ரங் ரசியா (தொலைக்காட்சி தொடர்)

ரங் ரசியா என்பது ஒரு இந்தி மொழி காதல் கதைக்களம் கொண்ட தொலைகாட்சித் தொடர் ஆகும். இந்த தொடர் திசம்பர் 30, 2013 முதல் செப்டம்பர் 19, 2014 வரை திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:30 மணிக்கு கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 188 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது. இது காதலா? என்ற தொடரில் நடித்த சனையா இராணி இந்தத் தொடரில் ஒரு அப்பாவி கிராமத்துப் பெண்ணாக நடித்தார். கலர்ஸ் தொலைக்காட்சிக்காக இவர் நடிக்கும் முதல் நெடுந்தொடர் இதுவாகும். இவருக்கு ஜோடியாக ஆஷிஷ் ஷர்மா நடிக்கிறார். இவர் இதற்கு முன் ’சந்திரகுப்தா மயூரா’ என்ற தொடரில் நடித்தவர்.

ரங் ரசியா
வகைநாடகம்
காதல்
திகில்
அதிரடி
எழுத்துசவுரப் திவாரி
கவுதம் ஹெக்டே
ஷிவானி ஷா
ராகில் குவாசி
ரகுவீர் ஷெகாவத்
இயக்கம்சித்தார்த்தா செங்குப்தா
நடிப்புசனையா இராணி
ஆஷிஷ் ஷர்மா
நாடுஇந்தியா
மொழிஇந்தி
பருவங்கள்2
அத்தியாயங்கள்189[1]
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்அந்தேரி
மும்பை
ஓட்டம்தோராயமாக 15-20 (ஒருநாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
அலைவரிசைகலர்ஸ் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்30 திசம்பர் 2013 (2013-12-30) –
19 செப்டம்பர் 2014 (2014-09-19)
வெளியிணைப்புகள்
இணையதளம்

இந்தத் தொடர் ராஜ் தொலைக்காட்சியில் அழகிய லைலா என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பானது.

கதைசுச்ருக்கம் தொகு

ஒரு கிராமத்து பெண் பார்வதி சனையா இராணி மற்றும் ஒரு இராணுவ அதிகாரி ருத்ரா ஆஷிஷ் ஷர்மா இவர்களுக்குள் நடக்கும் காதல் மற்றும் வெறுப்பு இவைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடர் ஆகும்.

நடித்தவர்கள் தொகு

  • ஆஷிஷ் ஷர்மா - ருத்ரா (ஒரு இரக்கமற்ற எல்லை பாதுகாப்பு படை அதிகாரி, அவரது தாயார் 12 வயதில் அவனையும் அவனது தந்தையையும் கைவிட்டுச் சென்றதால் அவன் ஒரு இரக்கமற்றவனாகப் பெண்கள் மீது நம்பிக்கை இல்லாதவனாக வளர்கிறான்).
  • சனையா இராணி - பார்வதி (இவள் ஒரு கிராமத்து பெண்)
  • சதியா சித்திக் -
  • அங்கிதா சர்மா - லைலா
  • தருண் கண்ணா
  • அனன்யா காரே
  • சையத் ஜாபர் அலி
  • நேஹா நரங்
  • விஷால் காந்தி
  • காளி பிரசாத் முகர்ஜி

தயாரிப்பு தொகு

சரத் ​​பவார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் இந்தியத் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் மும்பையில் அமைந்துள்ளது. இவ் நிறுவனம் 2011ல் சவுரப் திவாரி மற்றும் அபினவ் சுக்லா மூலம் உருவாக்கப்பட்டது. 2011ம் ஆண்டு இந்நிறுவனத்தால் கலர்ஸ் தொலைக்காட்சி தயாரிக்கப்பட்ட தொடர் மதுபாலா ஆகும். அதற்கு பிறகு லைப் ஓகே தொலைக்காட்சியில் 2013ம் ஆண்டு ’டூ தில் ஏக ஜான்’ (Do Dil Ek Jaan) என்ற தொடரைத் தயாரித்துள்ளது.

குறிப்புகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு