கண்ணான கண்ணே

கண்ணான கண்ணே என்பது சன் தொலைக்காட்சியில் 2 நவம்பர் 2020 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி காதல் நாடகத் தொடர் ஆகும்.[1]

கண்ணான கண்ணே
வகைகுடும்பம்
நாடகத் தொடர்
எழுத்து
வசனம்
  • பாரதி கண்ணன்
திரைக்கதைபாரதி கண்ணன்
இயக்கம்தனுஷ்
நடிப்பு
முகப்பிசைகண்ணான
கண்ணே

பாடியவர்
சித்ரா
வரிகள்
ஜி கே வி
பிண்ணனி இசைசாம்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்1
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்அன்புராஜ்
சுராஜ்
ஒளிப்பதிவு
தொகுப்பு
  • செல்வகுமார்
படவி அமைப்புபல ஒளிப்படக்கருவி
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்சன் என்டர்டெயின்மெண்ட்
ஏ.ஆர் பிலிம்
ஒளிபரப்பு
அலைவரிசைசன் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்2 நவம்பர் 2020 (2020-11-02) –
ஒளிபரப்பில்
Chronology
முன்னர்கண்மணி
(20:30)

இது தெலுங்கு மொழித் தொடரான 'பௌர்ணமி' மற்றும் கன்னட மொழித் தொடரான 'மானசரே' போன்ற தொடர்களின் கதைக்கருவை மையமாக வைத்து மறு ஆக்கம் செய்யப்பட்ட தொடர் ஆகும்.[2] இந்த தொடரை சன் என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஏ.ஆர் பிலிம் என்ற நிறுவனங்கள் இணைத்து தயாரிக்க, நிமிக்ஷிதா, ராகுல் ரவி, பிரித்திவிராஜ் மற்றும் நித்யா தாஸ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

கதைசுருக்கம் தொகு

அம்மா, தங்கை, பாட்டி என அனைவருக்கும் பிடித்த செல்ல பிள்ளையாக இருக்கும் மீரா. இவளின் மனதில் இனம் புரியாத கவலை. தந்தையின் பாசத்திற்கு ஏங்கி தவிக்கும்இவளுக்கு வீட்டில் எத்தனை பேர் பாசமாக பார்த்துக் கொண்டாலும், தந்தை போல் ஈடாகுமா என்பதே அவளின் கவலை. இவளுக்கு தந்தையிடம் கிடைக்காத பாசத்தை குடுக்க நினைக்கும் காதலன் யுவா. மீராவிற்கு தந்தையின் பாசம் கிடைக்குமா? என்பது தான் கதை.

நடிகர்கள் தொகு

முதன்மை கதாபாத்திரம் தொகு

  • நிமிக்ஷிதா - மீரா (கௌதம் மற்றும் கௌசல்யாவின் மகள்)
  • ராகுல் ரவி - யுவராஜ் கோடீஸ்வரன்
  • பிரித்திவிராஜ் - கௌதம்
  • நித்யா தாஸ் - யமுனா கௌதம்
  • பீர்த்தீ சஞ்சீவ் - வாசுகி

மீரா குடும்பத்தினர் தொகு

  • அக்ஷிதா - ப்ரீத்தி
  • சுலக்சனா - அன்னப்பூரணி
  • பிரீத்தி சஞ்சீவ் - வாசுகி (கௌசல்யாவின் சகோதரி)

யுவா குடும்பத்தினர் தொகு

துணைக் கதாபாத்திரம் தொகு

  • பிரியா பிரின்ஸ்[3] - மேனகா
  • ஹிடாயா - ஸ்வப்னா
  • பாலாஜி - பாபு
  • தாரா - ரோஷனா
  • சுரேஷ்
  • சதிஷ்
  • அகமது ஹசிசன்
  • ரிச்சி கிரீன்
  • அஸ்வினி செல்வம்
  • சரவணன்

சிறப்பு தோற்றம் தொகு

  • இனியா[4][5] (அத்தியாயம் 1)
  • ரோபோ சங்கர் - சங்கர்
  • இந்திரஜா - பாண்டிமா
  • திவ்யா ஸ்ரீதர் - பாரதி
  • அனுஷ் அகர்வால் - விக்ரம்
  • மனோஜ் குமார் - ரவி சக்கரவர்த்தி
  • மெரசி லயல் - ஜானகி சக்கரவர்த்தி

நடிகர்களின் தேர்வு தொகு

இந்த தொடரில் தந்தை கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் பிரித்திவிராஜ் நடிக்க, இவரின் மகள் கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை நிமிக்ஷிதாஎன்பவர் நடிக்கின்றார். இவருக்கு ஜோடியாக ராகுல் ரவி என்பவர் 'யுவா' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். பிரித்திவிராஜ் மனைவி கதாபாத்திரத்தில் திரைப்பட நடிகை இனியா மற்றும் நித்யா தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இவரின் தாய் கதாபாத்திரத்தில் சுலக்சனா நடித்துள்ளார். நடிகர் லிவிங்ஸ்டன் என்பவர் யுவாவின் தந்தை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

முகப்பு பாடல் தொகு

கண்ணான கண்ணே என்ற முகப்பு பாடலுக்கு 'ஜி கே வி' என்பவர் வரிகள் எழுத பிரபல பாடகி சித்ரா என்பவர் பாடியுள்ளார். இந்த பாடலுக்கு 'சாம்' என்பவர் இசை அமைத்துள்ளார்.

ஒலிப்பதிவு தொகு

பாடல் பட்டியல்
# பாடல்பாடியவர் நீளம்
1. "கண்ணான கண்ணே"  சித்ரா 3:19
2. "தேவதை போல வந்தால்"  பிரதீப் பல்லூருதி 1:00
3. "மின்னல் போல என்னை தாக்கும் கண்கள்"  ஷான் ரோல்டன் 1:00
4. "கண்ணான கண்ணே (II)"  ஷான் ரோல்டன் 1:00
5. "போ உறவே"  அருண் பாரதி 1:35

6. " அப்பா என் தெய்வம் " ரோஹித் 1:00

மதிப்பீடுகள் தொகு

இந்த தொடர் ஆரம்பித்த முதல் வாரத்தில் 6.6 மில்லியன் பார்வையாளர் பதிவுகள் பெற்று தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது.[6] கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.

ஆண்டு மிகக் குறைந்த மதிப்பீடுகள் மிக உயர்ந்த மதிப்பீடுகள்
2020 7.5% 8.3%
7.9% 9.2%
2021 0.0% 0.0%

சர்வதேச ஒளிபரப்பு தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 8:30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி கண்ணான கண்ணே அடுத்த நிகழ்ச்சி
கண்மணி -
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணான_கண்ணே&oldid=3751331" இருந்து மீள்விக்கப்பட்டது