பயனர் பேச்சு:AntanO/தொகுப்பு 2

சோழர் கடற்படை

தொகு

அண்டன் நீங்கள் காட்டிய ஆங்கிலக்கட்டுரையில் கி.மு. 300க்கு முன்னரே உள்ள தமிழகம் பற்றிய பொதுவான செய்திகளை பதிந்துள்ளார்கள். கொற்கை பாண்டிய நாட்டுத்துறைமுகம். அதை சோழர் கடற்படையில் குறிப்பிடக்கூடாதே. மேலும் கி.மு. 400களிலிருந்து தான் சோழர்கள் இருந்ததாக தொல்லியல் சான்றுகளுள. அதாவது முத்திரைக்காசுகள். மற்றவற்றுக்கு புதிய ஆய்வுகள் செய்ய வேண்டும். பூம்புகார் பற்றி செய்த ஆராய்ச்சிகாள் நம்பத்தகுந்தவை அல்ல. இருந்தாலும் அதை நம்பத்தகாத தகவல் என்ரு கூறியே சேர்க்கலாம். கி.மு. 300க்கு பிறகு வரும் குறிப்புகள் நான் படித்ததில்லை. ஆனால் காவிரிபூம்பட்டினத்தில் இருந்து சொழாந்தியம் என்ற ஒரு கப்பலை இயக்கினார்கள். அது மற்ற இந்திய நாடுகளும் உபயோகித்தன. மற்றவற்றுக்கு நான் தேடிப்பார்க்கிறேன். மேலும் என் ஆர்வம் அதிகம் பாண்டியர்கள் பற்றியதே.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:43, 16 அக்டோபர் 2012 (UTC)Reply

தகவலுக்கு நன்றி சுப்பிரமணியன்! சோழர் கடற்படை கட்டுரையில் பிழையான பகுதிகள் இருந்தால் நீக்கியோ அல்லது சரிசெய்தோ உதவ முடியுமா? அத்துடன் அதற்கான ஆங்கிலக் கட்டுரையில் சிக்கலற்ற பகுதிகளைக் குறிப்பிட்டு உதவ முடியுமாயின், என்னால் மேற்கொண்டு மொழி பெயர்க்க உதவியாகவிருக்கும். அங்குள்ள தகவல்களை முழுவதும் மொழிபெயர்க்கவே எண்ணியுள்ளேன். உங்கள் ஆலோசனை தேவையற்ற பகுதிகளில் உழைப்பு விரயமாவதைத் தடுக்கும். நன்றி! --Anton (பேச்சு) 12:39, 16 அக்டோபர் 2012 (UTC)Reply

நான் அதன் ஆங்கிலப் பேச்சுப்பக்கத்தில் கூறுகிறேன். அறைகுறை ஆங்கிலத்தை வைத்திருப்பதால் சற்று தயக்கம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:09, 16 அக்டோபர் 2012 (UTC)Reply

இலக்கியத் தேடுபொறி

தொகு

இன்றைய நாள் இனிதாகட்டும்! நாம் ஏற்கனவே IRC-யில் பேசிக் கொண்டபடி, AWB கருவிக்கானப் பகுதியை மேம்படுத்துதலை சற்று தள்ளி வைத்துள்ளோம். ஏனெனில், அது வின்டோசில் மட்டுமே அது செயல்பட வல்லது. நான் கட்டற்ற மென்பொருள்களில் அது அமைய எண்ணுகிறேன்.அதற்கான அடிப்படை பணிகளை செய்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.அதனால் பிறகு அதனைத் தொடர்வோம். 4,5 மாதங்கள் ஆகலாம். ஆனால், அதற்குள் வேறொரு மென்ம ம் செய்யலாமா? என எண்ணுகிறேன். யாதெனில், பாடினி#சங்க இலக்கியங்களில் பாடினி என்பதை ஒரு முறைக் காணுமாறு கேட்டுக் கொள்கிறேன். அது போல இலக்கிய வரிகளை எடுத்துத்தரவல்ல கணினி மென்மமொன்றை உருவாக்குதல் வேண்டும்.ஏனெனில், தேடிப் பிடித்து எடுக்க நேரம் செலவாகிறது.

அதாவது ஒரு சொல்லைக் கொடுத்தால் அது அந்த இலக்கிய மூலத்தில் சென்று தேடி, அந்த சொல் இருக்கும் வரி, அதற்கு மேலுள்ள வரி, அதற்கு கீழூள்ள வரி என எடுத்துத் தரவேண்டும். அத்தகையத்திறனுடைய ஒரு செயலியை, php போன்ற கட்டற்ற மென்மத்தில் செய்ய இயலுமா? ஆவலுடன்..-- உழவன் +உரை.. 04:20, 17 அக்டோபர் 2012 (UTC)Reply

வணக்கம் தகவலுழவன், பாதி விளங்குகின்றது, பாதி விளங்கவில்லை. சில நாட்களுக்கு முக்கிய வேலையாக இருப்பேன். முடிந்ததும் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவேன். --Anton (பேச்சு) 07:32, 17 அக்டோபர் 2012 (UTC)Reply


கண்டலூர் சாலைப் போர் கட்டுரை தலைப்பு குறித்து

தொகு

வணக்கம், காந்தளூரா (அ) கண்டலூரா என உறுதிபடுத்த வேண்டுகிறேன். இந்த சந்தேகம் குறித்து கண்டலூர் சாலைப் போர் கட்டுரையின் உரையாடல் பக்கத்திலும் எழுதியுள்ளேன். கி. கார்த்திகேயன் (பேச்சு) 09:23, 17 அக்டோபர் 2012 (UTC)Reply

வணக்கம் கார்த்திகேயன், பொருத்தமாயின் சரியான தலைப்பிற்கு மாற்றிவிடுங்கள். நான் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்ததால் சொல் தவறு ஏற்பட வாய்ப்புள்ளது. --Anton (பேச்சு) 09:26, 17 அக்டோபர் 2012 (UTC)Reply

நன்றி

தொகு

மிகவும் நன்றி. இவ்வாறு சரிசெய்யும் முறையை விளக்கினால் தேவைப்படும்போது நானும் செய்து கொள்ளலாம்.--Booradleyp (பேச்சு) 10:11, 24 அக்டோபர் 2012 (UTC)Reply

வழிமாற்றும் விதம் புரிந்தது, விளக்கம் அளித்தமைக்கு நன்றி. நானும் நீங்கள் கட்டுரைகளை உருவாக்கும் நேர்த்தி, வேகம் மற்றும் படங்களைச் சேர்ப்பதைப் பார்த்து ரசித்துப் பாராட்டிக் கொண்டிருக்கிறேன். த.வியில் தினமும் புதிதாக உருவாகும் கட்டுரைகளைப் படிப்பது எனக்கு நல்லதொரு அனுபவமாக உள்ளது.--Booradleyp (பேச்சு) 02:57, 25 அக்டோபர் 2012 (UTC)Reply

  விருப்பம்--Anton (பேச்சு) 13:00, 25 அக்டோபர் 2012 (UTC)Reply

வேண்டுகோள்

தொகு

வணக்கம், நீங்கள் விரைவு நீக்கம் வார்ப்புரு இடும் கட்டுரைகள் பல் குறுங்கட்டுரையளவிற்கு உள்ளன. அவற்றுக்குக் குறுங்கட்டுரை வார்ப்புரு போதுமென்பது எனது கருத்து. அவற்றுள் பலவற்றுக்கு ஆ.வி இணைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் எவரேனும் வளர்த்தெடுக்க வாய்ப்பு உள்ளது. --Booradleyp (பேச்சு) 17:03, 24 நவம்பர் 2012 (UTC)Reply

உண்மைதான். ஆனால் மூன்று வரிக்கும் குறைவாகவுள்ளதே? குறைந்தது மூன்று வரிகளாவது இருந்தால் நீக்கிவிடலாம். எனக்கு ஆர்வமில்லாத துறைகளாக இருப்பதால், என்னால் அவற்றை மூன்று வரிக்கேனும் தொகுக்க முடியவில்லை. --Anton (பேச்சு) 17:09, 24 நவம்பர் 2012 (UTC)Reply

வணக்கம், காய் கட்டுரை குறித்த எனது கருத்து தவறு என்று தோன்றுகிறது. அதை நீக்கவும் வேண்டாம். பதிலாககாய்கறி கட்டுரையுடன் இதன் உள்ளடக்கத்தைச் சேர்த்து இணைப்பது நல்லது என நினைக்கிறேன். எனக்கு இணைத்தல் தெரியாது. எனவே நீங்கள் செய்து தர வேண்டும்.--Booradleyp (பேச்சு) 05:12, 26 நவம்பர் 2012 (UTC)Reply

வணக்கம், சாதாரண copy & paste மூலம் இதனைச் செய்யலாம். தனிக் கட்டுரையாக்கும் எண்ணம் இருப்பதால் அப்படியே விட்டுவிடலாம். --Anton (பேச்சு) 12:08, 26 நவம்பர் 2012 (UTC)Reply

  விருப்பம்

தமிழ் ஆவண மாநாடு 2013 ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்பு

தொகு

ஆய்வுக்கட்டுரை சமர்ப்பது பற்றி பரிசீலிக்கவும். நன்றி. --Natkeeran (பேச்சு) 01:48, 26 நவம்பர் 2012 (UTC)Reply

வணக்கம் அன்ரன். இம் மாநாட்டுக்கு கட்டுரை எழுத, நேரடியாகப் பங்களிக முடிந்தால் சிறப்பு. கட்டுரையின் பொழிவு வரும் சனவரி 15 திகதி முன் அனுப்பலாம். ஆவணவியல் தலைப்புகளில் மட்டும் அல்லாமல் விரிந்த தலைப்புகளில் கட்டுரைகள் எழுத முடியும். நன்றி. கேள்விகள் எதுவும் இருப்பின் கூறவும். நன்றி. --Natkeeran (பேச்சு) 19:13, 26 திசம்பர் 2012 (UTC)Reply


"வரலாறு, தொல்லியல் ஆவணங்களும் மரபறிவுப் பதிவுகளும் என்ற விடயப்பரப்பில் மட்டக்களப்பினை மையமாகவைத்து எழுதும் எண்ணமுள்ளது"..அருமையான தலைப்பு. ஒவ்வொரு விடயமும் கூட தனிக் கடுரையாக ஆக்கப்படலாம் :) நிச்சியமாக மிகவும் பயனுள்ளதாக அமையும். மட்டக்களப்பு வரலாறு பற்றி நீங்கள் பிற கட்டுரைகளில் சுட்டிய நூல்கள் உங்களிடம் இருக்கும் என்று கருதுகிறேன். மட்டக்களப்பைப் பூர்வீகமாகக் கொண்ட பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்கள் மட்டக்களப்பு வரலாறு, வாழ்வியல், சட்டங்கள், நாட்டுப்புறவியல் தொடர்பாக பல ஆய்வுகளைச் செய்துள்ளார், தகவல்களைத் திரட்டி உள்ளார். அவர் இப்பொழுது கனடாவில் வாழ்கிறார். அவரது மின்னஞ்சல் balasundarame@yahoo.com. பதில் போடுவார் என்று உறுதியாகக் கூறமுடியாது. அவரது நூல்கள் சில நூலகத் திட்டத்தில் உள்ளன. வேறு உசாத்துணைகள் என்னிடம் உள்ளனவா/கிடைகின்றவா என்றும் பார்க்கிறேன். --Natkeeran (பேச்சு) 02:07, 28 திசம்பர் 2012 (UTC)Reply

அண்டன் வெள்ளாவளிச் சாசனத்தை தெளிவாக படமெடுத்தமைக்கு நன்றி. மேலும் விக்கிப்பீடியா சிறப்புப் படங்களில் குவியம், இரைச்சல் போன்ர வார்த்தைகளை பயன்படுத்தினார்கள். அப்படியானல் என்ன? ஒளிப்படத்தில் இரைச்சலா? மேலும் இதைப்போல் புகைப்பட வார்த்தைகலை பற்றி ஒரு கட்டுரயோ விக்கிக் கட்டுரையொ எழுதினால் நன்று.

ஒளிப்படம் பற்றி அதிகம் எழுத முயற்சி செய்கிறேன். {{ஒளிப்படவியல்}} இங்குள்ள கட்டுரைகளை எழுதி முடிக்க வேண்டும். தற்போதைக்கு இதைக் கவனியுங்கள் Commons:Image guidelines --Anton (பேச்சு) 07:15, 6 சனவரி 2013 (UTC)Reply

ஆய்வுக்கட்டுரையை போட்டுத் தாக்கவும். :)---தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:10, 2 சனவரி 2013 (UTC)Reply

நன்றி :)--Anton (பேச்சு) 04:22, 3 சனவரி 2013 (UTC)Reply
அன்புடன் தென்காசி சுப்பிரமணியன், நீங்கள் கேள்வி கேட்ட என் பேச்சு பக்கத்திலேயே பதில் வழங்கப்பட்டுள்ளதே, படங்களுடன்.--HK Arun (பேச்சு) 16:13, 2 சனவரி 2013 (UTC)Reply

நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பமா?

தொகு

வணக்கம் அன்டன், நீங்கள் நிருவாகப் பொறுப்பு எடுத்துப் பங்களித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன். தங்களுக்கு விருப்பம் எனில், விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் பக்கத்தில் பரிந்துரைக்கிறேன். நன்றி--இரவி (பேச்சு) 12:52, 4 சனவரி 2013 (UTC)Reply

அழைத்தலுக்கு நன்றி இரவி. ஆம், நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்புகிறேன். குப்பைத் தொகுப்புக்களுக்கு நீக்கல் வார்ப்புரு இட்டு காத்திருப்பதைவிட நேரடியாகவே நீங்கிவிடுதல் உட்பட பல வேலைகளை எளிதாகச் செய்துவிடலாம். --Anton (பேச்சு) 02:04, 5 சனவரி 2013 (UTC)Reply

+1 ஆனால் நீங்கள் அளிக்க விரும்பும் குப்பைத் தொகுப்புகளில் அதிகம் ஒரு பயனர் தொடர்பான பங்களிப்புகள் வருமாயின் அவரிடம் கூரிவிட்டு செய்வதோ சில இடங்களில் கருத்தைக் கேட்டுவிட்டுச் செய்வதொ சரியாக இருக்கலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:32, 5 சனவரி 2013 (UTC)Reply

:)--Anton (பேச்சு) 07:15, 6 சனவரி 2013 (UTC)Reply

நன்றி, அன்டன். விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் பக்கத்தில் உங்கள் ஏற்பைத் தெரிவியுங்கள். --இரவி (பேச்சு) 04:40, 7 சனவரி 2013 (UTC)Reply

விக்கிப்பீடியா அறிமுகப் பட்டறை

தொகு

வணக்கம் அன்ரன். மட்டக்களப்பில் பல்கலைக்கழக சமூகத்தை உள்ளடக்கியதாக இரு விக்கி அறிமுகப் பட்டறைகளை நானும் உமாபதியும் நடாத்தினோம். பல்கலைக் கழக சமூகத்திற்கு வெளியில் கலை இலக்கிய ஆர்வலர்களை உள்ளடக்கி அல்லது கல்வியியல் கல்லூரி மற்றும் ஆசிரியர் கலாசாலை சார்ந்து நடாத்தினால் பயனுடையதாயிருக்கும். அத்துடன் அதிக பங்களிக்கக் கூடிய பயனர்களை உள்ளீர்க்க முடியும். இது தொடர்பாக நானும் சிலருடன் உரையாடி உள்ளேன். நீங்கள் மட்டக்களப்பில் இருப்பதால் வசதிப்பாடுகள் பற்றிக் கூறவும். நன்றிகள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:25, 8 சனவரி 2013 (UTC)Reply

வணக்கம். விக்கி அறிமுகப் பட்டறைகளுக்கு என்னால் உதவ முடியும். இக்காலப்பகுதி (மழை) தவிர்த்து பட்டறை நடாத்துவது சிறிப்பாக இருக்குமெனக் கருதுகின்றேன். இலக்குக் குழுக்கள் யார், அவர்களை அணுகுதல் ஆகியவற்றில் எனக்கு ஆலோசனை வழங்குவீர்கள் என்றால், ஏனைய விடயங்கள் எனக்கு சுலபமாக இருக்கும். --Anton (பேச்சு) 21:05, 8 சனவரி 2013 (UTC)Reply

--ksmuthukrishnan 15:12, 12 சனவரி 2013 (UTC)

மலேசியாவில் ஒரே விக்கிபீடியர் மலாக்கா முத்துக்கிருஷ்ணன்

தொகு

மலேசியாவைப்பற்றி 128 கட்டுரைகள். மலேசியாவிற்கு ஓர் இடம் கொடுங்கள். எனக்கு உதவி செய்ய வேண்டாம். மலேசியாவில் இருக்கும் 22 இலட்சம் தமிழர்களுக்கு ஒரு பிரதிநிதி. கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் நான் எழுதி கொண்டுதான் இருப்பேன். ஆளை விடுங்கள்.

நன்றி

தொகு
  நன்றி
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! --மதனாகரன் (பேச்சு) 06:08, 14 சனவரி 2013 (UTC)Reply

+1--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:50, 15 சனவரி 2013 (UTC)Reply


வாழ்த்துகள்

தொகு

அன்ரன், தமிழ் விக்கிப்பீடியாவில் நிருவாக அணுக்கம் பெற்றமைக்கு எனது வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 06:50, 14 சனவரி 2013 (UTC)Reply

நன்றி!--Anton (பேச்சு) 06:52, 14 சனவரி 2013 (UTC)Reply

தமிழ் விக்கிப்பீடியாவில் நிருவாக அணுக்கம் பெற்றமைக்கு எனது வாழ்த்துக்கள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 17:01, 14 சனவரி 2013 (UTC)Reply

நன்றி!--Anton (பேச்சு) 20:53, 14 சனவரி 2013 (UTC)Reply
நன்றி!--Anton (பேச்சு) 20:53, 14 சனவரி 2013 (UTC)Reply
நிர்வாக அணுக்கம் பெற்றமைக்கும், உங்கள் விக்கிப் பணி தொடரவும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.--கலை (பேச்சு) 20:41, 14 சனவரி 2013 (UTC)Reply
நன்றி!--Anton (பேச்சு) 20:53, 14 சனவரி 2013 (UTC)Reply
வாழ்த்துக்கள் அன்ரன். --Natkeeran (பேச்சு) 01:37, 15 சனவரி 2013 (UTC)Reply
நன்றி!--Anton (பேச்சு) 10:34, 15 சனவரி 2013 (UTC)Reply

வணக்கம் அன்டன். உங்களின் திறமைக்கும் முயட்ச்சிக்கும் கிடைத்த வெற்றிக்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துகள். --சிவம் 01:56, 15 சனவரி 2013 (UTC)

நன்றி! --Anton (பேச்சு) 10:34, 15 சனவரி 2013 (UTC)Reply
நன்றி!--Anton (பேச்சு) 09:42, 17 சனவரி 2013 (UTC)Reply
வாழ்த்துகள் அன்றன், தங்களின் சீரிய பணி தொடர விரும்புகிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:54, 19 சனவரி 2013 (UTC)Reply
நன்றி! தொடரும்.... :) --Anton (பேச்சு) 14:25, 19 சனவரி 2013 (UTC)Reply

வாழ்த்துக்களும் தொடரும்... :)- --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:37, 20 சனவரி 2013 (UTC)Reply

:)--Anton (பேச்சு) 04:36, 21 சனவரி 2013 (UTC)Reply

மலேசியாவில் இருந்து வாழ்த்துகள். தங்களின் பணி மேலும் தொடர வேண்டும்.மலாக்கா முத்துக்கிருஷ்ணன்--ksmuthukrishnan 14:46, 17 பெப்ரவரி 2013 (UTC)

நன்றி!--Anton (பேச்சு) 00:48, 19 பெப்ரவரி 2013 (UTC)
வாழ்த்துகள் பல அண்டன்! தங்கள் சிறப்பான பணி மென்மேலும் தொடர வேண்டும்.--பரிதிமதி (பேச்சு) 16:15, 18 பெப்ரவரி 2013 (UTC)
நன்றி!--Anton (பேச்சு) 00:48, 19 பெப்ரவரி 2013 (UTC)

நாயக்கர்

தொகு

thanks for saving and editing of nayakar article நாயக்கர் in tamil....--Premloganathan (பேச்சு) 08:17, 28 சனவரி 2013 (UTC)Reply

முதற்பக்கக் கட்டுரைக்கான பரிந்துரைகள்

தொகு

வணக்கம். நீங்கள் பங்களித்த சிறந்த கட்டுரை அல்லது நீங்கள் சிறந்த கட்டுரையாகக் கருதும் கட்டுரையை முதல் பக்கத்தில் காட்சிப்படுத்துவதற்காக இப்பக்கத்தில் தங்களின் பரிந்துரைகள் வேண்டப்படுகின்றன-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:57, 31 சனவரி 2013 (UTC)Reply

வணக்கம். நான் பங்களித்த கட்டுரைகளில் முதல் பக்கத்தில் காட்சிப்படுத்துவதற்கு இன்னும் சில தொகுப்புக்கள் செய்ய வேண்டியுள்ளது. ஏனைய கட்டுரைகளை பரிந்துரைக்க முயல்கிறேன். --Anton (பேச்சு) 11:32, 2 பெப்ரவரி 2013 (UTC)

மாதம் 250 தொகுப்புகள் மைல்கல்

தொகு

வணக்கம், AntanO/தொகுப்பு 2!

 

நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 09:15, 2 பெப்ரவரி 2013 (UTC)

நன்றி இரவி! --Anton (பேச்சு) 11:33, 2 பெப்ரவரி 2013 (UTC)

ஆலோசனைகள் தேவை

தொகு

இப்படமும் இப்படமும் எனது கைப்பேசியை கொண்டு எடுத்தது.

இரண்டாவது காட்டிய அதே பொருளை நவீன காமிரா கொண்டு எடுத்த போது இதைப் போல் வந்தது. படிமம்:சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் 4.jpg. என் கைப்பேசியில் காலையில் நவீன காமிரா அளவுக்கு தெரியும் தெளிவு இரவில் இல்லை. இதன் காரணம் என்ன?

இரவிலும் நல்ல புகைப்பட்ம் எடுக்கும் கருவியை எப்படி வாங்குவீர்கள்? அதற்கான ஸ்பெசிஃபிக்கேசனை எப்படி கூறுவீர்கள்? மேலும் சூம் செய்வதற்கான கெப்பசிட்டி அதிகமுள்ள காமிர எவ்வளவு விலை வரும். எனக்கு சூம் செய்வதற்கான கெப்பசிட்டி அதிகமுள்ளவாறும் இருளிலும் தெளிவான புகைப்படம் எடுப்பதற்கு ஏத்த மாதிரியும் ஒரு புகைப்படக் கருவியை ரூ. 10000க்குள் கூற முடியுமா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:14, 4 பெப்ரவரி 2013 (UTC)

SAMSUNG GT-C6712 போன்ற வகை கைப்பேசி கொண்டு இயற்கை ஒளியில் எடுக்கும் படம் ஓர் அளவிற்கு நன்றாக வரும். Canon PowerShot A3200 IS ஓர் en:Point-and-shoot camera வகை கருவி, SAMSUNG GT-C6712 விட நல்லது. en:Image sensor format மற்றும் en:Flash (photography) என்பன Canon PowerShot A3200 IS இல் SAMSUNG GT-C6712 விட சிறப்பாகவுள்ளதால், சிறப்பான படத்தைத் தந்தது. ஆயினும் இதனுள் இருக்கும் அம்சங்கள் (en:Image sensor format, en:Flash (photography))சில குறைபாடுகளைக் கொண்டது. இதனால் ஒளி குறைவான இடங்களில் ஓர் அளவிற்கு மேல் இதனால் குறிப்பிட்ட அளவிற்கு மேல் பலனைத் தர முடியாது உள்ளது. en:Prosumer வகை ஒளிப்படக் கருவிகள் en:Point-and-shoot camera விட சிறப்பனவை. ஆயினும் DSLR சிறப்பானவை. இதைவிட முக்கியம் ஒளிப்படக் கருவி பற்றிய அறிவும் ஒளிப்படம் பற்றிய அறிவும். Red Zinnias (Zinnia) இங்குள்ள படம் Casio QV-R4 மூலம் எடுத்தது, Canon PowerShot A3200 IS விட குறைவானது.
பிட் என்னும் தளம் உங்களுக்கு உதவலாம். அதில் நானும் உறுப்பினராகவுள்ளேன். உங்களுக்கு பயன்படக்கூடிய சில இணைப்புக்கள் சில:
//எனக்கு சூம் செய்வதற்கான கெப்பசிட்டி அதிகமுள்ளவாறும் இருளிலும் தெளிவான புகைப்படம் எடுப்பதற்கு ஏத்த மாதிரியும் ஒரு புகைப்படக் கருவியை ரூ. 10000க்குள் கூற முடியுமா?// எனக்கு இந்திய நிலவரம் சரியாகத் தெரியாது. நண்பர்களிடம் கேட்டுச் சொல்கிறேன்.

--Anton (பேச்சு) 14:40, 4 பெப்ரவரி 2013 (UTC)

விரிவான விளக்கங்கலுக்கும் வழிகாட்டலுக்கும் நன்றி அண்டனாரே. மார்சு மாதம் வரும் சம்பளத்தில் எப்ப்டியும் காமிரா வாங்குவேன். இனி காடு, மலை இடுக்குகள் உள்ள பகுதிகளுக்கு தமிழ் தொடர்பாக ஆய்வுக்கு போக உள்ளதால் நீங்கள் கூறிய படி புகைப்படம் எடுக்க உதவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:56, 5 பெப்ரவரி 2013 (UTC)

குறுங்கட்டுரை வரையறை

தொகு

பார்க்க: விக்கிப்பீடியா பேச்சு:குறுங்கட்டுரை--இரவி (பேச்சு) 06:22, 5 பெப்ரவரி 2013 (UTC)

படிமம் இற்றை

தொகு

இப்படிமத்தை திருத்தித் தருமாறு வேண்டுகிறேன். இ;லங்கை, புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்குத் தமிழ்ப் பெயர் சேர்த்து தந்தால் நன்று-தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:47, 7 பெப்ரவரி 2013 (UTC)

Languages of SouthAsia (Tamil version) --Anton (பேச்சு) 04:38, 9 பெப்ரவரி 2013 (UTC)

நீங்கள் தந்தது இதன் தமிழ் வடிவம்(ஜார்க்கண்ட் தமிழ் ஆக்கப்படவில்லை). நான் கேட்டது நான் காட்டிய படத்தில் இலங்கை, புதுச்சேரி பகுதிகளில் தமிழ் பெயரிட வேண்டி! அவையும் தமிழ்ப் பகுதிகள்தானே! அப்படம் அனைத்து விக்கிகளிலும் பயன்படும். எனவே அநதப் படத்தின் புதிய பதிப்பில் இலங்கை புதுச்சேரி ஆகிய தமிழ்ப பெயர்களை சேர்க்குமாறு (அந்தமானில் உள்ளதுபோல்) வேண்டுகிறேன். - தமிழ்க்குரிசில்

சற்று விளக்கமாகக் குறிப்பிட முடியுமா? இலங்கை, புதுச்சேரி ஆகிய தமிழ்ப் பெயர்கள் மட்டும்தான் சேர்க்க வேண்டுமா? மற்றவை அப்படியே இருக்க வேண்டுமா? எதையேனும் நீக்க வேண்டுமா? --Anton (பேச்சு) 01:18, 10 பெப்ரவரி 2013 (UTC)
நான் கூறிய படம் ஒவ்வொரு பகுதிகளையும் அவற்றின் ஆட்சி மொழியில் எழுதியிருந்தது. அதில் இலங்கை சிங்களத்திலும் பாண்டிச்சேரி பிரெஞ்சிலும் எழுதப்பட்டிருந்தன. அப்படியானால் தமிழ் இப்பகுதிகளின் ஆட்சி மொழி இல்லை என்றாகிவிடுமே. எனவே, நான் கூறீய படத்தல் இலங்கை, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் அப்பெயர்கள் தமிழிலும் எழுதப் படவேண்டும். அதையே செய்யக் கேட்டேன் -தமிழ்க்குரிசில்
படிமத்தை இப்போது பாருங்கள். --Anton (பேச்சு) 10:56, 10 பெப்ரவரி 2013 (UTC)

உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில்

தொகு

வணக்கம், அன்டன் இக்கட்டுரையை நான் மாற்றி அமைத்துக் கொண்டிருக்கும் போது நீக்கிவிட்டீர்களே.--Booradleyp (பேச்சு) 04:59, 15 பெப்ரவரி 2013 (UTC)

வணக்கம், கட்டுரை மீட்கப்பட்டுள்ளது. ஆனால், உள்ளடக்கம் முழுக்க முழுக்க வேறொரு இடத்திலிருந்து பிரதி செய்யப்பட்டுள்ளது. --Anton (பேச்சு) 05:26, 15 பெப்ரவரி 2013 (UTC)

நன்ற. பிற வெளி இணைப்பு பக்கங்களில் இருந்து விவரங்கள் தந்து மாற்றி விடலாம் என நினைக்கிறேன்.--Booradleyp (பேச்சு) 05:35, 15 பெப்ரவரி 2013 (UTC)

வரைபடங்கள்

தொகு

புறநகர் பற்றிய கட்டுரைகளுக்கு உபயோகிக்க தமிழ் வரைபடங்கள் எங்கு தேடலாம் ? நாமாக உருவாக்க முடியுமா ? -சுபாஷ் சந்திரன் 007 15:48, 18 பெப்ரவரி 2013 (UTC)

நாமாகத்தான் உருவாக்க வேண்டும். எப்படியான வரைபடங்கள் தேவை. முடிந்தால் நானும் உருவாக்கித்தரலாம். --Anton (பேச்சு) 00:50, 19 பெப்ரவரி 2013 (UTC)

புறநகர் பகுதிகளை பற்றிய கட்டுரைகள் எழுத இது தேவை படுகிறது . எப்படி உருவாக்க வேண்டும் என்று கற்றுகொடுத்தாள் நன்றாக இருக்கும் :-D -சுபாஷ் சந்திரன் 007 13:53, 19 பெப்ரவரி 2013 (UTC)

காந்திபுரம் கட்டுரையில் மாற்றம் செய்துள்ளேன். இதைத்தான் நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள் எனக் கருதுகின்றேன். அவ்வாறெனில் குறிப்பிடுங்கள் Infobox settlement வார்ப்புரு பயன்படுத்துவது பற்றி கலந்துரையாடலாம். --Anton (பேச்சு) 01:26, 20 பெப்ரவரி 2013 (UTC)
ஆம் . அதே தான் :) -சுபாஷ் சந்திரன் 007 01:31, 20 பெப்ரவரி 2013 (UTC)

{{Infobox Indian jurisdiction}} வார்ப்புருவைப் பாவிப்பதன் மூலம் உங்கள் தேவையை நிறைவேற்றிக் கொள்ளலாம். காந்திபுரம் கட்டுரைக்கான ஆங்கில விக்கியிலிருந்து பின்வருவனவற்றை நகல் எடுத்து தேவையானவற்றை தமிழாக்கம் செய்ததால் எனது தேவையை நிறைவேற்றிக் கொள்ள முடிந்தது.
{{Infobox Indian Jurisdiction .
.
.
.
}}
பொதுவாக ஆங்கில விக்கியிலிருந்து நகல் எடுக்கலாம். அல்லது Infobox Indian Jurisdiction இல்

{{ infobox Indian jurisdiction
| type               = 
| native_name        = 
| state_name         = 
| district           = 
| latd = 
| latm = 
| lats = 
| longd= 
| longm= 
| longs= 
| area_total         = 
| area_magnitude     = 
| altitude           = 
| population_total   = 
| population_as_of   = 
| population_density = 
| leader_title_1     = 
| leader_name_1      = 
| leader_title_2     = 
| leader_name_2      = 
| footnotes          = 
}}

இதனைப் வேண்டிய தகவல்களை உள்ளிட்டுப் பாவிப்பது மூலம் செய்ய முடியும். விபரமான தகவல்களுக்கு இதனையுப் பார்க்கவும் {{Infobox Indian jurisdiction#Full}} --Anton (பேச்சு) 03:36, 20 பெப்ரவரி 2013 (UTC)

நண்பரே ! மிக்க நன்றி :)-சுபாஷ் சந்திரன் 007 16:18, 20 பெப்ரவரி 2013 (UTC)
இந்த கட்டுரையில் - "ஆவாரம்பாளையம்" வார்ப்புரு சரியாக உள்ளதா என்று பாருங்கள் -சுபாஷ் சந்திரன் 007 17:58, 20 பெப்ரவரி 2013 (UTC)
நன்றாகச் செய்துள்ளீர்கள் :) --Anton (பேச்சு) 02:19, 21 பெப்ரவரி 2013 (UTC)
நன்றி நன்றி :) -சுபாஷ் சந்திரன் 007 03:15, 25 பெப்ரவரி 2013 (UTC)

படிம உதவி தேவை

தொகு

வணக்கம், அன்டன். தள அறிவிப்புகளில் பங்களிப்பாளர் அறிமுகம் குறித்து சில பதாகைகள் செய்தோமே.. அது தொடர்பாக உடனடியாக செயலாற்றாமல் விட்டதற்கு வருந்துகிறேன். தற்போது அப்பணியை மீண்டும் துவக்க இயலுமா? அவற்றைப் பதிவேற்றி அவை குறித்த கருத்தை இங்கு வேண்டுவோமா? அப்புறம், தற்போது தள அறிவிப்புகளில் பல பங்களிப்பாளர் படங்களை ஒன்றாக காட்டுவதற்கும் உதவி தேவை. பார்க்க: உதவி தேவை--இரவி (பேச்சு) 16:35, 25 பெப்ரவரி 2013 (UTC)

வணக்கம் இரவி. படங்களைப் பதிவேற்றியுள்ளேன். படங்களை ஒன்றாக வடிவமைத்து (சற்று நேரமெடுத்து) உருவாக்கி பதிவேற்றுவேன். --Anton (பேச்சு) 10:23, 26 பெப்ரவரி 2013 (UTC)
நன்றி, அன்டன். தற்போது நீங்கள் பதிவேற்றியுள்ள படங்களையும் பயனர் கருத்துக்கேற்ப உரிய மாற்றங்களைச் செய்து அடுத்த சுற்றில் தள அறிவிப்பில் இடுவோம். --இரவி (பேச்சு) 10:26, 26 பெப்ரவரி 2013 (UTC)
படங்களை ஒன்றாக (சாதாரணமாக) வடிவமைத்துள்ளேன். இந்த முறை பயனுள்ளதா? --Anton (பேச்சு) 14:23, 28 பெப்ரவரி 2013 (UTC)

உதவி

தொகு

கோட்டார்: வணக்கம், இந்தக் கட்டுரையின் தகவற்பெட்டியில் ஆ.வி கட்டுரையிலுள்ள lat, long அளவுகளை இட்டால் கோட்டார் கடலுக்குள் (கிட்டத்தட்ட) வருகிறது. கூகுள் மேப் அளவுகளை இட்டாலும் இதே நிலைதான். ஆனால் ஆ.வி கட்டுரையில் சரியாக உள்ளது. என்ன பிரச்சனை என்று எனக்கு விளங்கவில்லை. என் தவறைச் சுட்டி விளக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp (பேச்சு) 16:42, 22 பெப்ரவரி 2013 (UTC)

வணக்கம், நீங்கள் தரவுகளை இட்டதில் பிழை இல்லை. வார்ப்புருவில்தால் சிக்கல் இருக்க வேண்டும். சோதித்துப் பார்க்கிறேன். --Anton (பேச்சு) 14:21, 28 பெப்ரவரி 2013 (UTC)

கோட்டாறு என்பதே சரியான பெயர்

தொகு

மேலே Booradleyp மற்றும் Anton குறிப்பிடுகின்ற நகரின் பெயர் "கோட்டாறு" என்று திருத்தப்பட வேண்டும். ஆங்கிலத்தில் Kottar என்று இருந்தாலும் தமிழ்ப் பெயர் "கோட்டாறு" ஆகும். அந்நகரில் ஓடுகின்ற ஆறு ஒன்று உண்டு. அடையாறு, மூணாறு போன்றவை "அடையார்", "மூணார்" என்று என்று தவறாகக் குறிப்பிடப்படுவது போலவே இங்கும் நிகழ்ந்துள்ளது. எனவே கட்டுரையின் தலைப்பையே திருத்திவிடுங்கள். நன்றி!--பவுல்-Paul (பேச்சு) 19:29, 2 மார்ச் 2013 (UTC)

  • இப்பொழுதுதான் கவனித்தேன், "கோட்டாறு" என்ற தலைப்பில் மற்றுமொரு கட்டுரை த.வி.யில் உள்ளது. இரு கட்டுரைகளையும் இணைக்கலாமா?--பவுல்-Paul (பேச்சு) 19:46, 2 மார்ச் 2013 (UTC)
இரண்டையும் இணைக்கலாம். கோட்டாறு கட்டுரையில் உள்ள பெரும் பகுதி பதிப்புரிமை மீறலாக உள்ளது. அவற்றை நீக்கியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 22:16, 2 மார்ச் 2013 (UTC)

அறுபட்ட கோப்பு குறித்து உதவி

தொகு

வணக்கம், தி ஸ்டோரி ஆஃப் இந்தியா (ஆவணப்படம்) என்ற கட்டுரையின் தகவற்பெட்டியில் அதற்கு ஈடான ஆங்கிலக்கட்டுரையில்(en:The Story of India) உள்ள படிமம் வரவில்லை. en:File:Story-of-India-Title-Card.png இந்த படிமம், பொதுவெளியில்(wiki commons) இல்லை. மேலும், படிமத்தின் உரிமத்திலும் சில விதிகள் இருக்கின்றன. இதே நிலைதான் எ செபரேஷன் (திரைப்படம்) கட்டுரைக்கும். இதுபோன்ற(Non-free) படிமங்களை எப்படி தமிழ்விக்கியில் பதிவேற்றுவது/பயன்படுத்துவது? விதிமுறைகள்/வழிமுறைகள் ஏதேனும் உள்ளதா..?
கி. கார்த்திகேயன் (பேச்சு) 09:30, 4 மார்ச் 2013 (UTC)

வணக்கம், தி ஸ்டோரி ஆஃப் இந்தியா (ஆவணப்படம்) என்ற கட்டுரைக்கான படிமத்தை பதிவேற்றியுள்ளேன். பொதுவில் இல்லாவிட்டால் நாமே பதிவேற்றி பொருத்தமான அனுமதியை வழங்கினால் சரி. இதன் அனுமதிக்காக "திரைப்பட விளம்பரம்" என்ற அனுமதியைத் தேர்வு செய்திருந்தேன். இதனைப் பாருங்கள்: விக்கிப்பீடியா:படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும். எ செபரேஷன் (திரைப்படம்) என்பதற்கான படிமத்தை பதிவேற்றிப் பாருங்கள். உதவி தேவையென்றால் கேளுங்கள். --Anton (பேச்சு) 09:43, 4 மார்ச் 2013 (UTC)
உதவிக்கு மிக்க நன்றி Anton :). கோப்பினை ஆங்கில விக்கியிலிருந்து தரவிறக்கி, தமிழ்விக்கியில் தரவேற்றியுள்ளேன் எ செபரேஷன் (திரைப்படம்) கட்டுரையில் சரியாக பொருந்தி இருக்கிறது. கி. கார்த்திகேயன் (பேச்சு) 11:41, 4 மார்ச் 2013 (UTC)

மைல்கல் வார்ப்புருக்கள்

தொகு

அன்டன், பயனர்களுக்கு மைல்கல் வார்ப்புரு இடும் பணியில் ஈடுபடுவதற்கு நன்றி. முத்துக்கிருசுணனுக்கு ஏற்கனவே போன மாதம் போட்டிருந்தேன். அவர் அதைப் பரணில் ஏற்றியிருக்கக்கூடும் என்று நினைக்கிறேன். ஒரே பயனருக்கு இரு முறை ஒரே மைல்கல்லைத் தாண்டும் வார்ப்புரு இடுவதில்லை. சஞ்சீவி சிவகுமார் 250 மைல்கல்லைத் தாண்டவில்லை என்று அல்லவா சிறப்பு:ActiveUsers சொல்கிறது?

ஆம் இரவி. நீங்கள் குறிப்பிடுவதுதான் சரி. அவற்றை நீக்கிவிட்டேன். --Anton (பேச்சு) 15:00, 4 மார்ச் 2013 (UTC)
சரி. நன்றி :)--இரவி (பேச்சு) 15:03, 4 மார்ச் 2013 (UTC)

படிம உதவி

தொகு

அன்டன், தயாவின் கேள்விக்கு உதவ முடியுமா? காமன்சு பக்கம் அடிக்கடி போவதில்லை என்பதால் சரியான வழிகாட்டுதலை அளிக்க முடியுமா என்று தயக்கமாக உள்ளது. நன்றி--இரவி (பேச்சு) 14:52, 4 மார்ச் 2013 (UTC)

நான் உதவுகிறேன். --Anton (பேச்சு) 15:00, 4 மார்ச் 2013 (UTC)
நன்றி, அன்டன்.--இரவி (பேச்சு) 15:04, 4 மார்ச் 2013 (UTC)


தோழர் Anton நிங்கள் தெரிவித்த கருத்துக்கு நன்றி! நிங்கள் தெரிவித்த கருத்தில் இங்கே பதிவேற்றுங்கள் என்று கூறியிருந்தீர்கள் அதன் இணைப்பை(link) தரவில்லையே தோழா நன்றி!

நன்றி Anton உங்கள் தகவல்களுக்கு. இதில் குறிப்பிடபட்டுள்ள உதவி வார்ப்புக்கள் எங்கே இட வேண்டும் என்பதை சற்று தெளிவாக கூறமுடியுமா தோழர்?

நீங்கள் படிமத்தை சுட்டிக் காட்டியதும், அடியில் அனுமதி என்பதில் குறிப்பிட்ட அனுமதியினைத் தெரிவு செய்ய வேண்டும். எ.கா:நீங்கள் பதிவேற்றுவது திரைப்பட சுவரொட்டியெனில் "திரைப்பட விளம்பரம்" என்பதை தெரிவு செய்ய வேண்டும். இதனையும் பாருங்கள்: விக்கிப்பீடியா:படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும். --Anton (பேச்சு) 16:51, 5 மார்ச் 2013 (UTC)

நன்றி தோழர் Anton உங்கள் உதவிக்கு மிக்க நன்றி!

உதவி

தொகு

ஐயா, User:Jayarathina/popes.js இப்பக்கத்தை நீக்க வேண்டுகிறேன். வார்ப்புரு:நீக்கு அப்பக்கத்தில் வேலை செய்யவில்லை. --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 07:45, 8 மார்ச் 2013 (UTC)

நீக்கப்பட்டுவிட்டது. பெயரைச் சொல்லியே அழைங்கள். :) --Anton (பேச்சு) 08:41, 8 மார்ச் 2013 (UTC)
மிக்க நன்றி திரு. Anton --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 14:17, 8 மார்ச் 2013 (UTC)

படிம உதவி

தொகு

தோழர் Anton அனுமதி பெறப்படாமல் பதிவேற்ற பட்ட புகைப்படங்களை எவ்வாறு நீக்குவது. உதவுங்கள் தோழர் நன்றி! --thaya (பேச்சு) 15:48, 11 மார்ச் 2013 (UTC)

நிருவாக அனுமதி பெற்ற ஒருவரால்தால் நீக்க முடியும். {{delete}} என்ற வார்ப்புருவை குறித்த கோப்பில் இடுவதனூடாக நீக்கல் வேண்டுகோளை இடலாம். பொதுவில் என்றால் சிறிது வேறுபடும். பார்க்க: Delete --Anton (பேச்சு) 16:43, 11 மார்ச் 2013 (UTC)
Anton நன்றி தோழர்!--thaya (பேச்சு) 07:35, 12 மார்ச் 2013 (UTC)

விக்கிப்பீடியர் சந்திப்பு ஏற்பாடுகள்

தொகு

கொழும்பில் வரும் ஏப்ரல் 27, 28 இல் நடைபெறும் தமிழ் ஆவண மாநாட்டில் பங்குபெற பல விக்கிப்பீடியர் வருவதாக உள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தும்வகையில் விக்கிப்பீடியர் சந்திப்பொன்றை நடாத்துவது குறித்து சிந்தித்தோம். ஆலமரத்தடியில் இது குறித்த உரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. இலங்கைப் பயனர்கள் இதனைப் பயன்படுத்தி சந்திப்பில் கலந்து கொள்ளுவதும் விக்கி குறித்த மேம்பாட்டு முன்னெடுப்புகள் மற்றும் தொடர்புபட்ட விடயங்கள் பற்றி உரையாடுவதும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்காக இலங்கைப் பயனராகிய தங்களின் கருத்தை தெரிந்துகொள்ள விரும்புகின்றேன். நன்றிகள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:43, 13 மார்ச் 2013 (UTC)

முயற்சிக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். குறித்த திகதியில் என்னால் பங்குபற்றுவது இயலாமல் போகலாம். ஆயினும் அக்காலப் பகுதியில் கொழும்பு செல்லும் அலுவல் இருப்பின் முயற்சி செய்கிறேன். --Anton (பேச்சு) 02:20, 20 மார்ச் 2013 (UTC)
மட்டக்களப்பில் ஒரு பட்டறை ஒழுங்கு செய்ய உதவ முடியுமா? உங்களால் முடியும் எனின் வேறு சிலரையும் கேக்கலாம் என்று எண்ணி உள்ளேன். --Natkeeran (பேச்சு) 00:48, 26 மார்ச் 2013 (UTC)
யாராவது ஒழுங்கு செய்தால் உதவ முடியும். --Anton (பேச்சு) 13:27, 26 மார்ச் 2013 (UTC)

Merops apiaster - European Bee-eater

தொகு

அண்டன். வணக்கம். Merops apiaster (European Bee-eater ஐரோப்பிய ஈப்பிடிப்பான்) இலங்கைக்கு வலசை வருகின்றதா? ஆம் எனில் எந்த வான்வழி என அறியத் தரவும். நன்றி.--பரிதிமதி (பேச்சு) 04:23, 24 மார்ச் 2013 (UTC)

வணக்கம். ஆம், வருகின்றன. யால தேசிய வனம் பகுதியில் காணப்பட்டுள்ளன. ஐரோப்பாவிலிருந்து வருவதால் இந்தியா ஊடாகத்தான் வரும் எனக் கருதுகின்றேன். இதனைப் பார்க்கவும்: Migration routes of birds to and from Sri Lanka --Anton (பேச்சு) 05:50, 24 மார்ச் 2013 (UTC)
நன்றி அண்டன். பார்க்கிறேன்.--பரிதிமதி (பேச்சு) 11:26, 24 மார்ச் 2013 (UTC)

உதவி

தொகு

இவருக்கு உங்களால் முடிந்தால் உதவ முடியுமா?--Booradleyp (பேச்சு) 04:23, 10 ஏப்ரல் 2013 (UTC)

அவருடைய பேச்சுப் பக்கத்தில் விபரம் கேட்டுள்ளேன். கிடைத்ததும் உதவலாம். --Anton (பேச்சு) 03:00, 11 ஏப்ரல் 2013 (UTC)
நன்றி.--Booradleyp (பேச்சு) 04:48, 11 ஏப்ரல் 2013 (UTC)

முதற்பக்க வார்ப்புருக்கள்

தொகு

இலங்கை, பறவைகள் தொடர்பாக வார்ப்புருக்களை உருவாக்கித் தந்தால் முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தலாம். தொடர்ந்து இந்திய நோக்கிலான வார்ப்புருக்களே முதற்பக்கத்தில் இடம்பெறுவதாகத் தோன்றுகிறது. தங்களுக்குத் தென்படும் மற்ற வார்ப்புருக்களையும் விக்கிப்பீடியா:முதற்பக்க வார்ப்புருக்கள் பக்கத்தில் பரிந்துரையுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 18:31, 10 ஏப்ரல் 2013 (UTC)

இரு வார்ப்புருக்களைப் பரிந்துரை செய்துள்ளேன். புதிதாக உருவாக்க முயற்சி எடுக்கிறேன். --Anton (பேச்சு) 03:00, 11 ஏப்ரல் 2013 (UTC)
நன்றி, அன்டன். உங்கள் பரிந்துரைகளை அடுத்தடுத்த வாரங்களில் காட்சிப்படுத்தி விடுகிறேன். --இரவி (பேச்சு) 04:41, 11 ஏப்ரல் 2013 (UTC)


வணக்கம் ஆன்டன். இலங்கையின் பசரீன் பறவைகள் இப்பக்கத்தைக் கொஞ்சம் கவனிங்க.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:53, 7 மே 2013 (UTC)Reply

ஓம் படிமம்

தொகு

தாங்கள் ஒத்தாசைப் பக்கத்தில் ஓம் படிமங்களை உருவாக்கி தந்தமைக்கு நன்றிகள். அதில் சில மாற்றங்கள் தேவைப்படுகின்றன. அது குறித்து ஒத்தாசைப் பக்கத்தில் தெரிவித்துள்ளேன். இயன்றபொழுது நிறைவேற்றித்தாருங்கள்,, மிக்க நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:50, 8 மே 2013 (UTC)Reply

ஒத்தாசைப் பக்கத்தைக் கவனியுங்கள். புதிய படிமம் ஒன்றுள்ளது. --Anton (பேச்சு) 05:59, 8 மே 2013 (UTC)Reply
நன்றி நண்பரே!. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:11, 8 மே 2013 (UTC)Reply

சமணர் கழுவேற்றம்

தொகு

நீங்கல் ஆங்கிலக் கட்டுரையை பின்பற்றி தமிழ் கட்டுரையில் வார்ப்புரு இட்டிருக்கிறீர்கள். தற்போதுதான் அப்பத்தின் பேச்சுப்பக்கத்தில் இது தொடர்பான வாதங்கள் நடந்து முடிந்தது. இது உண்மையில் நடந்ததா நடக்கவில்லையா என்று இன்னும் தெளிவாகவில்லை. மேலும் எண்ணாயிரம் சமணர் என்று தான் கூறப்படுகிறதே ஒழிய அவர்கள் 8000 மா அல்லது எண்ணாயிரம் என்ற ஊரைச் சேர்ந்தவர்களா என்பதில் ஆய்வாளர்கல் இடையே மாற்றுக்கருத்துகள் உண்டு. ஆங்கிலக்கட்டுரையை எழுதிய 2 முக்கிய பங்கலிப்பாளர்கலும் சமணர் என்பதால் அதில் நடுவு நிலைமை இருக்காது. ஆங்கிலக்கட்டுரையை இக்கட்டுரை பொறுத்தவரை பின்பற்ற வேண்டாம். தயை கூர்ந்து அவ்வார்ப்புருவை நீக்கி விடவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:41, 8 மே 2013 (UTC)Reply

நடந்ததா நடக்கவில்லையா என்பதற்கப்பால் கட்டுரையினை மெருகேற்கவே விரும்பினேன். நீங்கள் குறிப்பிடுவதுபோல ஆங்கிலக்கட்டுரை எல்லாவிடங்களிலும் சரியாகவிருக்காது என்பதும் உண்மைதான். அவ்வார்ப்புருவை தற்போது செயற்படாதவாறு உள்ளது. தேவைக்கேற்ப திருத்திக்கொள்ளுங்கள். --Anton (பேச்சு) 00:57, 9 மே 2013 (UTC)Reply

சந்தேகம்

தொகு

அன்டன் அவர்களே, ஆப்பிரிக்கமான் எனும் தலைப்பு சரியானதா? ஆபிரிக்க மான்? ஆப்பிரிக்கமான்?

நீங்கள் குறிப்பிடுவது ஆப்பிரிக்கா பற்றிய சொல் எனின் பேச்சு:ஆப்பிரிக்காவைப் பாருங்கள். வேறு பொருத்தமான தலைப்பு இருப்பின் மாற்றி விடலாம். --Anton (பேச்சு) 14:26, 10 மே 2013 (UT
ஆபிரிக்காவுக்கும் மானுக்கும் இடையில் இடைவெளி வராதா?--ஆதவன் (பேச்சு) 14:38, 10 மே 2013 (UTC)Reply
 Y ஆயிற்று--Anton (பேச்சு) 00:37, 11 மே 2013 (UTC)Reply

தங்களின் உதவி தேவை

தொகு

வணக்கம், அன்டன்!
இலங்கை இலக்கியவாதிகளான சி. கணபதிப்பிள்ளை, க. சச்சிதானந்தன், சபாபதி நாவலர் இவர்களின் ஒளிப்படங்களை அக்கட்டுரைகளில் சேர்க்க உங்களின் உதவியினை நாடுகிறேன். அவசரமில்லை, உங்களுக்கு போதிய நேரமிருக்கையில் செய்து உதவவும். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:47, 11 மே 2013 (UTC)Reply

வணக்கம், செல்வசிவகுருநாதன்! சி. கணபதிப்பிள்ளை, க. சச்சிதானந்தன் என்போருடைய படங்கள் கிடைத்தன. சபாபதி நாவலருடைய படம் கிடைக்கவில்லை. இணையத்தில் கண்டால் குறிப்பிடுங்கள், நியாயப் பயன்பாட்டின் கீழ் பயன்படுத்தலாம். --Anton (பேச்சு) 00:31, 12 மே 2013 (UTC)Reply
இங்கு கட்டுரையில் இருக்கும் க. சச்சிதானந்தன் வேறு, மறவன்புலவு சச்சிதானந்தன் (தமிழகத்தில் தற்போது இருக்கிறார்) வேறு.--Kanags \உரையாடுக 00:44, 12 மே 2013 (UTC)Reply
நன்றி, சரியான படிமத்தைப் பதிவேற்ற முடியுமா? --Anton (பேச்சு) 00:53, 12 மே 2013 (UTC)Reply
என்னிடம் இல்லை. தேடிப் பார்க்கிறேன். நூலகத்தில் இருக்கலாம். நூலக இணைப்பு வேலை செய்யவில்லை.--Kanags \உரையாடுக 01:01, 12 மே 2013 (UTC)Reply

தொடர் கட்டுரைப் போட்டி தொடர்பாக கருத்து தேவை

தொகு

விக்கிப்பீடியா பேச்சு:2013 தொடர் கட்டுரைப் போட்டி பக்கத்தில் ஏற்கனவே கூறப்பட்டுள்ள கருத்துகளை உள்வாங்கி புதிய பரிந்துரையை இட்டுள்ளேன். உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன். நன்றி--இரவி (பேச்சு) 05:18, 13 மே 2013 (UTC)Reply

உதவி

தொகு

வணக்கம் ஆன்டன். பகுப்பு:திருநாங்கூர் பதினொரு திருப்பதிகள் பக்கத்தை உருவாக்கினேன் ஆனால் அதில் ஏதோ சிக்கல் போலுள்ளது. முன் தோற்றம் என்றே காட்டுகிறது. சரிசெய்து உதவவும்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 07:10, 14 மே 2013 (UTC)Reply

இப்போது பாருங்கள். --Anton (பேச்சு) 08:47, 14 மே 2013 (UTC)Reply

நன்றி ஆன்டன். எப்படி சரி செய்தீர்கள்?-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 09:42, 14 மே 2013 (UTC)Reply

பகுப்பை உருவாக்காமல் முன் தோற்றம் எனக் காட்டுமிடத்து, குறித்த பகுப்பு உள்வாங்கப்பட வேண்டிய தாய்ப்பகுப்பை (எ.கா: பகுப்பு:கோயில்கள்) தட்டச்சு செய்து சேமித்தால் சரியாகிவிடும். --Anton (பேச்சு) 10:07, 14 மே 2013 (UTC)Reply

படிமம் வடிவமைத்துதர வேண்டுகோள்

தொகு

தாங்கள் இந்து சமய வலைவாசலுக்காக தமிழ் ஓம் படிமத்தினை வடிவமைத்து தந்தீர்கள். அதில் வார்ப்புருக்களில் இடுவதற்காக கருப்பு வெள்ளையில் தமிழ் ஓம் படிமம் ஏதுவாக இருக்கிறது. அதுபோல சைவ சமய வார்ப்புருக்களுக்கு நந்தி, சிவலிங்கம் போன்ற சைவம் தொடர்பான படிமங்களையும், வைணவ சமய வார்ப்புருக்களில் இட திருமண், சங்கு, சக்கரம் போன்ற படிமங்களையும் தங்களுக்கு நேரமிருக்கும் போது வடிவமைத்து தர வேண்டுகிறேன். வார்ப்புரு:சைவம் வார்ப்புரு:வைணவ சமயம் இரண்டையும் ஒரு முறை பார்த்து அதன் பின்புலத்திற்கு தக்கவாறு வண்ணமிடுங்கள். நன்றி --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:52, 21 மே 2013 (UTC)Reply

நீர்வீழ்ச்சி

தொகு

அன்ரன், நீர்வீழ்ச்சி என்பது தமிழில் அருவி என்றே வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து முன்னர் பல இடங்களில் உரையாடியுள்ளோம். தலைப்பிடும் போடு அருவி என்றே தாருங்கள். கட்டுரையினுள் ஆரம்பத்தில் (ஓர் இடத்தில் மட்டும்) இலங்கை வழக்கான நீர்வீழ்ச்சியைத் தாருங்கள்.--Kanags \உரையாடுக 01:38, 26 மே 2013 (UTC)Reply

நன்றி. குறித்துக் கொள்கிறேன். --Anton (பேச்சு) 01:42, 26 மே 2013 (UTC)Reply

Lo(w)hitஐ விரட்டிய High Hit

தொகு

லோகித் எழுத்துருவை எதிர்த்து போடப்பட்ட வழக்கில் நம் பக்கம் வாதாடியவர்களில் வாதங்களை நெத்தியில் அடித்தால் போல் சொன்னதால் உங்களுக்கு இந்த பட்டம். அந்த வாதம் கீழே

- லோகித் கடந்த மட்டக்களப்பு அண்டனார்

--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:46, 13 சூன் 2013 (UTC)Reply

  விருப்பம்--இரவி (பேச்சு) 07:52, 15 சூன் 2013 (UTC)Reply
ஏதோ நம்மால முடிஞ்சது. :) --Anton (பேச்சு) 05:50, 14 சூன் 2013 (UTC)Reply

விரைவு நீக்கல்

தொகு

அன்டன், புதிய பங்களிப்பாளர்களின் கட்டுரைகளில் உடனடியாக விரைவு நீக்கல் வார்ப்புரு இட வேண்டாமே? குறிப்பாக, சென்சூ போன்று விரிவாக்கப்படக்கூடிய கட்டுரைகள். நன்றி. --இரவி (பேச்சு) 07:52, 15 சூன் 2013 (UTC)Reply

சென்சூ கட்டுரைக்கு 2 நாட்களின் பின்னர் இட்டேன். உடனடியாக செய்யாது விட்டுவதால் ஏற்படும் குப்பைகளும், துப்புரவு வேலைகளும் அதிகம். எது எப்படியோ, விரைவு நீக்கல் வார்ப்புரு இடத்தான் வேண்டும் என்ற கட்டாயமும் எனக்கில்லை. --Anton (பேச்சு) 17:27, 15 சூன் 2013 (UTC)Reply
இரண்டு நாட்கள் பின்னர் இட்டீர்கள் என்பதைக் கவனிக்கத் தவறிவிட்டேன். ஒன்று அல்லது இரண்டு வாரம் கழித்து இடலாம். இதற்கு ஏற்ப நமது உலாவியில் இவற்றைக் குறித்து வைத்துக் கொண்டால் குப்பைகளை மறந்து விடாமல் இருக்கலாம் என நினைக்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 11:52, 24 சூன் 2013 (UTC)Reply

தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு

தொகு

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அபூர்வ வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 11:52, 24 சூன் 2013 (ஹிஜிசி)

ஒருங்குறி

தொகு

வணக்கம் அண்டன்! இமானுவேல்_கான்ட் கட்டுரை ஒருங்குறி அல்லாத எழுத்துருவில் உள்ளது. இதை என்னால் உறுதியாகக் கூற முடியும். சில ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு வெவ்வேறு தமிழ் எழுத்துருக்களும் அவற்றை என்கோடிங் செய்யும் முறைகளும் வேறுபட்டிருந்ததை தாங்கள் அறிவீர்கள். இந்த கட்டுரையில் உள்ள முதல் வரிக்கு நானே எனக்கு தெரிந்த பழைய அமைப்புகளில் சோதித்துப் பார்த்தேன். முடிந்தால் இதை ஒருங்குறிக்கு மாற்றப் பார்க்கிறேன் அல்லது இதன் எழுத்துகளை ஊகித்து எழுத முனைகிறேன். இந்த கட்டுரையின் உள்ளடக்கத்தை பயனர்:தமிழ்க்குரிசில்/குப்பை என்ற பக்கத்தில் தர முடியுமா? திருத்திப் பார்க்கிறேன். :)-தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:36, 4 சூலை 2013 (UTC)Reply

இசுலாம் குறித்த விமர்சனங்கள் கட்டுரையில் நீங்கள் செய்த மாற்றங்கள் குறித்து

தொகு

"பலர் இசுலாத்தை ஓர் தீவிர கிறித்தவர் கேர்சே போன்று பார்த்தனர்." என்னும் வரிக்கு நீங்கள் முன்னர் இருத்த ஆதாரத்தையே கொடுத்துள்ளீர்கள். அந்த ஆதாரம், ஆங்கிலத்தில் இங்கேயும் மூல இலத்தீனில் இங்கேயும் உள்ளது. இரண்டிலுமே கேர்சே என்பது பற்றி குறிப்பில்லை. ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரையில் இது "Early written criticism came from Christians, prior to the ninth century, many of whom viewed Islam as a radical Christian heresy." என்னும் வரிக்கு தான் ஆதாரமாக உள்ளது. ஏன் மீண்டும் அதே ஆதாரத்தை இட்டீர்கள் என விளக்கவும். அல்லது என் தொகுப்புக்கு மீள்விக்கவும். நன்றி. --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 17:16, 23 சூலை 2013 (UTC)Reply

தற்போது திருத்தியுள்ளேன். இன்னும் சிக்கல் இருப்பின் ஆ.வி.யில் உள்ளவாறு தமிழ்ப்படுத்திவிடுங்கள். --Anton (பேச்சு) 04:17, 24 சூலை 2013 (UTC)Reply

Thanks for the Welcome and early exchange of courtesies

தொகு

Good morning from Campora San Giovanni Calabria, Southern Italy.

I write first greeting you and thanking you for the welcome in Tamil Wikipedia, thank you for the availability in this regard I would like to ask you kindness if you would like to be my vessel in translations from Tamil. I make myself available for Italian, Sicilian, Italian various dialects, Spanish, French and Portuguese, I already translate your hometown, I think in the late afternoon today, tomorrow at delaying Mondays. of course I ask you to give aid to this item: Radio Studio 54 Network in Tamil is widely followed by the community of indian subcontinent living in Calabria and thanks to this radio some gadgets have arrived at your home. Certainly one of your cooperation in advance I thank you with my whole heart .. ask the translations that you want, and if you want to welcome your friends. ah last thing, I have added to your facebook fan page .. if you want I can find the. thank you very much again--Lodewijk Vadacchino (பேச்சு) 05:06, 3 ஆகத்து 2013 (UTC)Reply

You are welcome and thank you for translating Tamil articles into your lanugage. I'd comeback to your talk page once I organize myself. --Anton (பேச்சு) 12:09, 3 ஆகத்து 2013 (UTC)Reply

Midhun Jith

தொகு

இந்த திருப்பிவிட {{prettyurl|Midhun Jith}} இருந்தது. அதை பக்கத்தின் யு ஆர் எல் http://ta.wikipedia.org/wiki/Midhun_Jith ஆக மாறும். --Jose Arukatty (பேச்சு) 16:19, 4 ஆகத்து 2013 (UTC)Reply

ஆங்கிலத்தில் தலைப்புக்கள், வழி மாற்றுக்கள் தேவையில்லை.--Anton (பேச்சு) 08:49, 5 ஆகத்து 2013 (UTC)Reply

நன்றி Anton

தொகு

வணக்கம் Anton, உங்களுடைய வழிகாட்டலுக்கும் ஆதரவுக்கும் நன்றி, நான் விக்கிபீடியாவில் புதியவன் என்பதால் என்னால் விடப்படும் தவறுகளை சுட்டிக்காடி அவற்றை திருத்துவதற்கு உதவுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன். நீங்கள் குறிப்பிட்டதுபோல ஆலயத்தின் புகைப்படம் மாற்றுவதற்குரிய முயற்சிகள் செய்கிறேன். நன்றி Baabuji (பேச்சு) 06:09, 6 ஆகத்து 2013 (UTC)Reply

  1. நேற்று என்னுடைய வட அமெரிக்கா,மற்றும் 4 கட்டுரைகளை தாங்கள் மீளமைதீர்கலள்.என்னுடய புதிய கட்டுரை ( அதிர்வெண் )தாங்கள் பார்த்து விதிமீறல் இன்றி சரியான முறையில் அமைத்துள்லேனா என கூறினால் அடுத்த கட்டுரைகளை எழுத துவங்குவேன்......

Muthuraman99 (பேச்சு) 06:41, 7 ஆகத்து 2013 (UTC)Reply

Return to the user page of "AntanO/தொகுப்பு 2".