விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை வாக்கெடுப்பு

துடுப்பாட்டக்காரர்கள் (காலம்: மே 16 - மே 30)

தொகு

உரையாடல்

தொகு

முன்மொழிவு

தொகு

ஒரு துடுப்பாட்டக்காரர் குறிப்பிடத்தக்கவராக கருதப்பட பன்னாட்டு தேர்வுத் துடுப்பாட்டம், ஒரு நாள் போட்டிகள், 20-20, முதல் தரம், A-level ஆகிய ஏதேனும் ஒரு பிரிவிலாவது விளையாடியிருக்க வேண்டும். இவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் (அனைத்துப் பிரிவுகளையும் சேர்த்து அன்று)

  • ஒரு மட்டையாளர் என்றால் குறைந்தது 1000 ஓட்டங்கள்
  • ஒரு பந்து வீச்சாளர் என்றால் குறைந்தது 50 விக்கெட்டுகள்
  • ஒரு கள வீரர் என்றால் குறைந்தது 50 பிடிகள் / stumpingகுகள்

பெற்றிருக்க வேண்டும்.

இதற்குக் குறைவான அளவில் விளையாடியிருந்தாலும் ஒன்றுக்கு மேற்பட்ட, நம்பகமான ஊடகங்களில் இருந்து அவரது விளையாட்டுத் திறனைப் பற்றிய குறிப்புகள் இருந்தால் (தரவுத் தளங்களில் இருந்து அன்று) அவர்களையும் கலைக்களஞ்சிய குறிப்பிடத்தக்கமை உள்ளவர் என்று கொள்ளலாம். எடுத்துக்காட்டுக்கு, புதிதாக வந்து புகழ் அடையத் துவங்கி உள்ள வீரர்கள் இதன் கீழ் வரலாம். அல்லது, திறமையிருந்தும் விளையாட்டு அரசியல் காரணாமகவும் திடீர் இறப்பு காரணமாகவும் ஆடாமல் நின்றுபோனவர்களைப் பற்றி எழுதவும் இது உதவும்.

ஆதரவு

தொகு
  1. 20-20, முதல் தரம், A-level ஆகியவற்றில் ஏதாவது ஒரு பிரிவில் 1000 ஓட்டங்கள் அல்லது 100 இலக்குகள் அல்லது 50 பிடிகள் என்ற வரையறையே கூட மிகப் பரந்ததே. ஒருவர் இந்த எண்ணிக்கைகளைக் கூட எட்டியிராவிடின் ஒரு மட்டையாளராக அல்லது பந்தாளராகக் கருதப்படவே முடியாது. இனிங்சுக்கு 25 ஓட்டங்கள் எடுக்கும் மிகச்சாதாரணதர மட்டையாளர் ஒருவர் கூட வெறும் 40 இனிங்சுகளில் (20-30 போட்டிகளில்) 1000 ஓட்டங்களை எடுத்துவிடுவார். ஆட்டத்துக்கு 3 இலக்குகள் வீழ்த்தும் ஒருவர் 17 போட்டிகளில் 50 இலக்குகளை வீழ்த்திவிடுவார். அவ்வகையில் இந்தக் குறிப்பிடத்தக்கமை வரையறை மிகவும் பரந்த அளவில் உள்ளதால் நிச்சயம் ஏற்றுக் கொள்ளக்கூடியது. நன்றி. கோபி (பேச்சு) 01:29, 17 மே 2014 (UTC)[பதிலளி]
  2. இத்தகு தரக் கட்டுபாட்டுக் கொள்கைகளை வரவேற்கிறேன்--நந்தகுமார் (பேச்சு) 06:40, 18 மே 2014 (UTC)[பதிலளி]
  3. தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:28, 19 மே 2014 (UTC)[பதிலளி]
  4. முதலில் இக்கட்டுரைகள் எழுதப்பட்ட போது, இவை ஆங்கில விக்கிப்பீடியாவிலும் இடம்பெற்றிருந்ததால் குறிப்பிடத்தக்கமை குறித்து சிந்திக்கவில்லை. ஆனால், பிறகு இவற்றின் உள்ளடக்கங்களைக் காண நேர்ந்த போது, ஒரு உள்ளூர் போட்டியில் மட்டும் விளையாடி ஒரு ஓட்டம் மட்டும் பெற்றவர்கள் எல்லாம் எப்படிக் கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத் தகுதியானவர்கள் என்று புரியவில்லை. இப்பகுப்பில் உள்ள பெரும்பான்மையான கட்டுரைகள் இத்தனை ஆண்டுகள் ஆகியும் ஆங்கில விக்கிப்பீடியா தவிர வேறு எந்த வளர்ந்த கலைக்களஞ்சியத்திலும் இடம்பெறவில்லை என்பதே இவற்றுக்குப் போதுமான குறிப்பிடத்தக்கமை இல்லை என்பதற்கான சான்று. ஆங்கில விக்கிப்பீடியாவில் இக்கட்டுரைகள் இருக்கின்றன என்பதை ஒரு தகவலாக பார்க்கலாமே ஒழிய அதன் அடிப்படையில் தமிழ் விக்கிப்பீடியாவின் குறிப்பிடத்தக்கமை வரையறையை இறுதி செய்ய முடியாது. இதே நிலைப்பாட்டை மற்ற பல விசயங்களிலும் எடுத்தால் நிச்சயம் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருக்காது. துடுப்பாட்டக்காரர்கள் தொடர்பான ஆங்கில விக்கிப்பீடியா குறிப்பிடத்தக்கமை கொள்கை அவர்களின் பொதுவான கொள்கைக்கு எந்த வகையிலும் ஒத்துப் போகாமல் இருக்கிறது. பார்க்க: https://en.wikipedia.org/wiki/Wikipedia:Notability_%28people%29 . துடுப்பாட்டத்துக்கு என்று ஒரு கலைக்களஞ்சியம் எழுதினால் கூட அதில் இவர்கள் இடம்பெறத் தகுதியானவர்களா என்பது ஐயமே. ஒரு தரவுத்தளத்தில் மட்டுமே இடம்பெறக்கூடியோரே பலர். அதிலும் இக்கட்டுரைகள், தரவுத்தளத்தில் உள்ள தரவுகளை மட்டும் சொற்களாக மாற்றி எழுதியுள்ளன. கூடுதல் தகவலோ குறிப்பிடத்தக்கமை சான்றுகளோ இல்லை. தெருமுனையில் விளையாடுபவர்களை எல்லாம் விக்கிப்பீடியாவில் எழுத முடியாது என்பதால், ஒரு தொழில்முறை ஆட்டக்காரரா என்று பார்ப்பதற்கு வேண்டுமானால் மேற்கண்ட போட்டிகளில் ஒன்றேனும் விளையாடி இருக்கிறாரா என்று பார்க்கலாம். ஆனால், ஒரு ஆட்டத்தில் விளையாடியதையே குறிப்பிடத்தக்கமையாக நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது. இப்படிப் பார்த்தால் தொழில்முறையாக படிப்பு முடித்த பொறியாளர்கள், மருத்துவர்கள், அறிவியலாளர்கள் என்று பலருக்கும் கட்டுரை எழுதலாம். ஒரு தீவிர துடுப்பாட்ட இரசிகர் இது போன்ற தகவலைத் தேடலாம். சேர்த்து வைக்கலாம். ஆனால், ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெற நிச்சயம் கூடுதல் குறிப்பிடத்தக்கமை வேண்டும். இன்னொன்று, குறிப்பிடத்தக்கமையை இவ்வாறு வாக்கெடுப்பு வைத்து முடிவு செய்வதே ஒரு தவறான முற்காட்டாகும். ஏனெனில், இது ஆம் / இல்லை என்று நிருவாகிகள் தேர்தல் போலவோ நீக்கல் வாக்கெடுப்பு போலவோ முடிவு செய்ய வேண்டிய ஒன்று இல்லை. கலந்துரையாடி இணக்க முடிவு நோக்கி நகர வேண்டிய ஒரு வரையறை. நியாயமாக, இங்கு எழும் உரையாடல்கள் பகுப்பு பேச்சு:துடுப்பாட்டக்காரர்கள் பக்கத்தில் தகுந்த நேரம் கொடுக்கப்பட்ட போதே எழுந்திருக்க வேண்டியவை. சரி, இப்படியாவது இது குறித்து ஒரு முடிவை எட்டுவோமே என்றே ஆதரவு வாக்கை இடுகிறேன். மற்ற பல குறிப்பிடத்தக்கமை உரையாடல்களில் பங்கெடுக்குமாறு அனைவரையும் வேண்டுகிறேன்.--இரவி (பேச்சு) 15:15, 20 மே 2014 (UTC)[பதிலளி]
  5. 1 ஓட்டம் எடுத்தவர்களுக்கெல்லாம் தனி கட்டுரை என்பது தவறான முன்னுதரணமாகிவிடும். வேண்டுமென்றால் குறிப்பிட்ட அணியில் விளையாடியவர்கள் என்று தனி கட்டுரை எழுதி அதில் 1 அல்லது 0 ஓட்டம் எடுத்தவர்களை சேர்க்கலாம், விளையாடாமல் 14 பேரில் உள்ளவர்களையும் அதில் சேர்க்கலாம். --குறும்பன் (பேச்சு) 01:28, 23 மே 2014 (UTC)[பதிலளி]
  6. முனைவர்கள், மருத்துவர்கள் என்று சமூகத்திற்குத் தேவையான பல அறிவாளிகள் இருக்க குறிப்பிடத்தக்கதற்ற கிரிக்கட் வீரர்கள், நடிகர்கள், எழுத்தாளர்கள், அறிவிப்பாளர்களுக்கு என்று கலைக்களஞ்சியத்தில் இடம் அளிக்கக்கூடாது. கலைக்களஞ்சியம் விபரத்திரட்டு அல்லவே. --AntonTalk 18:29, 25 மே 2014 (UTC)[பதிலளி]
  7. ஆங்கில விக்கியை நல்லனவற்றிற்கு மட்டுமே முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும். ஆங்கில விக்கியில் இருப்பதால் இங்கும் இருக்கலாம் என்பது ஏற்புடையதல்ல. இக்கட்டுரைகள் தொடர்பில் முன்னரே முடிவு எடுக்கப்பட்டிருக்க வேண்டும். உருவாக்கிய பயனரிடம் நன்முறையில் தெரிவித்திருந்தால் அவரும் இப்படியான உருவாக்குவதைக் குறைத்து/நிறுத்தி இருப்பார். ஆனால் இவ்வாறான கட்டுரைகள் விக்கிப்பீடியாவில் தொடர்ந்தும் இருப்பது நல்லதல்ல. இது எதிர்காலத்தில் வரும் பயனர்களுக்கு தவறான முன்னுதாரணத்தைக் காட்டுவதாக அமைந்துவிடும். ஆகையால் இக்கொள்கை விதிகளுக்கு ஆதரவளிக்கின்றேன்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 12:15, 26 மே 2014 (UTC)[பதிலளி]
  1. இக்குரிப்பிடத்தன்மை கொள்கையை ஏற்கிறேன். -- நி.மாதவன்  ( பேச்சு  ) 13:28, 26 மே 2014 (UTC)[பதிலளி]

எதிர்ப்பு

தொகு
  • இந்த முன்மொழிவு, ஆங்கில விக்கியிலும் பார்க்க இறுக்கமாக உள்ளது. ஆங்கில விக்கியின் மிகப் பெரிய பரந்த பயனர் பரப்புக் காரணமாக, பரந்து பட்ட சிறிய தலைப்புக்கள் கூட ஆங்கில விக்கியில் எழுதப்படும் வாய்ப்பு உள்ளது. ஆனால் தமிழ் விக்கியில் அவ்வாறு இல்லை. அதனால் மிக இறுக்கமான குறிப்பிடதக்க கொள்கை எமது வளர்ச்சியை, பல்வகைத்தன்மையைப் பெரிதும் பாதிக்கும். மேலும், ஆங்கில விக்கியில் இத் தலைப்பில் உள்ள ஆயிரக்கணக்கான நல்ல கட்டுரைகள் இங்கு மொழிபெயர்க்கப்படுவதை இந்தக் கொள்கை தடுக்கும். தமிழ் விக்கியில் ஆங்கில விக்கியை விட இளகிய குறிப்பிடத்தக்க கொள்கை இருக்க வேண்டும் என்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு principle. மேற் சுட்டப்பட்ட காரணங்கள், தற்போதைய வடிவத்தில் இக் கொள்கையை எதிர்க்கிறேன். --Natkeeran (பேச்சு) 14:49, 16 மே 2014 (UTC)[பதிலளி]
  • ஆங்கில விக்கியைக் காட்டிலும் இறுக்கமானக் குறிப்பிடத்தக்கமைக் கொள்கை என்பது தேவை இல்லாதது என்றே கருதுகிறேன். ஒரு முறை A-level ஆடியவர் என்பது ஒரு நல்ல வரையறை; போதுமானது. அதில் மேலும் 1000 ஓட்டங்கள் / 50 ஆட்டமிழப்புகள் என்று பார்க்கத் தேவையில்லை.--சோடாபாட்டில்உரையாடுக 06:57, 18 மே 2014 (UTC)[பதிலளி]
1000 ஓட்டங்கள் போன்றவை அதிகம் என்றால் சற்றுக் குறைவாக அணுகலாம். ஒரு பன்னாட்டுப் போட்டி நிச்சயம் போதுமானது. 10 உள்ளூர் போட்டிகளில் என்பது கூட ஏற்றுக் கொள்ளக்கூடியது. ஆனால் ஓர் உள்ளூர் போட்டி என்பது சரிதானா? பல ஆட்டக்காரர் சுகவீனமற்ற நிலையில் எண்ணிக்கைக்குக் சேர்த்துக் கொள்ளப்ப்ட்டோர் கூட ஓரிரு போட்டிகளில் ஆடியிருப்பர். நன்றி. கோபி (பேச்சு) 07:03, 18 மே 2014 (UTC)[பதிலளி]

கருத்து

தொகு

இக்குறிப்பிடத்தக்கமை வரையறை பற்றிய விரிவான உரையாடல் பகுப்பு பேச்சு:துடுப்பாட்டக்காரர்கள் பக்கத்தில் நடைபெற்றது. போதிய கால அவகாசம் தரப்பட்டது. மாற்றுக் கருத்துகளுக்கு முறையான விளக்கம் தரப்பட்டது. இருப்பினும், இந்த வாக்கெடுப்பு ஏன் தேவைப்படுகிறது என்று புரியவில்லை. இணக்க முடிவை எட்ட முடியா சூழ்நிலையிலேயே வாக்கெடுப்புக்குச் செல்வது நல்லது. எடுத்ததற்கு எல்லாம் வாக்கெடுப்பு என்பதும் உரையாடலில் பங்கு கொள்ளாமல் வாக்கினைச் செலுத்தி முடிவுகளை மாற்றுவதும் நலமான போக்காக தென்படவில்லை. ஆங்கில விக்கிப்பீடியாவின் குறிப்பிடத்தக்கமை வரையறையைக் காட்டிலும் இந்த வரையறை இறுக்கமாக இருப்பதாகச் சொல்கிறீர்களே? ஆங்கில விக்கிப்பீடியாவில் இருப்பதை எல்லாம் அப்படியே இங்கு ஏற்றுக் கொள்கிறோமா? குறிப்பிடத்தக்கமையை வாக்கெடுப்பு வைத்து முடிவு செய்யும் நடைமுறை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருக்கிறதா--இரவி (பேச்சு) 14:23, 16 மே 2014 (UTC)[பதிலளி]

  • முக்கிய கொள்கை மாற்றம் என்பதாலும், ஆயிரக்கணக்கான பக்கங்களை பாதிக்கும் என்பதாலும் பரந்த வாக்கெடுப்புக்குப் பின்பு சேர்ப்பது பொருந்தும்.
  • ஆங்கில விக்கியிலும் பார்க்க இளகிய குறிப்பிடத்தக்க கொள்கைகளை வரையறை செய்ய வேண்டும் என்று நீங்களே பல இடங்களில் ஒத்துக் கொண்டு இருக்கிறீர்கள். அப்படி இருந்தும், ஆங்கில விக்கியிலும் இறுக்கமான கொள்கையையே முன்மொழிந்துள்ளீர்கள். எனக்கு இத் துறை பரிச்சியம் இல்லை. ஆனால் உங்கள் நீக்கல் பரிந்துரைகளில் இருந்து அப்படி பார்க்க முடிகிறது. --Natkeeran (பேச்சு) 14:21, 16 மே 2014 (UTC)[பதிலளி]
//ஆங்கில விக்கியிலும் பார்க்க இளகிய குறிப்பிடத்தக்க கொள்கைகளை வரையறை செய்ய வேண்டும் என்று நீங்களே பல இடங்களில் ஒத்துக் கொண்டு இருக்கிறீர்கள். // ஆம், தமிழ்ச் சூழலில் உள்ள அறிவுத் துறைகளுக்கு அவ்வாறு கூறியுள்ளேன். பன்னாட்டு விளையாட்டான துடுப்பாட்டத்துக்கு அந்தச் சலுகை தேவையில்லை :) நானும் துடுப்பாட்ட இரசிகன் தான். இந்த வரையறை குறித்து தமிழ் விக்கிப்பீடியாவுக்கு வெளியே உள்ள கிரிக்கெட் ஆர்வலர்களிடமும் கருத்து கேட்டே முன்வைத்தேன். நன்றி.--இரவி (பேச்சு) 14:35, 16 மே 2014 (UTC)[பதிலளி]
அப்படியானால், ஆங்கில விக்கியிலும் பார்க்க தமிழ் விக்கியில் இறுக்கமான வரையறை முன்வைக்கப்படுகிறது. இதற்கு என்ன அவசியம்? உங்களின் வரையறைப் படி ஆங்கில விக்கியில் உள்ள விரிவான/குறு ஆயிரக்கணக்கான கட்டுரைகள் இங்கு மொழிபெயர்க்கப்பட இயாலாது. எ.கா en:Category:English cricketers of 1701 to 1786 --Natkeeran (பேச்சு) 14:37, 16 மே 2014 (UTC)[பதிலளி]
இதற்கு என்ன அவசியம் என்றால், வாழ்நாளில் ஒரு உள்ளூர் போட்டியில் ஒரு ஓட்டம் மட்டுமே பெற்ற ஆட்டக்காரர் ( பப்லு தத்தா , எம். சஞ்சீவ ) எல்லாம் எப்படி கலைக்களஞ்சிய குறிப்பிடத்தக்கமை பெறுகிறார் என்று எனக்குப் புரியவில்லை. தரவுத்தளத்துக்கும் கலைக்களஞ்சியத்துக்கும் உள்ள வேறுபாட்டை நீங்கள் எப்படி இத்துறையில் வரையறுக்கிறீர்கள்? தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள ஆயிரக்கணக்கான கட்டுரைகளைக் கூடத் தான் ஆங்கில விக்கிப்பீடியாவில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இரு விக்கி ஒப்பீட்டை விட்டு விட்டு, துறை சார்ந்து பேசினால் நலம்.--இரவி (பேச்சு) 14:50, 16 மே 2014 (UTC)[பதிலளி]
en:Category:English cricketers of 1701 to 1786 உள்ள பெரும்பாலானா கட்டுரைகள் தமிழ் விக்கியில் இடம்பெற தகுதி பெறுமா? பல வரலாற்று முக்கியத்துவம் துடுப்பாட்டாளர்கள் இந்த வரையறைக்குள் வர மாட்டார்கள், அல்லது அதற்கான சான்றுகள் உடனடியாகக் கிடைக்காது. ஆகவே, தகுந்த மேற்கோள்கள் உள்ள துடுப்பாட்டாக்காரர்கள் பற்றிய கட்டுரைகள் அனுமதிக்கப்பட வேண்டும். --Natkeeran (பேச்சு) 14:55, 16 மே 2014 (UTC)[பதிலளி]
//இதற்குக் குறைவான அளவில் விளையாடியிருந்தாலும் ஒன்றுக்கு மேற்பட்ட, நம்பகமான ஊடகங்களில் இருந்து அவரது விளையாட்டுத் திறனைப் பற்றிய குறிப்புகள் இருந்தால் (தரவுத் தளங்களில் இருந்து அன்று) அவர்களையும் கலைக்களஞ்சிய குறிப்பிடத்தக்கமை உள்ளவர் என்று கொள்ளலாம். // என்று தான் குறிப்பிடத்தக்கமை வரையறை கூறுகிறதே? தற்போது உள்ள கட்டுரைகளில் பெரும்பாலும் CricketArchive என்னும் தரவுத்தளம் தான் வெளியிணைப்பாகத் தரப்படுகிறது. இதன் மூலம் இவர்களின் இருப்பைத் தான் உறுதி செய்ய இயலுமே அன்றி அவர்களின் குறிப்பிடத்தக்கமையை உறுதி செய்ய முடியாது. தரவுத்தளங்களைக் கொண்டு குறிப்பிடத்தக்கமையை ஏற்றுக் கொள்வீர்கள் என்றால் அரசுகளின் மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவைக் கொண்டு ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு கட்டுரை எழுதலாம்.--இரவி (பேச்சு) 14:59, 16 மே 2014 (UTC)[பதிலளி]
அப்படியானால் நீங்கள் ஏன் Edward Gale கட்டுரை நீக்கக் கோரினீர்கள் ?? தற்போது துடுப்பாட்டக்காரர் கட்டுரைகளுக்கு மேற்கோள் தரப்பட்டு உள்ளது அல்லவா ? --Natkeeran (பேச்சு) 15:00, 16 மே 2014 (UTC)[பதிலளி]
எட்வார்ட் கேல் கட்டுரையில் மேற்கோள் இல்லை. வெளியிணைப்பு இருக்கிறது. அந்த வெளியிணைப்பு ஒரு தரவுத்தளத்துக்கு இட்டுச் செல்கிறது. தரவுத்தளத்தை மேற்கோளாக ஏற்க முடியாது என்று தானே மேலேயே விளக்கியுள்ளேனே?--இரவி (பேச்சு) 15:07, 16 மே 2014 (UTC)[பதிலளி]
தரவுத்தளம் மேற்கோளாக இருக்க முடியாதா. ஏன்? தரவுத்தளங்கள் நிச்சியமாக மேற்கோளாக இருக்க முடியும். --Natkeeran (பேச்சு) 15:10, 16 மே 2014 (UTC)[பதிலளி]
தரவுத்தளக் குறிப்பு ஒன்றின் இருப்புக்கான ஆதாரம். குறிப்பிடத்தக்கமைக்கான ஆதாரம் அன்று. எடுத்துக்காட்டுக்கு, இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் பற்றிய தரவுத்தளங்கள் கிடைக்கும். ஆனால், அவை அனைத்தும் கலைக்களஞ்சிய குறிப்பிடத்தக்கமை பெற்றவை என்று கூற முடியாது. இந்த கிரிக்கெட் வீரர் சிறப்பாக ஆடினார் என்றோ இவரின் ஆட்டப் பாணி பற்றியோ கட்டுரைகள் இருக்கின்றனவா? அவ்வாறான கட்டுரைகளை குறிப்பிடத்தக்கமை ஆதாரங்களில் ஒன்றாக ஆய முடியும் --இரவி (பேச்சு) 15:13, 16 மே 2014 (UTC)[பதிலளி]
எவ்வாறு ஆங்கில விக்கியில், இவ்வாறான ஆயிரக்கணக்கான கட்டுரைகள் இருக்க அனுமதிக்கப்படுகிறது? அவர்கள் குறிப்பிடத்தக்கமையை enforce செய்யவில்லை என்று நீங்கள் கூறினால், சிறிய விக்கியான தமிழ் விக்கியில் கடுமையான கொள்கையும் enforcement தேவையா ? மேலும் தகவல் தேவைப்படின், மேற்கோள் தேவை, விரிவாக்கவும் என்று வார்ப்புரு சேர்க்கவும். நீக்க வேண்டாம். மேலும், ஆங்கில விக்கியில் enforce செய்யப்படாத ஒரு அரை வேக்காடு கொள்கையை தமிழ் விக்கியில் உடனடியாக அமுல்படுத்தி ஆயிரக்கணக்கான கட்டுரைகளை நீக்குதல்/இணைத்தல் அவசியமா ?? --Natkeeran (பேச்சு) 15:16, 16 மே 2014 (UTC)[பதிலளி]


Wikipedia is not an indiscriminate collection of information சொல்வது merely being true, or even verifiable, does not automatically make something suitable for inclusion in the encyclopedia. To provide encyclopedic value, data should be put in context with explanations referenced to independent sources.

இங்கு தரவு உள்ளது. ஆனால், குறிப்பிடத்தக்கமையைச் சுட்டும் context, multiple sources இல்லை. ஆங்கில விக்கியில் சில இடங்களில் கொள்கைகளைத் தீவிரமாக நடைமுறைப்படுத்துகிறார்கள். சில இடங்களில் கவனிப்பதில்லை. ஆங்கில விக்கியில் ஒன்று இருப்பதாலேயே அது சரி என்று இல்லை. இப்போதும் குறிப்பிடத்தக்கமையை நிறுவும் சான்றுகளைச் சேருங்கள் என்று தானே கோருகிறோம். எடுத்த எடுப்பில் நீக்க கோரவில்லையே? குறிப்பிடத்தக்கமை வார்ப்புரு அப்படியே இருக்கட்டும், காலத்துக்கும் நீக்கத் தேவையில்லை என்றால், எத்துறையிலும் குறிப்பிடத்தக்கமை பற்றி உரையாடுவதற்கே பொருள் இல்லாமல் போய்விடும். விக்கிப்பீடியா ஒரு கலைக்களஞ்சியம் என்று சொல்வதை விடுத்து directory என்று பெயர் மாற்றி விடுங்கள். நானும் பங்களிப்பை நிறுத்திக் கொள்கிறேன் --இரவி (பேச்சு) 15:20, 16 மே 2014 (UTC)[பதிலளி]

நற்கீரன், அரை வேக்காடு என்ற சொல்லாடலைத் திரும்ப பெறுங்கள். உடனடியாக ஆயிரக்கணக்கான கட்டுரைகளை நீக்கப் போவது இல்லை என்று வாக்கெடுப்பு பக்கத்தில் ஏற்கனவே தெளிவுபடுத்தியாயிற்று. குறிப்பிடத்தக்கமையை நிறுவுவதற்கான தக்க காலம் தரப்படும். விக்கிப்பீடியர்களின் மற்ற வேலைப்பளுவைக் கருத்தில் கொள்ளப்படும். வெறுமனே வார்ப்புரு போடுங்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி? கட்டுரைகளை மேம்படுத்துவதற்கான உழைப்பையும் தாருங்கள். குறிப்பிடத்தக்கமையை ஆய்ந்து வார்ப்புரு சேர்ப்பவர்களும் பல நூற்றுக் கணக்கான மணி நேரங்களைச் செலவிட்டே இத்துப்புரவைச் செய்ய முடியும். ஆயிரக்கணக்கான கட்டுரைகளை ஒரே பொத்தானில் அழிப்பதற்கான video game ஏதும் என்னிடம் இல்லை. நன்றி.--இரவி (பேச்சு) 15:23, 16 மே 2014 (UTC)[பதிலளி]


"உடனடியாக" இல்லை. நீங்கள் வார்ப்புரு போட. வேறு பயனர்கள் நீக்குவார்கள். இது பல கட்டுரைகளுக்கு அண்மையில் நடந்தது. தரவுத்தளங்களை மேற்கோளாக ஏற்பது இல்லை என்று உயர் கட்டுப்பாடு தேவை இல்லை. ஆங்கில விக்கியில் இக் கட்டுரை Edward Gale இருக்க அனுமதிக்கப்படுமானால், தமிழ் விக்கியில் அது ஏன் அனுமதிக்கப்படாது, குறிப்பாக எமது இளகிய அணுகுமுறைக்கு ஏற்ப ? எட்வார்ட் கேல் என்ற கட்டுரை நிச்சியமாக, ஒரு பயனரால் தொகுக்கப்பட்டுள்ளது. யாருக்காவது பயன் தரக் கூடியது. இக் கட்டுரையால் ஆபத்து எதுவும் இல்லை. --Natkeeran (பேச்சு) 15:35, 16 மே 2014 (UTC)[பதிலளி]
நற்கீரன், கரகாட்டக்காரன் திரைப்பட வாழைப்பழ நகைச்சுவை போல் உரையாடுவதில் ஒரு பொருளும் இல்லை. மற்ற பங்களிப்பாளர்களின் கருத்துக்கு ஏற்ப தொடர்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 15:44, 16 மே 2014 (UTC)[பதிலளி]
துடுப்பாட்டக்காரர்கள் பற்றிய கட்டுரைகளில் நிறையத் தகவல் பிழைகள் உள்ளன போலத் தெரிகிறது. நீங்கள் உதாரணத்திற்கு எடுத்த எட்வார்ட் கேல் கட்டுரையையே எடுத்துக் கொள்வோம். அதனை மேம்படுத்தலாம் என எண்ணிய போது கட்டுரையின் ஆரம்பத்திலேயே மிக முக்கியமான தகவல் பிழை உள்ளது. அவர் இங்கிலாந்து அணிக்காக என்றுமே விளையாடியதில்லை. ஒரே சொற்களைக் கொண்டு ஆயிரக்கணக்கான கட்டுரைகள் எழுதியதால் இத்தவறு நிகழ்ந்திருக்கிறது போல் தெரிகிறது. இது போல் எத்தனை கட்டுரைகளில் இவ்வாறு தவறாக எழுதப்பட்டுள்ளதோ நானறியேன்.--Kanags \உரையாடுக 02:12, 17 மே 2014 (UTC)[பதிலளி]
இதனை நானும் சுட்டிக் காட்டியிருந்தேன். எடுத்துக்காட்டு ஆலமரத்தடி உரையாடல், இது போன்ற மாற்றங்கள். இதற்குக் கிடைத்த பரிசு மின்னஞ்சல்கள் மூலம் எனக்கு எதிரான அவதூறே. ஆட்கள் மனம் நோகலாகாது என்பதில் காட்டும் அக்கறை கட்டுரை சரியாக இருக்க வேண்டும் என்பதில் இல்லை. மேலும் ஒரு கட்டுரையைக் கட்டுரையை உருவாக்கியவரின் கட்டுரையாகப் பார்க்கும் போக்கு வலுவாக உள்ளது. இது விக்கிப்பீடியாவின் அடிப்படைக்கே எதிரானது. கோபி (பேச்சு) 04:18, 17 மே 2014 (UTC)[பதிலளி]

கருத்து கோரல்

தொகு

கருத்து / நிலைப்பாடுகள் தேவை. கவனிக்க: சஞ்சீவி சிவகுமார், மயூரேசன், செல்வா, சுந்தர், அராப்பத், அசுவின், பாலா, வத்சன், மணியன்--இரவி (பேச்சு) 08:09, 21 மே 2014 (UTC)[பதிலளி]

ஆங்கில விக்கியில் இருப்பதாலேயே அது தமிழிலும் அனுமதிக்க வேண்டும் என்பது ஏற்புடையதல்ல. அதேசமயம் இத்தகைய கட்டுரைகளால் ஆபத்து இல்லை என்ற நக்கீரனின் கருத்தும் சரி எனத் தோன்றுகிறது. ஆனால் இதையே முன்னுதாரணமாக வைத்து பிரபலமில்லாத துடுப்பாட்டக்காரர்களைப் பற்றிய விக்கிக் கட்டுரை எழுதுவதும் உகந்ததல்ல. பத்திரிகைச் செய்திகள் இவ்விளையாட்டு வீரர்களை மேற்கோள் காட்டியிருந்தால் அவர்களைப் பற்றிய கட்டுரைகள் அனுமதிக்கலாம். --ஆர்.பாலா (பேச்சு) 05:10, 22 மே 2014 (UTC)[பதிலளி]

மணியன்

தொகு

இத்தகைய உரையாடல்களின் முழுமையான பின்புலங்களை அறிய இயலாதவனாக இருப்பதாலும் தொடர்ந்த உரையாடல்களுக்கான பொறுமையும் நினைவாற்றலும் இல்லாமையாலும் எனது கருத்து/நிலைப்பாடுகளை தவிர்க்க விரும்புகிறேன். சட்டங்களை இயற்றும் மன்றத்தில் இல்லாது சட்டங்களின்படி நடக்கும் குடிமகனாக இருக்கவே விரும்புகிறேன். மேலோட்டமாக குறிப்பிடத்தக்கமை வரையறைகளை வகுப்பதற்கு எனது ஆதரவு.--மணியன் (பேச்சு) 04:44, 22 மே 2014 (UTC)[பதிலளி]

சுந்தர்

தொகு

(மேலேயுள்ள உரையாடலை இன்னும் படிக்கவில்லை, முன்மொழிவை மட்டுமே இப்போதைக்கு பார்த்துள்ளேன். தவிர, நான் துடுப்பாட்டம் பார்த்து பத்து ஆண்டுகளுக்கு மேலாகிறது.) பொதுவாக ஒரு குறிப்பிட்ட துறைக்கென குறிப்பிடுதன்மையை வகுப்பதில் பிழையில்லை. எனினும், ஒரு ஆட்டக்காரரின் திறமை மட்டுமே குறிப்பிடுதன்மைக்கு அடிப்படையாகாது என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும். காட்டாக, ஒருவர் தான் விளையாடிய முதல் மூன்று ஆட்டங்களிலும் ஓட்டம் எதுவும் எடுக்காமல் இருந்து அதன்காரணமாகப் பெயர்பெற்றுவிட்டால் அதுவும் குறிப்பிடத்தக்கதே. ஒருவேளை தனிக்கட்டுரையாக இல்லாமல் வேறு எங்கும் தொகுக்கலாமோ என்னவோ. சிலர் ஆட்டத்தை முன்னிட்டல்லாது வேறு ஏதாவது நிகழ்வால், பண்பால் பெயர் பெற்றிருக்கக் கூடும். அவ்வாறு எதுவும் இல்லாமல் (செய்திகள் எதிலும் இடம்பெறாமல்) இருப்பவர்களுக்கு மட்டும் எத்தனை ஆட்டங்களில் விளையாடியிருக்கிறார் என்பதை அடிப்படையாகக் கொண்டு வரையறுக்கலாம் என நினைக்கிறேன். Cricinfo தளத்தில் ஏதும் வரையறை உள்ளதா? அவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் எனத்தனியாக ஏதாவது வகைப்படுத்தியிருந்தால் அதை எடுத்துக் கொள்ளலாம். -- சுந்தர் \பேச்சு 09:01, 26 மே 2014 (UTC)[பதிலளி]

இணக்க முடிவை நோக்கி

தொகு

சோடாபாட்டில், வாக்கெடுப்பு நிலவரம், பகிரப்பட்டுள்ள கருத்துகளுக்கு ஏற்ப இணக்க முடிவு நோக்கி நகர்வதற்கு உதவ முடியுமா? நன்றி.--இரவி (பேச்சு) 06:18, 30 மே 2014 (UTC)[பதிலளி]

வேறு யாரேனும் இணக்க முடிவை நோக்கிய உரையாடலை முன்னெடுக்க விரும்புகிறீர்களா? நன்றி.--இரவி (பேச்சு) 09:04, 3 சூன் 2014 (UTC)[பதிலளி]

நற்கீரன், சோடாபாட்டில், Booradleyp1, புருனோ மஸ்கரனாஸ் - பதிவாகியிருக்கும் வாக்குகள், கருத்துகள் அடிப்படையில் தங்கள் நிலைப்பாட்டில் ஏதும் மாற்றம் உண்டா? தற்போது முன்வைக்கப்பட்டிருக்கும் வரையறை மிகையாக உள்ளது என்றால் சற்று இளக்கப்பட்ட வரையறை ஏற்புடையதாக இருக்குமா? எடுத்துக்காட்டுக்கு, 1000 ஓட்டங்கள் என்பதற்குப் பதில் 500 ஓட்டங்கள் அல்லது ஒரு அரைச் சதம். 50 ஆட்டமிழப்புகள் என்பதற்குப் பதில் 25 ஆட்டமிழப்புகள். தங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லையெனில், இச்சிக்கல் தொடர்பாக இணக்க முடிவு நோக்கி நகர்வதற்குத் தாங்கள் ஏதாவது பரிந்துரைகளைத் தர விரும்புகிறீர்களா? இணக்க முடிவை எட்ட இயலவில்லை எனில், ஏற்கனவே நபர்களுக்கு என்று பொதுவாக உள்ள குறிப்பிடத்தக்கமை வரையறையையே பின்பற்ற வேண்டி இருக்கும். பார்க்க: https://en.wikipedia.org/wiki/Wikipedia:Notability_%28people%29 . இது இன்னும் கடுமையான வரையறைகளை முன்வைப்பதாகவே தோன்றுகிறது. நன்றி.--இரவி (பேச்சு) 13:14, 5 சூன் 2014 (UTC)[பதிலளி]

நற்கீரன், இந்த வாக்கெடுப்பை முன்மொழிந்தவர் என்ற அடிப்படையில், இப்பக்கத்தில் இடப்பட்டுள்ள கருத்துகள், வாக்குகள் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக நீங்கள் பரிந்துரைப்பது என்ன? சூன் 15, 2014 வரை தங்கள் பதிலுக்கும் மற்றவர் கருத்துக்கும் காத்திருக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 07:21, 8 சூன் 2014 (UTC)[பதிலளி]

குறிப்பிடத்தக்கமை வரையறை தொடர்பான இணக்க முடிவை எட்டுவதற்கான உரையாடல் நிகழும் சூழல் தற்போது தமிழ் விக்கிப்பீடியாவில் இல்லை என்பதால் தற்காலிகமாக இந்தக் குறிப்பிடத்தக்கமை வரையறையை எட்டுவதற்கான முயற்சியைக் கை விடுகிறேன். தகுந்த இடங்களில் https://en.wikipedia.org/wiki/Wikipedia:Notability_%28people%29 வரையறையை முன்வைத்து உரையாடுவோம். நன்றி. --இரவி (பேச்சு) 10:38, 15 சூன் 2014 (UTC)[பதிலளி]