பயனர் பேச்சு:AntanO/தொகுப்பு 13
எனது கட்டுரையை விக்கிப்பீடியாவில் எழுதுவதற்குத் துணை புரிந்த தமிழ் பிரிவில் சேவைகள் புரியும் அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் 🎉🎊👍 தெரிவித்துக்கொள்கிறேன்
குறிப்பாக மட்டக்களப்பு ஆன்டன்(கொச்சி, கேரளா) அவர்களுக்கும், திரு. பிரபஞ்ச நாதன், திரு.சிவகுமார் அவர்கள்
போன்ற நான் அறியவியலாத பேர்கள் பலருக்கும், விக்கிப்பீடியாவிலும், விக்கிப்பீடியாவிற்காகவும் 🌏🌐🌍உழைக்கும் உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் எனதருமைச் சகோதர, சகோதரிகளுக்கும் எனது எண்ணற்ற (Can't countable gratitude and wish 🙏you'll.) நன்றிகளையும்🙏💕 வாழ்த்துக்களை யும் தெரிவித்து மகிழ்கிறேன். இப்படிக்கு:--
N. Palaniappan Namakkal Tamil Nadu States India-637207. Contact📞 +918248959225, +919443367459.
சந்தேகம்
தொகுவணக்கம் அண்ணா, தமிழ் விக்கியில் குறிப்பிட்ட ஒரு வார்த்தையை மட்டும் உள்ளீடு செய்து சேமித்தால், ஏற்றுக்கொள்ள முடியாதவாறு செய்ய முடியுமா அண்ணா?? உ.தா:காட்டுக்குளம் கார்த்திகேயன் இந்த பெயரை தமிழ் விக்கியில் உள்ள கட்டுரைகளில் உள்ளீடு செய்து சேமித்தால், ஏற்றுக்கொள்ளாதவாறு இருத்தல் வேண்டும்.-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 17:00, 28 செப்டம்பர் 2020 (UTC)
- நானறிந்த வரையில் இல்லை. எதற்கும் மீடியாவிக்கியில் தேடிப்பார்க்கிறேன். --AntanO (பேச்சு) 21:09, 28 செப்டம்பர் 2020 (UTC)
முதல் பக்க செய்திகள்
தொகுவணக்கம் தோழர். நான் தொகுத்த முதல் பக்க செய்தியை தாங்கள் மீளமைக்கப்பட்டதை கண்டேன். தங்கள் அனுப்பிய செய்தியையும் படித்தேன். நேற்று(செப் 28) இறந்தவர் அஸ்ஸாம் மாநிலத்தின் முதல்வர் அன்வரா. இவர் இந்தியளவில் அனைவராலும் அறியபட்டவர். காரணம் இவர் முதல் பெண் அஸ்ஸாமிய முதல்வர், மேலும் இவர் தான் இந்தியாவின் ஒரே பெண் முஸ்லிம் முதல்வர். இருந்தும் இவர் பெயர் இந்திய குடியுரிமை திருத்த பதிவேட்டில் நீக்கம் செய்யபட்டது. இதற்காகவே இவர் பிரபலம். இந்த நோக்கத்தில் தான் முதல் பக்க செய்தியில் சேர்த்தேன். அதுவும் அந்த கட்டுரையை அன்று தான் தொகுக்கவும் செய்தேன். தங்கள் அனுப்பிய அந்த தங்களுடைய வழிகாட்டலும் நன்றி. --Yousufdeen (பேச்சு) 06:07, 29 செப்டம்பர் 2020 (UTC)
- @Yousufdeen: பொதுவாக இறப்புகள் பற்றிய செய்திகளை முதற்பக்கத்தில் தவிர்த்தே வருகிறோம். குறிப்பிடத்தக்கவரின் இறப்புகள் முதற்பக்கத்தில் அண்மைய இறப்புகளில் சேர்க்கப்படுகின்றன. அதுவும் ஒரே நேரத்தில் மூன்று பேருக்கு மேற்படாமல் இருக்க வேண்டும். எஸ். பி. பாலசுப்பிரமணியம் அவர்களின் இறப்புச் செய்திய முதல்பக்கத்தில் சேர்த்தமைக்குக் காரணம்: அப்பக்கம் கடந்த மூன்று நாட்களில் 55,000 இற்கும் அதிகமான தடவைகள் பார்வையிடப்பட்டிருக்கின்றது. இன்னும் ஓரிரு நாட்களில் அது நீக்கப்படும்.--Kanags \உரையாடுக 08:20, 29 செப்டம்பர் 2020 (UTC)
Wikipedia Asian Month 2020
தொகுHi WAM organizers and participants!
Hope you are all doing well! Now is the time to sign up for Wikipedia Asian Month 2020, which will take place in this November.
For organizers:
Here are the basic guidance and regulations for organizers. Please remember to:
- use Fountain tool (you can find the usage guidance easily on meta page), or else you and your participants’ will not be able to receive the prize from WAM team.
- Add your language projects and organizer list to the meta page before October 29th, 2020.
- Inform your community members WAM 2020 is coming soon!!!
- If you want WAM team to share your event information on Facebook / twitter, or you want to share your WAM experience/ achievements on our blog, feel free to send an email to info@asianmonth.wiki or PM us via facebook.
If you want to hold a thematic event that is related to WAM, a.k.a. WAM sub-contest. The process is the same as the language one.
For participants:
Here are the event regulations and Q&A information. Just join us! Let’s edit articles and win the prizes!
Here are some updates from WAM team:
- Due to the COVID-19 pandemic, this year we hope all the Edit-a-thons are online not physical ones.
- The international postal systems are not stable enough at the moment, WAM team have decided to send all the qualified participants/ organizers extra digital postcards/ certifications. (You will still get the paper ones!)
- Our team has created a meta page so that everyone tracking the progress and the delivery status.
If you have any suggestions or thoughts, feel free to reach out the WAM team via emailing info@asianmonth.wiki or discuss on the meta talk page. If it’s urgent, please contact the leader directly (jamie@asianmonth.wiki).
Hope you all have fun in Wikipedia Asian Month 2020
Sincerely yours,
Wikipedia Asian Month International Team 2020.10விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020
தொகுவணக்கம் அன்ரன் தாங்கள் தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2020 இல் பொதுவகம் பற்றி மாணவர்களுக்கு பயிற்சி நடத்தினால் நன்றாக இருக்கும் என நம்புகிறேன். தங்களுக்குப் பயிற்சி அளிக்க விருப்பம் எனில் இங்கு தெரிவிக்கவும் நன்றி ஸ்ரீ (✉) 09:12, 18 அக்டோபர் 2020 (UTC)
- வணக்கம், நீச்சல்காரனும் இதுபற்றி என்னிடம் தெரிவித்திருந்தார். பயிற்சி நடக்கும் காலத்தில் சிலவேளை நான் வேலையாக இருக்கலாம். மேலும், பயிற்சியளிக்க பலரும் இருப்பதால் இந்த பயிற்சியளித்தலில் நேரடியாக பங்குகொள்ளவியலாததற்கு வருந்துகிறேன். ஆயினும், என்னால் முடிந்தளவு பங்களிப்பதற்கு முயற்சிக்கிறேன். திட்டப்பக்கத்தில் கருத்துக்களைத் தெரிவிப்பேன். --AntanO (பேச்சு) 03:20, 21 அக்டோபர் 2020 (UTC)
- மிக்க நன்றி ஸ்ரீ (✉) 12:05, 21 அக்டோபர் 2020 (UTC)
காரணம் என்ன?
தொகு1வது ஜீ தமிழ் குடும்பம் விருதுகள், 2வது ஜீ தமிழ் குடும்பம் விருதுகள், 3வது ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் என்ற கட்டுரைகளை நீங்கள் நீக்கியுள்ளீர்கள் அதன் காரணம் என்ன?--Thilakshan (பேச்சு) 09:18, 8 நவம்பர் 2020 (UTC)
ஒக்டோபர் எழுச்சி (இலங்கை)
தொகுமதிப்புக்குரிய நிர்வாகி அவர்களுக்கு, எனது முயற்சியால் தங்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு மன்னிப்பு கேட்பதுடன் உங்கள் தகவல் வழிகாட்டலுக்கு மிக்க நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் மேம்படுத்த முயற்சி செய்த ஒக்டோபர் எழுச்சி (இலங்கை) பக்கத்தை நீங்கள் முன்னிலை ஆக்கியுள்ளது அறிந்தேன். ஆம் சில பகுதிகளை பின்வரும் நூலகப் பக்கத்திலிருந்து எடுத்தேன் : https://noolaham.net/project/128/12749/12749.html ஆனால் இந்தப் பக்கம் பொதுமங்கள் அடிப்படையில் பகிரப்பட்டுள்ளது. எழுத்துணரியால் உருவாக்கப்பட்ட படைப்பை மெய்ப்புப்பார்த்து மேம்படுத்தி பயன்படுத்தியுள்ளேன். தயவுகூர்ந்து உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது மேற்குறிப்பிட்ட பக்கத்திற்கு சென்று பாருங்கள். எனக்கு தெரிந்த சிலவற்றை எதிர்கால சந்ததி அறியவேண்டிய நோக்கத்தில் விக்கியில் கட்டிட வழிகாட்டி உதவி செய்யுங்கள். மிக்க நன்றி
- @Roshan Sylu: வணக்கம், இங்கு இயல்பாகவே உரையாடலாம். Using copyrighted work from others, Proper attribution to the author or source of a work, even if it is in the public domain, is still required in order to comply with relevant policies ஆகியவற்றை கவனியுங்கள். அதற்கேற்ப பகுதிகளை இணைக்கலாம். ஆயினும், கட்டுரைக்கு முறையாக சான்றுகள் தேவை என்பதையும் கவனிக்க வேண்டும். நன்றி. --AntanO (பேச்சு) 04:20, 13 நவம்பர் 2020 (UTC)
உங்கள் தகவல் வழிகாட்டலுக்கு மிக்க நன்றி! இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உங்களுக்கு உரித்தாகட்டும் !! Roshan Sylu (பேச்சு) 08:33, 14 நவம்பர் 2020 (UTC)
பெயர் மாற்றம் செய்யவும்
தொகு@AntanO: ஈரோடு கலைக் கல்லூரி என்பதை ஈரோடு கலை மாற்றும் அறிவியல் கல்லூரி என்று மாற்றவும் http://www.easc.ac.in/about-us/management/ Tirukodimadachengunrur (பேச்சு) 08:22, 20 நவம்பர் 2020 (UTC)
- ஆயிற்று--அருளரசன் (பேச்சு) 12:48, 20 நவம்பர் 2020 (UTC)
ஒரே பெயரில் இரு கட்டுரைகள்
தொகுவணக்கம் சீனத் திரைப்படத்துறை மற்றும் சீனத் திரைப்படம் என்றே பெயரில் இரு கட்டுரைகள் உள்ளது அதை சீனத் திரைப்படத்துறை என்ற கட்டுரைக்கு நகர்த்த முடியுமா?--Thilakshan (பேச்சு) 18:08, 21 நவம்பர் 2020 (UTC)
மின்னணு செயல்முறையின் தேசிய சேவை மற்றும் கண்காணிப்பு
தொகுவணக்கம்! தங்களின் தகவல் அறிந்தேன். உதவிக்கும் அழைப்பேன். நன்றி! A.R.V.Ravi
வேண்டுகோள்
தொகு@AntanO: செங்குந்தர் பக்கத்தின் பூட்டை நீக்குங்கள் ஐயா Tirukodimadachengunrur (பேச்சு) 14:27, 26 நவம்பர் 2020 (UTC)
@AntanO: வாணி போஜன் பக்கத்தின் பூட்டை நீக்குங்கள். --Thilakshan (பேச்சு) 16:09, 26 நவம்பர் 2020 (UTC)
- காரணம்? --AntanO (பேச்சு) 19:12, 26 நவம்பர் 2020 (UTC)
- காரணம்? அந்த கட்டுரையை விரிவுபடுத்த தான்.--Thilakshan (பேச்சு) 14:47, 29 நவம்பர் 2020 (UTC)
- அக்கட்டுரையில் அதிகமான விளம்பர, தொகுப்புப்போர் இடம்பெற்றுள்ளது. மேலும், காரணம் விளக்கமற்றுள்ளது. இதுபோன்ற விடயங்களை கட்டுரைப்பக்கத்தில் உரையாடவும். அத்துடன், சிக்கலான தொகுப்புகள் செய்யும் ஒருவாரின் கோண்டுகோளை ஏற்று இங்கு வந்து கோரிக்கையிடுவது நீண்ட நோக்கில் சிந்திக்க வேண்டியது. --AntanO (பேச்சு) 16:54, 29 நவம்பர் 2020 (UTC)
காரணம்
தொகுவணக்கம், நீங்கள் பாவனையில் இருக்கும் பல கொரியன் தொடர் சார்ந்த பகுப்புகளை நீக்குகிறீர்கள் காரணம் என்ன?--Thilakshan (பேச்சு) 14:46, 29 நவம்பர் 2020 (UTC)
- உங்களுக்கு பகுப்பு வழிகாட்டல் பற்றி ஏதாவது தெரியுமா? மீண்டும் மீண்டும் ஒரே விடயத்திற்கு விளக்கம் கேட்க வேண்டாம். நன்றி. --AntanO (பேச்சு) 16:58, 29 நவம்பர் 2020 (UTC)
- அதை பற்றி தெரிந்து கொல்வதற்கு தமிழ் விக்கிபிடியாவில் எங்கையாவது குறிப்பிட்டு இருக்கின்றதா? (குறிப்பிட்டு இருந்தால் அந்த பக்கத்தை எனக்கு Link செய்யவும்)
- நீங்கள் பகுப்பு வழிகாட்டல் என்ற பெயரில் பகுப்புகளை நீக்கம் செய்யும் பொது சிவப்பு இணைப்பு பகுப்புகளையும் நீக்கவும். (ஏன் என்றால் நான் தற்பொழுது நீங்கள் கூறியவாறு எனது கட்டுரையில் உள்ள சிவப்பு இணைப்பு பகுப்புகளை நீங்கி வருகின்றேன்)
- 2013 இல் தொடங்கிய தென் கொரிய நாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்ற பகுப்பை நீக்கிய நீங்கள் 2014 இல் நிறைவடைந்த தென் கொரிய நாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்ற பகுப்பை நீக்க தவறிவிட்டிர்கள். ஆரம்பம் இல்லாமல் முடிவு மட்டும் எதற்கு என்பது எனது கேள்வி?--Thilakshan (பேச்சு) 19:20, 30 நவம்பர் 2020 (UTC)
- ஒரே விடயத்தை எத்தனை முறை மீண்டும் குறிப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டும்? தயவுசெய்து விக்கிப்பீடியாவிற்கு ஆக்கபூர்வமாக பங்களிக்கும் வழிமுறையைத் தெரிந்து கொள்வது நல்லது. தேவையற்ற பேச்சுக்களில் என்னை தொடர்புபடுத்த வேண்டாம். --AntanO (பேச்சு) 19:54, 30 நவம்பர் 2020 (UTC)
தமிழ் விக்கிபீடியா நிர்வாகிக்கு வணக்கம்
தொகுhttps://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D இந்த பக்கத்தில் உள்ள கருத்துக்கும் ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள ஆதாரமுள்ள கருத்துக்கும் பல வேறுபாடு உள்ளது ஆனால் ஏன் அதை இதில் பயன்படுத்தமறுக்கிறீர்கள், மேலும் இந்த தமிழ்விக்கிப்பீடியாவில் உள்ள பல தகவல்கள் ஆதாரமற்றவை தொழில் மற்றும் முதன்மைகட்டுரை போன்ற தலைப்புகள் இவை எவையுமே ஆங்கில கட்டுரையில் இடம்பெறவில்லை https://en.m.wikipedia.org/wiki/Vannar நான் இதை உரையாடல் பக்கத்திலும் முறையிட்டுளேன் ஆனால் எந்த ஒரு பதிலும் வரவில்லை தமிழ் விக்கிபீடியா என்பது ஆங்கில விக்கிப்பீடியாவை மையப்படுத்தி ஆதரமுள்ளவைகளை காட்டுபவை என்பதை உணர்த்தவே கேக்குறேன், ஆங்கிலத்தில் உள்ள உண்மையான ஆதாரமுள்ள கட்டுரையை மையமாக வைத்து தமிழ் விக்கிபீடியா எழுத வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். Navaneethan tiger (பேச்சு) 03:58, 4 திசம்பர் 2020 (UTC)
- வணக்கம், ஆங்கில விக்கிப்பீடியாவின் நகலாக தமிழ் விக்கிப்பீடியா இல்லை என்பதை முதலில் அறிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு மொழி விக்கிப்பீடியாவும் தனித்துவமானவை. நீங்கள் உசாத்துணையுடன் எழுதப்பட்டவற்றை நீக்கியிருந்தீர்கள். அவ்வாறு செய்யாது பேச்சுப்பக்கத்தில் கருத்திடுங்கள். மேலும் குறிப்பிட்ட கட்டுரையைத் தொகுத்தவருடன் உரையாடலாம். அத்துடன், உதவிப்பக்கத்திலும் உதவி கேட்கலாம். பயனருக்குள்ள நேரத்திற்கு ஏற்பவே அவர்கள் கருத்திருவார்கள். நன்றி. --AntanO (பேச்சு) 04:20, 4 திசம்பர் 2020 (UTC)
மீண்டும் பேசுவதற்கு மன்னிக்கவும் நீங்கள் சான்றுதேவை என்று கொடுத்த பக்கத்தை தொகுத்தவர் விக்கிபீடியா கணக்கை சாராதவர்,அப்படி பட்ட தொகுப்பை நிர்வாகிகள் நீக்கிவிட வேண்டும் ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை அதுவே இந்த மாதிரியான சான்றே இல்லாத ஒரு தலைப்பு அந்த பக்கத்தில் இடம்பெற்று உள்ளது,சான்று இல்லாத எவையும் தமிழ்விக்கிபீடியா கொள்கையில் இடம்பெயராது என்பதை நான் படித்தேன் ஆக இந்த தலைப்பை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்,உரையாடல் பக்கத்தில் பதிவுசெய்தேன் ஆனால் பதில் எதுவுமே வரவில்லை என்ற அடிப்படையிலே இந்த கருத்தை பதிவுசெய்கிறேன்,விக்கிபீடியா கணக்கு சாராத ஒருவர் எழுத பட்ட தலைப்பு அதில் இடம்பெறுவது வருத்தமாக உள்ளது, அதுவும் சான்று இல்லை அதை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் Navaneethan tiger (பேச்சு) 05:27, 4 திசம்பர் 2020 (UTC)
நிர்வாகிக்கு வணக்கம்.
தொகுhttps://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D மேற்கொண்ட பக்கத்தில் சில சான்றில்லை தொகுப்பைகளை கணக்கை சாராதவர்கள் தொகுத்துள்ளார்கள் என்று பதிவு செய்தேன், அதை நீக்கினேன் நீங்கள் இணைத்தீர்கள் முதன்மை கட்டுரை என்று சொன்னிர்கள், சான்றில்லாத எந்த தொகுப்பும் விக்கிபீடியாயாவில் இடம் பெயராது என்பதை நான் படித்தேன் அந்த அடிப்படையில் ஏன் இந்த தொகுப்பு உள்ளது. Navaneethan tiger (பேச்சு) 03:40, 10 திசம்பர் 2020 (UTC)
நிர்வாகி அவர்களுக்கு
தொகுhttps://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D#%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81 உரையாடல் பகுதியில் கருத்தை தெரிவித்துஉள்ளேன்,அதற்கு நிர்வாகி ஒருவர் சான்றே இல்லாத அந்த கட்டுரையை நீக்குமாறு உங்களிடத்தில் பதிவு செய்துள்ளார் அதை மையமாக வைத்து தாங்கள் அந்த பதிவை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் Navaneethan tiger (பேச்சு) 07:48, 12 திசம்பர் 2020 (UTC)
- கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் பதிலளிக்கப்பட்டுள்ளது. --AntanO (பேச்சு) 02:17, 13 திசம்பர் 2020 (UTC)
நன்றி நிர்வாகி அவர்களுக்கு. Navaneethan tiger (பேச்சு) 02:23, 13 திசம்பர் 2020 (UTC)
உங்கள் கவனத்திற்கு
தொகுவணக்கம், கண்ணான கண்ணே, அன்பே வா (தொலைக்காட்சித் தொடர்), வேலைக்காரன் (தொலைக்காட்சித் தொடர்), வல்லமை தாராயோ (வலைத் தொடர்) போன்ற கட்டுரைகள் நீக்கப் பரிந்துரை செய்யப்படுகிறது. அதனை எதிர்த்து பல மேற்கோள்கள் மற்றும் வெளி இணைப்புகள் (முக்கியமாக ஐ. எம். டி. பி இணையத்தளம் இருந்து) சேர்க்கப்பட்டுள்ளது. அதை மீண்டும் பரிசீலனை செய்யவும்.--Thilakshan (பேச்சு) 17:53, 21 திசம்பர் 2020 (UTC)
- அக்கட்டுரைகள் en:Wikipedia:Notability, en:Wikipedia:Television episodes ஆகிய வழிகாட்டலுக்கமைய மேம்படுத்தப்பட்டுள்ளதா? ஐ. எம். டி. பி இணையத்தளத்தில் உள்ளது என்பதற்காக அவை குறிப்பிடத்தக்கவையாக முடியாது. --AntanO (பேச்சு) 21:55, 21 திசம்பர் 2020 (UTC)
கோரிக்கை
தொகுவணக்கம், AntanO இந்த கட்டுரைக்கு பகுப்பு:ஆப்பிரிக்கத் திரைப்படத்துறை என்ற பகுப்பை சேர்த்துள்ளேன் அதை இன்னும் உருவாக்கவில்லை. உங்களிடம் அதை உருவாக்க அனுமதி கோருகின்றேன்?. --Thilakshan (பேச்சு) 13:34, 3 சனவரி 2021 (UTC)
கட்டுரைத் தலைப்பு
தொகுவணக்கம், AntanO உருத்ர வீணை எனக் கட்டுரையின் தலைப்பை மாற்றி விட்டேன். நன்றி--பாலசுப்ரமணியன் (பேச்சு) 03:59, 14 சனவரி 2021 (UTC)
கட்டுரைத் தலைப்பு மாற்றக் கோரிக்கை
தொகுகுறிசுடுநர் என்னும் தலைப்பினை வரலாற்றினை தக்க வைக்க குறிசூட்டுநர் என்னுந் தலைப்பிற்கு மாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலதிக விளக்கத்தை பேச்சுப் பக்கத்தில் காணவும்.
உதவி
தொகுவணக்கம். வார்ப்புரு:Mset உருவாக்கினேன். ஆனால் அது கட்டுரைகளில் (பல்கணம்) வேலை செய்யவில்லை. எனக்கு சரிசெய்யத் தெரியவில்லை. இந்த வார்ப்புருவை சரியான முறையில் உருவாக்கித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 14:51, 29 சனவரி 2021 (UTC)
திரை வருடிய படங்கள்
தொகுதிரை வருடிய படங்களை (screen shots) எப்படி பொதுவகத்தில் பதிவேற்றம் செய்வது?
தங்களது மேலான உதவிகள் தேவை.--A.R.V. Ravi (பேச்சு) 02:29, 2 பெப்ரவரி 2021 (UTC)
- Commons:Screenshots - இந்த வழிகாட்டலின்படி உங்கள் திரை வருடிய படங்கள் இருந்தால் பதிவேற்றலாம். இல்லாதவிடத்து பதிவேற்ற முடியாது. --AntanO (பேச்சு) 04:21, 2 பெப்ரவரி 2021 (UTC)
தயவு கூர்தல்
தொகுநான் தனீஷ் இதற்கு முன் நான் தமிழ் சொர்கம் என்ற பக்கத்தை உருவாக்கினேன் அது விளம்பர நோக்கில் உருவாக்க பட்டது என நீங்கள் நீக்கினீர்கள் .அதை நான் ஏற்றுக்கொள்கிறேன் . நன்றி... அதற்காக என் பயனர் பக்கத்தையும் நீக்கினீர்கள் .. ஆனால் தற்போது நான் அந்த தவறு ஏதும் செய்யாமல் ஏற்கனவே ஆங்கிலத்தில் உள்ள சில கட்டுரைகளை தமிழில் மொழி பெயர்த்துள்ளேன் .. தயவு செய்து மீண்டும் எனது பயனர் பக்கத்தை நீக்க வேண்டும்.. நன்றி... தனீஷ் (பேச்சு) 09:13, 6 பெப்ரவரி 2021 (UTC)
Wikimedia Foundation Community Board seats: Call for feedback meeting
தொகுThe Wikimedia Foundation Board of Trustees is organizing a call for feedback about community selection processes between February 1 and March 14. While the Wikimedia Foundation and the movement have grown about five times in the past ten years, the Board’s structure and processes have remained basically the same. As the Board is designed today, we have a problem of capacity, performance, and lack of representation of the movement’s diversity. Direct elections tend to favor candidates from the leading language communities, regardless of how relevant their skills and experience might be in serving as a Board member, or contributing to the ability of the Board to perform its specific responsibilities. It is also a fact that the current processes have favored volunteers from North America and Western Europe. As a matter of fact, there had only been one member who served on the Board, from South Asia, in more than fifteen years of history.
In the upcoming months, we need to renew three community seats and appoint three more community members in the new seats. This call for feedback is to see what processes can we all collaboratively design to promote and choose candidates that represent our movement and are prepared with the experience, skills, and insight to perform as trustees? In this regard, it would be good to have a community discussion to discuss the proposed ideas and share our thoughts, give feedback and contribute to the process. To discuss this, you are invited to a community meeting that is being organized on March 12 from 8 pm to 10 pm, and the meeting link to join is https://meet.google.com/umc-attq-kdt. You can add this meeting to your Google Calendar by clicking here. Please ping me if you have any questions. Thank you. --User:KCVelaga (WMF), 10:30, 8 மார்ச் 2021 (UTC)
Request
தொகுHi Can you translate the article Indian Institute of Science Education and Research Berhampur in Tamil? I guess you may have suggestions in Tamil Wikipedia like இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பெர்காம்பூர். It will be very much helpful. Thank you ଲେଖକ (பேச்சு) 19:10, 19 மார்ச் 2021 (UTC)
வேண்டுகோள்
தொகுநான் பதிவிடும் அனைத்து கட்டுரைகளும் சரியான உரை நடை இல்லாத காரணத்தினால் நீக்கப்பட்டு வருகின்றனர். நான் தவறான பதிவுகளையோ தேவையற்ற பதிவுகளையோ பதிவிடவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன். இனி நான் நன்றாக பயிற்சி பெற்ற பின் கட்டுரைகளை பதிவடுகிறேன்.என்னை எச்சரிக்கை இன்றி தடை செய்து விடுவேன் என்று @AntanO: அவர்கள் பதிவிட்டுள்ளார். தயது செய்து தமிழில் கட்டுரையை எழுத நினைக்கும் ஆர்வலர்களை இப்படி கூற வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி--M.Muthuselvi (பேச்சு) 04:37, 26 மார்ச் 2021 (UTC)
- நீங்கள் சரியாக பயிற்சி (மணல் தொட்டி) பெற்ற பின், பொதுவெளியில் பங்களியுங்கள். அறிவித்தல்களையும் எச்சரிக்கையும் மீறுபவர்களை தடைசெய்ய இடமுள்ளது என்பதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். ஆர்வலர்கள் சரியான கலைக்களஞ்சியத்திற்கு ஏற்ற விதத்தில் கட்டுரை எழுத வேண்டும். --AntanO (பேச்சு) 02:46, 1 ஏப்ரல் 2021 (UTC)
நீதியரசர் ரத்னவேல் பாண்டியன் பக்கம் மீட்க வேண்டுகோள்
தொகுஇந்த பக்கத்தில் பதிப்புரிமை மீறல் உள்ளதால் பக்கம் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. பதிப்புரிமை மீறல் பகுதியை மட்டும் நீக்கிவிட்டு ஏனைய பகுதிகளை மீண்டும் மீட்டு கொண்டுவர வேண்டுகோள் வைக்கிறேன். --A.R.V. Ravi (பேச்சு) 07:49, 31 மார்ச் 2021 (UTC)
- நீங்கள் பல மூலங்களில் இருந்து பிரதி செய்துள்ளீர்கள். சிலபகுதிகள் இயந்திர மொழிபெயர்ப்புபோல் உள்ளது. தலைப்பில் "நீதியரசர்" தேவையில்லை. சிறு இலக்கண திருத்தமும் தேவை (எகா: இரத்னவேல்). இதுபோன்ற சிக்கல்கள் பல உள்ளதாலும், ஏற்கெனவே ஒரு கட்டுரை உள்ளதாலும், ஏற்கெனவே உள்ள கட்டுரையில் பங்களிக்கலாம். --AntanO (பேச்சு) 02:41, 1 ஏப்ரல் 2021 (UTC)
- "நீதியரசர்" என்பது உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளை மட்டும் குறிப்பிடும் சிறப்பு சொற்பிரயோகம். அதனால் "நீதியரசர் ரத்னவேல் பாண்டியன்" என்று தலைப்பிட்டேன். நீதிபதி என்பது பொதுவாக கீழமை நீதிமன்ற நீதிபதிகளைக் குறிக்கும் சொற்பிரயோகம் ஆகும். க்பல சிக்கல்கள் இருந்தாலும் உன்களைப் போன்ற நீண்ட அனுபவம் வாய்ந்த நிர்வாகியால் சரி செய்ய முடியும் என்பதே என் போன்ற 5 மாதங்களே ஆன புது பங்களிப்பாளர்களின் நம்பிக்கை. பக்கத்தை Draft ஆக மாற்றி தர வேண்டுகிறேன். அதன் பின், மூலங்களை மறு பார்வையிட்டு சரி செய்கிறேன். இலக்கண திருத்தங்களை சரி செய்கிறேன். இயந்திர மொழிபெயர்ப்புபோல் உள்ளவற்றை நீக்கி விடுகிறேன். 5 மாதத்தில் அதிக நேரம் இந்த பக்கத்திற்காக ஒதுக்கியுள்ளேன். தங்களது உதவிகள் தான் என் போன்ற புது பயனர்களின் நம்பிக்கை மற்றும் முன்மாதிரி. நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். A.R.V. Ravi (பேச்சு) 06:55, 1 ஏப்ரல் 2021 (UTC)
- உங்கள் மணல் தொட்டியில் அக்கட்டுரை உள்ளதல்லவா? குறிப்பு: மணல் தொட்டியிலும் பதிப்புரிமை உள்ளடக்கம் இருத்தலாகாது. --AntanO (பேச்சு) 02:20, 2 ஏப்ரல் 2021 (UTC)
- "பயனர் பேச்சு: A.R.V. Ravi/மணல் தொட்டி" - மணல் தொட்டியில் உள்ள பக்கத்தை வெளியிட வேண்டுகோள். "நீதியரசர் ரத்னவேல் பாண்டியன்" பக்கத்தையும் "எஸ். ரத்னவேல் பாண்டியன்" பக்கத்தையும் இணைக்க வேண்டுகோள். --A.R.V. Ravi (பேச்சு) 05:14, 3 ஏப்ரல் 2021 (UTC)
சரியான தலைப்பு வேண்டுதல்
தொகுவணக்கம் ஆண்டன். புனித ஜான்ஸ் தேவாலயம், சிக்கந்திராபாத் கட்டுரைக்கு சரியான தமிழ்ப் பெயர் பரிந்துரைத்தால் மாற்றிவிடலாம். நன்றி--Balu1967 (பேச்சு) 07:39, 14 மே 2021 (UTC)
சென்னை உயர் நீதிமன்றம் பக்கம் பெயரில் திருத்தம் தேவை
தொகுசென்னை உயர் நீதிமன்றம் என்கிற பெயர் தவறானது. ஏனெனில், மெட்ராஸ் உயர் நீதிமன்றம் என்கிற பெயரை தான் உயர் நீதிமன்றம் உபயோகிக்கிறது. சென்னை என்பது இன்னும் உயர் நீதிமன்றத்தைப் பொருத்த மட்டில் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. ஆங்கில பக்கமான Madras High Court என்ற பக்கம் பின்னர் Chennai High Court என பெயர் மாற்றம் செய்யப்பட்டபொது ஏற்றுக்கொள்ளப்படாமல் மீண்டும் Madras High Court என்றே பெயறிடப்பட்டுள்ளது. எனவே, பக்கத்தின் பெயரை "மெட்ராஸ் உயர் நீதிமன்றம்" என மாற்றுவதே சரியாக இருக்கும் A.R.V. Ravi (பேச்சு) 06:35, 19 மே 2021 (UTC)