லிவி
வாருங்கள்!
வாருங்கள், லிவி, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
--நந்தகுமார் (பேச்சு) 08:50, 26 திசம்பர் 2013 (UTC)
வணக்கம், லிவி!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.
ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.
இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.
புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.
ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.
--நந்தகுமார் (பேச்சு) 09:31, 26 திசம்பர் 2013 (UTC)
வணக்கம், லிவி!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.
தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.
புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.
ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.
தமிழ் புத்தாண்டு என்னும் ஆட்டைப் பெரிய திருவிழா
தொகுவணக்கம் லிவி, உங்கள் மேற்படி கட்டுரை முக்கியமாக சொந்த ஆய்வுக் கட்டுரை என்ற அடிப்படையிலும் (தகுந்த முறையில் அனுமதி அளிக்கப்படாமை காரணமாகவும்) நீக்கப்பட்டுள்ளது. இது குறித்த நீக்கல் பதிவை விக்கிப்பீடியா:நீக்கப்பட்ட பக்க உரையாடல்கள் பக்கத்தில் காணலாம்.--Kanags \உரையாடுக 07:37, 27 திசம்பர் 2013 (UTC)
நான் விக்கி தமிழில் பதிவேற்றம் செய்த கட்டுரை நீக்கப் பட்டிருக்கிறது. சொந்த ஆய்வு என காரணமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. சொந்த ஆய்வு செய்வது தவறா? அல்லது அந்தக் கட்டுரையின் கருத்துக்களில் தவறு ஏதேனும் உள்ளதா? தயவு செய்து மீள்பார்வை செய்து, நீக்கப்பட்டதை மீண்டும் அனுமதித்தால் நல்லது. தமிழ் பாக்களில் மற்றும் கல்வெட்டுக்களில் உள்ளனவற்றையுமே தெரிவித்திருக்கிறோம். இது சொந்த ஆய்வு என்னும் வரையரைக்குள் வருமா என்பதுவும் தெரியவில்லை.
நான் விக்கிதமிழுக்கு புதியவன். தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். தவறுகளைச் சரி செய்கிறோம். இல்லாமல் அழிப்பது எங்களை மிகவும் சோர்படையச் செய்கிறது. விக்கி தமிழில் நீ எழுதக் கூடாது என நீங்கள் சொல்கிறீர்களா? என்பதும் தெளிவாக எனக்கு புரியவில்லை. ஆவலுடன் மீள்பதிவுக்காக காத்திருக்கிறேன்.
தகுந்த முறையில் அனுமதி அளிக்கப்படாமை காரணமாகவும் - தகுந்த அனுமதி என்றால் என்ன முறையில் வேண்டும் என தெரிவித்தால் நலம். தவறிருந்தால் சுட்டிக் காட்டுங்கள் தவறை திருத்திக்கொள்கிறோம். அழிக்காமல் இருங்கள்.
- லிவி, இக்கட்டுரை முக்கியமாக சுய ஆய்வுக் கட்டுரை என்ற வகையிலேயே நீக்கப்படுகிறது. "விக்கிப்பீடியா ஒரு மூன்றாம் நிலைத் தரவுதளம். இதில் முதல்நிலை ஆய்வுகளைப் பதிவு செய்ய இயலாது. ஒரு விசயத்தைக் குறித்து குறிப்பிடத்தக்கவர்கள் பதிவு செய்துள்ளதை மட்டும் மேற்கோள் சுட்டி தகவல்களைப் பதிவு செய்யலாம். ஒருவர் தனக்குப் புதிதாகத் தோன்றிய கருத்துகள், தான் செய்த ஆய்வுகள், ஒப்பீடுகள் போன்றவற்றை இங்கு பதிவு செய்ய இயலாது. அவ்வாறு பதிவு செய்வதற்கான தளம் விக்கிப்பீடியா அன்று. நூல்கள், ஆய்விதழ்கள், அல்லது சொந்தப் பதிவுகள் போன்றவையே அதற்கு சரியான இடமாகும்." மிக விபரமாக ஆங்கில விக்கியில் en:Wikipedia:No original research தரப்பட்டுள்ளது. நன்றி.--Kanags \உரையாடுக 08:08, 27 திசம்பர் 2013 (UTC)
"தமிழ் புத்தாண்டு என்னும் ஆட்டைப் பெரிய திருவிழா" என்று தலைப்பிடப்பட்ட எங்கள் கட்டுரை முதல்நிலை ஆய்வு அல்ல. தமிழ் பாடல்களிலும் மற்றும் செய்யுள்களில் உள்ளனவற்றையும் இந்த கோணத்தில் தொகுத்து வழங்கியிருக்கிறோம். மற்றபடி எதுவும் அல்ல. இதற்கு நாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் வீணோ? என எங்களை ஐயப்படவைக்கிறது உங்கள் முடிவு. தயவு செய்து மீள்பதுவேற்றம் செய்ய வேண்டுகிறோம்.
- உங்கள் ஆர்வத்திற்குப் பாராட்டுக்கள். சுய ஆய்வு மற்றும் பதிப்புரிமை மீறல் ஆகிய விடயங்களுக்குட்படும் கட்டுரைகள் நீக்கப்படும். உங்கள் பேச்சுப் பக்கத்திலுள்ள வார்ப்புரு அறிவித்தலையும் அங்குள்ள சுட்டிகளையும் கொண்டு பிற விடயங்களை அறிந்து கொள்ளுங்கள். தற்போது நேரம் இடம் கொடுக்காததினால், சற்று தாமதமாக உங்களுடன் உரையாடுவேன். அப்போது எப்படி விக்கிக்குட்பட்டு மேம்படுத்தலாம் எனப் பார்க்கலாம். --Anton·٠•●♥Talk♥●•٠· 08:42, 27 திசம்பர் 2013 (UTC)
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. பதிப்புரிமை மீறல் எதுவும் இல்லை என திடமாக நம்புகிறேன். இது சுய ஆய்வோ இல்லை முதல் நிலை ஆய்வோ இல்லை. நம் முன்னோர்கள் எழுதி வைத்துள்ளவற்றையே நான் தொகுத்து வழங்கியிருக்கிறேன். மற்றபடி எதுவும் இல்லை. அதற்குண்டான மூலத்தின் இருப்பிடங்களையும் தந்து இருகிறேன். தகுந்த காரணங்கள் ஒருவேளை எனக்குப் புரியவில்லையோ???? இருந்தாலும் கடினப்பட்டு தயாரித்த ஒன்று அழிக்கப்பட்டிருப்பது என்னை மிகவும் சோர்படையச் செய்கிறது.--லிவி (பேச்சு) 08:54, 27 திசம்பர் 2013 (UTC)
இதில் சோர்வடைய ஒன்றுமில்லை. ஏற்கனவே யாழ் களத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அங்கு அது நீக்கப்படும் வாய்ப்பு இல்லை. மேலும், கட்டுரை முழுக்க உங்கள் சொந்தக் கருத்துகளையே தந்திருக்கிறீர்கள். எந்த அறிஞரதும் கருத்துகளை மேற்கோள் காட்டவில்லை. ஒரு எடுத்துக்காட்டு மட்டும்: ////ஆட்டை நாட்களை மிகச் சரியாக வரையறுத்தே ஆண்டு நாட்கள் கணக்கிடப் பட்டிருப்பதாகக் கருத இடம் இருக்கிறது.// அது மட்டுமல்ல, இவ்வாறான கட்டுரை உங்கள் சொந்த ஆய்வு இல்லாமல் அறிஞர்களின் கருத்துகளை மேற்கோள் காட்டியிருந்தாலும், கலைக்களஞ்சிய நடையில் அது எழுதப்படவில்லை. எப்படியிருந்தாலும் அது நீக்கப்படக்கூடிய வாய்ப்புகளே அதிகம். எனது பரிந்துரை இது தான்: ஆட்டைப் பெரிய திருவிழா என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரையாக இல்லாமல் ஒரு தகவல் கட்டுரை எழுதுங்கள். அதன் வரலாறு, எவ்வாறு கொண்டாடப்படுகிறது? எங்கே கொண்டாடப்படுகிறது? போன்ற அடிப்படைத் தகவல்களுடன் எழுதுங்கள். எல்லோருமாகச் சேர்ந்து அதனை விக்கி நடைக்கு மேம்படுத்துவோம் வாருங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 09:02, 27 திசம்பர் 2013 (UTC)
- விருப்பம்--Anton·٠•●♥Talk♥●•٠· 10:44, 27 திசம்பர் 2013 (UTC)
//எந்த அறிஞரதும் கருத்துகளை மேற்கோள் காட்டவில்லை.// பத்துப்பாட்டும், பதிற்றுப்பத்தும், திருக்குறள் எழுதியவர்களும் அறிஞர்கள் இல்லையா?? அவர்களின் பாடல்களைத்தானே சுட்டியிருக்கிறேன்.--லிவி (பேச்சு) 10:58, 27 திசம்பர் 2013 (UTC)
ஆட்டைப் பெரிய திருவிழா
தொகு"யாழ்" உரிய முறையில் பதிப்புரிமை அளிக்கவில்லை. மேலும் விக்கிப்பீடியா நடையில் எழுதப்படவும் இல்லை. பார்க்கவும்:
- விக்கிப்பீடியா:நீக்கப்பட்ட பக்க உரையாடல்கள்
- விக்கிப்பீடியா:புத்தாக்க ஆய்வு கூடாது
- விக்கிப்பீடியா:நடைக் கையேடு
நிற்க, பயனர் பேச்சு:லிவி/மணல்தொட்டி இங்கு கட்டுரையினை விக்கிக்கு ஏற்றபடி தொகுத்து, பின் ஆட்டைப் பெரிய திருவிழா என்ற தலைப்பிற்கு நகர்த்தலாம். --Anton·٠•●♥Talk♥●•٠· 11:07, 27 திசம்பர் 2013 (UTC)
தொகுத்து எழுதுங்களேன்.--லிவி (பேச்சு) 11:17, 27 திசம்பர் 2013 (UTC)
யாழில் எப்படி பதிப்புரிமை அளிக்கப்படவேண்டும் என தெரிவித்தால் நலம். அதனை செயல்படுத்தியிருக்கலாம். அதனை விடுத்து கட்டுரையை அழிப்பது எனக்கு சரியாகப் படவேயில்லை. எனக்கு கொடுக்கப்படும் வாய்ப்பு ம்றுக்கப்பட்டுள்ளது--லிவி (பேச்சு) 11:17, 27 திசம்பர் 2013 (UTC)
தயவுசெய்து வாய்ப்பளியுங்கள்! அதனை விடுத்து அழிக்காதீர்கள்.--லிவி (பேச்சு) 11:19, 27 திசம்பர் 2013 (UTC)
- உங்கள் கட்டுரை அழிக்கப்படவில்லை. இங்குள்ளது. இக்கட்டுரையை முழுமையாக மாற்றி விக்கி நடையில் எழுதுவதற்கு நீங்கள் அனுமதி அளிக்கிறீர்களா? ஓரிரு பந்திகளே தேறும்.--Kanags \உரையாடுக 11:42, 27 திசம்பர் 2013 (UTC)
1. என்னுடைய மூல கட்டுரையை தயவு செய்து அழிக்காமல் வைத்துக் கொள்ளுங்கள். 2. விக்கி நடையில் நீங்கள் எழுதுங்கள். அதன் பொருள் மாறாமல் இருக்கிறதா என நான் பார்த்து பின் பதிவேற்றம் செய்யலாம். அல்லது பதிவேற்றம் செய்யப்பட்டபின் மாற்றம் செய்ய அநுமதியுங்கள். 3. தலைப்பு மாற்றாதீர்கள் "தமிழ் புத்தாண்டு என்னும் ஆட்டைப் பெரிய திருவிழா" என்றுதான் இருக்க வேண்டும். மற்றவை பின்பார்த்துக்கொள்ளலாம். --லிவி (பேச்சு) 11:59, 27 திசம்பர் 2013 (UTC)
- விக்கிப்பீடியாவைப் பற்றிய புரிதல் உங்களுக்கு இல்லை என்றே நான் நம்புகிறேன். முதலில் நீங்கள் விக்கிப்பீடியா என்றால் என்ன என்பதை இங்குள்ள உதவிப் பக்கங்களைப் படித்து அறிந்து கொள்ளுங்கள். அது கிடக்க, உங்கள் மூலக் கட்டுரை மாற்றாமல் இருக்கட்டும். அப்படியானால், புதிய "ஆட்டைப் பெரிய திருவிழா" என்று நான் எழுதவிருக்கும் கட்டுரைக்கு நீங்கள் எவ்விதக் கட்டுப்பாடும் விதிக்கத் தேவையில்லையே. இணையத்தில் தேடிக் கிடைத்த தகவல்களைக் கொண்டு நான் கட்டுரை எழுதுவேன். உங்கள் கட்டுரையில் இருந்தும் ஓரிரு வரிகள் எடுக்கலாம்.--Kanags \உரையாடுக 12:26, 27 திசம்பர் 2013 (UTC)
ஐயா நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டீர்களோ என ஐயப்படுகிறேன். மூலக்கட்டுரை online இல் இருந்தால் எங்கிருந்தாலும் அதனை பார்த்துக்கொள்ளலாம் என்ற நப்பாசைதான். உங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பதற்கு நான் யார்??? நீங்கள் வேண்டுமானாலும் எழுதுங்கள். நானும் பங்கு கொள்கிறேன். அதனை விடுத்து தவறாக புரிந்து கொள்ளாதீர்கள். இதனைப் பற்றி இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கிறேன். அதனை type செய்ய வேண்டும். பின் பதிவேற்றம் செய்யலாம் என நினைக்கிறேன். அதனை செய்யவா அல்லது ஆட்டைப் பெரிய திருவிழா - என நீங்கள் கூறியபடி நான் மாற்றவா என யோசித்துக்கொண்டிருக்கிறேன். விரைவில் எதிர்பாருங்கள்.லிவி (பேச்சு)
கையொப்பம்
தொகுவணக்கம், கட்டுரைப் பக்கங்களில் உங்கள் கையொப்பத்தைச் சேர்க்க வேண்டாம். விக்கிப்பீடியாவில் அம்முறை ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. உரையாடல் பக்கங்களில் மட்டுமே உங்கள் கையொப்பம் தேவைப்படும்.--Kanags \உரையாடுக 09:40, 1 சனவரி 2014 (UTC)
நன்றி உங்கள் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. இனிமேல் இத்தகைய தவறு நடைபெறாது. --லிவி (பேச்சு) 11:33, 1 சனவரி 2014 (UTC)
ஆட்டைப் பெரிய திருவிழா - 2
தொகுவணக்கம், உங்கள் ஆட்டைப் பெரிய திருவிழா கட்டுரையில் விக்கிநடை இல்லை என முறையிட்டுள்ளேன். ஏற்கனவே கூறியது போல, இத்திருவிழா பற்றிய சுருக்கம் முதல் வரிகளிலும், பின்னர் விளக்கமாகவும் எழுதப்பட வேண்டும். இத்திருவிழா எங்கே கொண்டாடப்படுகிறது? எப்படிக் கொண்டாடப்படுகிறது, இதன் வரலாறு என்ன? இப்போதும் கொண்டாடுகிறார்களா? போன்ற தகவல்களே தேவை. அவை எதுவும் உங்கள் கட்டுரையில் இல்லை. //இடம் இருக்கிறது.//, //இது புத்தாண்டு அறிவிப்பேயன்றி வேறில்லை என்று கருதலாம்.//, //இத்தகு கட்டுமான வடிவமைப்பைத் திட்டமிட்டு உருவாக்கினரோ என்று ஐயப்படவைக்கிறது.// இதுபோன்ற வரிகள் உங்கள் சொந்தக் கருத்துகளே. மேலும் பின்னர்.--Kanags \உரையாடுக 09:49, 1 சனவரி 2014 (UTC)
இந்த நடை புதிது என்பதால் மெதுவாகவே செல்ல விரும்புகிறேன். சுட்டிக்காட்டப்பட்ட தவறுகளை சரி செய்கிறேன். --லிவி (பேச்சு) 11:35, 1 சனவரி 2014 (UTC)
லிங்க் சரியாக கொடுக்க தெரியவில்லை - யாராவது உதவவும். --லிவி (பேச்சு) 05:44, 6 சனவரி 2014 (UTC)