முதற்பக்க வலைவாசல் அறிவிப்பு

தொகு


பதிப்புரிமை மீறல்

தொகு

நான் உருவாக்கிய எந்த கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளீர்கள் என்று அறிந்து கொள்ளலாமா?

நன்றி --JeyTalk 14:27, 10 ஆகத்து 2014 2014 (UTC)

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி, சுழிபுரம் விக்டோரியா கல்லூரி. --AntonTalk 06:58, 10 ஆகத்து 2014 (UTC)Reply

ஐயா, நான் வரலாறு,வானியல்,தொடர்பான கட்டுரைகளை தொகுக்க விழைகிறேன்.மற்ற புத்தகங்களிலோ,இணையத்திலோ,பதிப்புரிமை மீறல் உள்ளதால்,ஆங்கில விக்கியை மொழிபெயர்ப்பு செய்யலாமா? Zubairபேச்சு 18:20, 15 செப்டம்பர் 2014 (UTC)

Zubair தாராளமாக மொழிபெயர்க்கலாம் இங்குள்ளவர்களில் பலர் (நான் உட்பட) இவ்வாறுதான் கட்டுரைகளை விரிவாக எழுதுகின்றோம். இவ்வாறு ஆங்கில விக்கிப்பீடியாவை மொழிபெயர்ப்பது பதிப்புரிமை மீறல் அல்ல.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:05, 15 செப்டம்பர் 2014 (UTC)

நன்றி --Zubairபேச்சு 20:30, 15 செப்டம்பர் 2014 (UTC)

நான் பதிந்த கட்டுரைத் தொகுப்பில் இருந்த தகவல்கள் நீங்கள் குறிப்பிட்ட அந்த தளத்தின் உரிமையுடனேயே பதிந்தேன். தற்போது அந்த தளத்தில் Creative Common License-ஐ பதித்துள்ளார். தற்போது மீண்டும் அந்த கட்டுரையை நான் பதியலாமா? - --Abdulbasith27 (பேச்சு) 18:17, 21 நவம்பர் 2014 (UTC)Reply

Abdulbasith27 அத் தளத்தில் சுட்டியைக் குறிப்பிட முடியுமா? --AntonTalk 21:58, 21 நவம்பர் 2014 (UTC)Reply

http://www.chittarkottai.com/ --Abdulbasith27 (பேச்சு) 09:25, 22 நவம்பர் 2014 (UTC)Reply

பதியலாம். நீங்கள் மீண்டும் பதியும்போது இக்கட்டுரை குறிப்பிடத்தக்கது என்பதுடன் தகுந்த சான்றுகளையும், குறிப்பாக வலைப்பதிவு போன்று அல்லாது கலைக்களஞ்சியத்திற்கு ஏற்றவாறு எழுதுங்கள். --AntonTalk 03:06, 23 நவம்பர் 2014 (UTC)Reply

Anton கீழே உள்ளவாறு பதிந்தால் போதுமா? இல்லையென்றால், வேறு என்ன செய்ய வேண்டும் என்று விளக்கமாக சொல்லுங்களேன்.

 The text of this website [or page, if you are specifically releasing one section] is available for modification and reuse under the terms of the Creative Commons 
Attribution-Sharealike 3.0 Unported License and the GNU Free Documentation License (unversioned, with no invariant sections, front-cover texts, or back-cover texts).

--92.98.196.18 18:38, 24 நவம்பர் 2014 (UTC)Reply

உங்கள் கவனத்திற்கு

தொகு

வணக்கம். படிமப் பேச்சு:Tvkovil3.jpg, படிமப் பேச்சு:Thiruppudaimaruthur.jpg இரண்டையும் கவனிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 16:36, 11 ஆகத்து 2014 (UTC)Reply

வணக்கம், அவை பதிப்புரிமை மீறலுள்ள படங்களே. நீக்கப்பட்டுவிட்டன. அவ்வாறான படிமங்களில் {{delete}} வார்ப்புருவை பதிப்புரிமை மீறல் குறிப்புடன் இட்டுவிடுங்கள்.--AntonTalk 16:45, 11 ஆகத்து 2014 (UTC)Reply

இனி அவ்வாறே செய்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 17:30, 11 ஆகத்து 2014 (UTC)Reply

படிமத்தை காமன்சுக்கு நகர்த்திய பிறகு நீக்க வேண்டுமா? nowcommons வார்ப்புரு இட்டால் போதுமா? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:43, 11 ஆகத்து 2014 (UTC)Reply
நீக்குவது சிறப்பு. வேறு பெயரில் நகர்த்தப்பட்டால், இணைப்புக்களை சரி செய்துவிடுங்கள். --AntonTalk 05:14, 12 ஆகத்து 2014 (UTC)Reply
இது எனக்கு முதல் முறை! வேறு ஏதேனும் கூடுதலாக செய்ய வேண்டியுள்ளனவா? தானியக்கமாக நகர்த்தும் வழிகள் உள்ளனவா? இன்னொரு விடயம்: வழிகாட்டு குறிப்புகளின் மூலமாக கட்டுரைகளை முதன்முறையாக இணைத்தேன். சரியாக இணைத்திருக்கிறேனா என பார்த்துக் கூறுங்கள். :)-தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:37, 12 ஆகத்து 2014 (UTC)Reply
கோப்பு நீக்கப்படாவிட்டால் nowcommons வார்ப்புருவை நீக்கிவிடுங்கள். மேலும், பொதுவிற்கு நகர்த்தப்பட்ட படிமத்தை உரிய பகுப்பில் சேர்த்துவிடுங்கள். தானியக்கமாக நகர்த்தும் வழிகள் உள்ளனவா எனத் தெரியவில்லை. பொதுவில் கேட்டுப் பார்க்கிறேன். "கோடியக்கரை அமுதகடேசுவரர் கோயில்" கட்டுரையினைக் கவனித்தேன். சரியாகவே இணைத்துள்ளீர்கள். இணைப்பு வேலைக்கு இன்னுமொரு ஆள் கிடைத்தாயிற்று. :)--AntonTalk 12:24, 12 ஆகத்து 2014 (UTC)Reply
  விருப்பம் எதை உரிய பகுப்பு எனக் குறிப்பிடுகிறீர்கள்? நகர்த்தியவுடன் இங்கே நீக்கிவிடலாம் தானே! இன்னும் கொஞ்ச நாளைக்கு என் இணைத்தல் பதிகைகளையும், படிம பதிகைகளையும் கவனத்தில் கொள்ளுமாறு வேண்டுகிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு)
இந்தப் பகுப்பைக் குறிப்பிட்டேன். ஆம், கவனிக்கிறேன்.--AntonTalk 02:18, 13 ஆகத்து 2014 (UTC)Reply

வேண்டுகோள்

தொகு

வணக்கம். பேச்சு:வன்னிய புராணம் இதனைப் பார்த்து உங்கள் கருத்தைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 06:02, 16 ஆகத்து 2014 (UTC)Reply

பெண்ணியம் வலைவாசல்

தொகு

வணக்கம் . பெண்ணியம் தொடர்பாக புதிதாக ஒரு வலைவாசல் துவங்கப்பட்டுள்ளது . இதன் வடிவமைப்பு , உள்ளடக்கம் எவ்வாறாக இருக்கலாம் என்று தங்களுக்கு ஏதேனும் கருத்து இருப்பின் , வலைவாசல் பேச்சு பக்கத்திலோ அல்லது ஆலமரத்தடியிலோ தெரிவிக்கவும் .நன்றி--Commons sibi (பேச்சு) 18:18, 27 அக்டோபர் 2014 (UTC)Reply

படிமம் நீக்கம்

தொகு

படிமம்:V.P.Singh.jpg என்ற படிமத்தை நீக்கியிருக்கிறீர்கள். ஆனால், அப்படிமம் இணைக்கப்பட்ட பக்கங்களில் திருத்தங்கள் எதுவும் செய்யவில்லை.--Kanags \உரையாடுக 07:19, 29 அக்டோபர் 2014 (UTC)Reply

 Y ஆயிற்று--AntonTalk 07:56, 29 அக்டோபர் 2014 (UTC)Reply

self promotion

தொகு

அன்ரன், மலாக்கா முத்துகிருஷ்ணனின் இணைப்புகளை நீக்குவதற்கு self promotion என்ற சொற்றடரைப் பயன்படுத்த வேண்டாம் எனத் அருள் கூர்ந்து கேட்டுக் கொள்கிறேன். இது அவரை அவமதிப்பது போன்றது. பல நூற்றுக்கணக்கான நிறைவான கட்டுரைகளைத் தந்துள்ல இப்பயனரை இவ்வாறு அவமதிப்பது அனைத்துப் பயனரையும் அவமதிப்பது போலாகும். எதற்காக இவ்வாறு விக்கியில் பங்களித்து அவமானப்பட வேண்டும் எனப் பலர் இவ்வாறு எண்ணி நீண்ட நாள் பங்களிப்பாளர்கள் விலகியிருக்கிறார்கள். அந்த நிலைக்கு நானும் சென்றிருக்கிறேன். எனவே விக்கியில் தீவிரவாதியாக இராமல் மென்போக்காக இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.--Kanags \உரையாடுக 10:04, 11 நவம்பர் 2014 (UTC)Reply

பின்வருவன எல்லாவற்றுக்கும் பதில் தாருங்கள், சிறிதரன்.
  • நீங்கள் கேட்டுக் கொண்டபடி self promotion என்ற சொற்றடரைப் பயன்படுத்துவதை நிறுத்துகிறேன். இது self promotion இல்லையென்றால் வேறு என்ன? எச்சொல் பயன்படுத்தலாம்? அல்லது அவர் தன் வலைப்பூக்கு கொடுத்துள்ள இணைப்புக்களை நீங்களே நீக்கிவிடுங்கள். மேலும், விரும்பினால் அப்பயனரின் பதிப்புரிமை மீறல் படிமங்களையும் நீக்கிவிடுங்கள்.
  • நான் யாரையும் அவமதிக்கவில்லை. நீங்கள் அவ்வாறு எடுத்துக் கொண்டால் நான் அதற்கு நான் பொறுப்பல்ல. நிர்வாகியாகிய உங்களுக்கும், நிறைவான கட்டுரைகளைத் தந்துள்ளதாக நீங்கள் குறிப்பிடும் அப்பயனருக்கும் ஒரு பயனர் தனது சொந்த வலைத்தளத்துக்கோ, வலைப்பதிவுக்கோ வெளி இணைப்பு தரக்கூடாது என்ற விக்கி கொள்கை தெரியாதா? அவ்வாறான ஒன்று காணப்படுகையில் அதை நீங்குவதில் உங்கள் பங்கென்ன?
  • //நிலைக்கு நானும் சென்றிருக்கிறேன்// உங்கள் செயற்பாடுகளால் நானும் அவ்வாறு சென்றிருக்கிறேன் என்பதையும் கவனத்திற் கொள்க.
  • கொள்கை மீறல் தொகுப்பை நீக்குவது தீவிரவாதமா? எவ்விதத்தில் அது தீவிரவாதமாகும்? இவ்விடயத்தில் எப்படி மென்போக்காக இருப்பது?
  • //தீவிரவாதியாக // இப்பயெல்லாம் மற்ற பயனரை அழைக்கலாமா? நான் மேலே குறிப்பிட்ட உங்கள் செயற்பாடுகளால்... என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம். இனி இவ்வாறான வன் சொற்களை என் மீது பிரயோகிக்க வேண்டாம் என இறுதியாகக் கேட்டுக் கொள்கிறேன். எனக்கும் எல்லையுண்டு என்பதை அறிக.
  • தயவுசெய்து விக்கி கொள்கைக்குப் புறம்பே என்னுடன் இவ்வாறு உரையாடுவதைத் தவிருங்கள். கண்ணியத்துடன் உரையாடக் கற்றுக் கொள்ளுங்கள்.

--AntonTalk 11:14, 11 நவம்பர் 2014 (UTC)Reply

அப்பயனர் விக்கிநடைமுறை அறியாததனாலேயே அவ்வாறு சேர்த்திருக்கிறார் என்பதை நான் நூற்றுக்கு நூறு வீதம் நம்புகிறேன். அவ்வாறு எழுதப்பட்ட பல குறிப்புகளை நானே நீக்கியுள்ளேன். நானும் எனது சொந்த வலைப்பதிவுகளை ஆரம்பத்தில் சேர்த்தே வந்திருந்தேன். பின்னர் இரவி சுட்டிக்காட்டியதை அடுத்து அனைத்தையும் நீக்கினேன். சுந்தரும் தானும் இவ்வாறு சேர்த்ததாக முன்பொரு முறை கூறியுள்ளார். "சொந்த வலைப்பதிவை இணைப்பது விக்கி நடைமுறை அல்ல" போன்ற கண்ணியமான சொற்களை சேர்த்திருக்கலாம். இதைத்தான் நான் மென்போக்கு அல்லது தீவிரவாதம் என்றேன். self promotion போன்ற சொற்களை மலாக்கா போன்ற பெரியவர்கள் தாங்க மாட்டார்கள். உங்கள் துப்பரவுப் பணிகளை நான் குறை கூறவில்லை. உங்கள் எழுத்துகளால் மற்றவர்கள் எவ்வாறு புண்படுவார்கள் என நீங்கள் அறியாதிருந்தால் நான் அதற்குப் பொறுப்பாளியும் அல்ல. //விக்கி கொள்கைக்குப் புறம்பே என்னுடன் இவ்வாறு உரையாடுவதைத் தவிருங்கள்.// இது பற்றி வேறு எங்கு எழுதலாம? முகநூலிலா அல்லது உங்களுக்குத் தனிப்பட்ட மின்னஞ்சலிலா? விக்கி பற்றிய உரையாடல்களை விக்கிக்கு வெளியே மின்னஞ்சல் மூலம் உரையாடுவதை முடிந்த அளவில் நான் தவிர்த்துக் கொள்பவன். விக்கி பற்றி எனக்கு வரும் மின்னஞ்சல்களுக்கு நான் பதிலளிப்பதையும் விரும்புவதில்லை.--Kanags \உரையாடுக 11:29, 11 நவம்பர் 2014 (UTC)Reply

வழமையாக நீங்கள் செயற்படுவதுபோன்று என் கேள்விகள் எல்லாவற்றுக்கும் பதிலளிக்காது. இயலுமானவற்றுக்கு மட்டும் பதிலளித்துள்ளளீர்கள். அத்துடன், தீவிரவாதி என்ற சொற் பிரயோகத்திற்கு நியாயம் கற்பிக்கின்றீர்கள். ஒட்டுமொத்தமாக நீங்கள் கண்ணியமாக நடந்து கொள்வதாகவும் நான் கண்ணியமற்று எழுதுவதாகவும் குறை கூறுகிறீர்கள். அப்படியாயின் விக்கியில் முறையிடுங்கள். "கண்ணியமான சொற்களை சேர்த்திருக்கலாம்" எனும் நீங்கள் ஏன் என்னுடன் கண்ணியமான சொற்களை சேர்த்து உரையாடவில்லை. இந்த ஐபி பயனரை இதற்காக தடை செய்த நீங்கள் விக்கி தடை கொள்கையையும் கவனிக்கவில்லை, கண்ணியமாகவும் நடந்து கொள்ளவில்லை என்பதைக் கவனித்தீர்களா? விக்கி கொள்கைக்கு புறம்பே செயற்படும்போது நியாயம் கேட்டால் நான் உங்களுக்குத் தீவிரவாதி, பொத்திக் கொண்டு இருந்தால் கண்ணியவானா? நான் விக்கிக் கொள்கைக்கு ஏற்பவே நடப்பேன். அதற்குப் புறம்பாக நான் நடந்தால் விக்கி கொள்கையின் அடிப்படையில் கண்ணியமாக உரையாடுங்கள். --AntonTalk 03:12, 12 நவம்பர் 2014 (UTC)Reply

அந்தப் பயனர் இவ்வாறு நடந்து கொண்டது இது முதல் தடவையல்ல என்பது உங்களுக்குத் தெரியாமலிருப்பது எனக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை. பல இந்தியக் கட்டுரைகளில் தேவையில்லாமல் உருது மொழி இணைப்புகளை ஏற்கனவே தந்துள்ளார். ஏற்கனவே ஓரிரு நாட்கள் தடையும் பெற்றுள்ளார். இதனாலேயே அவரை சில காலத்துக்குத் தடை செய்தேன். எனவே ஆராய்ந்தறியாமல் ஏட்டிக்குப் போட்டியாகப் பிழை கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு குற்றச்சாட்டுகள் சுமத்துவதை அருள் கூர்ந்து நிறுத்துங்கள். இவ்வாறு நீங்கள் செய்வது முதல் தடவையும் அல்ல.--Kanags \உரையாடுக 08:31, 13 நவம்பர் 2014 (UTC)Reply
எனக்குத் தெரியாமலிருப்பது ஆச்சரியத்தைத் தரமுன் அந்தப் பயனர் தடை முன்னர் பெற்றது எப்போது? எங்கே தடைப் பதிகை? எப்போது தடை செய்தீர்கள்? என்னில் ஏட்டிக்குப் போட்டியாகப் பிழை கண்டுபிடிக்க முற்படுவது ஏன்? ஏட்டிக்குப் போட்டியாகப் பிழை கண்டுபிடிக்க வேண்டும் எப்போது செயற்பட்டுள்ளேன்? திருப்பிக் கேட்டால் ஏட்டிக்குப் போட்டியா? உங்களது ஏட்டிக்குப் போட்டி சில எ.கா: என் பதிலுக்குப் பின்னர் செய்த Reverting. (See: Revert vandalism on sight, but revert an edit made in good faith only after careful consideration. Editors should provide an explanation when reverting.) இங்கே -என்னில் குற்றம் சுமத்த முற்பட்டது. இங்கே - என்னுடன் தொகுத்தற் போரில் ஈடுபட்டது (மேலும் பார்க்க: பேச்சு:பசு) இங்கெல்லாம் நான் அமைதியாகவே இருந்துள்ளேன் சிறிதரன். இப்போதும் என் பேச்சுப் பக்கம் வந்து என்னை வம்புக்கு இழுக்கிறீர்கள். நான் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் முறையாக பதிலதர முடியுமா உம்மால்? முறையாக உரையாடாது, பேச்சினை திருப்பி, என் மீது குற்றம் சுமத்துவது தொடர்ந்தால் உமக்கெதிரான விக்கியில் முறையிட நேரிடும் அல்லது நீர் குறிப்பிட்டவாறு தீவிரவாதியாக பதில் கொடுக்க நேரிடும். --AntonTalk 11:22, 13 நவம்பர் 2014 (UTC)Reply
எங்காவது சென்று முறையிடுங்கள். நான் பயப்படவில்லை. உங்கள் சில revert களுக்கெல்லாம் நான் கேள்வி கேட்டால் உங்களால் பதில் கூற முடியாது. எனது துப்பரவுப் பணிகளில் குறை இருந்தால் அதிகாரிகளிடத்தில் முறையிடுங்கள். //இங்கெல்லாம் நான் அமைதியாகவே இருந்துள்ளேன்// ஆமாம், நான் சரியாக செய்வதாக நீங்கள் உணர்ந்தால், உங்களால் அமைதியாகத் தானே இருக்க முடியும்:)--Kanags \உரையாடுக

நீர் பயப்படாமல் ரெளடித்தனம் செய்வீர் என்பது எனக்குத் தெரியும். தீவிரவாதி என விழிக்கும் உமக்கு முறையீடு பற்றிய பயம் இருக்காதுதானே. அடுத்தமுறை உம்மை ஓருமையில் அழைப்பேன். உமக்கு மரியாதை கொடுப்பதே வீண்! --AntonTalk 12:02, 13 நவம்பர் 2014 (UTC)Reply

திருகோணமலை ஆலடி விநாயகர் ஆலயம் வெளியிணைப்பு நீக்க விளக்கம் கோரல்

தொகு

நான் பங்களித்து இருந்த இக்கட்டுரையில் திருகோணமலை ஆலடி விநாயகர் ஆலயம் வெளியிணைப்பு http://www.geevanathy.com/2009/01/2009_23.html உங்களால் நீக்கப்பட்டுள்ளது. இதற்கு நீங்கள் unreliable source என்று காரணம் கொடுத்துள்ளீர்கள். வெறுமனே வெளியிணைப்புகளை ஆதாரம் இன்றி நீக்குவது நல்லதல்ல. இதில் என்னவிடயம் நம்பமுடியாமல் இருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்தினால் நல்லது. வலைப்பதிவு எழுதியவர் அங்கு பதிலளிப்பதாகவே தெரிகிறது.--உமாபதி \பேச்சு 10:09, 6 திசம்பர் 2014 (UTC)Reply

வெளி இணைப்புகள் பற்றிய கொள்கையின்படி (வெளி இணைப்புகள், External links) அவ்விணைப்பு பல இடங்களில் முரண்படுகிறது. எ.கா: en:Wikipedia:Identifying reliable sources மேலும், குறித்த பயனரின் பங்களிப்பு தொடர்ச்சியாக குறித்த வலைத்தளத்திற்கு இணைப்பை ஏற்படுத்தியிருப்பதையும் காணலாம். (en:Wikipedia:Conflict of interest, en:Wikipedia:Spam) அத்துடன் அவ்வலைத்தளத்தின் பதிப்புரிமை மீறலாகவும் இக்கட்டுரை அமைந்துள்ளது. எ.கா: 1905 இல் மடாலயம் அமைத்து வழிபட்டு வந்திருக்கிறார்கள் என்பது அப்படியே இரண்டிலும் உள்ளது. --AntonTalk 21:00, 6 திசம்பர் 2014 (UTC)Reply

தங்களின் கவனத்திற்கு...

தொகு

வணக்கம். விக்கிப்பீடியாவின் கொள்கை மற்றும் பரப்பு பற்றிய அளவினை நன்கு தெரிந்து கொள்ளுங்கள் என அண்மையில் நீங்கள் எழுதிய வாக்கியத்தில் எழுத்துப்பிழை உள்ளது. திருத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:30, 15 திசம்பர் 2014 (UTC)Reply

நன்றி செல்வசிவகுருநாதன். --AntonTalk 17:47, 15 திசம்பர் 2014 (UTC)Reply

புணர்ச்சி பிழையானால் பொருளும் பிழையாகும்

தொகு

ஐயா, வணக்கம்!

"புணர்ச்சி பிழையானால் பொருளும் பிழையாகும்"

என்னும் என் கட்டுரையை தாங்கள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கியதற்கான காரணத்தை அறியவிரும்புகிறேன்.

அத்துடன், விக்கிப்பீடியாவில் நான் எழுதுவதற்கு எனக்கு வழிகாட்டவேண்டுமென்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி!

பொன்முடி, உங்கள் பேச்சுப்பக்கத்தில் பதிலிட்டுள்ளேன். --AntonTalk 05:27, 16 திசம்பர் 2014 (UTC)Reply

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

தொகு
வாழ்துக்களுக்கு நன்றி இஜாஸ் --AntonTalk 16:55, 17 திசம்பர் 2014 (UTC)Reply
  விருப்பம் அன்டன் அவர்களே பிறந்தநாள் வாழ்த்துக்கள் :) --{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 19:09, 17 திசம்பர் 2014 (UTC)Reply
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் !!--மணியன் (பேச்சு) 03:27, 18 திசம்பர் 2014 (UTC)Reply
நன்றி ஸ்ரீகர்சன், மணியன் --AntonTalk 05:10, 18 திசம்பர் 2014 (UTC)Reply
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்டன்.......................... இன்றைய நாள் தங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:14, 18 திசம்பர் 2014 (UTC)Reply
நன்றி ஆதவன். --AntonTalk 13:14, 18 திசம்பர் 2014 (UTC)Reply

பயனர்பெயர் குழப்பம்

தொகு

'பொன்முடி' 'பொன்முடிவடிவேல்' 'பொன்னன்' ஆகியவற்றை ஒவ்வொருதலத்திலும் புகுபகுதிக்கு கேட்டதால் அவ்வாறு உருவாக்கவேண்டியதாயிற்று. இவற்றுள் ஒன்றைத்தவிர பிறவற்றை நீக்கிவிடுவது நல்லது. இப்போது 'பொன்னன்' என்பதுமட்டும் இருக்கட்டும். தாங்களே பிறவற்றை நீக்கிவிட்டால் மகிழ்வேன். நன்றி.

- (பொன்முடி - பொன்முடிவடிவேல்) - பொன்னன். 11. 45 / 18 -12 - 2014

உரைநடைக்கு இலக்கணம்

தொகு

'உரைநடைக்கு இலக்கணம்' என்றதலைப்பில் ஒரு கட்டுரையை எழுதத்தொடங்கியுள்ளேன். அதை பார்வையிட்டு, இங்கே அதை எழுதுவது சரியாவென்பதை சொல்லுங்கள். இங்கே இவ்வாறு எழுதமுடியாதென்றால், வேறெங்காவது எழுதமுடியுமாவென்பதையும் தெரியப்படுத்தவும். நன்றி!

- பொன்னன் 12.30/ 18 - 12 - 2014


தங்கள் கவனத்திற்கு

தொகு

பேச்சு:நியூயார்க் நகரத்தின் வரலாறு --யாழ்ஸ்ரீ (பேச்சு) 07:29, 22 திசம்பர் 2014 (UTC)Reply

உதவி வேண்டல்

தொகு

வணக்கம். இரு தெளிவுகள் வேண்டுகிறேன். (1)தஞ்சாவூர் என்ற நூலுக்கான அட்டை புகைப்படம் என்னால் எடுக்கப்பட்டு, சேர்க்கப்பட்டுள்ளது. அதனை விக்கிகாமன்சில் பதியும்போது ஏதோ விடுபாடு செய்துவிட்டேன் என நினைக்கிறேன். அப்படம் நீக்காமல் இருக்க உதவ வேண்டுகிறேன். (இவ்வாறே முன்னர் சில அறிஞர்களுடைய புகைப்படத்தை இட்டேன்.) இதுதொடர்பாக காமன்சில் எழுதியுள்ளேன். (2) அடிக்குறிப்பு இல்லாததால் கட்டுரை நீக்கப்படும் என்ற குறிப்பினைக் கண்டேன். நூல் மதிப்புரை அல்லது அறிமுகம் என்ற நிலையில் அடிக்குறிப்பு தருவது சிரமமாக உள்ளது. வாய்ப்பு இருப்பின் நூல் மதிப்புரை/அறிமுகம் மாதிரி இணைப்புகள் ஏதாவது அனுப்பவேண்டுகிறேன். அதன் அடிப்படையில் எழுத முயற்சிப்பேன். தங்களின் உதவி என்னை மென்மேலும் எழுதவும், செழுமைப்படுத்திக்கொள்ளவும் உதவும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:27, 22 திசம்பர் 2014 (UTC)Reply

பா.ஜம்புலிங்கம். வணக்கம்! நூல் அட்டைகளை இங்கு பதிவேற்றுங்கள். அங்கு அது கட்டாயம் அழிக்கப்படும். காரணம் பொது (கொமன்ஸ்) உள்நாட்டுச் சட்டங்களை மீறாமல் இருப்பதில் கவனமாய் உள்ளது. (பார்க்க: Freedom of panorama - India) உங்களால் எடுக்கப்பட்ட படங்களை அங்கு (பொதுவில்) தாராளமாகப் பதிவேற்றுங்கள். பதிப்புரிமை மீறலற்ற ஏனையவற்றை இங்கு த.வி.யில் பதிவேற்றுங்கள். எ.கா: இப்படம் என்னால் பதிவேற்றப்பட்டது. 100 ஆண்டுகளுக்கு முன்னான படமாய் உள்ளதால் பதிப்புரிமைச் சிக்கல் இல்லை. இங்கு படம் பெறப்பட்ட மூலமும், அனுமதியும் தெளிவாக உள்ளதால் அழிக்கப்படாமல் உள்ளது. வேறு ஏதும் உதவி தேவையெனில் கேளுங்கள் --AntonTalk 05:17, 24 திசம்பர் 2014 (UTC)Reply
தாங்கள் நூல் அட்டைகளை இங்கு பதிவேற்றுங்கள் என்று கூறியுள்ளீர்கள். எங்கு என புரியவில்லை. பதிப்புரிமை மீறலற்ற ஏனையவற்றை இங்கு த.வி.யில் பதிவேற்றுங்கள் என்று கூறியுள்ளீர்கள். த.வி. என்றால் என்ன என்று தெரியவில்லை. மறுபடியும் தஞ்சாவூர் நூலட்டையை காமன்சில் பதிவு செய்து (அந்தஅட்டையை நான் ஸ்கேன் செய்து ஏற்றுவதால்) என் சொந்த முயற்சி என எழுதலாமா? ஏனென்றால் நூலின் அட்டையை ஸ்கேன் செய்து கட்டுரையில் சேர்த்தது நானே. புகைப்படங்கள் இடுதலில் என்னுடைய புரிதல் சற்று சிரமமாக உள்ளது. எனது மற்றொரு தெளிவாக அடிக்குறிப்பு தொடர்பாக வாய்ப்பு இருப்பின் நூல் மதிப்புரை/அறிமுகம் மாதிரி இணைப்புகள் ஏதாவது அனுப்பவேண்டியிருந்தேன். இரு ஐயங்களையும் தெளிவிக்க வேண்டுகிறேன். தொந்தரவுக்குப் பொறுத்துக்கொள்க. - பா.ஜம்புலிங்கம்.
இங்கு என்றால் தமிழ் விக்கியில். தமிழ் விக்கிப்பீடியாவில் பதிவேற்ற இங்கு செல்லவும், இடது பக்கத்தில் இணைப்புக்களில் கருவிப்பெட்டியிலும் உள்ளது. த.வி. என்றால் தமிழ் விக்கிபீடியா. அன்டன், ஸ்கான் செய்து தமிழ் விக்கிப்பீடியாவில் பதிவேற்றும் படி கூறியிருக்கிறார். தமிழ் விக்கிப்பீடியாவில் இந்த உரிமத்தில் நீங்கள் பதிவேற்றலாம். நீங்கள் ஸ்கான் செய்து ஏற்றுவதால் சொந்த முயற்சி என எழுத முடியாது. அது பற்றி மேற்குறிப்பிட்ட உரிமத்தில் உள்ளது. நன்றி--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 15:17, 24 திசம்பர் 2014 (UTC)Reply

பா.ஜம்புலிங்கம், ஆதவன் குறிப்பிட்டது சரியானது. தற்போது அட்டையினை தமிழ் விக்கியில் பதிவேற்றியுள்ளேன். இவ்வாறே நீங்களும் நூல் அட்டைகளைப் பதிவேற்றலாம். பொதுவகத்தில் அழிந்தாலும் இங்கிருந்து பயன்படுத்தலாம். நூல் அட்டையைப் பதிவேற்றும்போது "அனுமதி" என்பதில் நூல் அட்டை என்பதைத் தெரிவு செய்யுங்கள். அந்த நூலுக்கு பதிப்புரிமம் உள்ளவருக்கே அதன் மீது உரிமை சகல உரிமைகளுகளும் உள்ளன. நூலை வாங்கி நாம் வைத்திருப்பதால் அது எமக்குச் சொந்தமாயினும் பொதுப்பரப்பில் எம்மால் பதிவேற்ற அல்லது பகிர முடியாது. அதனை நூலுக்கு பதிப்புரிமம் உள்ளவர்தான் செய்ய முடியும். இது தொந்தரவு இல்லை. தாராளமாக ஐயங்களைக் கேளுங்கள். --AntonTalk 12:56, 25 திசம்பர் 2014 (UTC)Reply

தங்கள் இருவருடைய கருத்துகளின் மூலமாக நூல் அட்டையை பதிவேற்றுவது தொடர்பாக அறிந்தேன். இனி இந்நடைமுறையை கடைபிடிப்பேன். இனி நூல் அட்டையைப் பதிவேற்றும்போது நூல் அட்டை என்பதை மனதில் கொள்வேன். தெளிவாக்கியமைக்கு நன்றி. எனது மற்றொரு ஐயம் நூல் அறிமுகம் தொடர்பானது. ஒரு நூலைப் பற்றி எழுதும்போது அடிக்குறிப்பு தருவது மிகவும் சிரமமாக உள்ளது. ஏனெனில் நாம் விவாதிப்பது அந்த குறிப்பிட்ட நூல் அல்லது ஆசிரியரைப் பற்றியே. அடிக்குறிப்பு என்பதானது இந்நிலையில் சிக்கல் தருவதாக உணர்கிறேன். ஒரு நூல் பற்றிய அறிமுகத்தையோ/விக்கி விதிப்படி அறிமுகம் செய்யப்பட்ட பக்கத்தையோ மாதிரிக்காக எனக்கு அனுப்பவேண்டுகிறேன். மறுபடியும் நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:04, 26 திசம்பர் 2014 (UTC)Reply

பா.ஜம்புலிங்கம், நம்முடைய சொந்த விமர்சனங்களை இங்கு எழுத முடியாது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். உண்மையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தகவல் திரட்டுக்களையே எம்மால் விக்கிப்பீடியாவில் கட்டுரையாக தொகுக்க முடியும். தமிழ் விக்கியில் நூல்கள் பற்றி சிறப்பாக எழுதப்பட்ட பக்கங்கள் உள்ளனவா என்பதை நான் அறியேன். அறியும் பட்சத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்வேன். ஆங்கில விக்கியில் இருந்து இரு எடுத்துக்காட்டுக்ககள். The Secret, When God Writes Your Love Story --AntonTalk 06:08, 26 திசம்பர் 2014 (UTC)Reply

வணக்கம் திரு ஆன்டன். தங்களின் மறுமொழி உதவியாக இருந்தது. ஆங்கில விக்கியில் பார்த்தேன். பின்னர் தமிழ் விக்கியில் பார்த்தேன். இந்திய அளவையியலில் அனுமானம் (நூல்)என்ற நூல் பற்றிய பதிவினைக் கண்டேன். முடிந்தவரை தாங்கள் கூறியவாறு அடிக்குறிப்புகள் தந்து, உரிய திருத்தம் செய்து, மேன்மைப்படுத்த முயற்சிப்பேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 08:22, 26 திசம்பர் 2014 (UTC) தமிழ் விக்கியில் நான் தேடியபோது பல நூல் அறிமுகங்கள் அடிக்குறிப்பு இல்லாமல் உள்ளதைக் காணமுடிந்தது. நேற்று (26.12.2014) கூறியபடி முடிந்தவரை அடிக்குறிப்பைச் சேர்க்க முயற்சிக்கிறேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:13, 27 திசம்பர் 2014 (UTC)Reply

தமிழ் விக்கியில் பல கட்டுரைகள் உசாத்துணைகள் இன்றி உள்ளன. இது பெரும் குறைபாடும், கலைக்களஞ்சியத்திற்கு வலுவற்ற தன்மையுமாகும். உங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள். --AntonTalk 08:21, 28 திசம்பர் 2014 (UTC)Reply

சிகரம்:பிலிப்பீன்சு

தொகு
சிகரம் என்ற ஒரு புதிய திட்டத்தினூடாக பிலிப்பீன்சு கட்டுரையை முழுமையாக விரிவாக்கியுள்ளேன். இக்கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக்க முன்மொழிவதற்காகச் சில உதவிகளை உங்களிடத்தில் நாடி நிற்கின்றேன். உங்களுக்கு நேரமிருப்பின் பிலிப்பீன்சு கட்டுரையைச் சரிபார்த்து பிழைகள் இருப்பின் திருத்தி உதவுங்கள். மேலதிக தகவல்களுக்கு திட்டத்தின் பக்கத்தைப் பாருங்கள்.

--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 04:08, 28 திசம்பர் 2014 (UTC)Reply

உங்கள் திட்டத்திற்கும், தொலைநோக்கிற்கும் பாராட்டுக்கள் ஸ்ரீகர்சன். எனக்கும் உங்களைப் போலவே சிறப்புக் கட்டுரைகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற ஆதங்கமும் திட்டமும் இருந்தது. ஆனால், இங்கு அதற்குப் போதியளவு ஆதரவு கிடைக்கவில்லை. சிறப்புக் கட்டுரை முன்மொழிவென்பதே காலாவதியாகிவிட்டது. மேலும், முதற்பக்கக் கட்டுரைகள் உருவாக்குதல் மற்றும் அதன் நடைமுறை என்பன திருப்தியளிப்பதாக நான் உணரவில்லை. ஏதோ கட்டுரை என்றில்லாமல் தரமான கட்டுரைகள் உருவாக்கப்படுதல் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அதனை முன்நகர்த்த 10 வருடங்களாகியும் நாம் தயாரில்லை போலுள்ளது. எப்படியிருப்பினும் உங்கள் முயற்சிக்குத் துணை நிற்க என்னால் இயலும். எனது ஆர்வம், விடய அறிவு போன்றவற்றுக்கேற்ப என்னால் பங்களிக்க முடியும். --AntonTalk 08:34, 28 திசம்பர் 2014 (UTC)Reply
  விருப்பம் உங்கள் ஆதரவிற்கு நன்றிகள். தங்கள் பயன்மிக்க தொகுப்புக்களைக் கண்டேன். முதல் infobox பெரிதாக (அகலமாக) இருந்தது அதனைச் சரிசெய்து அழகான தோற்றத்தை அளித்தமைக்கு நன்றி. வார்ப்புரு:infobox country இல் பல பிரிவுகள் ஆ.வி யில் உள்ளவாறு மேலும் இணைகப்பட வேண்டியுள்ளது. தங்களுக்கு நேரமிருந்தால் வார்ப்புரு:infobox country ஐ மேம்படுத்தி உதவுங்கள்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 15:55, 28 திசம்பர் 2014 (UTC)Reply

அன்டன் அவர்களே பிலிப்பீன்சு கட்டுரையை உரைதிருத்தி உதவியமைக்கு நன்றி. அத்துடன் வார்ப்புரு:Data Philippines, வார்ப்புரு:Data/popdens என்பவற்றை உருவாக்கியமைக்கும் நன்றி. கட்டுரையின் பராமரிப்புப் பணிக்காக இப்பக்கத்தை உருவாக்கியுள்ளேன். இங்குள்ள தகவல்களை வாசித்து ஆவன செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். --{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 06:25, 1 சனவரி 2015 (UTC)Reply

நல்லது ஸ்ரீகர்சன். முன்னமே நீங்கள் குறிப்பிட்டதுபோல infobox country உட்பட்ட, இதனுடன் தொடர்புபட்ட வார்ப்புருக்கள் திருத்தப்பட/மேம்படுத்தப்பட வேண்டும். எ.கா: பரப்பளவு மொத்தம் 3 கிமீ² என்றுள்ளது. அவற்றையும் கட்டுரையையும் திருத்திவிடுவேன். --AntonTalk 08:41, 1 சனவரி 2015 (UTC)Reply
பரப்பளவு மொத்தம் 3,00,000 கிமீ² 120,000 சது. மை என்று இருக்க வேண்டியது பரப்பளவு மொத்தம் 3 கிமீ² 120 சது. மை என்று இருப்பதற்கு formatnum இருமுறை பயன்படுத்தப்பட்டதே காரணம் தற்போது சரிசெய்துவிட்டேன். உங்கள் ஆதரவிற்கும் உதவிகளுக்கும் நன்றி.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 10:46, 5 சனவரி 2015 (UTC)Reply

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு

தொகு
 
அனைவரும் வருக

வணக்கம் AntanO/தொகுப்பு 5!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥

。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:06, 30 திசம்பர் 2014 (UTC)Reply
வணக்கம் அன்டன், வழமை போலவே இம்மாதம் உங்கள் முனைப்பான பங்களிப்புகளைக் கண்டு மகிழ்கிறேன். உங்கள் பங்களிப்புகளை மற்றவர்களுக்கு உரித்தாக்குவதன் மூலம் அவர்களையும் உற்சாகத்துடன் இந்த முயற்சியில் ஈடுபட வைக்க முடியும். இம்மாதமும் தொடர்ந்தும் மேலும் பல முனைப்பான பங்களிப்பாளர்களை உருவாக்குவது தொடர்பான உங்கள் ஆலோசனைகளை இங்கு தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:56, 16 சனவரி 2015 (UTC)Reply

உங்கள் பார்வைக்கு

தொகு

பேச்சு:சோளகர்-இங்கு உங்கள் பரிந்துரையைத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 14:08, 4 சனவரி 2015 (UTC)Reply

விக்கித்தரவில் சேர்க்கப்படவில்லை

தொகு

அசகான் பற்றிய கட்டுரை விக்கித்தரவில் சேர்க்கப்படவில்லை. சரியான விக்கித்தரவில் சேர்த்து உதவுங்கள் என்று அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. எனக்கு சரியாகப் புரியவில்லை. தயவுசெய்து சற்று விளக்கவும். நன்றி.மலாக்கா முத்துக்கிருஷ்ணன் பேச்சு--ksmuthukrishnan 06:51, 5 சனவரி 2015 (UTC)Reply

பார்க்கவும் விக்கித்தரவில் உள்ளது மலாக்கா முத்துக்கிருஷ்ணன்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 07:34, 5 சனவரி 2015 (UTC)Reply

தென் மாகாணம்

தொகு

அன்டன், இலங்கையின் தென்மாகாணம் சீனாவின் ஹைனான் மாகாணத்தின் சகோதர மாகாணம் என பின்வரும் இணைப்புகள் மூலம் தெரிகிறதே. http://enfaohn.hainan.gov.cn/swsqwywb/internationalSisterRelationship/ssp/200909/t20090924_8479.html http://enfaohn.hainan.gov.cn/swsqwywb/internationalSisterRelationship/ssp/

இவை உத்தியோகபூர்வ தகவல்கள் இல்லை எனக் கருதுகிறீர்களா? 'எவ்வாறு' வார்ப்புரு இடப்பட்டதன் காரணம் என்ன?

பார்க்க: மாற்றங்கள் --சிவகோசரன் (பேச்சு) 16:43, 13 சனவரி 2015 (UTC)Reply

கொடுக்கப்பட்டிருந்த சுட்டியில் இலங்கையின் தென்மாகாணம் சீனாவின் ஹைனான் மாகாணத்தின் சகோதர மாகாணம் எனவோ அல்லது இலங்கையின் தென்மாகாணம் சீனாவின் ஹைனான் மாகாணத்துடன் ஓரிணைப்பு எனவோ குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. தற்போது நீங்கள் கொடுத்துள்ள இரண்டாவது சுட்டியில் இரட்டை நகரம் என்ற கருத்து உள்ளது. தேடியதில் ஹைனான் இலங்கையின் சகோதரி நகரம் எனத் தெரிய வந்தது. ஓரிணை மாகாணங்கள் என்ற புரியாத தலைப்பின்றியும், சுட்டியின் தலைப்பு (இலங்கையின் தென்மாகாணம் சீனாவின் ஹைனான் மாகாணத்துடன் ஓரிணைப்பு) பொருத்தமாகவும், சரியான இணைப்பும் இருந்திருந்தால் நான் கேள்வி கேட்டிருக்க வாய்ப்பில்லை. மேலும், ஆ.வி கட்டுரை (en:Hainan) International partnership தலைப்பின் கீழ் Hainan has international relationships with these places என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது. மாகாணம் என்பதால் சகோதரி நகரங்கள் எனக் குறிப்பிடுவதில் பொருத்தமில்லை. --AntonTalk 17:15, 13 சனவரி 2015 (UTC)Reply
நன்றி. சகோதர மாகாணம் என மாற்றிவிட்டு 'எவ்வாறு' வார்ப்புருவை நீக்கி விடுகிறேன்.--சிவகோசரன் (பேச்சு) 05:33, 14 சனவரி 2015 (UTC)Reply
  விருப்பம்--AntonTalk 05:54, 14 சனவரி 2015 (UTC)Reply

விக்கித்தரவு

தொகு

வணக்கம். ஒரு கட்டுரையை Wikidata-இல் இணைக்க வேண்டும் என்றால் முதலில் பதிவு செய்ய வேண்டும். பதிவு முகவரியை தயவு செய்து சுட்டிக் காட்டுங்கள். தேடித் தேடிப்ப் பார்த்தேன். அலுத்துப் போய்விட்டது. என் கட்டுரைகளில் பிழைத் திருத்தம் செய்து வருமைக்கு நன்றி. மலாக்கா முத்துக்கிருஷ்ணன்,(பேச்சு)--ksmuthukrishnan 09:33, 16 சனவரி 2015 (UTC)Reply

சார்சசு வாலின்சுகி

தொகு

கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தல் ஆகாது என்னும் கொள்கை அடிப்படையில் பெயரை 'சார்சசு வாலின்சுகி' என்று எழுதினேன். 'சார்சிசு வாலின்சுகி' என்றும் எழுதலாம்.~~செம்மல்50-21 சனவரி 2015

Georges Wolinski பிரெஞ்சுப் பெயராக உள்ளபடியால் அதன் ஒலி வடிவத்தை அறிய இணையம் வழி முயன்றேன். 'ஜார்ஸ் போலான்ஸ்கி' என்று ஒலிக்கப்படுகிறது. இதனை அறிய வேண்டுகிறேன். ~~செம்மல்50- 21 சனவரி 2015

ஜார்ஸ் போலான்ஸ்கி சரியாகவுள்ளது. --AntonTalk 08:37, 21 சனவரி 2015 (UTC)Reply

  விருப்பம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:40, 21 சனவரி 2015 (UTC)Reply

ஜார்ஸ் போலான்ஸ்கி என்று மாற்றியுள்ளேன்.~~செம்மல்50-10 பிப்பிரவரி 2015

படிமம்

தொகு

வணக்கம் :) Antan படிமம் பதிவேற்றம் முறை புதிதாக உள்ளது. அது மிகவும் கடினமாகவும் உள்ளது. எப்படி புதிய படிமம் பதிவேற்றுதல்? --Thilakshan 15:34, 28 சனவரி 2015 (UTC)

சிறப்புக் கட்டுரைகள் முன்மொழிவு:பிலிப்பீன்சு

தொகு

சிகரம் திட்டத்தினூடாக விரிவாக்கப்பட்ட பிலிப்பீன்சு கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக நியமிப்பதற்கு இப்பக்கத்தில் முன்மொழிந்துள்ளேன். உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவியுங்கள்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 12:01, 5 பெப்ரவரி 2015 (UTC)

Deletion of ISCII article

தொகு

ISCII is an english acronym. Having an article in Tamil wikipedia is not a sin. Please stop deleting articles for such strict interpretation of Tamil wikipedia standards. Would you be able to point me to the Wikipedia guidelines anywhere which endorses this purist interpretation? --Photonique (பேச்சு) 05:56, 27 பெப்ரவரி 2015 (UTC)

Did I tell you that having an article in Tamil Wikipedia is a sin? Stick on the topic, not unwanted discussion. There are hundreds of acronym and its standards. Do you think all of them have redirects here in Tamil Wikipedia? Can you make redirect Tamil acronym and its standards in English Wikipedia? Each Wikipedia has its own guidelines and I deleted as per தமிழ் தவிர பிற மொழி எழுத்துகளில் தலைப்புகளை உருவாக்க பயன்படுத்தக் கூடாது. BTW, we are Tamil Wikipedians who prefer to discuss in Tamil unless editor has lack of knowledge in Tamil. --AntonTalk 07:13, 27 பெப்ரவரி 2015 (UTC)
ஆவணத்தை இணைத்ததற்கு நன்றி; எனக்கு இந்த கொள்கையில் முழுமையான ஒப்புதல் இல்லை.

--Photonique (பேச்சு) 16:28, 1 மார்ச் 2015 (UTC)

கவனியுங்கள்ː

தொகு

Mr.AntanO அவர்களே, வேட்டுவ கவுண்டர் எனும் இப்பக்கத்தை மேம்படுத்த முடியவில்லை.இதன் மீதான தடையை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வளவு காலங்கள் ஆகியும் நீங்கள் தடையை நீக்காதது, நீங்கள் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறீர்களோ எனும் ஐயப்பாட்டை ஏற்ப்படுத்துகிறது.

உங்கள் பேச்சுப் பக்கத்திலும் உங்கள் பக்கத்தை ஒத்துக் காணப்பட்ட Kongugounderraj பயனர் பக்கத்திலும் பலமுறைகள் போதிய விளக்கங்கள் தரப்பட்டுவிட்டன. நீங்கள் அதை விளங்கிக் கொண்டாதாகவோ அல்லது செயற்பட்டதாகவோ இவ்வளவு காலமாகியும் தெரியவில்லை. தலையூர் காளி, கடிய நெடுவேட்டுவன் அகிய கட்டுரைகளின் நிலையே அதற்குச் சான்று. உங்கள் கருத்துக்கு (விருப்பு வெறுப்புக்கு) ஏற்ப கலைக்களஞ்சியம் அமைக்க முடியாது. நான் ஒரு தலைபட்சமாக செயற்படுகிறேன் எனும் ஐயப்பாடு எழுமுன் நீங்கள் ஒரு தலைபட்சமாக கட்டுரையை தொகுக்க முயல்கிறீர்கள் ஐயப்பாடு உள்ளது என்பதையும் கவனிக்க. --AntonTalk 04:05, 9 மார்ச் 2015 (UTC)
Return to the user page of "AntanO/தொகுப்பு 5".