உதவி தொகு

வணக்கம். படிமம்:Linefocus.jpg, பயனர்:அருண்தாணுமால்யனால் த.வி இல் பதிவேற்றப்பட்டுள்ளது. கூகுள் தேடலில் அப்படிமம் இங்கு கிடைக்கிறது. இதை த.வியில் பதிவேற்ற காப்புரிமை உண்டா என்ற சந்தேகம் எழுகிறது எனக்கு. தெளிவுபடுத்தி உதவவும்.--Booradleyp1 (பேச்சு) 05:34, 11 ஆகத்து 2013 (UTC)Reply

இப்படிமத்தை பயன்படுத்துவதற்கான முக்கியத்துவம் கட்டுரையில் காணப்படவில்லை. அதனால் நியாயமான பயன்பாட்டு விளக்கம் அளிப்பதில் குழப்பமுள்ளது. மேலும் இப்படிமம் காப்புரிமை கொண்டிருக்கலாம். அவரின் பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடுகிறேன். --Anton (பேச்சு) 06:06, 11 ஆகத்து 2013 (UTC)Reply
நன்றி.--Booradleyp1 (பேச்சு) 12:28, 12 ஆகத்து 2013 (UTC)Reply

கட்டுரைக் வேண்டுதல் தொகு

வணக்கம். விக்கிப்பீடியா பற்றி பொது ஊடகங்களில் பரப்புரை செய்யவும், பத்தாண்டுகளை பதிவு செய்யவும் சிறப்புக் கட்டுரைகளை இதழ்களில் வெளியிடுதல் உதவும். அந்த வகையில் தொடர் பங்களிப்பாளரான நீங்கள் பின்வரும் தலைப்புக்களில் ஒன்றில் விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/சிறப்பிதழ்கள்#கட்டுரைத் தலைப்புக்கள் கட்டுரை எழுதித் தர முடிந்தால் சிறப்பு. 400 அல்லது 800 சொற்கள். செப்டெம்பர் 11 2013 திகதிக்குள். குறிப்பாக பின்வரும் தலைப்புக்களில் ஒன்று:

  • இலங்கையில் தமிழ் விக்கியூடகங்களின் வளர்ச்சியும் வாய்ப்புக்களும்
  • இணையத் தமிழ் கல்வி உள்ளடக்கங்களில் தமிழ் விக்கியூடகங்கள் பங்கு

உங்கள் பரிசீலனைக்கும் பங்களிப்புக்கும் நன்றி. --Natkeeran (பேச்சு) 00:24, 12 ஆகத்து 2013 (UTC)Reply

நல்ல தலைப்புத் தெரிவு. கட்டுரையை ஆர்வலுடன் எதிர்பாக்கிறேன். நன்றி. --Natkeeran (பேச்சு) 19:52, 20 ஆகத்து 2013 (UTC)Reply

நூற்பகுப்புக்கள் நீக்கம் தொகு

தமிழ்நூல்கள் என்ற பகுப்பை பல நூல்கள் கட்டுரைகளில் நீக்கி உள்ளீர்கள். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாமா.

பொதுவாக, துறை, ஆண்டு, இடம், பதிப்பகம் ஆகிய நான்கு பகுப்புக்கள் ஒரு நூலுக்குச் சேர்க்கபடலாம். ஆனால் இவை பற்றி தெளிவில்லாமல் இருந்தால் பொதுப் பகுப்பில் சேர்க்கலாம். பொதுப் பகுப்புக்குள் சேர்த்தால் பின்னர் நாம் தகவலறிந்து சரியான பகுப்புகளுக்குள் சேர்க்கலாம். நன்றி. --Natkeeran (பேச்சு) 13:23, 15 ஆகத்து 2013 (UTC)Reply

பல கட்டுரைகள் தாய்பகுப்பான தமிழ்நூல்கள் என்ற பகுப்பிலும், உப பகுப்பிலும் இருந்தன. சில நீங்கள் குறிப்பிடுவது போன்று சில தாய்ப்பகுப்பில் மட்டும் இருந்தன. சிலவற்றுக்கு சரியான உபபகுப்பினை சேர்க்கக் கூடியதாகவிருந்தது. பலவற்றுக்கு சரியான உள்ளடக்கம் இல்லாததால் நூல் பற்றி அறிய முடியாவில்லை. இச்சிக்கல் தமிழ்நூல்கள் என்ற பகுப்புக்கு மட்டும் உரியதல்ல, பொதுவான சிக்கலும் கூட. குறித்த கட்டுரையை உருபாக்குபவர் அப்படியே விட்டுவிடுவதால் தேக்கந்தான் உருவாகின்றது.--Anton (பேச்சு) 07:18, 16 ஆகத்து 2013 (UTC)Reply
பகுப்புக்கள் இல்லாமல் இருப்பதைக் காட்டிலும் தாய்ப் பகுப்பில் இருப்பது கூடிய பயன்தரக் கூடியது. நாம் பெரிய பகுப்புக்கலை துப்பரவு செய்ய வேண்டும். பொதுவாக தமிழ் நூல்கள் என்ற பகுப்பை நான் துப்பரவு செய்வது உண்டு. --Natkeeran (பேச்சு) 13:16, 16 ஆகத்து 2013 (UTC)Reply

விக்கி பத்தாண்டு கொண்டாட்ட சட்டை வடிவமைப்பு வேண்டுகோள் தொகு

வணக்கம் நண்பரே, தாங்கள் விக்கிப்பீடியாவிற்கு சிறப்பான பல படங்களை வடிவமைத்து தந்திருக்கின்றீர்கள் என்பதை அறிவேன். என் வேண்டுகோளுக்காக இந்து சமய வார்ப்புருக்களில் இணைப்பதற்காக தமிழ் ஓம் படிமத்தினை மிகச்சிறப்பாக வடிவமைத்து தந்தீர்கள். தற்போது விக்கிப்பீடியாவின் பத்தாண்டு கொண்டாட்டத்திற்கான சட்டை (டிசர்ட்) வடிவமைப்பு தேவையுறுகிறது. தங்களது பணிச்சுமைகளிடையே இந்த டிசர்ட் வடிவமைப்பினை செய்துதர இயலுமா நண்பரே? --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:00, 25 ஆகத்து 2013 (UTC)Reply

எப்போது தேவை? எந்த அளவில் வடிவமைப்பு தேவை? வடிவமைப்பில் முக்கிய விடயங்கள் என்பவற்றைக் குறிப்பிட முடியுமா? --Anton (பேச்சு) 04:53, 25 ஆகத்து 2013 (UTC)Reply
நன்றி நண்பரே. [கொண்டாட்டம்] பக்கத்தில் சட்டைகள், விக்கிமீடியா அறக்கட்டளையில் நிதி ஒதுக்கீடு கோரிக்கை ஆகிய பகுதிகளை கவனிக்கவும். இரவி அவர்கள் 50 சட்டைகளுக்கு அறக்கட்டளையிடமிருந்து நிதி பெறுவதற்றாக மனு தயாரித்துள்ளார், இவற்றில் small 5%, medium 20%, large 40% extra large 30%, XXL 5% என தோராயமாக தரலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
  1. \\எப்போது தேவை\\ அறக்கட்டளையிடமிருந்து பணம் கிடைக்கும் நேரம் வரை வடிவமைப்பிற்கு காலம் இருக்கிறது நண்பரே. அதற்கு முன் வடிவமைப்பினை இறுதி செய்துவிட்டால் பணம் கிடைத்தும் அச்சடிக்கும் பொறுப்பினை தக்கவிடம் தந்துவிடலாம்.
  2. \\எந்த அளவில் வடிவமைப்பு தேவை\\ இணையத்தில் Standard 17.5" x 19", Oversized 19" x 25", All-over 40" x 35" என மூன்று அளவுகளைக் கண்டேன். இவற்றைப் பற்றி மேலும் யாரிடமாவது விசாரித்து தங்களுக்குச் சமர்ப்பிக்கின்றேன்.
  3. \\வடிவமைப்பில் முக்கி விடயங்கள்\\ விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சட்டையை தயார் செய்தாலும் அனைத்து நேரத்திற்கும் பொருந்தும் படியான பொதுவாக இருத்தலே சிறப்பு என கருதுகிறேன். அணிந்து கொள்வருக்கு விக்கிப்பீடியர் என்ற பெருமை தருவதாகவும், காண்பவருக்கு விக்கப்பீடியாவின் பெருமை புரிவதாகவும் இருக்க வேண்டும் என்பது என் தனிப்பட்ட எண்ணம். மற்றபடி முன் பின் வடிவமைப்பு பற்றி எந்த கோரிக்கையும் இல்லை. வடிவமைப்பாளரான தங்களுக்குத் தெரியாததா என்ன?.

தாங்கள் மனமுவந்து இப்பணியை ஏற்றுக் கொண்டமைக்கு மிக்க நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:04, 25 ஆகத்து 2013 (UTC)Reply

கண்ணில் பட்ட கன்னட (?) விக்கிப்பீடியா சட்டை ஒன்று - http://wiki.wikimedia.in/File:Pavithra_Shivu_-_Profile_Picture.JPG . http://commons.wikimedia.org/wiki/File:Wikipedia_T_Shirt_-_Kannada_Liners.JPG

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்ட ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு தொகு

வணக்கம், அன்டன். பத்தாண்டு கொண்டாட்ட சட்டை வடிவமைப்புப் பணியில் உதவ முன்வந்தமைக்கு நன்றி. இது தொடர்பாக இன்னொரு வேண்டுகோளும கூட: தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்ட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக பொறுப்பு எடுக்க முடியுமா? குறிப்பாக, அனைத்து வகையான வடிவமைப்புப் பணிகளிலும் பங்களிப்பு அல்லது வழிகாட்டல் தேவைப்படுகிறது. தமிழ் விக்கிப்பீடியாவில் வடிவமைப்பில் சிறந்த விளங்கும் மற்ற பங்களிப்பாளர்களுடன் இணைந்து நீங்கள் இதனை மேற்கொள்ளலாம். நன்றி.--இரவி (பேச்சு) 16:00, 25 ஆகத்து 2013 (UTC) s|பேச்சு]]) 16:00, 25 ஆகத்து 2013 (UTC)Reply

வணக்கம் இரவி, வடிவமைப்புப் பணிகளில் இயலுமான உதவிகளைச் செய்ய இயலும். தேவைகளைக் குறிப்பிடுங்கள். --Anton (பேச்சு) 05:27, 26 ஆகத்து 2013 (UTC)Reply
நன்றி, அன்டன். விரைவில் விவரங்களுடன் தொடர்பு கொள்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 18:27, 26 ஆகத்து 2013 (UTC)Reply

வடிவமைப்புப் பணிகளில் உதவி தேவை தொகு

வணக்கம் அன்டன், தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் தொடர்பாக தேவைப்படும் வடிவமைப்புப் பணிகள் குறித்த பட்டியல் இது. உங்களால் இயன்ற பங்களிப்புகளை நேரடியாகத் தாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் வடிவமைப்பில் சிறந்து விளங்கும் மற்ற பயனர்களின் உதவியையும் நாடி ஒருங்கிணைத்து இதனைச் செயற்படுத்தினாலும் போதுமானதாக இருக்கும்.

எண் தேவை காலக்கெடு குறிப்புகள்
1 கூடல் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் செப்டம்பர் 15 இடம், நேரம் விவரங்கள் விரைவில் தெரிய வரும். இதை அச்சடிக்கப் போவதில்லை. மின் சுற்றுக்கு மட்டும்.
2 அரங்கப் பதாகை செப்டம்பர் 20 நிகழ்ச்சி நடக்கும் அரங்கில் மேடைக்குப் பின்புறம் இருக்கும் பதாகை. தள முகவரியும் எடுப்பான எழுத்தில் இருந்தால் நன்றாக இருக்கும். இது flex bannerஆக மிகப் பெரிய அளவிலும் அச்சடிக்க ஏற்றதாக கூடிய நுணுக்கத்துடன் இருக்க வேண்டும். வேறு கூட்டங்களில் பயன்படுத்துவதற்கு ஏற்ப பொதுவான உரையைக் கொண்டிருக்க வேண்டும். இதே பதாகையைப் பண்பாட்டுச் சுற்றுலா வாகனத்திலும் சிறிய அளவில் கட்டிக் கொள்ளலாம் என்று எண்ணுகிறேன்.
3 சட்டை செப்டம்பர் 5 செகதீசுவரன் ஏற்கனவே சில விவரங்களைத் தந்திருக்கிறார். இயன்ற அளவு விரைவில் கிடைத்தால் உற்பத்தி செய்ய ஏதுவாக இருக்கும்.
4 கையேடு செப்டம்பர் 5 விக்கிப்பீடியா:தமிழ் விக்கியூடகக் கையேடு பக்கத்தில் உரையைக் காணலாம். இதனை அச்சுக்கேற்ற வடிவில் PDF ஆகவோ பதிப்பாளர் கோரும் வடிவத்திலோ அழகுற வடிவமைக்க வேண்டி இருக்கும்.
5 பாராட்டுச் சான்றிதழ் செப்டம்பர் 15 தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளில் அடுத்தடுத்து வாசகங்கள் இருக்க வேண்டும். கீழே மூவர் கையெழுத்திடுவது போன்ற இடைவெளி இருக்கலாம்.
6 அஞ்சல் தலை செப்டம்பர் 3 வழக்கமான இந்திய அஞ்சல் தலை அளவில் தெளிவாகத் தெரியுமாறு இருக்க வேண்டும். தமிழ் விக்கிப்பீடியா இலச்சினை, தமிழ் விக்கிப்பீடியா என்ற வாசகம் இடம் பெற வேண்டும்.
வணக்கம் இரவி, இங்கே பார்க்கவும்: வடிவமைப்புப் பணிகள் --Anton (பேச்சு) 05:27, 29 ஆகத்து 2013 (UTC)Reply
வணக்கம் நண்பரே, தாங்கள் நண்பர் தாரிக் அவர்களையும் சட்டை வடிவமைப்பில் ஈடுபட வைத்தமை மகிழ்வை தருகிறது. அவருடைய வடிவமைப்பில் கை விளிம்புகளில் விக்கிப்பீடியா முகவரியை பொறிக்கும் யுத்தி நன்றாக உள்ளதென நினைக்கிறேன். சில அலுவலகங்கள் காலர் இல்லாத சட்டைகளை அணிந்துவர அனுமதிப்பதில்லை என்பதால் காலர் வைத்த சட்டைகளில் அச்சிடும் யோசனை உள்ளது. சட்டையின் முன்பக்க வடிவமைப்பில் விக்கியின் சின்னம் மட்டும் பொறித்த உங்களது வடிவமைப்பும், தாரிக் அவர்களின் வடிவமைப்பும் எளிமையாக உள்ளது. அத்துடன் பின்பக்க வடிவமைப்பு அலுவலகங்களுக்கு சட்டை அணிந்து செல்பவர்களுக்கு ஏற்றதாக இருக்குமா. அல்லது முன்பக்க வடிவமைப்புடன் இறுதி செய்து கொள்ளமா என்று தாங்கள் அலோசித்து கூற வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:26, 1 செப்டம்பர் 2013 (UTC)
பின்னூட்டலுக்கு நன்றி ஜெகதீஸ்வரன். கை விளிம்புகளில் விக்கிப்பீடியா முகவரி - நன்று. வடிவமைப்புப் பணிகள் - இங்கு சட்டை பற்றிய பொதுவான விடங்களை குறிப்பிடுங்கள் (அஞ்சல் தலை பற்றியது போல). --Anton (பேச்சு) 04:50, 1 செப்டம்பர் 2013 (UTC)

நன்றி நன்பரே, நான் அதை சரிசெய்து கொள்கிறேன்.--Muthuppandy pandian (பேச்சு) 05:47, 2 செப்டம்பர் 2013 (UTC)

பதக்கம் தொகு

  சிறப்புப் பதக்கம்
பல கட்டுரைகளிலும் உள்ள பதிப்புரிமை மீறல் உரைகளைக் கண்டறிந்து நீக்கி வருகிறீர்கள். இது யாரும் அவ்வளவு இலகுவாகச் செய்யாத பணி. தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தைப் பேண நீங்கள் எடுக்கும் முயற்சியைப் பாராட்டி இந்தச் சிறப்புப் பதக்கத்தை அளிக்கிறேன். இரவி (பேச்சு) 07:14, 2 செப்டம்பர் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

நன்றி இரவி. யாராவது சண்டைக்கு வருவார்கள் என்று எதிர்பார்த்தேன். நீங்களோ பதக்கம் கொடுத்துப் பாராட்டுகிறீர்கள்! :) --Anton (பேச்சு) 10:10, 2 செப்டம்பர் 2013 (UTC)
வாழ்த்துக்கள். :) --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 15:56, 2 செப்டம்பர் 2013 (UTC)
சண்டைக்கு வந்தா என் பேச்சுப் பக்கத்துக்கு வழிமாத்தி விடுங்க :)--இரவி (பேச்சு) 19:19, 2 செப்டம்பர் 2013 (UTC)

மாதம் 1000 தொகுப்புகள் மைல்கல் தொகு

வணக்கம், AntanO/தொகுப்பு 3!

 

நீங்கள் கடந்த மாதம் 1000 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்து மிகவும் முனைப்பான தமிழ் விக்கிப்பீடியராகத் திகழ்வதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இதற்கு மேல் கடப்பதற்கு ஒரு மைல்கல்லும் இல்லை என்பதால் :), வழமை போல் மற்ற உரையாடல்கள் தொடர்பாக உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

--இரவி (பேச்சு) 08:54, 2 செப்டம்பர் 2013 (UTC)

நன்றி.நந்தினிகந்தசாமி (பேச்சு) 10:03, 2 செப்டம்பர் 2013 (UTC)

முதற் பக்க 'உங்களுக்குத் தெரியுமா' இற்றைப்படுத்தல் குறித்து... தொகு

வணக்கம் அன்டன்!

  • தங்களின் சுட்டிக்காட்டலுக்கு நன்றி; உரிய முறையில் செயல்படுத்தப்படும்.
  • வெவ்வேறு துறைகள் குறித்தத் தகவல்களை இடும் கண்ணோட்டத்திலேயே பரவலாகத் தேடி, நடப்பு வாரத்து பக்கத்தினை இற்றை செய்தேன்.
  • பரிந்துரைகளுக்கு இடமளிக்க வேண்டும் என்பது விக்கியின் உயர்ந்த கொள்கை என்பதினால்... ஒரு வாரம் 3 தகவல்கள், அடுத்த வாரம் 2 தகவல்கள் என மாறிமாறி பரிந்துரைகளை காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளேன். செப்டெம்பர் 4 முதல் இது செயல்படுத்தப்படும்.
  • தங்களின் பரிந்துரைகளை தொடர்ந்து இடுமாறு வேண்டுகிறேன்.
  • எனது இற்றைப்படுத்தலில்... தேவைப்படின், தயங்காது திருத்தங்கள் செய்ய வேண்டுகிறேன். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:45, 2 செப்டம்பர் 2013 (UTC)

வணக்கம்! பரிந்துரைகளை திரும்பப் பெற்றுக் கொள்வது பயனர்களின் சொந்த விருப்பம். எனினும் என்னுடைய செயல்பாடு காரணமாக தமிழ் விக்கிப்பீடியாவில் எவ்விதத் தவறான புரிதலும் நிகழ்ந்திட நான் விரும்பாததால், கீழ்க்காணும் தன்னிலை விளக்கத்தைத் தருகிறேன்:

  • நான் ஏற்கனவே தங்களின் பேச்சுப் பக்கத்தில் தெரிவித்திருந்தபடி... வெவ்வேறு துறைகள் குறித்தத் தகவல்களை இடும் கண்ணோட்டத்திலேயே பரவலாகத் தேடி, முதல் வாரத்து பக்கத்தினை இற்றை செய்தேன்.
  • தாங்கள் சுட்டிக்காட்டியபிறகு, பரிந்துரைப் பக்கத்திலிருந்தும் தகவல்களை எடுத்து இற்றை செய்தேன். கடந்த 3 வாரத்து இற்றைகளைக் கவனித்தால், 50% தகவல்கள், பரிந்துரைப் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டதைக் காணலாம்.
  • 'மற்றவர்களின் பரிந்துரைகளை கேட்கத் தேவையில்லை' என நான் நினைக்கவில்லை; தனித்துவமாக நான் விளங்கவேண்டும் என கருதவில்லை; என்னால் இயன்ற அளவு இப்பகுதியினை சிறப்பாக இற்றை செய்தல் வேண்டும் என்பதே எனது நோக்கம்.
  • ஒருமுறை முதற் பக்கம் இற்றையாகாமல் தோன்றியபோது, இனி நாம் எடுத்து செய்து மற்ற நிருவாகிகளின் வேலையினைப் பகிர்ந்துகொள்ளலாமே என்று எண்ணியே இந்த வேலையினை எடுத்துக் கொண்டேன்.
  • என்னுடைய நடவடிக்கையின் காரணமாகவே நீங்கள் உங்களின் பரிந்துரைகளை திரும்பப் பெற்றுக்கொண்டீர்கள் எனில், அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

நடைமுறை ஒழுங்கு இல்லாததால் பரிந்துரை பின்வாங்கப்படுகின்றது என்ற உங்களின் வாக்கியம், நான் எவ்வகையில் விதிமுறைகளை மீறினேன் எனும் கேள்வியினை என்னுள் எழுப்புகிறது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:12, 23 செப்டம்பர் 2013 (UTC)

வணக்கம் அன்டன்! எனது பேச்சுப் பக்கத்தில் நீங்கள் அளித்த பதிலுரைக்கு நன்றி. இப்போதே என் மனம் ஆறுதலடைந்தது. விக்கியின் உயர்ந்த கொள்கைகளை எப்போதும் மதித்து நடப்பேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:44, 5 அக்டோபர் 2013 (UTC)Reply

திருவிளையாடல் கட்டுரைகளைக் கவனிக்க வேண்டுகோள் தொகு

வணக்கம் நண்பரே, பதக்கம் பெற்றமைக்கு வாழ்த்துகள். திருவிளையாடல் புராணம் தொடர்புடைய ஐந்து ஆறு பக்கங்களை பதிப்புரிமை மீறல் என்று நீக்கம் செய்திருக்கின்றீர்கள். மீதமிருக்கும் சில திருவிளையாடல் பக்கங்களையும் கண்டு அவற்றிலும் பதிப்புரிமை மீறல் இருக்கின்றதா என்று உறுதி செய்ய வேண்டுகிறேன். தினமலர் கோயில்கள் தளத்தில் மட்டுமே கட்டுரை வடிவில் திருவிளையாடல்கள் இருந்தமையால் அவற்றைப் படித்தே எழுத வேண்டியிருக்கிறது. அதனால் எல்லாவற்றையும் உறுதி செய்ய வேண்டுகிறேன். மீண்டும் அக்கட்டுரைகளை உரிய முறையில் எழுதுவதற்கு பிறருக்கு வாய்ப்புகிடைக்கும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 01:53, 3 செப்டம்பர் 2013 (UTC)

வணக்கம் ஜெகதீஸ்வரன், பதிப்புரிமை மீறல் இருந்தால் நீக்கல் வார்ப்புரு இடுங்கள். சிலவற்றைப் பார்த்தேன் பதிப்புரிமை மீறல் உள்ளதுபோல் உள்ளது. பதிப்புரிமை மீறாமல் திருத்தி எழுத முடியுமாவென்று பாருங்கள். --Anton (பேச்சு) 12:17, 4 செப்டம்பர் 2013 (UTC)
இதில் குழப்பம் உள்ளமையாலே, தங்களை அனுகியுள்ளேன் நண்பரே, உறுதி செய்தல் தங்களுடைய பொறுப்பு. :-) --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:20, 4 செப்டம்பர் 2013 (UTC)
கவனிக்கிறேன். --Anton (பேச்சு) 12:49, 4 செப்டம்பர் 2013 (UTC)
வடிவமைப்பு பணிகள், கட்டுரைகள் உருவாக்கம் இப்பணிகளுக்கு மத்தியில் கட்டுரைகளின் தரத்தினைப் பேனுவது கடுமையான பணியே. தாங்கள் சம்மதம் தெரிவித்தமைக்கு நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:55, 4 செப்டம்பர் 2013 (UTC)

வழிமாற்றுகள் நீக்கம் தொகு

அன்ரன், வழிமாற்றுகளை நீக்கும் போது அவ்வழிமாற்றுகள் இணைக்கப்பட்டிருக்கும் கட்டுரைகளிலும் திருத்தங்கள் செய்து, அவற்றில் சரியான தலைப்பை இட வேண்டும். இல்லையேல், தேவையற்ற சிவப்பு இணைப்புகள் தோன்றும்.--Kanags \உரையாடுக 21:18, 9 செப்டம்பர் 2013 (UTC)

பதக்கம் தொகு

  சிறந்த பகுப்பாக்குனர் பதக்கம்
என்னுடைய படைப்பிற்கு காலம் ஒதுக்கியதோடு மட்டுமல்லாது, அறியாமல் பதிவேற்றிய புகைப்படத்தை திருத்திய ஆன்டன் அவர்களுக்கு என்னுடைய நன்றியோடு சிறந்த பகுப்பாக்குனர் என்ற பதக்கத்தையும் அளிப்பதில் மகிழ்கின்றேன். அல்லிக்கேணி பார்த்திபன் 07:18, 16 செப்டம்பர் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

வாழ்த்துக்கள் தொகு

அன்டன், நீங்களும் தாரிக்கும் இணைந்து வடிவமைப்புக்களைக் குவிப்பதைப் பார்க்கப் பிரமிப்பாக உள்ளது. தமிழ் விக்கிக்குத் தனியான வடிவமைப்புப் பிரிவு உள்ளதோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. வாழ்த்துக்கள். ---மயூரநாதன் (பேச்சு) 14:34, 20 செப்டம்பர் 2013 (UTC)

உங்கள் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்! --Anton (பேச்சு) 15:51, 20 செப்டம்பர் 2013 (UTC)

வேண்டுகோள்.... தொகு

வணக்கம்! தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களின் பங்களிப்பை மகிழும்வகையில் 'பாராட்டுச் சான்றிதழ்' வழங்க திட்டமிட்டுள்ளோம். பத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் உள்ளது. இங்கு தங்களின் விவரங்களை இற்றைப்படுத்த வேண்டுகிறோம். மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:15, 27 செப்டம்பர் 2013 (UTC)

புதுப்பயனர் கட்டுரைகளை காலம் தாழ்த்தி நீக்க வேண்டுகோள் தொகு

வணக்கம் நண்பரே,

விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாடத்தின் தாக்கத்தினால் நிறைய புதுப்பயனர்கள் தற்போது களம் இறங்கியுள்ளார்கள் என்பது தெரிகிறது. அவர்களுக்கு விக்கியைப் பற்றிய அறிவு அதிகம் இல்லாதமையால் பதிப்புரிமையுள்ள உள்ளடக்கம், தெளிவற்ற உள்ளடக்கம் போன்ற கட்டுரைகளை துவங்குகிறார்கள். அவற்றை உடனே நீக்கம் செய்ய வேண்டாம். அது அவர்களுக்கு புரிதல் இல்லாமையால் விக்கியை விட்டு வெளியேறிவிடும் அபாயத்தினை தருகிறது. எனவே சில காலம் உடனடி நீக்குதலை செய்யாமல் அவர்களின் கட்டுரைகளில் மேலதிக விவரங்களை சேர்க்கவும், உரிய நடையில் எழுதவும் வழிகாட்டல் வார்ப்புருகளை இணைக்க வேண்டுகிறேன். (இவ்வாறான வார்ப்புரு இதுவரை தமிழ் விக்கிப்பீடியாவில் தொகுப்பாக இல்லை என்பதால் ஜெயரத்தின மாதரசன் அவர்களிடம் உருவாக்கி தர கோரிக்கை வைத்திருக்கிறேன். தாங்களும் இந்த வார்ப்புவை மேம்படுத்தி தர கோரிக்கை வைக்கிறேன்.) அத்துடன் புதுப்பயனர்களை வழிநடத்த அலோசனைகளும் கூற வேண்டுகிறேன். நன்றி--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:11, 30 செப்டம்பர் 2013 (UTC)

தங்கள் ஆலோசனை ஏற்றுக் கொள்ளத்தக்கதே. ஆயினும் பதிப்புரிமை மீறலை அனுமதிக்க முடியாது. வளர்ந்து வரும் நாடுகளில் இது பற்றிய விழிப்புணர்வு குறைவென நினைக்கிறேன். இது சட்டச் சிக்கலையும், கூகுளில் முறையிடும் பட்சத்தில் குறித்த தேடு சொற்களை பதிப்புரிமை மீறிய தளத்திற்கான தேடலிருந்து நீக்கக் கூடிய வாய்ப்புள்ளது. இவற்றையும் பார்க்க: {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}, {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}, பயன்பாட்டு விதிமுறைகள் புதுப்பயனர்களை வழிநடத்தல் பற்றிய அணுமுறையினை மேம்படுத்தல் அவசியமே. --Anton (பேச்சு) 08:07, 30 செப்டம்பர் 2013 (UTC)
பதிப்புரிமை மீறலை அனுமதிக்க கோரவில்லை நீக்கலை தாமதம் செய்ய வேண்டுகிறேன். பதிப்புரிமை மீறியதனால் நீக்கப்படலாம் என்பதை புதுப்பயனர் அறிய வேண்டும். கட்டுரை நீக்கப்படுவதால் ஏற்படும் அயற்சியை இது தவிர்க்கும். ஒரு வகையில் தங்களைப் போன்ற நிர்வாகிகளுக்கு இது கூடுதல் சுமை எனும் போதும் அதனை அன்புடன் ஏற்கும்படி வேண்டுகிறேன். புதுப்பயனரை தொடர் பயனராக மாற்றவே இவ்வாறு கோரிக்கை வைக்கிறேன். மற்றவர்களுக்கு இதனைப் பற்றி தெரியப்படுத்த வேண்டியே புதிய பயனர்களின் கட்டுரைகளில் சேர்க்க புதிய வார்ப்புரு அமைக்கப்பெற்றுள்ளது. அதினை பயன்படுத்த: {{புதுப்பயனர் கட்டுரை|புதுப்பயனரின் பெயர்|date=இன்றய திகதி}} என இடுக. இதில் புதுப்பயனரின் பெயரும், திகதி கட்டாயமல்ல. நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:40, 30 செப்டம்பர் 2013 (UTC)
தங்கள் நல்ல நோக்கத்திற்குப் பாராட்டுக்கள். ஆயினும் முன்னமே உள்ள நடைமுறைகளை விட்டு புதிதாக செயற்படுவது ஆரோக்கியமாக எனக்குப்படவில்லை. அல்லது நீங்கள் குறிப்பிடும் விடயங்கள் நடைமுறையில் சேர்க்கப்படல் நலம். பார்க்க: விக்கிப்பீடியா:துரித நீக்கல் தகுதிகள், en:Wikipedia:Criteria for speedy deletion. நடைமுறை அல்லது விதிமுறை இருப்பது நல்ல வளர்ச்சிக்கு உதவும் என்பது என் கருத்து. --Anton (பேச்சு) 13:05, 30 செப்டம்பர் 2013 (UTC)
சகோ. பதிப்புரிமை மீறல் என்றாலே தமிழ் விக்கியில் அதிகம் வெட்டி ஒட்டுவதுதான். அதில் அயற்சி எப்படி வரும்? பயனரின் பேச்சுப்பக்கத்தில் எழுதிவிடலாமே?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 22:03, 5 அக்டோபர் 2013 (UTC)Reply
கருத்துரைக்கு நன்றி அன்டன் நண்பரே, ஒரு புதுப்பயனரின் பார்வையில் இதை அனுக வேண்டுகிறேன். விக்கிப்பீடியாவிற்கு வருகின்ற புதுப்பயனர் ஒரு கட்டுரையை எழுதிவிட்டு சென்றுவிடுகிறார். பிறகு மீண்டும் அக்கட்டுரையை தேடி விக்கிப்பீடியாவிற்கு வருகிறார். அது இல்லாமல் நீக்கப்பட்டது என்று அறிந்து வருத்தம் கொள்கிறார். நான் பல முறை இத்தகைய நடமுறைகளை கண்டிருக்கிறேன். சிலர் மட்டுமே முன்வந்து ஏன் நீக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ள எத்தனிக்கின்றார்கள். பலர் விக்கிப்பீடியாவைவிட்டு வெளியேறிவிடுகிறார்கள். நம்மால் விக்கிப்பீடியாவில் எழுத முடிகிறது என்ற மகிழ்வுதான் விக்கிப்பீடியாவை நோக்கி அழைத்து வருகின்ற கருவியாகும். நம்முடைய கட்டுரை நீக்கப்படுகிறது என்பது அவர்களை விக்கிப்பீடியாவிலிந்து விலக்கி வைக்கிறது. அதற்காகவே இந்த வார்ப்புருவை உருவாக்கிதர வேண்டுகோள் வை்த்திருந்தேன். நமது விக்கிப்பீடியாவில் தற்போது இதனை பயன்படுத்துகின்ற சூழல் இல்லை என்பதை அறிந்தேன். சில தருணங்கள் கழித்து மீண்டும் இது குறித்து உரையாடுவோம். நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:46, 11 அக்டோபர் 2013 (UTC)Reply
தென்காசியாரே, வெட்டி ஒட்டும் பணிதான் என்றாலும் புதுப்பயனருக்கு இது பெரும் முயற்சி அல்லவா?. கட்டுரை எதற்காக நீக்கப்பட்டிருக்கிறது எங்கு விவாதிக்க வேண்டும் என்பதையெல்லாம் தாண்டி அவர்களுக்கு ஒரு வெறுமை தொற்றிக் கொள்கிறது. சில காலம் கட்டுரை நீக்கலை தாமதித்தால் அவர்கள் அதற்குள் விக்கிப்பீடியாவின் கொள்கைகளை அறிந்து கொள்வார்கள் என்று எண்ணியிருந்தேன். விக்கிப்பீடியாவின் முதற்பக்க இயற்படுத்துதல், கருவிகள் உருவாக்கம், கட்டுரை மேம்பாடு என பலவும் ஒரு சேர கவனி்க்கப்படும் தேவையுள்ளதால் இதனைக் குறித்து பிறகு உரையாடுவோம் நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:51, 11 அக்டோபர் 2013 (UTC)Reply

அவதானிக்கவும் தொகு

தோழர் இங்கு குறிப்பிடப்பட்ட விடயம் தொடர்பாக அவதானிக்கவும் யூ எஸ் ஓப்பன்

இணைக்கவும் தொகு

நவரத்தினம் திரைபடத்தை இணைத்துவிடுங்கள்.இருப்பது தெரியாமல் எழுதிவிட்டேன்.நந்தினிகந்தசாமி (பேச்சு) 11:11, 1 அக்டோபர் 2013 (UTC)Reply

கட்டுரைப் போட்டியை நிர்வகிக்க வேண்டுகோள் தொகு

தற்போது கட்டுரைப் போட்டியை நிர்வகிக்க இரவியும் நானும் இருக்கிறோம். வேலைப்பளு அதிகமாக உள்ளதால் நீங்களும் அதில் பங்கெடுக்குமாறு வேண்டுகிறேன். நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:33, 2 அக்டோபர் 2013 (UTC)Reply

பங்கெடுக்கிறேன். --Anton (பேச்சு) 18:22, 2 அக்டோபர் 2013 (UTC)Reply

நன்றி. அண்டன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:46, 3 அக்டோபர் 2013 (UTC)Reply

வணக்கம் அண்டன்! முதற் பக்கத்திலுள்ள 'தொடர் கட்டுரைப் போட்டி' குறித்த தகவல்களை இற்றைப்படுத்த வேண்டுகிறேன். படிமம், அவரே; ஆனால் உள்ளடக்கத்தை மாற்ற வேண்டும். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:28, 4 அக்டோபர் 2013 (UTC) தேவைப்படின் படிமத்தையும் மாற்றலாம்; மற்ற வெற்றியாளர்களையும் பெருமைப்படுத்தலாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:53, 4 அக்டோபர் 2013 (UTC)Reply

10 நாட்களின் பின் 2ம் மற்றும் சிறப்புப் பரிசு பெற்றவர்கள் குறித்த தகவல்களை இற்றைப்படுத்தலாமா? தேவையெனின் குறித்த பேச்சுப் பக்கத்தில் பரிந்துரைக்கலாம் என எண்ணுகிறேன். --Anton (பேச்சு) 03:59, 4 அக்டோபர் 2013 (UTC)Reply

அருமையான யோசனை... 10-10-10 நாட்கள் என பிரித்து மூவரையும் சிறப்பிக்கலாம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:34, 4 அக்டோபர் 2013 (UTC)Reply

தொடர்பு விபரம் தொகு

அன்ரன் தங்களைத் தொடர்பு கொள்ள விரும்புகின்றேன். தொலைபேசி எண்ணை தனி மடலிட முடியுமா?--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 16:04, 4 அக்டோபர் 2013 (UTC)Reply

 Y ஆயிற்று--Anton (பேச்சு) 01:29, 5 அக்டோபர் 2013 (UTC)Reply

பதக்கம் தொகு

  மெய்வாழ்வுப் பதக்கம்
விக்கிப் பத்திற்கு பல வடிவமைப்பு பணிகளில் உதவியுள்ளீர்கள். தங்களது வடிவமைப்புகளையும் தாரிக்கின் வடிவமைப்புகளையும் நண்பர்களிடம் காட்டிப் பெருமை படுவேன். எனக்கு வடிவமைப்பு தேவை என்று அவர்களை நாடுகையில் உடன் அமர்ந்து கருத்து கூற வேண்டும் என்று கூறுவர். ஆனால், இது போன்ற எதுவுமின்றி நீங்கள் இருவரும் கச்சிதமான வடிவமைப்புகளைச் செய்துதந்தீர்கள். நன்றி.... :) மெச்சுகிறேன்!  சூர்யபிரகாஷ்  உரையாடுக 13:57, 5 அக்டோபர் 2013 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

நன்றி சூர்யா! --Anton (பேச்சு) 15:25, 5 அக்டோபர் 2013 (UTC)Reply

  1.   விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 18:12, 5 அக்டோபர் 2013 (UTC)Reply
  2.   விருப்பம்--≈ உழவன் ( கூறுக ) 18:15, 5 அக்டோபர் 2013 (UTC)Reply
  3.   விருப்பம்--பரிதிமதி (பேச்சு) 19:37, 5 அக்டோபர் 2013 (UTC)Reply
  4.   விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:41, 5 அக்டோபர் 2013 (UTC)Reply
  5.   விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:12, 5 அக்டோபர் 2013 (UTC)Reply
  6.   விருப்பம்--Kanags \உரையாடுக 22:33, 5 அக்டோபர் 2013 (UTC)Reply
  7.   விருப்பம் சிறந்த வடிவமைப்பாளருக்கான ஒரு பதக்கத்தையும் நீங்கள் இருவரும் வடிவமைத்துத் தர வேண்டும் என்ற வேண்டுகோளுடன் :) --இரவி (பேச்சு) 03:53, 6 அக்டோபர் 2013 (UTC)Reply
நன்றிகள்! --Anton (பேச்சு) 09:57, 7 அக்டோபர் 2013 (UTC)Reply

தமிழர் வலைவாசலை மேம்படுத்தி தரக் கோரிக்கை தொகு

வணக்கம் நண்பரே, தாங்கள் தொடங்கி மேம்படுத்தியிருக்கும் வலைவாசல்:தமிழர் என்பதை மீண்டும் கவனிக்க வேண்டுகிறேன். முதற்பக்கத்தில் தமிழர் தொடர்பான வலைவாசலை காட்சிபடுத்தினால் கூடுதல் அந்நியோனியம் மக்களிடம் உண்டாகும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:37, 11 அக்டோபர் 2013 (UTC)Reply

நினைவூட்டலுக்கு நன்றி ஜெகதீஸ்வரன். கவனிக்கிறேன். தேவையான மாற்றங்களை மேற்கொள்கிறேன். குறிப்பிடக் கூடிய விடயங்கள் இருப்பின் மேற்கொள்ளுங்கள். --Anton·٠•●♥Talk♥●•٠· 16:51, 11 அக்டோபர் 2013 (UTC)Reply
வேண்டுகோளை ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி நண்பரே. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:55, 11 அக்டோபர் 2013 (UTC)Reply

நன்றியுரைத்தல் தொகு

  நிர்வாக அணுக்கம் தந்தமைக்கு நன்றியுரைத்தல்
வணக்கம் நண்பரே. எந்தன் மீது நன்மதிப்பு கொண்டு. தங்களுடைய மதிப்புமிக்க ஆதரவினை நல்கி, நிர்வாக அணுக்கத்தினை பெற்று தந்தமைக்கு என்னுடைய நன்றிகளை உரித்தாக்குகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:45, 15 அக்டோபர் 2013 (UTC)Reply
 
நடைபெற்ற நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு தமிழ் விக்கிபீடியாவின் தூண்களில் ஒருவரான தங்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்! --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 01:51, 16 அக்டோபர் 2013 (UTC)Reply

மிக்க நன்றி
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி!!
--அஸ்வின் (பேச்சு) 03:20, 16 அக்டோபர் 2013 (UTC)Reply

 --நந்தகுமார் (பேச்சு) 08:17, 16 அக்டோபர் 2013 (UTC)Reply

முதற்பக்க வலைவாசல் தெரிவு தொகு

வணக்கம் நண்பரே, விக்கிப்பீடியா:முதற்பக்க வலைவாசல் பக்கத்தின் பரிந்துரைப் பகுதியில் இரு வலைவாசல்களை தெரிவு செய்துள்ளேன். மற்ற வலைவாசல்களில் சில மேம்பாடுகள் தேவைப்படுகின்றன, அதனையும் பட்டியலி்ட்டுள்ளேன். இப்பக்கத்தினைக் கண்டு தங்களின் மேலான கருத்தினையும் வழிகாட்டலையும் தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி, --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 19:17, 22 அக்டோபர் 2013 (UTC)Reply

நல்ல தெரிவு. நன்றாக கருத்தளித்துள்ளீர்கள். முன்னெடுங்கள். மாதம் ஒரு தடவை காட்சிப்படுத்தலாமா? --Anton·٠•●♥Talk♥●•٠· 14:06, 23 அக்டோபர் 2013 (UTC)Reply
தமிழிலக்கியம், தமிழீழம் என இரு வலைவாசல்கள் மட்டுமே தயாராக உள்ளன நண்பரே. அதனால் மாதம் ஒன்றையே காட்சிப்படுத்தலாம். இந்த இருமாதங்களை மற்ற வலைவாசல்களை மேம்படுத்த உபயோகம் செய்து கொள்ளலாம். வலைவாசல்களை தொடங்கிய பலர் தற்போது பங்களிப்பு செய்ய இயலா நிலையிலோ/ ஆர்வமின்றியோ இருக்கின்றார்கள். அவர்களை மீண்டும் வலைவாசல் நோக்கி அழைத்துவர வேண்டியிருக்கிறது. :-) --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:45, 23 அக்டோபர் 2013 (UTC)Reply
அவ்வாறே செய்யலாம். --Anton·٠•●♥Talk♥●•٠· 14:47, 23 அக்டோபர் 2013 (UTC)Reply
  விருப்பம். மாதம் ஒன்று என்பதே சரியானது; இயலக்கூடியது. சிறப்பானதும்கூட. ஏற்கனவே இருக்கும் வலைவாசல்களை மேம்படுத்த ஆலமரத்தடியிலும் ஒரு வேண்டுகோள் வைக்கலாம். இயன்றவர்கள் ஏதேனும் ஒரு வலைவாசலை எடுத்து மேம்படுத்துமாறு கேட்கலாம். தொடர்ந்து இங்கு உரையாடுவோம். நன்றி--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:37, 24 அக்டோபர் 2013 (UTC)Reply
  விருப்பம்--Anton·٠•●♥Talk♥●•٠· 06:00, 24 அக்டோபர் 2013 (UTC)Reply

கட்டுரைப் போட்டி தொகு

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:51, 27 அக்டோபர் 2013 (UTC)Reply

தீப ஒளித் திருநாளுக்கு ஓர் இலச்சினை? தொகு

ஆன்டன், தீப ஒளித் திருநாளைக் காட்டும் விதத்திலும் ஆலோயீனை நினைவூட்டும் வகையிலும் ஓர் இலச்சினை வடிவமைத்துத் தர இயலுமா? இன்று மாலைக்குள்? நான் தாரிக்கிடமும் கேட்கிறேன். நீங்கள் இருவரும் கலந்தாலோசித்துக் கூட வடிவமைக்கலாம். ஒரு 3 நாட்களுக்கு மட்டும் இடம்பெற வைக்க முயல்கிறேன். நன்றி. -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 02:40, 1 நவம்பர் 2013 (UTC)Reply

முடியும். நீங்கள் ஆலமரத்தடியில் வைத்துள்ள ஆலோசனை சம்மதம் பெறும் வரை காத்திருக்கவா? மேலும், ஆலோயீன் தேவையில்லையென நினைக்கிறேன். யாரும் கொண்டாடுகிறார்களா? --Anton·٠•●♥Talk♥●•٠· 05:48, 1 நவம்பர் 2013 (UTC)Reply

முதற்பக்கத்தில் தமிழலக்கிய வலைவாசல் தொகு

முதற்பக்கத்தில் தமிழலக்கிய வலைவாசலை காட்சிபடுத்தியுள்ளேன். அவ்வலைவாசலை மேம்படுத்திய பார்வதி மற்றும் செல்வசிவகுருநாதன் இருவரின் பேச்சுப் பக்கத்திலும் குறிப்பினை இட்டுள்ளேன். முதல்முறையாக இப்பணியை செல்வதால் தாங்கள் மேற்பார்வையிட்டு கருத்தினை தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 02:59, 1 நவம்பர் 2013 (UTC)Reply

நன்று ஜெகதீஸ்வரன். நன்றாகச் செய்துள்ளீர்கள். அங்குள்ள படத்திற்கு மாற்றீடாக சற்சதுர வடிவ அல்லது இதற்குக் கிட்டிய படிமம் இருந்தால் என்ன? --Anton·٠•●♥Talk♥●•٠· 05:51, 1 நவம்பர் 2013 (UTC)Reply
ஓரளவு பொருத்தமானதொரு படிமத்தினை இட்டுள்ளேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:01, 1 நவம்பர் 2013 (UTC)Reply
இருவருக்கும் என் நன்றிகள். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:27, 9 நவம்பர் 2013 (UTC)Reply

அறிவுறுத்தல் என்பதிலும் பார்க்க தொகு

அன்ரன், அறிவுறுத்தல் என்பதிலும் பார்க்க "கவனிக்க", "பரிந்துரைகள்" அல்லது "உங்கள் அக்கறைக்கு" என்று தலைப்பிடுவதுன் பொருத்தமாக இருக்கும். உள்ளடக்கம் பொருத்தமாகவே உள்ளது.--Natkeeran (பேச்சு) 02:36, 2 நவம்பர் 2013 (UTC)Reply

நன்றி. --Anton·٠•●♥Talk♥●•٠· 02:37, 2 நவம்பர் 2013 (UTC)Reply

பதக்கம் தொகு

  சிறந்த உரைதிருத்துனர் பதக்கம்
கட்டுரைகளை சரியாக திருத்தி எமக்கு உதவுவதற்கு இது வழங்கப்படுகின்றது. ♥ ஜீவதுவாரகன் ♥ ♀ பேச்சு ♀ 06:22, 2 நவம்பர் 2013 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  விருப்பம்--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 06:53, 2 நவம்பர் 2013 (UTC)Reply

நன்றி ஜீவதுவாரகன், ஸ்ரீகர்சன். --Anton·٠•●♥Talk♥●•٠· 08:00, 3 நவம்பர் 2013 (UTC)Reply


 
உங்களுக்காக புதிய தகவல்கள் உள்ளன
வணக்கம், AntanO. உங்களுக்கான புதிய தகவல்கள் Shrikarsan இன் பேச்சு பக்கத்தில் உள்ளன.
நீங்கள் இந்த அறிவிப்பை {{பேச்சு}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம்.


katturaippOttiyil நரசிம்மவர்மன் தொகு

நரசிம்மவர்மன் இந்திய நேர வலயப்படி இரண்டு கட்டுரைகளை 15360 தாண்டி அக்டோபரில் விரிவு செய்ததால் ஹோபி, நரசிம்மர் இருவருக்கும் இரண்டாம் பரிசு கொடுக்கப்பட வேண்டும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 02:47, 4 நவம்பர் 2013 (UTC)Reply

நன்றி தொகு

 

நான் தொடங்கும் சில கட்டுரைகளின் தலைப்பை சரியான மொழிநடையில் மாற்றுவதற்கு நன்றி!--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 11:13, 7 நவம்பர் 2013 (UTC)Reply

லோகோ பயன்பாடு தொகு

நான் Gartner136.png என்ற கார்ட்னர் நிறுவனத்தின் லோகோவை தமிழ் விக்கியில் பயன்படுத்தலாமா ? பதில் வேண்டுகிறேன். சிவகார்த்திகேயன் (பேச்சு) 09:12, 13 நவம்பர் 2013 (UTC)Reply

உங்கள் குறிப்பு தொடர்பாக விளக்கம் தொகு

அன்ரன் இந்தத் தொகுப்பில் நான் உங்கள் கோரிக்கையை விலக்கிக் கொள்ளுமாறு கேட்டதாகச் சொல்லியிருக்கிறீர்கள். இந்த இழையில் அவ்வாறு நான் சொன்னதாக நினைவில்லையே. வேறு இடத்தில் சொல்லியிருந்தேனா எனத் தெளிவுபடுத்தவும். மற்றபடி, உங்கள் கோரிக்கையிலுள்ள குற்றச்சாட்டுக்களையும் மற்ற குற்றச்சாட்டுக்களையும் அவற்றின் உண்மைநிலை பொருத்து மட்டும்தான் அலச வேண்டும் என்ற உங்கள் கூற்றில் உடன்படுகிறேன். -- சுந்தர் \பேச்சு 05:55, 18 நவம்பர் 2013 (UTC)Reply

சுந்தர், நீங்கள் அவ்வாறு எவ்விடத்திலும் குறிப்பிடவில்லை. அத் தொகுப்பில் கருத்திட்டுள்ளேன். --Anton·٠•●♥Talk♥●•٠· 04:20, 19 நவம்பர் 2013 (UTC)Reply

கட்டுரைப் போட்டி பதாகைகள் தொகு

அன்டன், கட்டுரைப் போட்டிகளைப் பற்றிய பரப்புரையை முடுக்கி விட கூடுதல் பதாகைகளை உருவாக்கித் தர முடியுமா? நன்றி.--இரவி (பேச்சு) 17:06, 20 நவம்பர் 2013 (UTC)Reply

ஆம் இரவி, சிறு தடங்களினால் மறந்தேவிட்டேன். விரைவில் பதிவேற்றுகிறேன். --Anton·٠•●♥Talk♥●•٠· 08:02, 21 நவம்பர் 2013 (UTC)Reply

லுவா உதவி தேவையா? தொகு

ஆன்டன், நீங்கள் இன்னமும் v2 வார்ப்புருவில் சென்று தொகுத்துக் கொண்டிருப்பதை அறிகிறேன். முதற்பக்கக் கட்டுரைகளையும் லுவா கொண்டு இற்றைப்படுத்த விருப்பமெனில் என்னிடம் கூறவும். அதற்கான வளங்கள் அணியமாக உள்ளன. அதனைச் செயல்படுத்தினால் போதும். விருப்பமெனில் கூறவும், செய்துவிடலாம் :) --Surya Prakash.S.A. (பேச்சு) 09:09, 24 நவம்பர் 2013 (UTC)Reply

சூர்யா, நான் யாருமே இற்றைப்படுத்தாததினால்தான் செய்கிறேன். ஆயினும், லுவா கொண்டு இற்றைப்படுத்துவது நல்லதே. அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். மிகவும் பயனுள்ளதாக இருக்கும். --Anton·٠•●♥Talk♥●•٠· 09:15, 24 நவம்பர் 2013 (UTC)Reply
நன்றி. செய்கிறேன். --Surya Prakash.S.A. (பேச்சு) 17:35, 27 நவம்பர் 2013 (UTC)Reply

விளக்கம் தேவை தொகு

கட்டுரைப் போட்டியின் தலைப்புகள் பக்கத்தில் நாடுகள் என்னும் தலைப்பின் கீழ் இவ்வாறு உள்ளது.

See also நாடுகளின் பட்டியலையும்
மக்கள்தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியலையும் பார்க்கவும்.
அப்படியானால் இப் பட்டியல்களில் உள்ள நாடுகளும் கட்டுரைப் போட்டிக்கு உரியனவா?--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 19:14, 26 நவம்பர் 2013 (UTC)Reply
தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன். அங்குள்ள 56 நாடுகள் பற்றிய கட்டுரைகள் மட்டும் போட்டிக்கு உகந்தவை. ஆயினும், பிறவற்றையும் அங்கு சேர்ப்பது பற்றி போட்டியின் பேச்சுப் பக்கத்தில் உரையாடலாம். --Anton·٠•●♥Talk♥●•٠· 02:43, 1 திசம்பர் 2013 (UTC)Reply

Your opinion/vote appreciated தொகு

Hi AntanO,

Feel free to voice your opinion regarding this proposal here. --Philippe Jackson (பேச்சு) 05:45, 1 திசம்பர் 2013 (UTC)Reply

uthavi thEvai தொகு

katturai pottiyil niraya vithikalai meeri eluthapatulana. Naan erkanave sari paartha murayil etho pilai ullathal neengal katuraikal anaithayum oru murai meel paarvai itumaaru vendukiren. naan ninaitha maathiri ithu elithaka intha murai illai.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:15, 4 திசம்பர் 2013 (UTC)Reply

கவனிக்கிறேன். --Anton·٠•●♥Talk♥●•٠· 01:27, 5 திசம்பர் 2013 (UTC)Reply

கட்டுரைப் போட்டி முடிவுகளில் நவம்பர் மாத (Bar Chart) போட வேண்டும். எனக்கு அது தெரியவில்லை என்பதால் நீங்களே இற்றைப்படுத்தவும். மேலும் தளபதியார் படம் கிடைத்தாலும் முதற்பக்கத்தில் போட வேண்டுகிறேன். நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 22:31, 7 திசம்பர் 2013 (UTC)Reply

 Y ஆயிற்று--Anton·٠•●♥Talk♥●•٠· 02:25, 9 திசம்பர் 2013 (UTC)Reply


மின்னஞ்சல் உதவி தொகு

எனக்கு https://ta.wikipedia.org/wiki/இருக்கை_பட்டை என்ற கட்டுரையில் சில படங்களை பயன்படுத்த வேண்டியிருந்தது, அதற்க்காக நான் அமரிக்காவில் அட்லாண்டாவில் இருக்கும் Rod Nave என்பவரிடம் அனுமதி கேட்டிருந்தேன்.அதற்க்கு பின்வருமாறு பதில் வந்திருந்தது இதனை எவ்வாறு அணுகுவது என்று உதவும்.

Dear Siva,

I am glad for specified image from HyperPhysics to be used in such an educational initiative under the standard publications permission protocol, that is permission for use for this project with all rights reserved to the copyright holder and the maintenance of the copyright.

I have dealt with Wikipedia for many years, and what they usually want is a setting aside of the copyright and the placing of the material into creative commons. HyperPhysics remains a copyrighted project for continual review and updating.

If permission under those guidelines is sufficient for what you wish to do, then I just need the identification of which images you wish to use, and the use should be accompanied by something like "from HyperPhysics, copyright Rod Nave, Used by permission".

Regards,

Rod Nave

அறிவுரை கூறவும். சிவகார்த்திகேயன் (பேச்சு) 03:55, 17 திசம்பர் 2013 (UTC)Reply

முக்கியத்துவம் உள்ள படிமமாயின் விக்கி பொதுவில் பதிவேற்றினால் எல்லோருக்கும் பயன்படும். அவரே (Rod Nave) பதிவேற்றினால் இலகுவாக இருக்கும். நீங்கள் அங்கு பதிவேற்றுவதாகவிருந்தால், இதனைப் பின்பற்றுங்கள் - commons:Commons:Licensing, en:Wikipedia:Requesting copyright permission. அல்லது இங்கு (தமிழ் விக்கி) பயன்படுத்துவதாயிருந்தால், பதிவேற்றிவிட்டு {{Non-free fair use in}} என்ற வார்ப்புருவைப் பயன்படுத்தலாம். இங்கு பதிவேற்றினால், சுட்டியைக் குறிப்பிடங்கள், தகுந்த பதிப்புரிமையை மாற்றிவிடுகிறேன். எ.கா: ஆ.வி.யில் பயன்படுத்தப்பட்டுள்ள "Non-free media information and use rationale". இதனையும் பாருங்கள் - விக்கிப்பீடியா:படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும். --Anton·٠•●♥Talk♥●•٠· 04:19, 17 திசம்பர் 2013 (UTC)Reply
தங்கள் பதிலுரைக்கு மிக்க நன்றி சிவகார்த்திகேயன் (பேச்சு) 05:49, 17 திசம்பர் 2013 (UTC)Reply

உதவி தொகு

வணக்கம். த.வி கட்டுரைகளில் மேற்கோளாக அதே தலைப்பில் உள்ள ஆ.வி கட்டுரைகளை இணைப்பது சரியானதா என்று எனக்குத் தெரியவில்லை. தெளிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 13:35, 21 திசம்பர் 2013 (UTC)Reply

குறித்த கட்டுரையின் பகுதி தகுந்த மேற்கோள் கொண்டிராவிட்டால் உகந்ததல்ல. ஆ.வி முதற் கொண்ட பிற விக்கி கட்டுரைகளும் இதற்குப் பொருந்தும். இதனையும் பாருங்கள் Wikipedia articles may not be used as tertiary sources in other Wikipedia articles, but are sometimes used as primary sources in articles about Wikipedia itself. --Anton·٠•●♥Talk♥●•٠· 13:45, 21 திசம்பர் 2013 (UTC)Reply

Booradleyp1 & அண்டனாரே அது விக்கிப்பீடியா தொடர்பான கட்டுரைகளுக்கு மட்டும் தான் பொருந்தும். மற்றவற்றுக்கு பொருந்தாது. மயூரநாதன் பற்றிய கட்டுரையில் அவர் பங்களிப்புகள் பற்றிய உள்ளடக்கங்களுக்கு விக்கிப்பீடியா இணைப்பு மேற்கோளாகச் சுட்டப்பட்டிருப்பதை எ.கா. கொள்ளலாம்.

நாளைக்கு அண்டனார் பிரபலமானா அவருக்கும் ஒரு கட்டுரை எழுதி அண்டனாருன்னா யாரு அவர் ஒரு விக்கிப்பீடியரு பாருன்னு போட்டு அதுக்கு அவர் பங்களிப்புகான விக்கிப்பீடியா இணைப்பை மேற்கோள் காட்டி ஆச்சரியக்குறி போடலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:59, 21 திசம்பர் 2013 (UTC)Reply

Regarding Pagutharivu page தொகு

The term "Pagutharivu kolkai" is taken from the "list of wikipedia articles to be created for essay competition 2013 to 2014".But the article pagutharivu already exists but it is a different term,pagutharivu means sixth sense but pagutharivu kolkai means the application of sixth sense or the practise of sixth sense.it is somewhat related to principles.Though they seems same,they has huge differences.So please contact me regarding the issue through my mail "sethuramrajesh65@gmail.com".

சேதுராமன், பகுத்தறிவுக் கொள்கை என்ற தலைப்பு எதை வைத்து அங்கு பட்டியலிடப்பட்டதென தெரியாது. அப்பட்டியல் உங்களுக்கு குழப்பத்தினை ஏற்பத்தியதற்கு வருந்துகிறேன். தமிழ் தலைப்புக்களின் பட்டியலை ஆங்கில விக்கி பட்டியலுடன் ஒப்பிட்டப் பார்த்ததில், பகுத்தறிவு, அறிவாய்வியல் (Epistemology) ஆகிய தலைப்புக்கள் பொருத்தமாகவுள்ளது. எனினும் பிற பயனர்களுடன் சரியான தலைப்பு பற்றி உரையாடலாம். பி.கு. பிற விடயங்களை மின்னஞ்சல் தவிர்த்து உங்கள் பேச்சுப் பக்கத்திலோ, கட்டுரையின் பேச்சுப்பக்கத்திலோ தொடரலாம். இது பின்பு கட்டுரை தொகுப்பாளர்களுக்கு உதவியாக இருக்கும். மேலும், தமிழ் இருவருக்கும் தெரிந்திருக்க தமிழில் உரையாடுவது சிறந்தது. --Anton·٠•●♥Talk♥●•٠· 04:07, 23 திசம்பர் 2013 (UTC)Reply

பயனர் தடை குறித்து தொகு

அண்டன் சந்திரசேகர் ஆறுமுகம் என்று முகநூல் குழுமத்தில் கேள்விகள் கேட்கும் நபர் தான் கனக்சு தடை செய்த நபர். நான் அவருடன் உரையாடிய வரையில் அவருக்கு விக்கிப்பீடியாவில் புரிதல் இல்லை. நான் முதலில் விக்கிப்பீடியாவில் பங்களித்த போதும் இதே தான் நேர்ந்தது. அதே போல் எந்த புதுப்பயனருக்கும் ஆகக்கூடாது என நினைக்கிறேன். அவ்வளவுதான். நான் தற்போது அதிக வேலைப்பளுவில் இருப்பதால் நீங்கள் அளித்த அத்தனை பதில்களையும் பார்க்க இயலவில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:56, 23 திசம்பர் 2013 (UTC)Reply

பயனர்_பேச்சு:Rsmn/தொகுப்பு_2#புதுப்பயனர் தடை இந்த பக்கத்தைப் பாருங்கள் உங்களுக்கு ஏன் நான் இவ்வளவு மெனக்கிடுகிறேன் எனத் தெரியும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:00, 23 திசம்பர் 2013 (UTC)Reply

உங்கள் நல்நோக்கத்திற்குப் பாரட்டுக்கள்! ஆனால் நடைமுறைச் சிக்கல்களும் உள்ளன. தொடர்ந்து பிழையான தொகுப்புக்களை செய்யும் ஒரு பயனருடன் "ஒரு அளவிற்கு மேல்" திருத்தங்கள் செய்து கொண்டிருப்பது எந்தளவிற்கு (விக்கி கொள்கையின்படி) சாத்தியமாகும். அவரைப் போன்ற பயனர்களுடன் தொடர்பாடுவதில் மற்ற பயனர்களின் செயற்பாடு, துப்புரவு நடவடிக்கைகளில் ஈடுபாடும் பயனர்களின் அளவு ஆகியனவற்றையும் இங்கு கவனிக்க வேண்டும். குறித்த பயனருக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களை கண்டதும், ஏனைய பயனர்கள் நடவடிக்கை எடுத்திருக்கலாம்.--Anton·٠•●♥Talk♥●•٠· 05:04, 25 திசம்பர் 2013 (UTC)Reply

ஆங்கில விக்கி அவசர உதவி தேவை தொகு

en:Talk:Tamil-Brahmi இங்கு வரவும். எனக்கு ஆங்கிலப் புலமை அவ்வளவாக இல்லை. நிலைமையை தெளிவாகச் சொல்லி அவருக்கு புரிய வையுங்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:56, 24 திசம்பர் 2013 (UTC)Reply

கவனிக்கிறேன், சுப்பிரமணியன். --Anton·٠•●♥Talk♥●•٠· 04:49, 25 திசம்பர் 2013 (UTC)Reply

கட்டுரை நீக்கம் தொகு

தமிழ் புத்தாண்டு என்னும் ஆட்டைப் பெரிய திருவிழா என்ற கட்டுரை பதிப்புரிமை மீறல் அல்ல. அதனால் அக்கட்டுரையை மீள்வித்திருக்கிறேன். அக்கட்டுரை சொந்த ஆய்வைக் கொண்டிருப்பதால் நீக்க முடியும். ஆனாலும், வேறு பயனர்கள் கருத்துத் தெரிவிக்காமல் இருந்தால் சில நாட்களில் (7 நாட்கள் காலக்கெடு விதிக்கலாம்) அவரது பயனர் வெளிக்கு மாற்றுவதே சிறந்ததாகத் தெரிகிறது. அது குறித்து கட்டுரை உரையாடலில் தந்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 21:55, 26 திசம்பர் 2013 (UTC)Reply

"தமிழ் புத்தாண்டு என்னும் ஆட்டைப் பெரிய திருவிழா" என்று தலைப்பிடப்பட்ட எங்கள் கட்டுரை முதல்நிலை ஆய்வு அல்ல. தமிழ் பாடல்களிலும் மற்றும் செய்யுள்களில் உள்ளனவற்றையும் இந்த கோணத்தில் தொகுத்து வழங்கியிருக்கிறோம். மற்றபடி எதுவும் அல்ல. இதற்கு நாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் வீணோ? என எங்களை ஐயப்படவைக்கிறது உங்கள் முடிவு. தயவு செய்து மீள்பதிவேற்றம் செய்ய வேண்டுகிறோம். தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள், தவறைத் திருத்திக்கொள்கிறோம்.--லிவி (பேச்சு) 08:32, 27 திசம்பர் 2013 (UTC)Reply

தவறான நீக்கல் வாருப்புர்க்களை நீக்கவும் தொகு

நீங்கள் அண்மையில் சேர்த்த நீக்கள் வார்ப்புருக்கள் பல தவறான முறையில் இணைக்கப்பட்டுள்ளன.

  • ஆலமரத்தடி உரையாடல் இணக்க முடிவு ஒன்று எடுக்க முதல் இவ்வாறு இணைக்கப்பட்டுள்ளன.
  • தற்போதிய விதிகளுக்கு ஏற்ற கட்டுரைகள் பலவற்றுக்கு இணைக்கப்பட்டுள்ளன.
  • என்ன விதிகள் என்று தெளிவில்லாமலே இணைக்கப்பட்டுள்ளன.
  • புதிய பயனர்களை நெளிவாகக் கையாழ வேண்டும் கருத்து எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று கருதுகிறேன்.

ஆகவே, மேற்கூறிய காரணங்களுக்காக அந்த வார்ப்புருக்களை நீக்கவும். மேலும் தகவல்களுக்கு ஆலமரத்தடியைப் பார்க்கவும். --Natkeeran (பேச்சு) 17:15, 29 திசம்பர் 2013 (UTC)Reply

அன்ரன், கட்டுரைகள் குறைந்தது மூன்று வசனங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பதே விதிமுறை. ஆனால், இவ்விதிமுறைக்கு ஏற்ற கட்டுரைகளுக்கும் நீக்கல் வார்ப்புரு இட்டுள்ளீர்கள். ஒன்றிரண்டு வசனங்களைக் கொண்ட கட்டுரைகளில் மேலும் ஒன்றிரண்டு வசனங்களை சேர்க்க முடியுமா எனப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 22:08, 29 திசம்பர் 2013 (UTC)Reply
மேலும் ஒன்றிரண்டு வசனங்களை நான் சேர்ப்பதுண்டு. ஆனால் குறித்த விடயம் எனக்கு தெரியாவிட்டால் சாத்தியமில்லை. குறுகிய நேரத்தில் 5, 10 என்று கட்டுரைகளை குறுங்கட்டுரைகளாக உருவாக்குபவர்கள் அக்கரையாக மேம்படுத்தலாமே? அவர்களுக்கு ஏன் இந்த வேகம்? யாராவது மேம்படுத்தட்டும் என்ற அலட்சியப் போக்கா? முனைப்பான பயனர்களே இவ்வாறான பிழையாக உதாரணத்தை வழங்கலாமா? பல சந்தர்ப்பங்களில் குறுங்கட்டுரைகளை விரிவாக்கிக் கொண்டிருக்கையில் 2, 3 கட்டுரைகளை உருவாக்கி விடுவார்கள். தொடர்ச்சி இருப்பதற்காக ஆலமரத்தடியில் ஏனையவற்றுக்குப் பதிலளித்துள்ளேன். --Anton·٠•●♥Talk♥●•٠· 03:42, 30 திசம்பர் 2013 (UTC)Reply
  விருப்பம்.--Kanags \உரையாடுக 11:37, 3 சனவரி 2014 (UTC)Reply


 
உங்களுக்காக புதிய தகவல்கள் உள்ளன
வணக்கம், AntanO. உங்களுக்கான புதிய தகவல்கள் பேச்சு:போபொசு (துணைக்கோள்) பக்கத்தில் உள்ளன.
நீங்கள் இந்த அறிவிப்பை {{பேச்சு}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம்.
பதிலளிக்க வேண்டும், இது மிரட்டல் அல்ல வேண்டுகோள் --திரைகடல் ஓடித் திரவியம் தேடு யாழ்ஸ்ரீ (பேச்சு) 10:49, 3 சனவரி 2014 (UTC)Reply
இங்கு யாரும் யாரையும் மிரட்டுவதில்லை. பதிலளிப்பது உகந்ததே :)
நீங்கள் தவறாக இட்ட வார்ப்புருக்கள் தொடர்பாக கருத்துக்கள் பகிர வேண்டுகிறேன். உங்களுக்கு நேரச் சிரமம் எனில் அந்த வார்ப்புருக்களைப் பிற பயனர்கள் நீக்க முடியும். நன்றி. --Natkeeran (பேச்சு) 16:31, 3 சனவரி 2014 (UTC)Reply
அனேகமாக நீக்கப்பட்டிருப்பதாக உணர்கிறேன். ஆயினும் விரைவில் பதிலளிப்பேன். --Anton·٠•●♥Talk♥●•٠· 17:19, 3 சனவரி 2014 (UTC)Reply
பார்க்கள் பகுப்பு:காலக்கெடு உள்ள நீக்கப்பட வேண்டிய பக்கங்கள் --Natkeeran (பேச்சு) 18:13, 3 சனவரி 2014 (UTC)Reply

விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முடிவுகள்/திசம்பர், 2013 தொகு

அன்டன் அவர்களே ஹரீஷ் சிவசுப்பிரமணியனின் ஆர்க்டிக் கட்டுரை பட்டியலில் [[விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/தலைப்புகள்#நாடுகள்
3. புவியியல்#கண்டங்களும்
பெருநிலப்பகுதிகளும்| இங்கு]] உள்ளது.--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 08:42, 5 சனவரி 2014 (UTC)Reply

நன்றி ஸ்ரீகர்சன். --Anton·٠•●♥Talk♥●•٠· 08:44, 5 சனவரி 2014 (UTC)Reply

அணுக்கரு ஆற்றல் கட்டுரை ஹரீஷ் சிவசுப்பிரமணியனின் கணக்கில் வராது எனது கணக்கிலேயே வரும். நான் இங்கு அணு ஆற்றல் என்ற பெயரில் இட்டுள்ளேன்.--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 09:08, 5 சனவரி 2014 (UTC)Reply

ஆம், கவனித்தேன். குறிப்பை அங்கு இடுகிறேன். உங்கள் கட்டுரைகளிலும் சில ஐயங்கள் உள. அங்கு தெரிவிக்கிறேன். தெளிவுபடுத்துங்கள். --Anton·٠•●♥Talk♥●•٠· 09:12, 5 சனவரி 2014 (UTC)Reply

ஊனம் கட்டுரை பட்டியலில் விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/தலைப்புகள் இல் 8.உடல்நலமும் மருத்துவமும் இல் _மருத்துவம் என்றதலைப்பின் கீழ் உள்ளது.--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 08:42, 5 சனவரி 2014 (UTC)Reply

நாளிதழ் கட்டுரை பட்டியலில் விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/தலைப்புகள் இல் 7. குமுகமும் மாந்த வாழ்வு அறிவியலும் இல் செய்தி ஊடகம் என்றதலைப்பின் கீழ் செய்தித்தாள் என்ற பெயரில் உள்ளது.--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:04, 5 சனவரி 2014 (UTC)Reply

நன்றி ஸ்ரீகர்சன். அங்கு நான் தெரிவித்த குறிப்புகளுக்கு உங்கள் கருத்தினை முன்வைப்பதாயிருந்தால் தெரிவியுங்கள். --Anton·٠•●♥Talk♥●•٠· 16:34, 5 சனவரி 2014 (UTC)Reply

அன்டன் அவர்களே தென்காசியார் தான் வெட்டி ஒட்டியதாக எங்கோ குறிப்பிட்டிருந்தார் அதனாலேயே அப்படிச் செய்துவிட்டேன். அத்துடன் இந்த பயனர்_பேச்சு:தமிழ்க்குரிசில்#பலே.. உரையாடலும் எனக்குப் பீதியைக் கிளப்பிவிட்டது. தவறிருப்பின் பொறுத்தருளவும். விக்கிப்பீடியா_பேச்சு:2013_தொடர்_கட்டுரைப்_போட்டி#முதன்மைக் கட்டுரைகளில் உள்ள உள்ளடக்கங்களை வெட்டி ஒட்டலாமா? இதனை முழுமையாக வாசித்தபின் தெளிவுபெற்றேன். ஆனால் தமிழ்க்குரிசிலின் சில கட்டுரைகளிலும் ஹரீஷ் சிவசுப்பிரமணியனின் பல கட்டுரைகளிலும் 15360 பைட் சேர்க்க முதலிலேயே மேற்கோள்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. சரிபாருங்கள்.--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 17:27, 5 சனவரி 2014 (UTC)Reply

வெட்டி ஒட்டியது பெரிய தவறல்ல. ஆம், 15360 பைட் சேர்க்க முதலிலேயே மேற்கோள்கள் சேர்க்கப்பட்டிருப்பது கணிப்பிடுவதில் சில சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. ஊனம் கட்டுரைக்கான எனது குறிப்பு சரியானதா? --Anton·٠•●♥Talk♥●•٠· 17:32, 5 சனவரி 2014 (UTC)Reply

இங்கு ஊனம் என்பதற்குப் பக்கத்தில் குறிப்பைக் காணவில்லையே?! தாங்கள் எதனைக் குறிப்பிடுகின்றீர்கள்.--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 17:55, 5 சனவரி 2014 (UTC)Reply

ஊனம் - பட்டியலில் உள்ளதா?--Anton·٠•●♥Talk♥●•٠· 18:05, 5 சனவரி 2014 (UTC)Reply

இந்த உரையாடலில் எனது மூன்றாவது குதிரை ஓடிக்கொண்டிருக்கும் இடத்தில் நான் குறிப்பிட்டதைப் பாருங்கள்.--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 18:14, 5 சனவரி 2014 (UTC)Reply

ஓ, நன்றி. --Anton·٠•●♥Talk♥●•٠· 18:17, 5 சனவரி 2014 (UTC)Reply

நான் சில குறுங்கட்டுரைகளை விரிவாக்க முன்றன் தவிர அவை அனைத்தும் அங்கு கொடுக்க பட்ட பட்டியலில் இல்லை என்பதை பிறகு கவனித்தேன் அதனை சுட்டி காட்டியமைக்கு நன்றி .அவற்றை நீக்கிவிடுகிறேன் எனினும் குறுங்கட்டுரைகளை விரிவாக்க வேண்டும் என்ற தலைப்பு கண்டு சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டேன் மன்னிக்கவும்

-புதுவைபிரபு 04:34, 6 சனவரி 2014 (UTC)
போட்டியில் வெல்ல வேண்டாம் என்ற ஆர்வ மிகுதியால் சில விதிகளை பின் பற்றாமல் இருந்து விட்டேன் .இருப்பினும் குறுங்கட்டுரை விரிவாக்க வேண்டும் என்ற விதி மட்டும் இருந்தால் பல குறுங்கட்டுரைகள் விரிவாக்க படும் என்று கருது கிறேன் .இந்த கருத்து டிசம்பர் மாத போட்டியை குறித்தோ அல்லது நடந்து கொண்டு இருக்கும் போட்டி குறித்தோ கூறப்பட்டது அல்ல இனி வரும் காலங்களில் இவற்றை பின்பற்றலாம் என்பது எனது கருத்து .

-புதுவைபிரபு 04:45, 6 சனவரி 2014 (UTC)

புதுவைபிரபு, முக்கிய கட்டுரைகளை விரிவாக்கவே இந்த போட்டி நடத்தப்படுகிறது. இவற்றை விரிவாக்கினால், தமிழ் விக்கியின் தரம் உயரும். :) நீங்கள் கூறியது போல், கட்டுரை போட்டிகள் நடத்தலாம். அதற்கு பணம் தேவைப்படும். நன்கொடை கிடைக்கும் பொழுது, போட்டிகள் நடத்தப்படலாம். உங்கள் யோசனைகளை அப்போது கூறுங்கள். மற்றபடி, எல்லா நேரத்திலும் போட்டி நடத்தி, கட்டுரைகளை விரிவாக்குவது இயலாத காரியம். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:32, 7 சனவரி 2014 (UTC)Reply

அன்டன் அவர்களே இரண்டாவது இடத்திற்கன பதக்கத்தில் அப் படிமத்தின் புதிய பதிப்பை இவ்விடங்களில் பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்#கட்டுரைப் போட்டிக்கான பதக்கம் விக்கிப்பீடியா பேச்சு:2013 தொடர் கட்டுரைப் போட்டி#கட்டுரைப் போட்டிக்கான பதக்கம் - மாதிரி இட்டுள்ளேன்.--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:37, 6 சனவரி 2014 (UTC)Reply

  விருப்பம்--Anton·٠•●♥Talk♥●•٠· 16:40, 6 சனவரி 2014 (UTC)Reply

ஏப்ரல் மாதம் முதல் மீண்டும் பங்கு அளிக்கிறேன் இடைவெளிக்கு வருந்துகிறேன் .வாய்ப்புக்கு நன்றி .

புதுவைபிரபு 03:26, 7 சனவரி 2014 (UTC)

குறிஞ்சி மலர் பட்டியலில் சேர்க்க முடியுமா ஐயா.... -−முன்நிற்கும் கருத்து உண்ணிகிருஷ்ணன் (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

மன்னிக்கவும் உண்ணிகிருஷ்ணன்! இந்த போட்டி நடத்துவதற்கு முக்கிய காரணம் உண்டு. உலகின் மிக முக்கியமான 1000 கட்டுரைகளை தமிழில் கொண்டுவரவே இந்த போட்டி. எனவே, மற்ற கட்டுரைகளை போட்டியில் சேர்க்க முடியாது. கட்டுரை சிறப்பாக இருந்தது. :) உங்கள் பங்களிப்புக்கு நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:32, 7 சனவரி 2014 (UTC)Reply

யுவான் அரசமரபு தொகு

பராமரிப்பு தேவைப்படும் முன்னாள் நாடுகள் பற்றிய கட்டுரைகள் என்ற பகுப்பு யுவான் அரசமரபு கட்டுரையில் ஏன் வருகிறது? பராமரிப்பு எதுவும் தேவையில்லையே. சீன வரலாறு பற்றிய வார்ப்புருவில் ஆங்கிலத்தில் சில இணைப்புகள் உள்ளதாலா?--குறும்பன் (பேச்சு) 17:52, 7 சனவரி 2014 (UTC)Reply

Infobox Former Country வார்ப்புருவுக்கும் கட்டுரையில் பயன்படுத்தப்படும் பெறுமானத்திற்கும் ஒத்திசைவு இல்லாவிட்டால் அவ்வார்ப்புரு உருவாகும். தற்போது ஆ.வி.யில் உள்ள வார்ப்புரு மாற்றங்களைக் கொண்டுள்ளது. மேம்படுத்த முயல்கிறேன். --Anton·٠•●♥Talk♥●•٠· 03:05, 8 சனவரி 2014 (UTC)Reply

உங்கள் பார்வைக்கு தொகு

வணக்கம். பயனர்:Thilakshan உருவாக்கும் பெரும்பாலான தொலைகாட்சி நிகழ்ச்சிகள் பற்றிய கட்டுரைகளில் தரப்படும் உள்ளடக்கம் (தகவற் பெட்டி தவிர) அந்தந்த தொலைகாட்சி நிகழ்ச்சிகளுக்குரிய வலைப்பக்கங்களில் இருந்து அப்படியே எழுதப்பட்டுள்ளது. நிறையக் கட்டுரைகளை நான் மாற்றி விட்டு அவரது பேச்சுப் பக்கத்தில் இதைப்பற்றிக் குறிப்பிடவும் செய்தேன். பதிவேற்றும் படிமங்களுக்கு அனுமதி இணைப்பதும் இல்லை. அவர் யாருடைய கருத்துக்களுக்கும் பேச்சுப் பக்கத்தில் பதில் தெரிவிக்கவில்லை. நான் மின்னஞ்சல் செய்தும் பார்த்தேன். பலனில்லை.

ஆனால் அவரது கட்டுரைகளில் தகவற்பெட்டி, பிற மொழி இணைப்பு, பகுப்புகள் என ஏனையவற்றைச் சரியாக செய்து விடுகிறார். மேற்கொண்டு அவருக்கு எப்படிப் புரிய வைப்பது என்று தெரியவில்லை. ’நட்புடன் அப்சரா’, ’சமையல் குருகுலம்’ ஆகிய இரு கட்டுரைகளிலும் ’நீக்குக’ வார்ப்புரு இட்டுள்ளேன். இதனைக் கொஞ்சம் கவனிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 17:21, 10 சனவரி 2014 (UTC)Reply

நீங்கள் அவர் உருவாக்கிய கட்டுரைகளில் தொடர்ந்து செய்து வந்த மாற்றங்களை கவனித்திருந்தேன். நீங்கள் ’நீக்குக’ வார்ப்புரு இட்டது மிகவும் சரியே. --Anton·٠•●♥Talk♥●•٠· 17:54, 10 சனவரி 2014 (UTC)Reply

துடுப்பாட்டம் தொகு

துடுப்பாட்டம் கட்டுரையை தமிழாக்கம் செய்துள்ளேன் தற்போது இது முதற்பக்கத்தில் இடம்பெற தகுதி பெற்றுள்ளதா?--[திரைகடல் ஓடித் திரவியம் தேடு] யாழ்ஸ்ரீ (பேச்சு) 09:16, 15 சனவரி 2014 (UTC)Reply

நன்று, முதற்பக்கத்தில் இடலாம். மேற்கோள்கள் சேர்ப்புடன் இன்னும் விரிவாக்கினால் படிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும். குறைந்தளவிற்கு வரலாறு, விதிமுறைகள், பற்றியும் எழுதலாம். பார்த்தவுடன் இருபது 20 போட்டிகள்தான் பக்கத்தை நிறைக்கின்றன.--Anton·٠•●♥Talk♥●•٠· 09:44, 15 சனவரி 2014 (UTC)Reply

வரலாறு எனும் பகுதியை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்க சற்று கடினமாய் யுள்ளதால் தான் அவற்றை நான் எழுதவில்லை--[திரைகடல் ஓடித் திரவியம் தேடு] யாழ்ஸ்ரீ (பேச்சு) 11:49, 17 சனவரி 2014 (UTC)Reply

இயலுமான பகுதிகளைச் சேருங்கள். பின்னர் நான் சிலவற்றை மொழிபெயர்க்கிறேன்.--Anton·٠•●♥Talk♥●•٠· 12:00, 17 சனவரி 2014 (UTC)Reply

முயற்சிக்கின்றேன்.--[திரைகடல் ஓடித் திரவியம் தேடு] யாழ்ஸ்ரீ (பேச்சு) 12:02, 17 சனவரி 2014 (UTC)Reply

ஆலோசனை தேவை தொகு

அன்டன் அவர்களே இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சென்ற மாதக் கட்டுரைப் போட்டியில் மேற்கோள்கள் சேர்த்தும் கட்டுரைகளை விரிவாக்கியிருந்தார்கள். இனி வரும் மாதங்களில் மேற்கோள்களைச் சேர்க்கலாமா?--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:15, 15 சனவரி 2014 (UTC)Reply

பொங்கல் வாழ்த்துக்கள், ஸ்ரீகர்சன். குறித்த இலக்கு அளவைவிட (15360 பைட்டு) சற்று அதிக பைட்டுக்கள் (ஏறக்குறைய 20,000 பைட்டுக்கள்) இருக்கும் பட்சத்தில் சிக்கலில்லை. --Anton·٠•●♥Talk♥●•٠· 10:19, 15 சனவரி 2014 (UTC)Reply

மாதவன் மாவு, இசை, ஊர்வன, பாலூட்டி, கணினியியல் போன்ற கட்டுரைகளை முழுக்க முழுக்க வெட்டி ஒட்டி விரிவாக்கியுள்ளார். சரிபார்த்து அறிவுறுத்துங்கள். பியர் கட்டுரையை கூகிள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் மொழிபெயர்த்துள்ளார் என நினைக்கின்றேன். வாசிக்கத் தலை சுற்றுகின்றது. வாசித்துப்பாருங்கள். அவர் ஆர்வமாகப் பங்குபற்றுவதால் இவ்விதிமுறை மீறல்களால் வீணாகவெல்லும் சந்தர்ப்பத்தை இழந்துவிடலாம். உரிய நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்.--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:35, 15 சனவரி 2014 (UTC)Reply

நன்றி, அறிவுறுத்துகிறேன். --Anton·٠•●♥Talk♥●•٠· 10:41, 15 சனவரி 2014 (UTC)Reply

ஆலோசனை தொகு

வணக்கம் அன்டன் அவர்களே! கட்டுரைப் போட்டியில் தரப்பட்டிருப்பவற்றுள் 'reactance' என்கிற கட்டுரை சிவப்பிணைப்பாக உள்ளது. அதற்கு இணையான தமிழ்ச்சொல் 'மின்மறுப்பு'. ஆனால் அப்பெயரில் 'impedance'ன் கட்டுரை உள்ளதால் 'மின்னெதிர்ப்பு' எனும் பெயர் சரியாக இருக்குமென எண்ணி மாற்றினேன். எனினும் 'மின்மறுப்பு' மின்னெதிர்ப்பு கட்டுரையின் வழிமாற்றாக உள்ளதால் என்னால் 'reactance'ன் தமிழ்க் கட்டுரையை உருவாக்க முடியவில்லை. நான் என்ன செய்வது எனக் கூறவும். நன்றி! --பிரவீன் (பேச்சு) 15:30, 15 சனவரி 2014 (UTC)Reply

தற்போது சரியாக்கி விடடடீர்கள் எனத் தெரிகிறது. இல்லாவிட்டால் குறிப்பிடுங்கள். --Anton·٠•●♥Talk♥●•٠· 17:52, 15 சனவரி 2014 (UTC)Reply

வலைவாசல்:கொழும்பு தொகு

வணக்கம்! நான் உருவாக்கிய வலைவாசல் கொழும்பில் பிழைகாட்டு என உள்ளமைக்கான காரணம் யாது? --  மாதவன் (பேச்சு) 06:11, 19 சனவரி 2014 (UTC)Reply

மாதவா! அது reference என சொல்லப்படும் ஒருவகியானது இது கட்டுரைக்கு சான்றாக அமையும் உங்கள் அண்ணனிடம் வேண்டுமானால் கேளுங்கள்! நான் அதை அழித்துவிடுகிறேன்.--[திரைகடல் ஓடித் திரவியம் தேடு] யாழ்ஸ்ரீ (பேச்சு) 06:16, 19 சனவரி 2014 (UTC)Reply

இதிலிருந்த மேற்கோளினை நீக்கியுள்ளேன். பிரதான கட்டுரையில் மேற்கோள்கள் இருப்பதனால் இங்கு தவிர்த்துவிடுங்கள். --Anton·٠•●♥Talk♥●•٠· 06:20, 19 சனவரி 2014 (UTC)Reply

help தொகு

வணக்கம்! mohamad ijazz எனும் பயனர் எனது மின்னஞ்சலில் வணக்கம் சகோ எனது விக்கிப்பீடியா ஐபி முகவரி 94.59.191.38. (பேச்சு | பங்களிப்புகள்) தடுக்கப்பட்டது (கணக்கு தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது) திரும்ப பெற நான் என்ன‌ ப‌ண்ண‌ வேண்டும்…? உதவி செய்ய முடியுமா சகோ எனக்கேட்டுள்ளார் இவருக்கு நான் என்ன பதில் அழிப்பது என்பதை எனக்கு விவரமாகச் சொல்லுங்கள்.--[திரைகடல் ஓடித் திரவியம் தேடு] யாழ்ஸ்ரீ (பேச்சு) 14:40, 22 சனவரி 2014 (UTC)Reply

அவருடைய பேச்சுப் பக்கத்தைப் பார்த்து, அங்கு அவருடைய கருத்தைத் தெரிவிக்கச் சொல்லுங்கள். முகநூலிலும் அவருக்கு சொல்லப்பட்டுள்ளதே?. --Anton·٠•●♥Talk♥●•٠· 15:09, 22 சனவரி 2014 (UTC)Reply

HELP தொகு

படிமங்கள்களுக்கு பதிப்புரிமை அனுமதி எப்படி நான் பெறுதல்?????

திரைப்பட சுவரொட்டி, நூல் அட்டை, சின்னங்கள் போன்றவற்றிற்கு தகுந்த வார்ப்புருவை சேர்த்தால் சிக்கலில்லை. ஏற்கெனவே நீங்கள் சேர்த்துள்ளீர்கள். விடப்பட்டவைகளுக்கு சேர்த்துவிடுங்கள். விக்கி பொதுவில் பல படிமங்கள் உள்ளன. அவற்றை பயன்படுத்துங்கள். அவற்றை மீண்டும் பதிவேற்றம் செய்யத் தேவையில்லை. பொதுவில் படிமங்கள் கிடைக்காதபோது மட்டும், நியாப்பயன்பாட்டின் கீழ் நிபந்தனையுடன் பதிவேற்றலாம். இப்படிமம் தகுந்த வார்ப்புவைக் கொண்டிருக்கவில்லை. எனவே நீக்கப்படலாம். நீங்கள் பதிவேற்றிய Ancient Tamil Script old.jpg எனும் படிமம் விக்கி பொதுவில் உள்ளதால் நீக்கப்பட்டது. இங்கே Chris Evans இன் படிமங்கள் பல உள்ளன. எனவே, புதிதாக பதிவேற்றத் தேவையில்லை. மேலதிக விளக்கம் தேவையென்றால் தயங்காது கேளுங்கள். --Anton·٠•●♥Talk♥●•٠· 03:47, 24 சனவரி 2014 (UTC)Reply

தமிழ் தட்டச்சு தொகு

ஆலமரத்தடியில் நடக்கும் உரையாடலை சற்றுக் கவனியுங்கள்.--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:11, 24 சனவரி 2014 (UTC)Reply

இலங்கைத் தமிழ் தொகு

நீங்கள் என்னுடைய பேச்சுப் பக்கத்தில் எழுதிய கருத்துத் தொடர்பில்:

இல்லை அன்டன், இவை ஒவ்வொன்றிலும் தனித்தனியாக நீண்ட கட்டுரைகள் எழுத முடியும். எழுத வேண்டும். இவை குறித்து நிறைய ஆய்வுகள் உள்ளன. அவற்றைத் தேடி இக்கட்டுரைகளை விரிவாக்க வேண்டும். தற்போது இவை தொடக்கக் கட்டுரைகளே இவ்வாறான சிறிய கட்டுரைகள் இது பற்றி அறிந்தவர்களை அவற்றை விரிவாக்கத் தூண்டுகின்றன. சிறிய கட்டுரைகளைக் கண்டவுடன் அவற்றை நீக்குவது அல்லது இணைப்பது என்பது சரியான அணுகுமுறையாக இருக்காது. ---மயூரநாதன் (பேச்சு) 06:14, 25 சனவரி 2014 (UTC)

யுவான் அரசமரபு தொகு

இங்கு பாருங்கள்.--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:48, 26 சனவரி 2014 (UTC)Reply

படிம அனுமதி தொகு

படிமம்: Srithika7.jpg -இப்படிமத்தில் இணைக்கப்பட்டுள்ள அனுமதி இதற்குப் பொருத்தமானதா என்று பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 06:06, 28 சனவரி 2014 (UTC)Reply

அனுமதி பொருத்தமற்றது. இணைய முகவரியும் அப்படத்தில் இருந்தது. நீக்கியுள்ளேன். நன்றி. --Anton·٠•●♥Talk♥●•٠· 06:09, 28 சனவரி 2014 (UTC)Reply

காற்பந்துக் கட்டுரைகள் தொகு

2014 உலகக்கோப்பை கால்பந்துக் கட்டுரையிலிருக்கும் சிவப்பு-இணைப்புகளுக்கு, முக்கியமாகத் தேசியக் காற்பந்து அணிகள், கட்டுரைகள் எழுதியிருந்தேன். அவற்றை சரியான தலைப்புகளுக்கு நகர்த்தியிருந்தீர்கள், நன்றி! ஆனால், 2014 உலகக்கோப்பை கால்பந்துக் கட்டுரையில் அவை மீண்டும் சிவப்பு-இணைப்புகளாகத் தொடர்கின்றன. கட்டுரைகள் இருந்தும், இணைப்பு இல்லாமல். உகந்ததைச் செய்ய வேண்டுகிறேன். நன்றி! --செந்தில்வேல் (பேச்சு) 11:15, 30 சனவரி 2014 (UTC)Reply

வார்ப்புருக்களிலுள்ள பெயர்களுக்கேற்ப அணிகளின் பெயர் இருப்பதால் அங்கு சிக்கல் உள்ளது. வழிமாற்றுடன் சரியான பெயரில் கட்டுகளை உருவாக்குங்கள். வார்ப்புருக்கள் சரியானதும். வழிமாற்றுக்களை நீக்கிவிடலாம். --Anton·٠•●♥Talk♥●•٠· 15:15, 30 சனவரி 2014 (UTC)Reply
கால்பந்து என்றுதான் தமிழகத்தில் வழங்கப்படுகிறது. நாடுகளின் பெயரை இணைக்கும்போது, அவற்றை மட்டும் இடத்திற்கேற்றவாறு மாற்றினால் போதும் என்றெண்ணுகிறேன்.--செந்தில்வேல் (பேச்சு) 17:35, 30 சனவரி 2014 (UTC)Reply
கால் + பந்து = காற்பந்து என்பதுதான் சரி. உறுதிப்படுத்துவது நல்லதென்றால் ஒத்தாசைப் பக்கத்தில் கேட்கலாம். ஆம் நாடுகளின் பெயரை மாற்றிவிடுங்கள். --Anton·٠•●♥Talk♥●•٠· 18:07, 30 சனவரி 2014 (UTC)Reply
செய்திகளிலும் புத்தகங்களிலும் கால்பந்து என்ற பயன்பாட்டைத்தான் நான் அறிந்திருக்கிறேன்.--செந்தில்வேல் (பேச்சு) 19:04, 30 சனவரி 2014 (UTC)Reply
இரண்டும் பயன்பாட்டில் உள்ளன. இக்கட்டுரையில் ஏதாவதொரு ஒரு பொது முறையைப் பின்பற்றுவது நல்லது. மற்றதற்கு வழிமாற்று ஏற்படுத்துங்கள்.--Kanags \உரையாடுக 20:05, 30 சனவரி 2014 (UTC)Reply

கட்டுரைப்போட்டி தொகு

கட்டுரைப்போட்டிக்காக கட்டுரைகளை விரிவாக்கியுள்ளேன். எந்த கட்டுரையிலாவது விதிகள் மீறி இருப்பின் கூறவும். மாற்றிவிடுகிறேன்.--நந்தினிகந்தசாமி (பேச்சு) 11:59, 31 சனவரி 2014 (UTC)Reply

கட்டுரைப்போட்டிக்காக கட்டுரைகளை விரிவாக்கியுள்ளேன். எந்த கட்டுரையிலாவது விதிகள் மீறி இருப்பின் கூறவும். மாற்றிவிடுகிறேன்.--யாழ்ஸ்ரீ (பேச்சு) 12:03, 31 சனவரி 2014 (UTC)Reply

உதவி தொகு

விக்கிப்பீடியா:கிறித்து பல்கலைக்கழக விக்கித் திட்டம்-இத் திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் கட்டுரைகள் சில (தாய் தமிழின் வரலாறு, வளரும் இளமை) விக்கிக்குப் பொருத்தமானவையாக இல்லை. இந்த மாணவர்கள் தாங்களாகவே கட்டுரைகளுக்குத் தலைப்புகளைத் தேர்ந்தெடுக்கிறார்களா இல்லை அவர்களுக்குத் தலைப்புகள் தரப்படுகின்றனவா என்றும் தெரியவில்லை. சரியான தலைப்புகள் அவர்களுக்குத் தரப்படல் வேண்டும்; தேவைப்படும் கட்டுரைகள் -பக்கத்தின் இணைப்பை அவர்களுக்குத் தந்தால் தொடங்கப்படும் கட்டுரைகள் விக்கிக்கேற்றவாறு அமையலாம் இல்லாவிடில் துப்புரவுப் பணி அதிகமாக வாய்ப்புள்ளது என நினைக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 15:41, 1 பெப்ரவரி 2014 (UTC)

ஆம், அக்கட்டுரைகளைப் பார்த்தேன். அக்கட்டுரைகளில் பலவற்றை அழிப்பதைத்தவிர வேறு வழியில்லை. ஏற்கெனவே உள்ள துப்புரவுப் பணிகள் அதிகம், ஆனால், துப்புரவுப் பணியில் ஈடுபடும் ஆட்கள் குறைவு. அவ்வாறு இருக்கையில் சிக்கலான கட்டுரைகள் அதிகரிப்பது நல்லதல்ல. எதற்கும் ஆலமரத்தடியில் கருத்திடுகிறேன். --Anton·٠•●♥Talk♥●•٠· 17:27, 1 பெப்ரவரி 2014 (UTC)
  விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 02:59, 2 பெப்ரவரி 2014 (UTC)

தொடர் கட்டுரைப் போட்டி/முடிவுகள்/சனவரி, 2014 தொகு

அன்டன் அவர்களே! விரிவான கட்டுரைக்கு ஏன் ஒரு கட்டுரையும் தெரிவுசெய்யப்படவில்லை? ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் 76800 பைட்டை அடையாத கட்டுரையும் பரிசுக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. சரிபாருங்கள்.--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:22, 3 பெப்ரவரி 2014 (UTC)

கட்டுரைப்போட்டிக்கான பட்டியலில் அகரமுதலி என்ற கட்டுரையும் இருந்ததாலேயே விரிவாக்கினேன். சரிபாருங்கள்.--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:22, 3 பெப்ரவரி 2014 (UTC)

ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் 76800 பைட் விதிமுறை நெகிழப்பட்டிருக்கலாம். பல கட்டுரைகளில் சில தளர்வுகள் விட்டிருக்கின்றோம். நான் போட்டி முடிவை அறிவிக்கும்போது விதிகளை மீறாதிருக்கவே விரும்புகிறேன். மீறினாலும் அடுத்ததில் திருத்திக் கொள்வேன். வேறொருவர் போட்டி முடிவை அறிவிக்கும்போது நெகிழ்வாக இருக்கலாம். அகரமுதலி அங்கு பிழையாக இடம்பெற்று விட்டது, வருத்தங்கள். நீங்கள் ஆங்கில தலைப்பையும், கட்டுரையின் தன்மையினையும் சற்று கவனித்திருக்கலாம். --Anton·٠•●♥Talk♥●•٠· 15:21, 3 பெப்ரவரி 2014 (UTC)

அன்டன் அவர்களே என் கருத்துக்கள் உங்கள் உள்ளத்தைப் பாதித்திருந்தால் வருந்துகின்றேன். பாடசாலை விடுமுறை காலங்களில் என்னால் அதிக நேரம் பங்களிக்கக் கூடியதாக இருந்தது. ஆனால் இப்போது பாடசாலை ஆரம்பித்துவிட்டதால் அவ்வாறு பங்களிக்க முடியவில்லை. அதனாலேயே கட்டுரையை மேலும் விரிவாக்காமல் விட்டுவிட்டேன்.

போட்டிவிதிகளில் பின்வருமாறு உள்ளது.

//போட்டிக்கு வந்த கட்டுரைகளில் மிகவும் நீளமான கட்டுரையை எழுதியவருக்கு இந்த சிறப்புப் பரிசு சென்று சேரும்.//

ஆப்பிரிக்க ஒன்றியம் கட்டுரையே போட்டிக்கு வந்த கட்டுரைகளில் கூடிய அளவு விரிவாக்கப்பட்டது. நீங்களும் தென்காசியார் உள்ளிட்ட போட்டி ஒன்றிணைப்பாளர்களும் நல்ல முடிவை அறிவிப்பீர்கள் என நம்புகின்றேன்.--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 17:09, 3 பெப்ரவரி 2014 (UTC)

ஸ்ரீகர்சன், பாதிக்கும் அளவிற்கு உங்கள் கருத்துக்கள் அமையவில்லை. உங்கள் கருத்துக்களை முன் வைப்பது தப்பில்லை. மேலும், போட்டி விதி ஒன்றில் ஒன்று தங்கியிருப்பதைக் கவனியுங்கள். இவ்விடயத்தில் விதியைத் தளர்த்தலாம் என மற்றவர்களும் கருதினால் எனக்கு ஆட்சேபனையில்லை. நான் முன்னர் குறிப்பிட்டபடி, விதிகளை மீறாதிருக்கவே விரும்புகிறேன்.--Anton·٠•●♥Talk♥●•٠· 04:44, 6 பெப்ரவரி 2014 (UTC)

வானியல் தொகு

இக்கட்டுரையில் சான்றுகள் சேர்த்ததோடு மட்டுமன்றி சீரமைத்தும் உள்ளேன். இது முதற்பக்கத்தில் இடம்பெற தகுதி பெற்றுவிட்டது, என நினைக்கிறேன உங்கள் கருத்து என்ன?--யாழ்ஸ்ரீ (பேச்சு) 09:49, 4 பெப்ரவரி 2014 (UTC)

வானியல் கட்டுரை குறிப்பிட்ட அளவில் வளர்ந்துள்ளது. பரிந்துரை செய்யுங்கள். உங்களுக்கு கட்டுரையினை நன்றாக வளர்த்தெடுக்க ஆர்வமிருந்தால், மேலும் விரிவுபடுத்தலாம், அது உங்கள் விருப்பம். ஏதாவதொரு கட்டுரையினை காட்சிப்படுத்தினால் சரியென்ற நிலை த.வியில் இருப்பதால், முதற்பக்கத்தில் இடம்பெற பெரிதாக தகுதி என்று எதுவும் இல்லை. --Anton·٠•●♥Talk♥●•٠· 04:56, 6 பெப்ரவரி 2014 (UTC)

அப்படியே ஆகட்டும் எனது பேச்சுப் பக்கத்தில் கனகு அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் /வானியல் கட்டுரை நல்ல முறையில் எழுதியிருக்கிறீர்கள். சில திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளது. ஓரிரு நாட்களில் கவனிக்கிறேன், வானியல் வலைவாசல் முதற்பக்கத்தில் இருந்து எடுத்தவுடன் முதற்பக்கக் கட்டுரையாக சேர்க்கலாம். இரண்டும் ஒரே நேரத்தில் வருவது நல்லதல்ல./ --யாழ்ஸ்ரீ (பேச்சு) 11:47, 6 பெப்ரவரி 2014 (UTC)

Return to the user page of "AntanO/தொகுப்பு 3".