ஐரோப்பியப் பஞ்சுருட்டான்

ஈ பிடிப்பான் இனவகைச் சிறுபறவை
(ஐரோப்பிய ஈப்பிடிப்பான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஐரோப்பிய ஈ பிடிப்பான்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவையினம்
வரிசை: கோராசீபோர்மெஸ்
குடும்பம்: மீரோபிடே
பேரினம்: மீரோப்சு
இனம்: மீ. அப்பியாசுடர்
இருசொற் பெயரீடு
மீரோப்சு அப்பியாசுடர்
லினேயசு, 1758
மீரோப்சு அப்பியாசுடர் பரம்பல்
மீரோப்சு அப்பியாசுடர் முட்டைகள்

ஐரோப்பிய ஈ பிடிப்பான் (European Bee-eater, மீரோப்சு அப்பியாசுடர்) அல்லது ஐரோப்பிய பஞ்சுருட்டான் என்பது ஈபிடிப்பான் இனத்தைச் சேர்ந்த ஒரு சிறு பறவையினமாகும். தென் ஐரோப்பாவிலும் வட ஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும் மேற்காசிய நாடுகள் வரையிலும் பரவலாகக் காணப்படுகிறது. ஈக்களையே முதன்மையான இரையாகக் கொள்ளும் இப்பறவைகள் புல்வெளிகளிலும் அடர்த்தியற்ற புதர்களிலும் காடுகளிலும் காணப்படும். இவை வால் பகுதியையும் சேர்த்துப் பொதுவாக 27 முதல் 29 செ.மீ. நீளம் இருக்கும். மேற்புறம் பழுப்பு மற்றும் மஞ்சள் வண்னமும் சிறகுகள் பச்சையாகவும் அலகு கறுத்த நிறத்திலும் காணப்படும். இவை பனிக்காலத்தில் ஆப்பிரிக்கா வழியாக இந்தியா, இலங்கை போன்ற பகுதிகளுக்கு வலசை செல்கின்றன.

படங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2012). "Merops apiaster". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 16 July 2012. {{cite web}}: Invalid |ref=harv (help)

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
European bee-eater
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன: