விக்கிப்பீடியா பேச்சு:விக்கித்திட்டம் தாவரங்கள்

பரிந்துரை

தொகு

வணக்கம். விழுப்புரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் எனும் பகுப்பில், தாவரங்கள் குறித்து சுமார் 60 கட்டுரைகள் உள்ளன. இந்தக் கட்டுரைகளை, விக்கிப்பீடியாவிற்குரிய தரத்திற்கு மேம்படுத்த வேண்டும். தேவைப்படும் அறிவியற் கட்டுரைகள் என்பதால், செம்மைப்படுத்தி தக்கவைக்க வேண்டும்.

செய்யவேண்டிய பொதுவான முன்னேற்றங்கள்:

  1. ஆங்கிலக் கட்டுரையுடன் மொழியிடை இணைப்பு.
  2. கலைக்களஞ்சியத்திற்கு ஏற்ற வகையிலான கட்டுரை வடிவமைப்பு.
  3. குறைந்தபட்சம் ஒரு மேற்கோளிற்காவது இணையத்தள இணைப்பு (தகவலை சரிபார்க்க).
  4. கட்டுரைத் தலைப்புகளில் உரிய திருத்தம் (பூனைக்கு பிடித்தமான செடி, மிகவும் வயதான மரம், விசில் அடிக்கும் மரம், மிகப்பெரிய மலர் என கட்டுரையின் தலைப்புகள் அமைந்துள்ளன).

இந்த விக்கித்திட்டத்தின் வாயிலாக இக்கட்டுரைகளை மேம்படுத்தித் தந்தால், விக்கிப்பீடியா:தமிழக ஆசிரியர்கள் விக்கிப்பீடியா பங்களிப்புத் திட்டம்/துப்புரவு எனும் திட்டமும் முன்னேற்றம் காணும். நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:41, 18 நவம்பர் 2023 (UTC)Reply

@Selvasivagurunathan m இத்திட்டப்பக்கத்தில் உறுப்பினராக உள்ளவரில் நானும் ஒருவன் என்ற முறையில் மேலுள்ள உங்களின் பொதுவான பரிந்துரைக்கு பதில் அளிக்க விரும்புகிறேன். இத்திட்டத்தின் முதன்மை இலக்கு பன்னாட்டு தாவரதரவுகளைக் கொண்டு புதிய கட்டுரைகளை உருவாக்குதல் ஆகும். ஆனால், நீங்கள் பரிந்துரைத்திருப்பது, மேம்படுத்துதல் பணியாகும். எனவே, ஆர்வம் உள்ளவர், இத்திட்டத்தில் இணைந்தால், பன்னாட்டு தாவரத்தரவுகள் குறித்தும், பயன்படுத்தப்படும் கட்டற்ற தொழினுட்பம் குறித்தும் என்னால் வழிகாட்ட இயலும். உழவன் (உரை) 17:32, 21 நவம்பர் 2023 (UTC)Reply

நல்லது. திட்டப் பக்கத்தில் 'நோக்கம்' எனும் தலைப்பின்கீழ், ஆரம்பத்தில் //தற்போதுள்ள தாவரவியல் கட்டுரைகளை மேம்படுத்துதல்// எனும் குறிப்பு உள்ளது. அதைக் கண்டு பரிந்துரையைத் தந்துவிட்டேன் எனத் தோன்றுகிறது. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:25, 21 நவம்பர் 2023 (UTC)Reply

ஆம். அதற்கும் பன்னாட்டு தரவுகள் பயன்படும். உங்களுக்கு மேம்படுத்துவதில் விருப்பம் இருந்தால் இணையுங்கள். அறிமுகப்படுத்துகிறேன். உழவன் (உரை) 03:34, 22 நவம்பர் 2023 (UTC)Reply

அடிப்படை வடிவம்

தொகு

வணக்கம்@Info-farmer,

1. இந்தத் திட்டத்தின்கீழ் உருவாக்கப்படும் கட்டுரைகள் நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் //ஒவ்வொரு கட்டுரையின் வடிவமும் ஒன்றே// எனில் ஏன் தனித் தனியாக கட்டுரை உருவாக்க வேண்டும். அட்டவணை அல்லது பட்டியலாக உருவாக்கலாமே.

2. அடிப்படை வடிவம் என்பதற்கு தமிழ்ச் சமூகம் ஒப்புதல் வழங்கியுள்ளதா?

3. நீங்கள் குறிப்பிட்டுள்ள ஆங்கிலத் திட்டம் விக்கிப்பீடியா:தரமறிதல் முறைமை/தர அளவீடுகள் எனும் அளவீட்டிற்குள் ஆங்கில விக்கிப்பீடியாவில் வராதவாறு அவர்கள் கொள்கை முடிவு எடுத்துள்ளார்கள்.ஆனால் இங்கு?

குறிப்பு:@ உழவன், இந்தத் திட்டத்தின் நல்ல நோக்கம் குறித்து அறிவேன். எனவே, எனது கேள்வி குறித்து மட்டும் இங்கு உரையாடுவீர்கள் என நம்புகிறேன்.

கவனிக்க: @AntanO,பயனர்:Kanags,Sundar,Selvasivagurunathan m,,Almighty34,Arularasan. G,Balajijagadesh,Nan,கி.மூர்த்தி,சா அருணாசலம்,சத்திரத்தான்

-- நன்றி ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 11:50, 3 மார்ச்சு 2024 (UTC)Reply

@Info-farmer: கருத்து தெரிவித்தால், மற்றவர்கள் கருத்து தெரிவிக்க இலகுவாக இருக்கும். --AntanO (பேச்சு) 06:10, 7 மார்ச்சு 2024 (UTC)Reply
@AntanO தொடர்ந்து தாவரவியல் கட்டுரைகளுக்கு உங்களது பின்னூட்டம் உட்பட, மேலும் பிற பயனர்களின் பின்னூட்டம் பெற்றே செயற்படுகிறேன். Sridhar G பின்னூட்டம் தந்தால் அறிந்து செயற்படுவேன். அல்லது நேரடியாக உரிய பக்கங்களில் கலந்துரையாடலமே? ஒரு சிலருக்கு மட்டும் தெரிவித்து //எனது கேள்வி குறித்து மட்டும் இங்கு உரையாடுவீர்கள்// என்று கூறி வற்பறுத்துவதன் நோக்கம் என்ன? அவர் இணைத்துள்ள பக்கங்கள், வெவ்வேறு காலக்கட்டங்களில் உரையாடியது. தற்போது 100 விக்கிநாட்கள் திட்டத்தில், புதுப்பயனர்களுடன் இணைந்து செயற்படுவதால், அது முடிந்தவுடன் தொடர்ந்து நீங்கள் உட்பட அனைவருடனும் கலந்துரையாட விருப்பம். எனக்கும் விக்கியில் அதிகநேரம் ஈடுபட முடியவில்லை. உழவன் (உரை) 17:12, 7 மார்ச்சு 2024 (UTC)Reply
//எனது கேள்வி குறித்து மட்டும் இங்கு உரையாடுவீர்கள்// என்று கூறி வற்பறுத்துவதன் நோக்கம் என்ன? நான் நேரடியாக சுற்றி வளைக்காமல் ஒரு கருத்தினைத் தெரிவிக்கிறேன். நீங்கள் பல சமயங்களில் விடயத் தெளிவு இல்லாமல் உரையாடுகிறீர்கள். சம்மந்தமற்ற விளங்கங்களையும் அளிக்கிறீர்கள். AntanO (பேச்சு) 18:04, 7 மார்ச்சு 2024 (UTC)Reply
//நேரடியாக உரிய பக்கங்களில் கலந்துரையாடலமே? // திட்டப்பக்கத்தில் தான் உரையாடுகிறேன்.
//ஒரு சிலருக்கு மட்டும் தெரிவித்து// தொடர்ந்து பங்களிக்கும் நிர்வாகிகளைக் குறிப்பிட்டுள்ளேன். நீச்சலை மறந்துவிட்டேன்.
தற்போது கூட நீங்கள் எனது கேள்விக்கு பதில் அளிக்கவே இல்லையே? இது தொடர்பாக ஒருமித்த கருத்து ஏற்படும் வரை இது போன்ற கட்டுரைகளை உருவாக்க வேண்டாம் எனப் பரிந்துரைக்கிறேன். நன்றி -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 06:19, 8 மார்ச்சு 2024 (UTC)Reply
சரி. உழவன் (உரை) 06:22, 8 மார்ச்சு 2024 (UTC)Reply
Return to the project page "விக்கித்திட்டம் தாவரங்கள்".