சீனத் திரைப்படம்
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி சீனத் திரைப்படத்துறை கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
சீனத் திரைப்படம் (cinema of China) என்பது முதன்மையான மூன்று சீனமொழித் திரைப்பட வரலாற்றிழைiகளில் ஒன்றாகும். மற்றவை ஆங்காங் திரைப்படம், தைவானியத் திரைப்படம் என்பனவாகும்.
சீனத் திரைப்படம் Cinema of China | |
---|---|
A frame from the 1941 film Princess Iron Fan, Asia’s first feature-length animated film[1] | |
திரைகளின் எண்ணிக்கை | 44,179 (2016)[2] |
• தனிநபருக்கு | 2.98 per 100,000 பேருக்கு 2.98 பேர் (2016) |
முதன்மை வழங்குநர்கள் | China Film (32.8%) Huaxia (22.89%) Enlight (7.75%)[3] |
தயாரித்த முழுநீளத் திரைப்படங்கள் (2016)[2] | |
புனைவு | 772 |
அசைவூட்டம் | 49 |
ஆவணப்படம் | 32 |
Number of admissions (2016)[4] | |
மொத்தம் | 1,370,000,000 |
• தனி நபருக்கு | 1[4] |
நிகர நுழைவு வருமானம் (2016)[2] | |
மொத்தம் | CN¥ 45.71 பில்லியன் (6.58 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) |
தேசியத் திரைப்படங்கள் | 58.33% |
திரைப்படம் சீனாவில் 1896 இல் அறிமுகப் படுத்தப்பட்ட்து. திங்யுசான் போர் எனும் முதல் சீனத் திரைப்படம் 1905 இல் வெளியிடப்பட்ட்து. முதல் பத்தாண்டுகளில் சீனத் திரைப்படத் தொழில் சாங்காய் நகரில் நிலைகொண்டிருந்தது. முதல் பேசும் படமாகிய பாட்டுபாடும் பெண் செம்பியோனி ஒலித்தட்டுத் தொழில்நுட்பத்தில் 1931 இல் வெளியிடப்பட்டது. சீனத் திரைப்பட வரலாற்ரில் முதல் பொற்காலமாகக் கருதப்படும் 1930 களில் இடதுசாரி திரைப்பட இயக்கம் எழுச்சி கண்டது. தேசியவாதிகளுக்கும் பொதுவுடைமையாளர்களுக்கும் இடையிலான சிந்தனைப் போராட்டங்களை இப்படங்கள் விவரித்தன.இரண்டாம் சீன யப்பானியப் போருக்குப் பிறகு (யப்பான் சீனாவை முற்றுகையிட்ட பிறகு, சாங்காயில் அமைந்த திரைப்பட்த்தொழில் சிதையலானது. திரைப்பட்த் தொழில் ஆங்காங், சாங்குவிங், மற்ற இடங்களுக்கு நகர்ந்தது. எஞ்சியிருந்தவரும் அயல்நாட்டுச் சலுகைகளும் தனியாக சாங்காயில் திரைப்படங்களை உருவாக்கினர். இரும்பு இளவரசி பேன் (1941) எனும் முதல் சீன அசைவூட்டப்படம் இந்த கால முடிவில் சாங்காயில் வெளியிடப்பட்டது. இப்படம் போர்க்கால யப்பானிய அசைவூட்டத் திரைப்படங்களின் மீதும் பிறகு ஒசாமு தேழூக்கா என்ற திரைப்படத்தின் மீதும் \பெருந்தாக்கம் விளைவித்தது.[5] யப்பான் சீனாவை 1941 இல் முற்றுகையிட்டதில் இருந்து 1945 வரை சங்காய் நகரத் திரைப்பட்த்தொழில் யப்பானியக் கட்டுபாட்டில் இருந்தது.
சீனா தேசியப் பேராய நிலைக்குழுவின் ஒப்புதலுடன் 2016 நவம்பரில் ஒரு திரைப்படச் சட்ட்த்தை இயற்றி வெளியிட்டது. இச்சட்டம் சீன மக்கள் குடியரசின் மதிப்புகள், தகைமைகள், ஆர்வங்களுக்கு ஊறு விளைவிக்கும் திரைப்படங்கள் தடைசெய்யப்பட்டு, சமவுடைம் வி௳உமியங்களைத் தாங்கிநிற்கும் திரைப்படங்கள் ஊக்குவிக்கப்பட்டன.[6]
போர் முடிந்த்தும், சாங்காய் திரைப்படத் தொழில் புத்துயிர்ர்ப்பு பெற்று இரண்டாம் பொற்காலம் தொடங்கியது. அப்போது சிறுநகரின் இளவேனில் (1948)போன்ற திரைப்படங்கள் வெளியாகின. இந்தப் படம் ஆங்காங்கின் அரிய நூறு சீனமொழிப் பேசும்படங்களில் ஒன்றாக 24 ஆவது ஆங்காங் திரைப்பட விருதுகளில் தேர்வானது. 1949 சீனப் பொதுவுடைமைப் புரட்சிக்குப் பிறகு, முந்தைய திரைப்படங்களும் சில அயலகத் திரைப்படங்களும் 1951 இல் தடைக்குள்ளாயின. திரைப்படம் பார்ப்போர் எண்ணிக்கை திடீரென உயர்ந்தது. 1967 முதல் 1972 வரையிலான சீனப் பண்பாட்டுப் புரட்சியின்போது, திரைப்படத் தொழில் மிகவும் கட்டுபடுத்தப்பட்டு முழுமையாக முடக்கப்பட்டது. பண்பாட்டுப் புரட்சி முடிவுக்கு வந்ததும் திரைப்படத் தொழில் மீண்டும் செழுமை அடைந்தது. அப்போது மாலைநேர மழை (1980), தியான்யுன் மலை கதை (1980), காகிதப் பூநகரம் (1986) போன்ற 1980 களின் விழுப்புண் நாடகங்கள் அக்கால இடதுசாரி இயக்க உணர்ச்சிவயமான துன்பதுயர உச்சங்களை விவரித்தன. 1980 களின் நடுப்பகுதி முதல் இறுதிகாலம் வரையில், சீன ஐந்தாம் தலைமுறைப்படங்களாகிய ஒன்றும் எட்டும்]] (1983), மஞ்சள் புவி (1984) போன்றவை எழுச்சிகண்டு வெளிநாடுகளில் சீனத் திரைப்படங்களுக்கு, குறிப்பாக மேலைநாடுகளின் திரையரங்குகளிலும் பார்வையாளரிடமும் கோலோச்சலாயின. மேலும், செஞ்சோளம் (1987), கியூ யூவின் கதை (1992), என் பரத்தைக்கான வழிவிடல் (1993) போன்றன பல பன்னாட்டு விருதுகளைப் பெற்றன. 1989 இன் தின்னமன் சதுக்க எதிர்ப்புகளுக்குப் பிறகு திரைப்பட இயக்கம் ஓரளவுக்கு முடிவுக்கு வந்தது. என்றாலும், 1990 களுக்குப் பின்னர் சீன ஆறாம் தலைமுறையும் பின்னை ஆறாம் தலைமுறையும் எழுச்சிகண்டன. இவை திரைப்படங்களைச் சீனாவின் முதன்மைப் போக்குக்கு அப்பாலான கருக்களைக் கையாண்டு எடுத்தன. இவை பெரும்பாலும் பன்னாட்டு அரங்கச் சுற்றுவட்டத்திலேயே காட்டப்பட்டன.
மேலும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Princess Iron Fan(HKAFF 2017)". Broadway Cinematheque.
- ↑ 2.0 2.1 2.2 Zhang Rui (January 3, 2017). "China reveals box office toppers for 2016". china.org.cn. பார்க்கப்பட்ட நாள் January 4, 2017.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;entgroup2
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ 4.0 4.1 Frater, Patrick (December 31, 2016). "China Box Office Crawls to 3% Gain in 2016". Variety. பார்க்கப்பட்ட நாள் January 1, 2017.
- ↑ Du, Daisy Yan (May 2012). "A Wartime Romance: Princess Iron Fan and the Chinese Connection in Early Japanese Animation," in On the Move: The Trans/national Animated Film in 1940s-1970s China. University of Wisconsin-Madison. pp. 15–60.
- ↑ Edwards, Russell (15 November 2016). "New law, slowing sales take shine off China's box office". Atimes.com. Archived from the original on 15 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 16 November 2016.
தகவல் வாயில்கள்
தொகு- Bordwell, David, Kristin Thompson (2010). Film history : an introduction (3rd ed.). New York, NY: McGraw-Hill Higher Education. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0073386138.
- Nowell-Smith, edited by Geoffrey (1997). The Oxford history of world cinema (Paperback ed.). Oxford: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0198742428.
{{cite book}}
:|first=
has generic name (help)
மேலும் படிக்க
தொகு- Rey Chow, Primitive Passions: Visuality, Sexuality, Ethnography, and Contemporary Chinese Cinema, Columbia University Press 1995.
- Cheng, Jim, Annotated Bibliography For Chinese Film Studies, Hong Kong University Press 2004.
- Shuqin Cui, Women Through the Lens: Gender and Nation in a Century of Chinese Cinema, University of Hawaii Press 2003.
- Dai Jinhua, Cinema and Desire: Feminist Marxism and Cultural Politics in the Work of Dai Jinhua, eds. Jing Wang and Tani E. Barlow. London: Verso 2002.
- Rolf Giesen (2015). Chinese Animation: A History and Filmography, 1922-2012. Illustrated by Bryn Barnard. McFarland. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1476615527. பார்க்கப்பட்ட நாள் May 17, 2014.
- Hu, Lindan (2017). "Rescuing female desire from revolutionary history: Chinese women’s cinema in the 1980s". Asian Journal of Women's Studies (Taylor and Francis) 23 (1): 49–65. doi:10.1080/12259276.2017.1279890. https://doi.org/10.1080%2F12259276.2017.1279890.
- Harry H. Kuoshu, Celluloid China: Cinematic Encounters with Culture and Society, Southern Illinois University Press 2002 - introduction, discusses 15 films at length.
- Jay Leyda, Dianying, MIT Press, 1972.
- Laikwan Pang, Building a New China in Cinema: The Chinese Left-Wing Cinema Movement, 1932-1937, Rowman & Littlefield Pub Inc 2002.
- Quiquemelle, Marie-Claire; Passek, Jean-Loup, eds. (1985). Le Cinéma chinois. Paris: Centre national d'art et de culture Georges Pompidou. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9782858502639. இணையக் கணினி நூலக மைய எண் 11965661.
{{cite book}}
: Unknown parameter|editorlink2=
ignored (help) - Seio Nakajima. 2016. “The genesis, structure and transformation of the contemporary Chinese cinematic field: Global linkages and national refractions.” Global Media and Communication Volume 12, Number 1, pp 85–108. [1][தொடர்பிழந்த இணைப்பு]
- Zhen Ni, Chris Berry, Memoirs From The Beijing Film Academy, Duke University Press 2002.
- Semsel, George, ed. "Chinese Film: The State of the Art in the People's Republic", Praeger, 1987.
- Semsel, George, Xia Hong, and Hou Jianping, eds. Chinese Film Theory: A Guide to the New Era", Praeger, 1990.
- Semsel, George, Chen Xihe, and Xia Hong, eds. Film in Contemporary China: Critical Debates, 1979-1989", Praeger, 1993.
- Gary G. Xu, Sinascape: Contemporary Chinese Cinema, Rowman & Littlefield, 2007.
- Emilie Yueh-yu Yeh and Darrell William Davis. 2008. “Re-nationalizing China’s film industry: case study on the China Film Group and film marketization.” Journal of Chinese Cinemas Volume 2, Issue 1, pp 37–51. [2]
- Yingjin Zhang, Chinese National Cinema (National Cinemas Series.), Routledge 2004 - general introduction.
- Yingjin Zhang (Author), Zhiwei Xiao (Author, Editor), Encyclopedia of Chinese Film, Routledge, 1998.
- Ying Zhu, "Chinese Cinema during the Era of Reform: the Ingenuity of the System", Westport, CT: Praeger, 2003.
- Ying Zhu, "Art, Politics and Commerce in Chinese Cinema", co-edited with Stanley Rosen, Hong Kong University Press, 2010
- Ying Zhu and Seio Nakajima, “The Evolution of Chinese Film as an Industry,” pp. 17–33 in Stanley Rosen and Ying Zhu, eds., Art, Politics and Commerce in Chinese Cinema, Hong Kong University Press, 2010. [3]
- Wang, Lingzhen. Chinese Women's Cinema: Transnational Contexts. Columbia University Press, August 13, 2013. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0231527446, 9780231527446.