்ன செய்வது?//
இதனை நான் சரிவரக் கவனிக்கவில்லை. அதாவது கட்டுரைகள் முதற்பக்கத்தில் போடப்பட்டதைக் கவனிக்கவில்லை. தனித்தமிழ் இயக்கம் கட்டுரை எப்போது முதற்பக்கத்தில் போடப்பட்டது எனவும் தெரியவில்லை. விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள் பக்கத்தில் தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை. கட்டுரையின் உரையாடல் பக்கத்திலும், முதற்பக்கக் கட்டுரை வார்ப்புரு இல்லை. அதனால் கண்டு பிடிக்க கடினமாக உள்ளது. (தேடிப்பார்த்தேன் கிடைக்காதபடியினால் கேட்கின்றேன். குற்றம்கண்டு பிடிக்கவல்ல).
மேலும் முதற்பக்கக் கட்டுரைகள் தொடர்பில் நான் எதுவும் செய்யாமையால் எனக்கு நடைமுறை தெரிந்திருக்கவில்லை. விக்கியில் எழுதப்படும் உரையாடல்கள் அனைத்துமே ஏதோ ஒருவகையில், எங்காவது (தொகுப்புக்கள்) சேமிக்கப்படும் என்று எண்ணினேன். அப்படியல்ல என்று இப்போது புரிகின்றது. சரியாகத் தெரியாமல் இது தொடர்பில் கூறியதற்கு மன்னித்துக் கொள்ளுங்கள்.

--கலை (பேச்சு) 10:20, 19 சூன் 2014 (UTC)

தனித்தமிழ் இயக்கம் கட்டுரையை தற்போது கண்டேன். நேரக்குறைபாட்டினால், விக்கியை சரியாகப் பின் தொடர முடியாமையும், சரியானபடி இற்றைப்படுத்தப்படாமல் இருந்ததுமே என்னால் கண்டு கொள்ள முடியாமல் போனமைக்குக் காரணம். --கலை (பேச்சு) 13:49, 19 சூன் 2014 (UTC)

வணக்கம், மன்னிப்புக் கேட்பதெல்லாம் பெரிய வார்த்தை. பிழை என்றால் சுட்டிக்காட்டுவதில் தவறில்லை. நானும் திருத்திக் கொள்ளவே விரும்புகிறேன். விக்கி கொள்கைக்கேற்பவே செயற்படுகிறேன். அண்மைக்காலமாக எனது செயல்களுக்கு பிழை கட்டுபிடிக்கும் நோக்கில் சிலர் செயற்பட்டதால், உங்கள் கூற்றும் அவற்றில் ஒன்றாகவே எனக்குப்பட்டது. எனது பதில் கடுமையாக இருந்திருந்தால் வருந்துகிறேன். --AntonTalk 13:29, 22 சூன் 2014 (UTC)

பதக்க வடிவமைப்பு உதவி தேவைதொகு

அன்டன், 2013 தொடர் கட்டுரைப் போட்டியில் வாகை சூடியவர்களுக்கு அளிப்பதற்காக ஒரு சிறப்பு பதக்கம் (web badge போல) இருந்தால் நன்றாக இருக்கும். வடிவமைத்து உதவ முடியுமா? தாரிக்கிடமும் கேட்டுப் பார்க்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 20:14, 25 சூன் 2014 (UTC)

வேலைப்பளுவாக இருப்பதால் 5 நாட்களின் பின் கவனிக்கிறேன். தாரிக் முடித்தால் அதைப் பயன்படுத்தலாம். --AntonTalk 13:41, 29 சூன் 2014 (UTC)

**தொகு

வணக்கம் திரு.ஆண்டனோ அவர்களே, நாங்கள் இந்த விக்கிபிடியா கலைக்களஞ்சியத்துக்கு புதியவர்கள்.அதனால் சில தவறுகள் உருவாகின. அது மட்டும் இன்றி நாங்கள் கொடுத்த தகவல்கள் முற்றிலும் உண்மை. அதற்கான ஆதாரங்களும் தரப்பட்டன. அவை போதுமானவை என்று என்னினோம். இப்போது புரிந்துகொன்டோம் இன்னும் நிறைய ஆதாரங்கள் தரவேண்டும் என்பதை.எங்களுக்கு கிடைத்த ஆதாரங்களையே பிற பிளாக்குகளில் பத்ந்துள்ளோம். இனி இதுபோன்று நிகழாதவாறு பார்த்துக்கொள்கிறோம். தாங்கள் தயவுகூர்ந்து தடையை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அது மட்டும் இன்றி நீங்களும் சற்று தெளிவான கருத்துக்களை வழங்கினால் மிக உதவியாக இருக்கும்.

வணக்கம், நீங்கள் குறிப்பிடுவதை சற்று தெளிவாக விளக்குவீர்களா? உங்கள் பேச்சுப் பக்கத்தில் தெரிவித்தால் இன்னும் உதவியாக இருக்கும். --AntonTalk 03:50, 2 சூலை 2014 (UTC)

பதக்கம்தொகு

  தீக்குறும்பு களைவர் பதக்கம்
இதற்கு முன் இப்பதக்கத்தை யாரும் பெற்றிருக்கிறார்களா தெரியவில்லை :) பல இடங்களில் நுணுக்கமாக கவனித்து தீக்குறும்புகளைக் களைவதனைக் கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். இரவி (பேச்சு) 04:53, 5 சூலை 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

வாழ்த்துகள் அன்றன். :) @ரவி: அண்ணே, இந்த பதக்கத்தை ஏற்கனவே நான் வாங்கியிருக்கேனே. அஸ்கு புஸ்கு. :P :D -தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:50, 5 சூலை 2014 (UTC)
வாழ்த்துக்கள்....... அது சரி :)--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 08:49, 5 சூலை 2014 (UTC)
  விருப்பம் இப்பதக்கத்திற்கு மிகவும் பொருத்தமானவர் அன்ரன் அவர்களே! வாழ்த்துக்கள் தொடர்க உங்கள் பணி!!--ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:08, 5 சூலை 2014 (UTC)
நன்றிகள் இரவி, தமிழ்க்குரிசில், ஆதவன், ஸ்ரீகர்சன். --AntonTalk 20:58, 5 சூலை 2014 (UTC)
  விருப்பம் --✍ மொஹம்மத் இஜாஸ் ☪ ® (பேச்சு) 22:44, 5 சூலை 2014 (UTC)


சல்லியக்கிரியைதொகு

வணக்கம் ஐயா, சல்லியக் கிரியை தொடர்பில் நான் எழுதிய கட்டுரையில் ஆரம்பத்தில் மேற்கோள் இடவில்லை என்றீர்கள். பின்னர் மேற்கோள் இட்டபின்பு அதை நீக்கிவிட்டு மேற்கோள் இடப்படாத கட்டுரை என்கின்றீர்கள். நான் இட்ட மேற்கோளில் தான் அந்த மெய்க்கீர்த்தி முழுமையாக இருக்கின்றதே.--ச.ஹோபிநாத் (பேச்சு) 17:30, 7 சூலை 2014 (UTC)

வணக்கம் ஹோபிநாத், சமூக வலைத்தளங்கள் போன்ற பிற வலைத்தளங்களை (எ.கா: blogger, wordpress) உள்ள இணைப்புக்கள் நம்பகத்தன்மை உள்ளவையாகக் கருத முடியாது. பார்க்க: விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல். தற்போது அக்கட்டுரையில் குறிப்பிடத்தக்க நம்பகத்தன்மை உள்ள சான்றினை இணைத்துள்ளேன். உசாத்துணைகள் நம்பகத்தன்மை உள்ளவையாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். நன்றி. --AntonTalk 01:45, 8 சூலை 2014 (UTC)

மின்னஞ்சல்தொகு

தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். கவனிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.--நந்தினிகந்தசாமி (பேச்சு) 17:37, 7 சூலை 2014 (UTC)

நன்றி. உங்களுக்குப் பதில் அனுப்பியுள்ளேன். --AntonTalk 01:46, 8 சூலை 2014 (UTC)

கேள்விதொகு

வணக்கம் அன்டன் அவர்களே :) தடை முடித்துவிட்டது. இனி நானும் எனது சகோதரரும் ஏதேனும் ஒரு விக்கிபீடியா கணக்கின் முலம்மாகவா விக்கிபீடியா எழுத வேண்டும். இல்லையெனில் அவர் அர்னவ்19 என்ற கணக்கின் மூலம் விக்கிபீடியா எழுதலாமா? Thilakshan (பேச்சு) 23:39, 11 ஜூலை 2014 (UTC)

புகைப்படங்கள்தொகு

வணக்கம் Anton :) தாங்கள் நான் எழுதிய பிரபலங்கள் கிரிக்கெட் கழகம், ரங் ரசியா உள்ளிட்ட சில கட்டுரையில் உள்ள புகைப்படங்களை நீக்கி உள்ளீர் அதன் காரணம் சொல்ல முடியுமா? (ஒரு வேலை நான் கோப்பு அனுமதி பெறவில்லையா?) Thilakshan (பேச்சு) 02:36, 12 சூலை 2014 (UTC)

கட்டுரைகளுக்கு எல்லாம் படம் சேர்க்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒரு சில படங்களை நியாயப் பயன்பாட்டின் கீழ் பயன்படுத்தலாம். அதுவும் முக்கியத்துவம் இருந்தால் மட்டும். நீங்கள் பதிவேற்றிய படிமங்கள் பதிப்புரிமை கொண்டிருந்தன. இனியும் அவ்வாறன படிமங்களைப் பதிவேற்ற வேண்டாம். --AntonTalk 02:48, 12 சூலை 2014 (UTC)

பதக்கம்தொகு

  சிறந்த வழிகாட்டுனர் பதக்கம்
அன்ரன் தாங்கள் எனக்கு பல உதவிகள் செய்துள்ளீர்கள். நான் பிழை செய்த போதெல்லாம் திருத்தி வழிநடத்தியதற்காக இந்தப் பதக்கத்தை அளிக்கிறேன்-- mohamed ijazz(பேச்சு) 07:19, 13 சூலை 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  விருப்பம் எட்டு நாட்களுக்குள் அடுத்த பதக்கம்! வாழ்த்துக்கள் அன்டன் அவர்களே. தற்போது தான் விக்கியன்பு சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளதுபோல் உள்ளது.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:57, 13 சூலை 2014 (UTC)

  விருப்பம் வாழ்த்துக்கள்--ச.ஹோபிநாத் (பேச்சு) 14:38, 14 சூலை 2014 (UTC)

மிக்க நன்றி இஜாஸ். திருத்தங்களை அதிகார மேலாண்மையாகக் கருதாமல் உதவியாகக் கருதிய உங்கள் ஆளுமையும் அதனை வெளிப்படுத்திய விதமும் வியக்க வைக்கின்றன. பதக்கம் இன்றி உங்கள் கருத்தைப் பகிர்ந்திருத்தாலே அதை பதக்கமாகவே கருதியிருப்பேன். நன்றி ஸ்ரீகர்சன், ஹோபிநாத். ஸ்ரீகர்சன், சூடுபிடிக்கத் தொடங்கியு விக்கியன்பு மலிவானதாகிவிடக் கூடாதென்ற கொள்கையும் ({{User wikilove}}) எனக்குண்டு. :) --AntonTalk 03:16, 15 சூலை 2014 (UTC)
  விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 03:19, 15 சூலை 2014 (UTC)

காற்பந்துப் பதக்கம்தொகு

  காற்பந்துப் பதக்கம்

வணக்கம் , AntanO/தொகுப்பு 4 2014 உலகக்கோப்பை காற்பந்து கட்டுரையை இற்றைப்படுத்திச் செம்மைப் படுத்தியமைக்காக இப்பதக்கத்தை உங்களுக்கு வழங்குகிறேன்.-- mohamed ijazz(பேச்சு) 09:31, 14 சூலை 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:14, 15 சூலை 2014 (UTC)

மிக்க நன்றி இஜாஸ். நன்றி செல்வசிவகுருநாதன். --AntonTalk 03:16, 15 சூலை 2014 (UTC)
  விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 03:23, 15 சூலை 2014 (UTC)
  விருப்பம்--நந்தினிகந்தசாமி (பேச்சு) 05:35, 15 சூலை 2014 (UTC)
Return to the user page of "AntanO/தொகுப்பு 4".