பயனர் பேச்சு:AntanO/தொகுப்பு 6
சிறந்த வரைகலைஞர் பதக்கம்
தொகுசிறந்த வரைகலைஞர் பதக்கம் | ||
அன்டன், கேட்ட போதெல்லாம் சளைக்காமல் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு நீங்கள் வரைகலை பங்களிப்புகளை வாரி வழங்குவதைக் கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தை அளிக்கிறேன்.--இரவி (பேச்சு) 06:16, 20 மார்ச் 2015 (UTC) |
- விருப்பம்--Mohamed ijazz (பேச்சு) 06:21, 20 மார்ச் 2015 (UTC)
- விருப்பம் தாங்கள் வரைந்து தந்த ஓம் படங்கள் முகநூல் பலர் புரைபல் படமாக இருப்பதை சமீபத்தில் கண்டேன். தங்களுடய கவனத்திற்கு வராமலேயே தங்களுடையப் படைப்புகள் மக்களால் ரசிக்கப்படுகிறது நண்பரே. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:48, 20 மார்ச் 2015 (UTC)
உதவி
தொகு// User account Shobasakthi (பேச்சு | பங்களிப்புகள்) was created by Ezhilvelautham (பேச்சு | பங்களிப்புகள்) and password was sent by email (wikipedia english) // இத்தகவலை அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் பார்த்தேன், இது விக்கி விதிமுறைகளுக்கு புறம்பானதல்லவா ?? அப்பயனர் புதியவராக இருப்பதால் தெரியாமலிருக்கலாம் ? --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:02, 24 மார்ச் 2015 (UTC)
- சிலவேளைகளில் இவ்வாறு செய்யலாம். இதைப் பாருங்கள்: en:Wikipedia:Account creator --AntonTalk 10:32, 24 மார்ச் 2015 (UTC)
- நல்ல விசயமாக தெரிகிறது, இதுவரையில் நான் இவ்வாறு செய்ததில்லை. புதிய தகவலுக்கு நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:53, 24 மார்ச் 2015 (UTC)
- வாங்குவோர் கழிவிரக்கம் என்பது ஆங்கிலத்தில் Buyer's Remorse ( https://en.wikipedia.org/wiki/Buyer%27s_remorse) ஆகும். புலப்பாட்டு முரண்பாடு என்பது cognitive dissonance ( https://en.wikipedia.org/wiki/Cognitive_dissonance ) ஆகும். ராதாகிருஷ்ணன்
- நான் எம்மாதிரியான மேற்கோள் கொடுக்க வேண்டும்? தமிழில் இதற்கு இணையான சொல் இல்லாததால் பல இடங்களில் தேடி, பலரிடம் கேட்டு இச்சொல்லை பதிந்தேன்.ராதாகிருஷ்ணன்
- உங்கள் பேச்சுப்பக்கத்தில் பதில் அளித்துள்ளேன். விளக்கம் போதாமல் இருந்தால் அங்கேயே கேளுங்கள். --AntonTalk 18:59, 3 ஏப்ரல் 2015 (UTC)
எம்.ஏ. முகம்மது என்ற கட்டுரைக்கு ஆதார இணைப்புப் படம் ஏற்றப்பட்டுள்ளது. தயவுசெய்து கருத்திற் கொள்ளவும். https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:M_A_Mohamed_Details_Kalaimahan_Fairooz.jpg
- @Kalaimahan fairooz: en:Wikipedia:Notability, en:Wikipedia:Notability (people) இவற்றைக் கருத்திற் கொள்ளுங்கள். தற்போதும் இக்கட்டுரை தகுந்த மேலதிக ஆதாரமின்றிக் காணப்படுகின்றது. --AntanO 06:45, 14 ஏப்ரல் 2015 (UTC)
உதவி கோரலும் நன்றியும்
தொகுமணல்தொட்டி குறித்தத் தங்களின் குறிப்புக்கு நன்றி. நான் விக்கியில் கட்டுரைகள் பதிப்பது சமீபமாகத்தான் என்பதை நீங்கள் அறிவீர் என்று நம்புகிறேன். அதனால் தங்கள் உதவி எனக்கு மிகவும் தேவை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். --Kalaivanan S (பேச்சு) 18:57, 14 ஏப்ரல் 2015 (UTC)
சில நிமிடங்கள்
தொகுஉங்களுடனான உரையாடலில் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியத்திற்கு மன்னிக்கவும். நீங்கள் நிர்வாகி என்பதால் தவறுகள் உள்ள பக்கதிற்கு நீக்க பரிந்துரை செய்துவிட்டு சென்று விடுகிறீர்கள். கடந்த சில நாட்களுக்கு முன் 1000 கட்டுரைகள் நீக்கப்பட்டுருப்பதை பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இதனால் தமிழ் விக்கிபீடியா பின்னோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது(தற்போது 63-ம் இடம்). நீங்கள் தவறுகள் உள்ள பக்கத்தை நீக்க பரிந்துரை மட்டும் செய்யமால் தவறுகளை திருத்தி கட்டுரைகள் முடிந்த அளவு அழியாமல் காக்க முயற்சிக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.--நிர்மல் (பேச்சு) 09:01, 19 ஏப்ரல் 2015 (UTC)
- நிர்மல், இங்கு பாருங்கள். ஒரே நாளில் ஆயிரம் கட்டுரைகள் குறைந்ததற்கான காரணத்தை விளக்கி உள்ளோம். விக்கிப்பீடியா கொள்கைகளுக்கு முரணான பக்கங்களுக்கு யார் வேண்டுமானால் நீக்கல் வார்ப்புரு இடலாம். இவை துரித நீக்கல் தகுதிக்கு உட்பட்டிருந்தால் ஏதாவது ஒரு நிருவாகி கவனித்து உடனே நீக்குவார். இல்லையெனில், பேச்சுப் பக்கத்தில் உரையாடி முடிவெடுக்கலாம். உரையாடல் நீளும் போது, வாக்கெடுப்பு நடத்தி இணக்க முடிவு எடுக்கப்படும். எனவே, கட்டுரைகளை யாரும் போகிற போக்கில் நீக்கி விட முடியாது. ஒவ்வொருவரும் இயன்றளவு கட்டுரைகளை மேம்படுத்துவதற்கான முயற்சி எடுத்த பிறகே அடுத்த கட்டத்துக்கு நகர்கிறார்கள். --இரவி (பேச்சு) 05:23, 20 ஏப்ரல் 2015 (UTC)
உங்கள் பார்வைக்கு
தொகுபயனர்: Arulghsr தொடங்கும் கட்டுரைகள் பலவற்றில் அவர் எடுத்தாளும் நாளிதழ் செய்திகளிலிருந்து தகவல்களை அப்படியே படியெடுத்து, நடுநடுவில் துணைத் தலைப்புகளிட்டுத் தருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அவர் தொடங்கிய பல கட்டுரைகள் இக்காரணத்தால் நீக்கப்பட்டுள்ளன. அந்தந்தக் கட்டுரைகளின் பேச்சுப்பக்கத்தில் எச்சரிக்கப்பட்டும் இதேநிலை தொடர்கிறது.
குஸ்டாவ் பெச்னர் கட்டுரையிலுள்ள தகவல்கள் தி இந்து (தமிழ்) நாளிதழ் செய்திப்பக்கம் -[1] -உடன் ஒத்துள்ளதைக் காணலாம். (வலைப்பக்க மேற்கோள்கள் இருப்பின் கண்டறிய முடிகிறது. ஒரு நூலை ஆதாரமாக அவர் தந்துள்ள கட்டுரைகள் நிறைய உள்ளன. அவற்றை எவ்வாறு சரிபார்ப்பது என்று தெரியவில்லை).
இதே பதிப்புரிமை மீறல் தொடராமல் இருக்க, அவருக்குத் தேவையான அறிவுரையை வழங்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறேன். --Booradleyp1 (பேச்சு) 16:36, 19 ஏப்ரல் 2015 (UTC)
- தாமத்திற்கு வருந்துகிறேன். நீங்கள் பலமுறை அறிவித்ததை நான் கவனித்துள்ளேன். தற்போது அப்பயனருக்கு அறிவித்தல் கொடுத்துள்ளேன். கவனமாக உள்ளடங்கங்களைக் கவனித்து அறிவுறுத்துவதற்கும், தெரிவிப்பதற்கும் நன்றி. --AntanO 19:02, 21 ஏப்ரல் 2015 (UTC)
- விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 02:28, 22 ஏப்ரல் 2015 (UTC)
பெயரிடல் மரபு
தொகுவணக்கம் ஆண்டன். ”டிரைஈத்தைல் ஆர்த்தோ பார்மேட்” என்ற தலைப்பு விக்கிபீடியா பெயரிடல் மரபுக்கு மாறுபட்டு இருப்பதாக தெரிவித்துள்ளீர்கள். mono,di, tri, tetra, penta, hexa , hepta போன்ற ஒட்டுகளை அப்படியே பயன்படுத்தினால் பயன்பாட்டுக்கு எளிதாக இருக்கும் என்று கருதினேன். இதனை மூவீத்தைல் ஆர்த்தோ பார்மேட்டு , மூமீத்தைல் ஆர்த்தோ பார்மேட்டு என்றும் அழைக்கலாம்.ஆனால் tetra, penta, hexa , hepta போன்ற சொற்களை மாற்றும் போது பயன்பாடு சற்று சிரமம் அளிப்பதாக உள்ளது. ஆலோசனை தேவை. அன்புடன்--கி.மூர்த்தி 01:31, 23 ஏப்ரல் 2015 (UTC)
மூமீத்தைல் என்பதுந் தவறானது. மும்மீத்தைல் (மும்முறை என்பது போல மகரம் வருவதனால்) என்றே வர வேண்டும். --மதனாகரன் (பேச்சு) 13:33, 23 ஏப்ரல் 2015 (UTC)
Translating the interface in your language, we need your help
தொகுPlease register on translatewiki.net if you didn't yet and then help complete priority translations (make sure to select your language in the language selector). With a couple hours' work or less, you can make sure that nearly all visitors see the wiki interface fully translated. Nemo 14:06, 26 ஏப்ரல் 2015 (UTC)
தானியங்கி வரவேற்பு
தொகுவணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:16, 7 மே 2015 (UTC)
பொதுவுடமை என்ற தலைப்பின் கீழ் பொதுவுடமை சோசலிசம் என்ற பகுதியை சேர்த்துள்ளேன் அதை நீக்கி இருக்கிறீர்கள் மிஸ்டர் AntanO அதற்கு விளக்கம் அளிக்கவும்
மிஸ்டர் antan o / //பொதுவுடமைவாதி கற்கும் அறிவு அனைத்தும் மனத்துள் செரிமானம் செய்யப்படவில்லையானால்.. கருத்து மிக்க கடும் பயிற்சி இல்லாமலே, விமர்சனக்கண் கொண்டு பரிசீலிக்க வேண்டிய உண்மைகளைப் புரிந்துக் கொள்ளமலேயே... தயாராய் வரையறுத்து வைக்கப்பட்ட முடிவுகளை ஒருவர் பண்டித பாணியில் ஏற்றுக்கொள்ளாதவர் பொதுவுடமைவாதி என்றும், ஏற்றுக்கொள்ளாதவர்கள் பொதுவுடமைவாதிகள் என்றும் அறியப்படுகிறார்கள்.[5]//
மேற்கண்ட வரிகளில் லாஜிக் பிழை இருக்கிறது இதை திருத்தினேன் ஆனால் மீள கொண்டு வந்துவிட்டீர்கள். விளக்கம் தேவை
- நீங்கள் மேற்கோள்களில் இடைச்சொருகல் செய்திருந்தீர்கள். மேலும், தொகுப்பும் விக்கிப்படுத்த வேண்டியிருந்தது. இவற்றைவிட்டு ஆதாரத்துடன் தொகுங்கள். யாரும் மீளமைக்க மாட்டார்கள். அல்லது கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள். நன்றி --AntanO 07:12, 13 சூன் 2015 (UTC)
வளர்தமிழ் : உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள்
தொகுவணக்கம். தங்களது கருத்துரைகள் விக்கியின் எனது பதிவுகளைச் சரிசெய்து கொள்வதற்கு மிகப் பயனாக உள்ளன. அதற்கு தங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழண்ணல் அவர்களுடைய வளர்தமிழ் : உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள் (நூல்) நூல் தினமணி இதழில் தமிழ்ச் சொற்களை, சொற்றொடர்களைக் கையாளும் விதம், தமிழில் அடிக்கடி மேற்கொள்ளப்படும் தவறுகள், சரியான பயன்பாடு என்ற பல கோணங்களில் ஆராய்கிறது. தினமணியில் வந்த அவரது பதிவுகளை அவர் இந்நூலில் தொகுத்துத் தந்துள்ளார். அவருடைய இந்நூல் பற்றி மீனாட்சி புத்தக நிலையத்திலோ, பிற அமைப்புகளிலோ இணையத்தில் விவரம் கிடைக்கப்பெறவில்லை. மு.இளங்கோவன் தன் வலைப்பூவில் "தமிழண்ணல் இராம.பெரியகருப்பன் அவர்களின் தமிழ்வாழ்வு..." 23.7.2008 என்ற தலைப்பில் இவ்வறிஞரின் தமிழ்ப்பணிகளைப் பற்றி விவாதிக்கிறார். அதனை மேற்கோளாக, தற்போது உறுதிப்படுத்தலுக்காக அளித்துள்ளேன். இந்நூலின் படி என்னிடம் உள்ளது. தமிழ் மொழியைப் பிழையின்றி எழுத, படிக்க, பயன்படுத்த இந்நூல் உதவியாக இருக்கும் என்ற எண்ணத்தில் இப்பதிவை வெளியிட்டுள்ளேன். தங்கள் கருத்தறிய விழைகின்றேன்.நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 08:37, 11 சூன் 2015 (UTC)
- வணக்கம், உசாத்துணையாக அந்நூலையே கொடுப்பதும், வலைப்பூக்களைப் பயன்படுத்துவதும் நடுநிலை நோக்கில் சரியாகாது. எனினும், நல்லதொரு நூல் கலைக்களஞ்சியத்தில் இடம்பெற வேண்டும் என்ற அடிப்படையில் தற்போது உள்ள வலைப்பூ சுட்டியைப் பயன்படுத்தலாம் என்பது என் கருத்து. தகுந்த ஆதாரம் கிடைக்கும்போது இணைத்துவிடுங்கள். --AntanO 06:55, 13 சூன் 2015 (UTC)
- வணக்கம். தகுந்த ஆதாரம் கிடைக்கும்போது இணைத்துவிடுவேன். தங்களின் கருத்து என்னைப் போன்று தொழில்நுட்பத்தை முழுமையாக புரிந்துகொள்ளாமல், அதே சமயம் விக்கியில் எழுத விழைபவர்களுக்கு மிகவும் பயன் அளிக்கும் என்று நம்புகிறேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 07:48, 13 சூன் 2015 (UTC)
அன்புள்ள AntanO வழிமாற்றுகளை உருவாக்குவது எவ்வாறு என சொல்ல இயலுமா (பேச்சு)Arulghsr (பேச்சு) Arulghsr (பேச்சு) 08:35, 22 சூன் 2015 (UTC)
பகுப்புகளுக்கு விக்கியிடை இணைப்பு
தொகுவணக்கம், புதிய பகுப்புகளை உருவாக்கும் போது, அவற்றுக்குத் தகுந்த ஆங்கில விக்கிப் பகுப்புகள் இருந்தால் அவற்றை விக்கித்தரவில் இணைத்து விடுவது நல்லது. நன்றி.--Kanags \உரையாடுக 09:19, 29 சூன் 2015 (UTC)
- விருப்பம்--AntanO 18:35, 29 சூன் 2015 (UTC)
உதவித்தொகை பெற, ஆதரவு கோரிக்கை
தொகுவிக்கிப்பீடியா:உதவித்தொகை#Info-farmer_(தகவலுழவன்) என்ற பக்கத்தில் உதவித்தொகை பெற விண்ணபித்துள்ளேன். ஆதரவு தரக் கோருகிறேன். வணக்கம்.--த♥உழவன் (உரை) 17:45, 4 சூலை 2015 (UTC)
விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு
தொகுவணக்கம்!
சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!
தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!
உங்களுக்குத் தெரியுமா? திட்டம்
தொகுநீங்கள் பங்களித்த அடைப்பான் வேகம் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் சனவரி 15, 2015 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த சார் பீரங்கி என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் பெப்ரவரி 18, 2015 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த கிராவ் மகா என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் ஏப்ரல் 15, 2015 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த செவ்வலகு ஆப்பிரிக்கத் தூக்கணாங்குருவி என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் மே 13, 2015 அன்று வெளியானது. |
Re:
தொகுThanks for remind, I know, I just made an experiment to try to some other ways to help TAWP, seems doesn't work it out.--AddisWang (பேச்சு) 15:18, 19 சூலை 2015 (UTC)
- I created many smei-bot articles on Chinese Wikipedia. So I just want to see if I can help TAWP in similar ways. பயனர்:Dineshkumar Ponnusamy helped me to figure it out that it's not really possible.--AddisWang (பேச்சு) 15:22, 19 சூலை 2015 (UTC)
- Thank you, I will let you know when I work it out :)--AddisWang (பேச்சு) 15:36, 19 சூலை 2015 (UTC)
பதிப்புரிமை பெறுதல்
தொகுவணக்கம் AntanO. நான் ஒரு நடிகரின் பக்கத்தில் (உதாரணம்: லீ சாங்-யூண்) அவரின் புகைப்படத்தை பதிவு செய்யும் பொது எவ்வாறு பதிப்புருமை பெறுதல்? ஏன் எனின் தாங்கள் சில புகைப்படங்களை பதிப்புருமை மீறல் என்ற பெயரில் நீக்கி உள்ளீர்கள்? --Thilakshan 10:11, 20 சூலை 2015 (UTC) :)
- வணக்கம், பதிப்புரிமை உள்ள படிமங்களை பயன்படுத்த ஆக்குனரின் அனுமதி பெற வேண்டும். நியாயப் பயன்பாட்டுக்காரணம் எல்லாவற்றுக்கும் பொருந்தாது. பார்க்க: காப்புரிமை மீறப்பட்ட படிமங்களை உடனடியாக நீக்கலாம்., en:WP:NFCI, en:Wikipedia:Image use policy, en:Wikipedia:Copyrights#Image_guidelines. --AntanO 10:45, 20 சூலை 2015 (UTC)
வணக்கம்
தொகுஐயா,நான் திருத்தம் செய்த மள்ளர் கட்டுரை தவறு என்று நீங்கள் மீண்டும் திருத்தியுள்ளீர்கள்,நான் செய்த திருத்தம் சரி என்று நினைக்கிறேன்.... Rajeshmurugan (பேச்சு) 17:50, 22 சூலை 2015 (UTC)
- தற்போது உசாத்துணை இணைத்துள்ளேன் பாருங்கள். --AntanO 18:56, 22 சூலை 2015 (UTC)
உளங்கனிந்த நன்றி!
தொகுவணக்கம்!
விக்கி மாரத்தான் 2015 நிகழ்வு நடந்த நாளில், தாங்கள் செய்த தொகுப்புகளுக்கு நன்றி!
ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாக --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:51, 25 சூலை 2015 (UTC)
கருத்துக் கோரல் - த.இ.க ஊடாக த.வி வளர்ச்சி வாய்ப்புக்கள்
தொகுதமிழ் இணையக் கல்விக்கழகம் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவும் வகையிலான வாய்ப்புக்கள், செயற்திட்டங்கள் பற்றி உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
உங்கள் கருத்துக்களை தெரிவிக்க பார்க்க: விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் இணையக் கல்விக்கழகம் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவுக்கான வளர்ச்சி வாய்ப்புகள்
தைட்டானிக் அமிலம்
தொகுஇக்கட்டுரையும் ஆங்கிலக் கட்டுரையுடன் இணைப்பு பெறாமல் உள்ளது.--கி.மூர்த்தி 16:52, 8 ஆகத்து 2015 (UTC)
- இணைந்துதான் உள்ளது. மீண்டுமொருமுறை பாருங்கள். --AntanO 16:53, 8 ஆகத்து 2015 (UTC)
- ஆங்கிலக் கட்டுரையைப் பார்க்கவும் அதில் தமிழ் இல்லை --கி.மூர்த்தி 16:55, 8 ஆகத்து 2015 (UTC)
- இற்றையாகுவதில் தாமதம் இருக்கலாம். நீங்களாகவே இற்றை செய்ய உரலியின் முகவரியின் பின் ?action=purge என்பதைக் கொடுத்துப் பாருங்கள். எ.கா: https://en.wikipedia.org/wiki/Titanic_acid?action=purge --AntanO 17:01, 8 ஆகத்து 2015 (UTC)
- இரண்டு நாட்களாகவே இந்தச் சிக்கல் இருக்கிறது. கனக்சின் பேச்சுப் பக்கத்தில் பாருங்கள் --கி.மூர்த்தி 17:06, 8 ஆகத்து 2015 (UTC)
- ஆம் கவனித்தேன்.
https://en.wikipedia.org/wiki/Titanic_acid?action=purge
இதை ஒரு முறை செய்து பாருங்கள். நீங்கள் என்ன இணைய உலவி பயன்படுத்துகிறீர்கள்? --AntanO 17:12, 8 ஆகத்து 2015 (UTC)
- ஆம் கவனித்தேன்.
- இப்பொழுது சரியாகத் தெரிகிறது.குரோம் உலவியைப் பயன்படுத்துகிறேன். இன்னும் சில கட்டுரைகள் அவ்வாறு இணைப்புப் பெறாமல் உள்ளன்.--கி.மூர்த்தி 17:21, 8 ஆகத்து 2015 (UTC)
- தற்போதைக்கு ?action=purge என்பதைப் பயன்படுத்துங்கள். விக்கி திட்டத்தில் தெரிவித்துவிடலாம். --AntanO 17:26, 8 ஆகத்து 2015 (UTC)
- இணைக்கப்படாத மற்ற கட்டுரைகளுக்கும் பயன்படுத்தி இணைத்துக் கொண்டேன் .நன்றி--கி.மூர்த்தி 17:29, 8 ஆகத்து 2015 (UTC)
- Baeyer drewson indigo synthesis கட்டுரையை கவனிக்கவும். பிற மொழிகளுடன் தமிழ் கட்டுரையை இணைப்பதில் ஏதோ தவறு இழைத்திருக்கின்றேன். சரிசெய்யவும். --கி.மூர்த்தி 14:15, 9 ஆகத்து 2015 (UTC)
முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்
தொகுநீங்கள் பங்களித்த சோழர் கடற்படை என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் மே 24, 2015 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
திருகோணமலை மாவட்ட நிலப்படம்
தொகுதிருகோணமலை மாவட்ட பிரதேசச் செயலாளர் பிரிவுகள் தொடர்பான கட்டுரைகளில் இணைப்பதற்காக திருகோணமலை மாவட்ட நிலப்படம் ஒன்றை உருவாக்கியுள்ளேன். இதில் உள்ள தமிழ்ப் பெயர்கள் சரியாக உள்ளனவா என்று பார்க்கவும். உத்தியோகபூர்வ இணையத்தளங்களில் வேறுபாடான பெயர்கள் காணப்படுகின்றன. சிலவற்றில் அப்படியே சிங்களப் பெயர்களைத் தமிழில் எழுதியுள்ளனர். (எ.கா: தம்பலகமுவ). தற்போது குச்சவெளி பிரதேசச் செயலாளர் பிரிவு கட்டுரையில் மட்டும் இணைத்துள்ளேன். ஏதாவது பிழை இருந்தால் சரிசெய்துவிட்டு இது தொடர்பான எல்லாக் கட்டுரைகளிலும் இணைக்கலாம். --மயூரநாதன் (பேச்சு) 08:15, 13 ஆகத்து 2015 (UTC)
தங்கள் கவனத்திற்கு
தொகுபேச்சு:பெருந்தலைக் கடலாமை−முன்நிற்கும் கருத்து L.Shriheeran (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- ஆயிற்று--AntanO 08:08, 15 ஆகத்து 2015 (UTC)
[பேச்சு:தமிழிசையும் கர்நாடக இசையும்]--ஸ்ரீஹீரன் (பேச்சு) 05:19, 18 ஆகத்து 2015 (UTC)
[பேச்சு:நத்தம் மாரியம்மன் திருக்கோயில்]--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:01, 23 ஆகத்து 2015 (UTC)
- @L.Shriheeran:, ஆயிற்று --AntanO 11:04, 23 ஆகத்து 2015 (UTC)
- பேச்சு:ஆகுளி (இசைக்கருவி)--ஸ்ரீஹீரன் (பேச்சு) 07:25, 2 செப்டம்பர் 2015 (UTC)
- பேச்சு:தருப்பைப்புல்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 07:41, 2 செப்டம்பர் 2015 (UTC)
உதவி...
தொகுவணக்கம்! திரைப்படப் பங்களிப்புப் பதக்கம் எனும் பதக்கத்தினை உருவாக்கித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். பொறுமையாக செய்யலாம்; அவசரமில்லை! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:53, 15 ஆகத்து 2015 (UTC)
- வணக்கம், WikiProject Film Award இங்கு ஒன்று உள்ளது. இதனை நகலெடுத்தும் பயன்படுத்தலாம். நாம் வசதிக்கேற்ப வேறு ஒன்று/பல உருவாக்கிவிடலாம். உங்கள் விருப்பத்தினைத் தெரிவியுங்கள். --AntanO 14:04, 15 ஆகத்து 2015 (UTC)
- @Selvasivagurunathan m: ஏதும் பின்னூட்டம்/மறுமொழி உள்ளதா? --AntanO 15:41, 16 ஆகத்து 2015 (UTC)
Module:Wikidata
தொகுதற்போதைய இந்த module வேலை செய்கிறதா? ஏன் திருத்துவதை தடுக்கிறீர்கள். (விக்கிடேட்டா ஆங்கில விக்கியிலேயே ஆரம்ப கட்டத்தில் தானே இருக்கிறது. பெரிதாக எதையும் பாதிக்காதே?) இரண்டாவது முறை மீள்விப்பதற்கு முன் எனக்கு தகவல் தெரிவிக்கலாமே? நான் ஏன் நேரத்தை வீணாக்கவேண்டும். நன்றி. -- மாகிர் (பேச்சு) 15:28, 16 ஆகத்து 2015 (UTC)
- உங்கள் தொகுப்பால் "Script error: The function "getTAValue" does not exist." என்ற செய்தி கட்டுரைகளில் வருகிறது. மீள்விக்கையில் தொகுப்புச் சுருக்கம் தந்திருந்தால் விளங்கியிருக்கும் அல்லவா? --AntanO 15:30, 16 ஆகத்து 2015 (UTC)
- இருக்கலாம். அந்த வழு பற்றிய தகவலை (எந்த பக்கத்தில், எப்படி என) எனக்கு அறியத்தந்தால் திருத்தி மேம்படுத்துவேன். -- மாகிர் (பேச்சு) 15:34, 16 ஆகத்து 2015 (UTC)
- பழையபடி மீள்வித்துவிட்டு உணவுக்குழாய் (எ.கா) கட்டுரையைப் பாருங்கள். --AntanO 15:38, 16 ஆகத்து 2015 (UTC)
- Module:Arguments இன் முன்னைய தொகுப்பு முன் பக்கம் உட்பட்ட பல பக்கங்களில் பாரிய வழு இருந்ததால் மீள்வித்துள்ளேன். --AntanO 15:40, 16 ஆகத்து 2015 (UTC)
புதுப் பயனர் தடை தொடர்பாக
தொகுஒரு புறம் பயனர் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். ஆனால் ஆர்வத்துடன் பங்குபெறும் புதுபயனருக்கு முன்அறிவிப்பு, கொள்கை விளக்கத்திற்கான இணைப்பு/வழிகாட்டல் இன்றி தடை செய்கிறீர்கள். தலைப்புகளை நகர்த்துவது விக்கி அடிப்படை பணிகளில் ஒன்று அதற்காக ஒரு பயனரை (பயனர்:Winnan Tirunallur) தடை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. விளக்கம் கோருகிறேன்.
பல ஆண்டுகால அனுபவப் பயனர்களின் பேச்சுப் பக்கத்தில் விளக்கம் கோராமல், கால அவகாசம் தராமல், அடிப்படை அறிவு இல்லாதவர் என்றெண்ணி எச்சரிக்கை வார்ப்புருக்களை இடுவதும் சரியான செயல் அல்ல. அதிலும் அவர் நிர்வாகித் தரத்திலுள்ளவர் என்றால், விக்கி அடிப்படை கொள்கை அறிவு இல்லை என்று நீங்கள் கருதினால், நிர்வாகி தரத்தை திரும்பப்பெற வாக்கெடுப்பு நடத்தலாம். -- மாகிர் (பேச்சு) 14:59, 21 ஆகத்து 2015 (UTC)
- இங்கு இரு சிக்கல்கல் முன்வைக்கப்பட்டுள்ளது. தடை செய்தது பிழையா அல்லது பதிப்புரிமை மீறலைச் சுட்டிக் காட்டியது பிழையா? எதற்கு விடை வேண்டும்? யாரிடமிருந்து விடை வேண்டும். இது ஆலமரத்தடியில் உரையாடத் தக்கதா? மற்றவர்களின் பதிலின் அடிப்படையில் விடை அளிக்கப்படும். நிற்க, அனுபவப் பயனருக்கு எவ்வளவு கால அவகாசம் வேண்டும்? யார் அடிப்படை அறிவு இல்லாதவர் என்றெண்ணியது? நிருவாகிக்கு பதிப்புரிமை மீறல் பற்றிய விளக்கம் இல்லையா? (தொடர்புபட்டது: பயனர் பேச்சு:Mdmahir#பதிப்புரிமை மீறல்) விரும்பினால் நிர்வாக அணுக்கம் வேண்டாமென்று விண்ணப்பிக்கலாம். ஒன்று, துப்புரவுப் பணியை முனைப்பாகச் செய்ய உதவுங்கள், அல்லது நீங்களே செய்யுங்கள் தள்ளியிருந்து வேடிக்கை பார்க்கிறேன். --AntanO 16:03, 21 ஆகத்து 2015 (UTC)
இங்கு இரண்டுக்கும் எதிர்பார்த்து, அவசியம் உங்களிடமிருந்தும் மற்ற பயனர்களின் கருத்தை அறியத் தான் ஆலமரத்தடியில் பதிந்திருக்கிறேன். அவசியம் உரையாடத்தக்கது என்றுதான் இங்கு பதிகிறேன். தடை செய்த்து நீங்கள் தானே, நீங்கள் பதிலளிக்க வேண்டும். பயனர் தடையில் அடிப்படை கொள்கைகள் என்ன என்று அறிய வேண்டும். நான் பார்த்தவரையில் அந்தப் பயனர்:Winnan Tirunallur தன்மையுடன் தான் உரையாடியுள்ளார். அவருக்கு சரியாக வழிகாட்டாமல் அல்லது குறைந்தபட்சம் தடைசெய்யப்படும் என்று எச்சரிக்காமல் அவரை தடைசெய்தது எந்த வகை நியாயம். அவருக்கு இப்படி செய்தால் தடை செய்யப்படுவோம் என்று தெரியுமா?
வரலாற்றுக் கட்டுரைகளில் உள்ள பெயர்கள் புதியவையாக இருக்கும் பட்சத்தில் கிடைக்கும் நூல்களிலிருந்து படி எடுத்து போட்டு பொதுப்பயன்பாடு அளவில் பதிந்து பின்னர் திருத்துவதில் என்ன தவறு. அந்த நூல் இலவச இணைப்பாக கிடைக்கக்கூடிய ஒன்று, (பொதுவில் உள்ளதா என்று அந்த ஆசிரியரை விணவ எண்ணியிருந்தேன், அந்நிறுவனம் வேறு நூல்களையும் பொதுவில் பிரதி எடுக்க அனுமதி வழங்கியிருக்கிறது. அதன் அடிப்படையில் பல இணையதளங்களில் அந்த புத்தகத்தை மின்னூலாக பதிந்திருக்கின்றனர். ரஹீக் )
எழுதியவரை பார்க்காதே, கட்டுரையைப் பார் என்ற அடிப்படையில் நீங்கள் கட்டுரையில் தான் முதலில் வார்ப்புருவையோ, தகவலையோ தந்திருக்கவேண்டும், மீறி செய்திருந்தால் எனது பக்கத்தில் வார்ப்புருவை தந்திருக்கலாம். இரண்டு நாட்களுக்கு முன் ஒரு கட்டுரையில் மதனாஹரன் இதுபோன்று பதிப்புரிமை இருந்ததாக மயூரநாதனிடம் சுட்டிக் காட்டினார், அதுவே அவர் நேரிடையாக பதிப்புரிமை வார்ப்புருவை பயனர் பக்கத்தில் போட்டால் இணக்க சூழல் நிலவுமா?
>>நிர்வாகி தரத்தை திரும்பப்பெற வாக்கெடுப்பு நடத்தலாம்<< என்று வழிகாட்டுதலாக சொன்னதை நீங்கள் >>விரும்பினால் நிர்வாக அணுக்கம் வேண்டாமென்று விண்ணப்பிக்கலாம்.<< என்று சொல்வது சரிதானா?
விக்கியில் துப்புரவுப் பணி என்பது இயந்திரப் பணி அல்ல. சமூகத்துடன் ஒன்றியே செய்யமுடியும்.
இது அவசியம் ஆலமரத்தடியில் உரையாடுவது நல்லதே. நன்றி -- மாகிர் (பேச்சு) 17:08, 21 ஆகத்து 2015 (UTC)
- //Wikipedia cannot host extensive copying of non-compatible copyrighted material anywhere, not even in talk or user pages, not even temporarily.//
- en:Wikipedia:Copying text from other sourcesஇலிருந்து.
- பொதுவில் இருப்பினும் எங்கிருந்து படியெடுக்கப்பட்டது என்பதைப் பேச்சுப்பக்கத்திலும் தொகுப்புச் சுருக்கத்திலும் குறிப்பிட வேண்டும். மாகிர் இரண்டாவது தடவையும் (ஆண்டன் பதிப்புரிமை மீறல் என நீக்கிய பின்) பதிப்புரிமையுள்ள உள்ளடக்கத்தை அதே கட்டுரையில் சேர்த்த பின்னே ஆண்டன் பதிப்புரிமை மீறல் வார்ப்புருவை மாகிரின் பேச்சுப்பக்கத்தில் இணைத்தார் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். --மதனாகரன் (பேச்சு) 18:11, 21 ஆகத்து 2015 (UTC)
- "எழுதியவரை பார்க்காதே, கட்டுரையைப் பார்", முதலில் கட்டுரையில் தான் வார்ப்புருவை சேர்த்திருக்கவேண்டும். கால அவகாசம் தரப்படவேண்டும் என்பது தான் எனது வாதம். இரண்டாவதாக திருத்தியதில் ஆங்கில விக்கி என்று குறிப்புதந்தபின் ஆங்கில விக்கியை ஒப்பு நோக்கப்பட்டதா? திருத்த முயலாமல், பேச்சுப்பக்கத்தில் கலந்துரையாடாமல், அவசர கதியில் துப்புரவு என்று நீக்க வேண்டிய அவசியம் என்ன? இது தொகுப்புப் போர் என்றாகாதா? --மாகிர் (பேச்சு) 07:21, 23 ஆகத்து 2015 (UTC)
தடை
தொகு- Block used to prevent imminent or continuing damage and disruption to Wikipedia and by the way editor has shown experience, and I do not think he/she is new.
- நான் பார்த்தவரையில் அந்தப் பயனர்:Winnan Tirunallur தன்மையுடன் தான் உரையாடியுள்ளார். அவருக்கு சரியாக வழிகாட்டாமல் அல்லது குறைந்தபட்சம் தடைசெய்யப்படும் என்று எச்சரிக்காமல் அவரை தடைசெய்தது எந்த வகை நியாயம். அவருக்கு இப்படி செய்தால் தடை செய்யப்படுவோம் என்று தெரியுமா?
>>I do not think he/she is new.<< தமிழ் விக்கிக்கு புதியவர் அல்ல என்று எதன் அடிப்படையில் முடிவு செய்தீர்கள். -- மாகிர் (பேச்சு) 07:21, 23 ஆகத்து 2015 (UTC)
- தோழர் @AntanO: அவர்களுக்கு வணக்கம், முதற்கண்ணாக எவ்வித முன்னறிவிப்பும் தராமல், எவ்வித முன்னெச்சரிக்கையும் வாய்ப்பும் நல்காமல் என்னை தடாலடியாக தடை செய்த தங்கள் மாண்பிற்கு சிரம் தாழ்ந்த நன்றிகள். அது மட்டுமின்றி, தங்களையோ வேறு எந்தவொரு நிர்வாகியையோ தொடர்பு கொள்ள வழிவகையும் கொடுக்காமல் என்னை முடக்கியமைக்காக பேருவகை அடைந்தேன். சரி போகட்டும் அது தங்களின் விருப்பம், அதற்கான அதிகாரமும் வசதியும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது அதை நான் மதிக்கின்றேன். --Winnan Tirunallur (பேச்சு) 13:30, 24 ஆகத்து 2015 (UTC)
- தோழர் @AntanO: அவர்களே ! ஆனால் என்னை எக் காரணத்திற்காக முடக்கினீர்கள் என்பதை அறிய வேண்டியவனாய் நான் இருக்கின்றேன். தலைப்பு மாற்றம் என்பது விக்கிபீடியா தந்திருக்கும் ஒரு வாய்ப்பு, இதை புதுப்பயனர், பழைய பயனர், நிர்வாகி என தனித்தனியாக வழங்கப்படவில்லை. பொதுவில் வழங்கப்படும் தலைப்புகளுக்கு முரணான தலைப்புகளைக் கட்டுரைகள் கொண்டிருந்தால் அதை மாற்றலாம் என்பதே விக்கிபீடியாவின் கொள்கையாக நான் வாசித்தவரையில் நான் அறிந்து கொண்டது. --Winnan Tirunallur (பேச்சு) 13:30, 24 ஆகத்து 2015 (UTC)
- தோழர் @AntanO: அவர்களே ! ஒருவேளை அத்தகைய கொள்கைகளை நான் தவறாக புரிந்து கொண்டேனா, அல்லது என்ன என்பதை புதியவனான எனக்கு விளக்கமளிக்கும் பொறுப்பு தங்களைப் போன்ற நிர்வாகிகளுக்கு இருக்கின்றது என நான் நினைக்கின்றேன். அல்லது எவ்வித வாய்ப்பும் நல்காமல் புதுப் பயனர் ஒருவருக்கு போதிய அவகாசமும் வழங்காமல் தடை செய்வது தான் தமிழ் விக்கிபீடியாவின் நடைமுறையா என்பதையும் நான் அறிந்து கொள்ள விரும்புகின்றேன். --Winnan Tirunallur (பேச்சு) 13:30, 24 ஆகத்து 2015 (UTC)
- தோழர் @AntanO: அவர்களே ! >>I do not think he/she is new.<< நிர்வாகித் தரத்தில் இருக்கும் தாங்கள் எதை வைத்து என்னை புதியவரல்ல என முடிவுக்கு வந்தீர்கள் என நான் அறிந்து கொள்ளலாமா? இது சரியானதொரு பதிலாக எனக்குப் படவில்லை ஐயா, கொஞ்சம் பொறுப்பற்ற பதிலாகவே இருக்கின்றது? --Winnan Tirunallur (பேச்சு) 13:43, 24 ஆகத்து 2015 (UTC)
- தோழர் @AntanO: அவர்களே ! என்னை எந்தக் கட்டுரைக்காக தடை செய்தீர்கள் என்ற விளக்கத்தை அறிந்து கொள்ள ஆர்வமுடையவனாயிருக்கின்றேன். அறியத் தந்தால் தொடர்ந்து பேச பேருதவியாக இருக்கும். --Winnan Tirunallur (பேச்சு) 13:29, 24 ஆகத்து 2015 (UTC)
- தகுந்த முன்னெச்சரிக்கை தராமல் தடை செய்தது தவறு. >>I do not think he/she is new.<< என்ற வரிகளை எழுதியவருக்கு இப்பயனர் புதியவரா இல்லையா என்பதில் முழுமையான (100%) தெளிவில்லை என்பதையே காட்டுகிறது.--Kanags \உரையாடுக 21:31, 24 ஆகத்து 2015 (UTC)
- So what?--AntanO 03:36, 26 ஆகத்து 2015 (UTC)
- தகுந்த முன்னெச்சரிக்கை தராமல் தடை செய்தது தவறு. >>I do not think he/she is new.<< என்ற வரிகளை எழுதியவருக்கு இப்பயனர் புதியவரா இல்லையா என்பதில் முழுமையான (100%) தெளிவில்லை என்பதையே காட்டுகிறது.--Kanags \உரையாடுக 21:31, 24 ஆகத்து 2015 (UTC)
- @Winnan Tirunallur: I watch all discussions, but I am unable to response in Tamil due to some technical issues. I will response once I access my own PC. --AntanO 03:36, 26 ஆகத்து 2015 (UTC)
பதிப்புரிமை
தொகு- If you can determine the original contributor of the content, please notify them of Wikipedia's Wikimedia:Terms of Use and copyright policies. I acted as per policy. --AntanO 16:19, 21 ஆகத்து 2015 (UTC)
- முதலில் பதிப்புரிமை மீறல் http://www.tamililquran.com/mohamed-92.html துப்புரவு என்ற சுருக்கத்துடன் நான் நீக்கியது. பதிலுக்கு ஆங்கில விக்கி தமிழாக்கம் என்ற குறிப்புடன் மாகிர் மீளமைத்தது.
- நான் இரண்டாவதாக திருத்தியதற்கான ஆங்கில பதிப்பு en:Occupation_of_Mecca#Background. -- மாகிர் (பேச்சு) 07:21, 23 ஆகத்து 2015 (UTC)
- // விக்கியிலிருந்து தமிழாக்கம் செய்வதும் பதிப்புரிமை மீறலில் வருமா?// மாகிர் (பேச்சு) 06:37, 18 ஆகத்து 2015 (UTC)
- //பொதுவில் உள்ளதா என்று அந்த ஆசிரியரை விணவ எண்ணியிருந்தேன்// மாகிர் (பேச்சு) 17:08, 21 ஆகத்து 2015 (UTC)
இந்த இரு கூற்றுக்களிலுள்ள முரண்பாடு எதைக் கூறுகிறது? தானே தமிழாக்கம் செய்தார் என்கிறார். பின்னர் பொதுப்பயன்பாடு குறித்து வினவா எண்ணியிருந்தாராம்?!
- பின்பு, நிர்வாகி தரத்தை திரும்பப்பெற வாக்கெடுப்பு நடத்தலாம் என்கிறார். பதிலாக, விரும்பினால் நிர்வாக அணுக்கம் வேண்டாமென்று விண்ணப்பிக்கலாம் என்றால், அது வழிகாட்டலாம். இதை நான் கேட்டேனா? அல்லது அதுபற்றி எனக்குத் தெரியாதா? --AntanO 18:28, 21 ஆகத்து 2015 (UTC)
- If the criteria for speedy deletion do not apply, you should blank the article or the appropriate section with the இக்கட்டுரை விக்கிப்பீடியாவின் பதிப்புரிமைக் கொள்கைக்கு ஏற்புடையதாய் இல்லாமல் இருக்கலாம்.
இது குறித்த முறைப்பாடை இக்கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் காணலாம்.
template, and list the page at Wikipedia:Copyright problems; see instructions. This will give interested contributors a week to verify permission for the text or propose a rewrite. If, after a week, the page still appears to be a copyright infringement and no usable rewrite is proposed, it may be deleted by any administrator or reduced to a non-infringing stub.
- இந்த நடைமுறைகளை விடுத்து (நேர அவகாசம் - ஆங்கில விக்கியில் ஒருவாரகாலம் சொல்கிறார்கள், நீக்கல் வார்ப்புரு போன்றவற்றை கட்டுரைகளில் தராமல்) நேரிடையாக en:Wikipedia:Copyright_violations#Addressing contributors சென்றுவிட்டீர்கள் என்றுதான் சொல்கிறேன். மேற்கண்ட நடவடிக்கைகள் துப்புரவு என்பதை விட தொகுத்தல் போர் என்றுதான் எண்ண வேண்டியுள்ளது.
@Natkeeran: உங்களது கருத்தை அறிய விரும்புகிறேன். -- மாகிர் (பேச்சு) 07:21, 23 ஆகத்து 2015 (UTC)
- மாகிர் தொடர்பில் இங்கு முறையிடப்பட்டுள்ளது. காண்க: விக்கிப்பீடியா:நிருவாகிகளுக்கான அறிவிப்புப்பலகை#மாகிர் மேலதிக உரையாடல் தேவை எனில் அங்கு உரையாடுக. --AntanO 10:16, 23 ஆகத்து 2015 (UTC)
- ஆங்கில விக்கியில் இருந்து மொழிபெயர்ப்புச் செய்வது நிச்சியம் பதிப்புரிமை மீறல் இல்லை. ஆங்கில பக்கங்களையும் paraphrase செய்து மேற்கோள்களுடம் தரலாம். ஒரு பயனர் எதாவது தவறு செய்து இருப்பின், அதனை நல்நோக்கில் சுட்டிக் காட்ட வேண்டும். கடுமையான சொற்பிரயோகங்களை, அணுகுமுறைகளைத் தவிர்க்க வேண்டும். --Natkeeran (பேச்சு) 13:07, 24 ஆகத்து 2015 (UTC)
- You should have responded where I requested to do so. Anyway, I know translating from en.wiki is not a copyrights violation. Is that a clarification anyone asked you. See the discussion and its related links and point out all errors or mistakes where it seems to be hard wording. Do I want to start from the beginning if you wanna get more idea? Sorry for responding in English due to technical issue. --AntanO 03:42, 26 ஆகத்து 2015 (UTC)
- I am not sure what you are trying to say. Could you say who used hard wording and where? Note: My response might be delayed due to some personal business, but I could able to watch all discussions. --AntanO 03:51, 26 ஆகத்து 2015 (UTC)
நன்றி
தொகுஇலண்டன் திருவள்ளுவர் சிலை கட்டுரையை நீக்கிய உங்களுக்கு என் வாழ்த்துக்கள். இது போல் பல பணிகளை நீங்கள் சிறப்புற செய்து தமிழ் பணி ஆற்ற வாழ்த்துக்கள். செலின் ஜார்ஜ் (பேச்சு) 23:03, 31 ஆகத்து 2015 (UTC)
- விருப்பம் --விண்ணன் (பேச்சு) 23:38, 31 ஆகத்து 2015 (UTC)
@செலின் ஜார்ஜ் and Winnan Tirunallur: குறித்த காலத்திற்குள் குறிப்பிடத்தக்கமை நிறுவவில்லை என்பதனை நினைவில் கொள்க, வஞ்சப்புகழ்ச்சியில்
- இதுபோன்று, தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவது விக்கிப்பீடியா கொள்கைக்கு எதிரானது. ஒரு கட்டுரை விக்கிப்பீடியாவில் இருந்து நீக்கிவிட்டாலும் கூட அக்கட்டுரையின் குறிப்பிடத்தக்க தன்மையை தக்க சான்றுகளுடன் நிருபீக்கும் போது, திரும்ப உருவாக்கமுடியும். இதுபோன்று விக்கிப்பீடியாவில் நடத்தல் பிற பயனர்களை மனதை புண்படுத்தும் என்பதை தங்களைப்போன்ற சான்றோர்கள் அறிந்திருத்தல் நலம். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:11, 1 செப்டம்பர் 2015 (UTC)
- @செலின் ஜார்ஜ் and Winnan Tirunallur:, குறிப்பிட்டத்தக்கமையை நிறுவ ஒரு மாத காலம் கொடுக்கப்பட்டிருந்தது. இக்காலம் போதவில்லை என்றால் உடனே கட்டுரையை மீட்டுத் தருகிறேன். தொடர்ந்து கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் உரையாடலாம். அதனை விடுத்து வழமையான துப்புரவுப் பணிகளில் ஈடுபடும் விக்கிப்பீடியரிடம் எள்ளல் நோக்கல் உரையாடுவது முறையற்றது. தவிர்க்க வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 09:20, 1 செப்டம்பர் 2015 (UTC)
- அதீதப் பேச்சிற்கு வருந்துகிறேன். இது ஒரு தன்னார்வலப் பணி அதில் ஈடுபடும் அனைவரையும் மதிக்கிறேன். ஒரு முக்கியத்துவம் இல்லாத கட்டுரையை நீக்குவது (உதாரணம் சாத்தம் பர்மிய மணி) சரி, ஆனால் தகுந்த மேற்கோள் காட்டப்பட்ட கட்டுரையை நீக்கிவிட்டால் அதனை மேம்படுத்த வாய்ப்பே இல்லாமல் போய்விடும் என்பதை நெறியாளர்கள் கருத்தில் கொள்ளலாம். முடிந்தால் இலண்டன் திருவள்ளுவர் சிலை கட்டுரையை மீட்டுத் தாருங்கள். நன்றி. @AntanO: பிழைதான், பெருந்தன்மையாக மன்னியுங்கள்.−முன்நிற்கும் கருத்து செலின் ஜார்ஜ் (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- @செலின் ஜார்ஜ்: இங்கே மீட்டுத் தந்துள்ளேன். குறிப்பிடத்தக்கமையை நிறுவினால் முதன்மை வெளிக்கு நகர்த்தி விடலாம். நன்றி. --மதனாகரன் (பேச்சு) 09:52, 1 செப்டம்பர் 2015 (UTC)
- @செலின் ஜார்ஜ்:, இருக்கிற மேற்கோள் போதுமானதாக இல்லை என்றே குறிப்பிடத்தக்கமை கேள்வி எழுந்தது. எனவே, கூடுதலாக இச்சிலை பற்றிய செய்திக் குறிப்புகள் ஏதும் இருக்கின்றவா என்று பார்த்து இணையுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 09:53, 1 செப்டம்பர் 2015 (UTC)
பேச்சு:வேட்டுவக் கவுண்டர்
தொகுஇதை பாருங்கள் https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D இதை பாருங்கள் https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D
ஸ்காட்லாந்து ? இசுக்கொட்லாந்து?
தொகுPlease Refer: Wikipedi Rule - Editors have learned that formation into "gangs" is the most effective way of imposing their views on opposite-minded contributors. It makes a travesty of the revert-rule when one individual can simply send an e-mail alert to friends requesting a timely "revert favour" once he has reached the limit of his daily reverts. This may apply to deletion debates as well, where a group of editors may be organised so as to always vote en masse in favour of keeping an article written by one of the gang, or related to the gang's main field of interest; or to push through deletion if their interest is a deletionism. Gangs sometimes do serious damage to Wikipedia's policies and guidelines also; by ganging up they can be written to say almost anything.
இரு பங்களிப்பாளருக்கு இந்த கட்டுரையில் கருத்து வேறுபாடு எழுந்த சமயம், எவ்வித உரையாடலுக்கும் வழி கொடாது, தன்னிச்சையாக ஒருவருக்கு சார்பாக திருத்தங்களைச் செய்வது குழுவமைத்து செயல்படுவதைப் போன்றதாகும்? தங்களுக்கு தெரியாத நியதியுமில்லை, நியாயமுமில்லை, ஆன போதும், விக்கியின் நியமங்களுக்கு உட்பட்டு செயல்படுவது நல்லது நண்பரே. நன்றிகள். --விண்ணன் (பேச்சு) 13:46, 8 செப்டம்பர் 2015 (UTC)
Hi . Request to translate
தொகுHi. please translate to Tamil this article =>>> [en:https://en.wikipedia.org/wiki/MyHeritage MyHeritage] . Thank you ! פארוק (பேச்சு) 17:33, 9 செப்டம்பர் 2015 (UTC)
உதவி
தொகுஇவ்வலைக்கட்டுரை எப்போது உருவாக்கப்பட்டது?--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:15, 10 செப்டம்பர் 2015 (UTC)
- சரியாகத் தெரியவில்லை. 2008-08-12 முதல் இயங்குகிறது. மஞ்சள் மூக்கு நாரை கட்டுரையில் பதிப்புரிமை மீறல் வார்ப்புருவை இணைத்துவிடுங்கள். --AntanO 16:36, 10 செப்டம்பர் 2015 (UTC)
--User:AntanO வணக்கம். அலைவரைவி கட்டுரையில் உள்ள வார்ப்புருவை கவனிக்கவும். --கி.மூர்த்தி 16:50, 10 செப்டம்பர் 2015 (UTC)
தங்கள் கவனத்திற்கு
தொகுஇந்தக் கைப்பாவைக் கணக்கின் பயனர் பக்கத்தில் இடப்பட்டுள்ள வார்ப்புருவில் ஆட்டுவிப்பவர் பெயர் இடம்பெறவில்லை. கைப்பாவைக் கணக்கின் பெயரையே தவறுதலாக இட்டுள்ளீர்கள். சீர்செய்ய வேண்டுகிறேன். --மதனாகரன் (பேச்சு) 17:12, 11 செப்டம்பர் 2015 (UTC)
- மூன்று கணக்குகள் கைப்பாவை சோதனையில் தெரிந்தன. ஆனால், மூன்றாவது கணக்கு இங்கு இல்லை. ஆ.வியில் மட்டுமே காணப்பட்டது. en:Template:Sockpuppeteer இதுவும் இங்கு தேவையாகவுள்ளது. --AntanO 17:20, 11 செப்டம்பர் 2015 (UTC)
தலையூர் காளிங்கரையர்
தொகுதலையூர் காளிங்கரையர் என்னும் எனது கட்டுரையை ஏன் மாற்றினீர்கள். இக்கதையின் நாயகனது உன்மையான பெயரை ஆராய்ந்து கொடுக்கப்பட்டது. வெறும் தலையூர் காளி என்பது மக்களால் அழைக்கப்படுவது.தலையூர் காளிங்கரையர் என்பதே முழுமையான பெயர் எனவே தலையூர் காளி கட்டுரையை தலையூர் காளிங்கரையர் என்னும் பக்கத்திற்கு மாற்றுமாறு கேட்டுக்கொள்கிரேன். நன்றி
- பேச்சு:தலையூர் காளி என்பதில் எது சரியான பெயர் என்பதை ஆதாரத்துடன் பதியுங்கள். சரியெனின் தலைப்பை மாற்றி விடலாம். --AntanO 09:15, 12 செப்டம்பர் 2015 (UTC)
தாங்களுக்கு புத்தகங்கள் ஆதாரங்கள் போதுமா? அல்லது கல்வெட்டு ஆதாரங்கள் வேண்டுமா ?
- எனக்குத் தேவையில்லை, விக்கிப்பீடியாவிற்குத் தேவை. இது தொடர்பில் அக்கட்டுரையில் பேச்சுப் பக்கத்தில் தெரிவியுங்கள். --AntanO 14:36, 13 செப்டம்பர் 2015 (UTC)
வேட்டுவக்கவுண்டர்
தொகுவேட்டுவக்கவுண்டர் இக்கட்டுரையை தொகுக்க முடியவில்லை, ஏன் தொகுப்பிற்கு வழி கூறுங்கள்.இக்கட்டுரையை தொகுக்க முடியவில்லை, ஏன் தொகுப்பிற்கு வழி கூறுங்கள்.